Grace Of Sainath Through The ill Health Of Parents-Sai Devotee
சாயினாதர் அருளால் தீர்ந்தன
(Condensed and translated into Tamil by Santhipriya)
ஜெய் சாயி ராம்
அனைவருக்கும் பாபா தின வாழ்த்துக்கள்
இது சாயியின் இன்னொரு பக்தரின் அனுபவம். இதன் மூலம் நமக்கு பாபாவின் மீதான நம்பிக்கை மேலும் வலுப்பெறும். அவருடைய குழந்தைகளுக்கு துன்பம் வரும்போது அவர் அவர்களுடன் துணையாக இருந்து அவர்களை பாதுகாத்து அருள் புரிகிறார்.
ஜெய் சாயி ராம்
மனிஷா ----------------------------
சாயிராம்.
இந்த தளத்தில் எனக்கு என் அனுபவத்தை வெளியிட வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி கூற வேண்டும். என்னுடைய அனுபவத்தை மிக நீளமாக எழுதி உள்ளதற்கு மன்னிக்கவும். இந்த அனுபவம் என்னுடைய பெற்றோர்களின் உடல் நிலையைக் குறித்தது. என்னுடைய முகவரியை வெளியிட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.
என்னுடைய தாயாரின் கருப்பையில் கான்சர் எனும் நோய் வந்தது. 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் என்னுடைய தாயாருக்கு கடுமையான ரத்தப் போக்கு இருந்து வந்தது. அவளுக்கு ஏற்கனவே மாதவிடாய் பிரச்சனை இருந்ததினால் பிரச்சனை அதிகம் ஆயிற்று. ஆனாலும் அவளுக்கு D & C செய்து மேல் சோதனைக்கு அனுப்பினோம். ஆனால் சோதனை முடிவில் அது கான்சர் இல்லை என்றும் கருப்பை சற்று தடித்து உள்ளது என்றும் ஆனால் அது காலப் போக்கில் கான்சராக மாற வாய்ப்பு உள்ளது என்றும் கூறினார்கள் .
ஆகவே மருத்துவர் என் தாயாருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யுமாறு கூறினார். ஆனால் அறுவை சிகிச்சைக்கு என் தாயார் பயந்ததினால் ஆறு மாத காலத்துக்கு அதை தள்ளி வைத்தோம். அதாவது நவம்பர் அல்லது டிசம்பரில் செய்து கொள்ளலாம் என முடிவு செய்தோம்.
அதற்கு இடையில் நாங்கள் சீரடிக்கு சென்றோம். அங்கு என் தந்தை டிவியை வைத்தபோது அதில் என் தாயாருக்கு செய்ய இருந்த சிகிச்சை குறித்து ஒரு நிகழ்ச்சி வந்தது. அதில் டில்லியில் இருந்து AIIMS மருத்துவ மனையை சேர்ந்த இரண்டு மருத்துவர்கள் விளக்கங்களைக் கொடுத்தார்கள். அதுவரை நான் இந்த நோய் பற்றிய அத்தகைய நிகழ்ச்சியைப் பார்த்தது இல்லை. இது பாபாவின் லீலை போல அன்று நாங்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக வந்திருந்தது போலும்!
நாங்கள் மறுநாள் காக்கட ஆர்த்தி மற்றும் மத்தியான ஆரத்தியைப் பார்த்தோம். அப்போது முன்பின் தெரியாத யாரோ ஒருவர் என் தாயாரிடம் 50 ரூபாய் தானம் தருமாறு வற்புறத்த அவள் பயந்து போய் அவர் கூறியது போல அதை தானம் செய்தாள்.
நாங்கள் ஊருக்கு சென்றதும் டிவியில் தோன்றிய அந்த மருத்துவர்களை தேடிக் கண்டு பிடித்து தாயாரின் உடல் நிலைக் குறித்து அவர்களது கருத்தைக் கேட்டபோது அவர்கள் நாங்கள் முன்னர் எடுத்த D&C தவறானது என்றும் இன்னொரு முறையில் D&C சோதனை செய்யுமாறும் கூறினார்கள். அதை செய்து முடித்ததும் அதில் என் தாயாருக்கு இருந்தது FIGO grade 1 கான்சர் என்று தெரிந்தது . ஆகவே உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றார்கள். நாங்கள் பயந்து போனோம்.
நாங்கள் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள். எங்கள் குடும்பத்தில் நான் மட்டுமே ஒரே பெண். ஆகவே மனதை திடமாக்கிக் கொண்டு அறுவை சிகிச்சை நடக்க இருந்த வியாழர் கிழமை ஒருவார பாராயணத்தை செய்ய ஆரம்பித்தேன். என் தாயாருக்கு செய்ய இருந்த அறுவை சிகிச்சை சற்று சிக்கலானது . அறுவை சிகிச்சைக்கு முன்னர் என் தாயாருக்கு முழு மயக்கம் தந்தார்கள். நான் மருத்துவமனைக்கு சென்றேன். வழியில் பாபாவின் படத்தை பார்த்தல் நன்றாக இருக்குமே என நினைத்தேன். ஆனால் ஒரு படத்தையும் பார்க்க முடியவில்லை. என்ன முட்டாள்தனமான வேண்டுதல் செய்தேன் என நான் நினைத்தேன். நான் வெளியில் அமர்ந்து கொண்டு பாராயணத்தைப் படிக்கத் துவங்கினேன். அங்கு வந்த நர்ஸ் சாயிபாபா படம் போட்ட புத்தகத்தை எடுத்துப் படிக்கத் துவங்கினாள் . சாயிபாபாவின் அருள்தான் என்னே.
