Shivamma Thayee Temple-Experience By Radha Shridhar-Part 3
(Matter slightly Condensed and Translated into Tamil by Santhipriya )
சாயிராம்,
இன்று நான் சகோதரி ராதா ஸ்ரீதரின் சிவம்மா தாயீ ஆலய மூன்றாம் அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன்.
மனிஷா
எனக்கு சிவம்மா தாய் ஆலயத்தில்
கிடைத்த இரண்டாவது அனுபவத்துக்கு நான் ஒருநாள் ரவா கேசரியை செய்து அதை
பாபாவின் ஆரத்தியின்போது நெய்வித்தியம் செய்து அங்குள்ள பள்ளி
குழந்தைகளுக்கும், முதியோர் இல்லத்தில் இருந்தவர்களுக்கும் கொடுக்க
வேண்டும் என எண்ணி இருந்தேன்.
எனக்கு அந்த ஆலய பூசாரியை நன்கு தெரியும் என்பதினால் அதைப் பற்றி அவரிடம் கூறியதும் அவர் மறுநாள் 12 மணிக்கு நடைபெறும் மதிய ஆரத்தியின்போது அதை எடுத்து வருமாறு கூறினார்.
நானும் மறுநாள் ஏழு கிலோ ரவா கேசரியை எடுத்துக் கொண்டு சிவம்மாவின் ஆலயத்துக்கு சென்றேன். ஆனால் நான் அங்கு சென்றபோது ஆலயத்தின் ஆர்த்தி முடிந்து அந்த பூசாரி ஆலயத்தை மூடி விட்டுச் சென்று விட்டிருந்தார். என்ன செய்வது என தெரியாமல் விழித்த நான் பாபாவிற்கு எப்படி நெய்வித்தியம் செய்வது எனத் தெரியாமல் மனம் ஒடிந்தேன். ஆகவே அந்த முதியோர் இல்லத்தில் சென்று விசாரித்தேன். அந்த நேரத்தில் என்னிடம் அந்த பூசாரியின் தொலைபேசி எண்ணும் இல்லை. அங்குள்ள யாருக்கும் அது தெரியவில்லை. மனம் உடைந்து திரும்பிப் போக எண்ணியபோது ஒரு பெண்மணி வந்து தன்னிடம் அவருடைய தொலைபேசி எண் உள்ளதாகக் கூறி அதை எனக்குக் கொடுத்தாள். நான் பூசாரியை தொடர்ப்பு கொண்டதும் அவர் என்னை அடையாளம் தெரிந்து கொண்டார். தனக்கு திடீர் என அவசர வேலை வந்து விட்டதினால் வெளியில் சென்று விட்டதாகவும், அங்குள்ள முதியோர் இல்லத்தில் இருந்து ஆலய சாவியை பெற்றுக் கொண்டு ஆலயத்தை திறந்து நெய்வித்தியம் செய்து விட்டு அதை மற்றவர்களுக்கு வினியோகம் செய்யுமாறு கூறினார். அந்த ஆலயத்தில் உள்ள இரண்டு பூசாரிகளுமே சகோதரர்கள். அவர்கள் இருவருமே வேறு வேலை செய்வதினால் ஒருவர் காலையிலும், மற்றவர் மதியமும் வந்து ஆலயத்தை கவனித்துக் கொண்டு இருந்தார்கள்.
பாபாவின் ஆலயத்தை திறந்து அவருக்கு நானே பூஜை செய்யும் வாய்ப்பு கிடைத்ததை எண்ணி பெரும் மகிழ்ச்சி அடைந்தேன். வீட்டில் பாபாவின் வாயில் நெய்வித்தியத்தை நானே ஊட்டி விடுவது உண்டு. இப்போது இங்கு ஆலயத்தில் அதை செய்ய எனக்கு வாய்ப்பு கிடைத்தது. சாவியை பெற்றுக் கொண்டு ஆலயத்தை திறந்து, நெய் விளக்கை ஏற்றி பாபாவிற்கு ஆர்தி செய்து நெய்வித்தியத்தை படைத்தேன். அவர் கால்களை தொட்டு முத்தமிட்டேன் . அவர் சிலைக்கு அருகிலேயே சென்று அவரை தொட்டு வணங்க எனக்கு ஒரு சந்தர்பத்தை பாபா கொடுத்ததை எண்ணி மனம் மகிழ்ந்தேன். அப்படி ஒரு காரியத்தை- பாபாவின் கால்களைப் பிடித்து விடுவது துவாரகாமாயியில் இருந்தவர்கள் மட்டுமே செய்துள்ளார்கள். அடுத்து கீழே இருந்த சிவம்மா தாயியின் சமாதிக்கும் சென்று பிரசாதத்தை வைத்து பூஜித்தப் பின் அந்த பிரசாதத்தை அனைவருக்கும் வினியோகம் செய்தேன். என் மனதில் இனம் புரியாத மகிழ்ச்சி நிலவியது.
ராதா ஸ்ரீதர்
மனிஷா
என்னுடைய மூன்றாம் அனுபவம்

Loading
0 comments:
Post a Comment