அறுவை சிகிச்சை நல்லபடியாக நடந்து முடிந்தது. என் தாயார் நல்ல நிலைக்கு வர நீண்ட நாள் பிடித்தது. அவளுக்கு பாபாவின் உடியை நீரில் கலந்து கொடுத்தோம். நெற்றியிலும் அதை இட்டு வந்தோம். மெல்ல அவர் நலமடையத் துவங்கினாள். நடந்தது அனைத்துமே பாபாவின் மகிமையினால் நடந்தவையே. நாங்கள் சீரடிக்கு சென்றது, அங்கு டிவி நிகழ்ச்சியை பார்த்தது, அதில் வந்த மருத்துவர்களை சந்தித்தது, உடனடியாக அறுவை சிகிச்சை செய்து கொண்டது என அனைத்துமே பாபாவின் மகிமையே.
நான் சிலவற்றைக் கூற விரும்புகிறேன்:- இந்த சிகிச்சைக் குறித்து என்னிடம் வேறு சில மருத்துவ சிகிச்சை விவரங்கள் உள்ளன. தேவையானவர்களுக்கு அதை தர விரும்புகிறேன்.
- எங்களுடைய இஷ்ட தெய்வங்கள் ஹனுமான் மற்றும் ராமர் ஆகும். 2008 ஆம் ஆண்டு முதல் நான் சாயி பக்தை ஆகி சீரடிக்கு செல்லத் துவங்கினேன். ஒவ்வொரு வியாழர் கிழமையும் சாயிபாபாவின் ஆலயத்துக்கு செல்கிறேன். சாயி சரித்திரம் படிக்கிறேன் . உண்மையில் சாயி பாபாவும் பகவான் ராமரும் ஒருவரேதான்.
- நாங்கள் இனி எந்த மருத்துவரிடமும் செல்லப் போவது இல்லை. கான்சர் தன்னால் குணமாகிவிடும்.
- என் தாயார் சீரடிக்கு சென்றது கான்சர் வியாதிக்கு நிவாரணம் கேட்க அல்ல. ஆனால் அவள் கேட்க்காமலேயே சாயி அதை செய்துள்ளார்.
- சீரடிக்குச் சென்று அந்த மண்ணை மிதித்தாலே அங்கு செல்பவர்களின் துயரங்கள் விலகும். உங்களுக்குத் தெரிந்தோ தெரியாமலோ உங்களுக்குள்ள பிரச்சனைகள் தானாகவே தீரும்.
- எங்களுக்கு நடந்தவை அனைத்துமே தற்செயலாக நடந்தவை என்று நினைக்கலாம் . ஆனால் அது சரியான கூற்றாக இருக்க முடியாது. சாயினாதரே என் தாயாருக்கு இரண்டாம் பிறவியைக் கொடுத்துள்ளார் என்றே நினைக்கிறேன்.
என் தந்தை கண்ணில் ஏற்பட்ட பிரச்சனை
என்னுடைய தந்தைக்கு சக்கரை வியாதி உள்ளது. அவருக்கு சில வருடங்களுக்கு முன்னர் இதய நோயும் வந்தது. அவருக்கு தொடர்ந்து கண்ணில் மட்டும் பிரச்சனை நீடித்தது. அது நீரிழிவு நோயினால் ஏற்பட்ட கோளாறாகும். சமீபத்தில் அவருக்கு ரெடினா மிகவும் தடிமனாகி விட்டது. அவருடைய கண்ணில் தினமும் ஊசி போட வேண்டும் என்றார்கள். ஆனால் இதயக் கோளாறு உள்ளவர்கள் அந்த ஊசியின் பக்க விளைவினால் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம் எனப் படித்ததினால் பயந்தோம். என் தாயார் சாயியின் பாராயணம் செய்யத் துவங்கினாள் .நாங்கள் சாயினாத்தின் உதவியை நாடினோம். தினமும் அவருக்கு உடி பிரசாதத்தை நீருடன் கலந்து தந்தோம். நெற்றியிலும் இட்டுக் கொள்ளுமாறுக் கூறினோம்.
என் தந்தைக்கு கண் பிரச்சனை மேலும் அதிகமாயிற்று. ஒவ்வொன்றும் இரண்டாகத் தெரியத் துவங்கின. மருத்துவர்கள் மேல் பரிசோதனை செய்யுமாறு கூறினார்கள். ஆகவே என் தந்தை AIIMS மருத்துவமனைக்கு சென்றார். ஆனால் அங்கிருந்த மருத்துவர்கள் அதிக பக்க விளைவுகள் இல்லாத வேறு ஊசி மருந்து போகுமாறு கூறினார்கள். இரண்டாகத் தெரியத் துவங்கின கோளாறு மெல்ல மறையலாயிற்று. அடுத்து இன்னொரு கண்ணில் ஏற்பட்ட கோளாறுக்கு சற்று சிக்கலான அறுவை சிகிச்சை செய்யுமாறு மருத்துவர்கள் கூறினார்கள். நாங்கள் சாயியை நம்பிக் கொண்டு அவரை வேண்டிக் கொண்டோம். ஆனால் முதலில் அவர்கள் செய்திருந்த முடிவுக்கு மாற்றாக மருத்துவர்கள் அவருக்கு கண்ணில் ஊசி போட்டு வேறு ஒரு சிகிச்சை தந்தார்கள். அவர் குணமடையத் துவங்கினார். அனைத்துமே சாயியின் அருளினால் நடந்தவையே. எதேர்ச்சையாக நடந்தவை அல்ல.
Loading
0 comments:
Post a Comment