Sunday, February 10, 2013

Sai Baba Came To My House From Shirdi -Sai Devotee Buvi Raj.



(Translated into Tamil by Sankarkumar, USA)

புவி ராஜ் கொடுத்திருக்கும் அவரது அனுபவங்கள் இந்தத் தொடரில் இணைக்கப்பட்டுள்லன. ஸாயியின் பிள்ளைகளின் உள்ள‌த்தில் இருக்கும் மெய்யன்பையும், பக்தியையும் இவை மேலும் வலுப்படுத்துகின்றன. அவரை அடைய உண்மையான பக்தி வழியில் செல்வதே சிறந்தது. ஜெய் ஸாயிராம் --- மனிஷா

-------------------------------------------------------

அன்புள்ள ஸாயி அடியார்களே,
ஜியார்ஜியா மாநிலத்தில்[அமெரிக்கா] இருக்கும் ஆல்ஃபரெட்டா என்னும் ஊரைல் வசிக்கும் புவிராஜ் எழுதுவது. குறுகிய காலத்திலேயே பாபா என்னை மிகவும் ஆசீர்வதித்திருக்கிறார். எனது அனுபவங்களை இதற்கு முன் இரு முறை இங்கே பகிர்ந்திருக்கிறேன். பாபாவின் அருளால் இப்போது மூன்றாம் முறையாக எழுதுகிறேன்.
 
அனுபவம் - 1
 ஷீர்டியிலிருந்து பாபா 
எங்கள் இல்லத்துக்கு வந்தார்!
 
'நன்றி அறிவிக்கும் நாளில்' அன்று முழுவதும் சுவானேயில் இருக்கும் பாபா ஆலயத்தில் எனது பொழுது கழிந்தது. எல்லாம் நல்லபடியாக நிகழ்ந்தபின், ஆரத்தி முடிந்ததும் நான், என் கணவர், என் மகன் மூவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கையில், சனி, ஞாயிறு தினங்களில் வீட்டுக்கு விருந்தாளிகள் வரப்போவதாக என் கணவர் சொன்னார். சனிக்கிழமைகளில் மாலை 3.30 முதல் 7.30 வரை எப்போதும் பாபா ஆலயத்தில் இருக்கும் வழக்கத்தால், அதே நேரத்தில் விருந்தினர் வருவதைப் பற்றி வருந்திய நான், உடனே பாபாவைப் பார்த்து,'ஏன் இப்ப‌டி செய்து என்னை வ‌ர‌விடா‌ம‌ல் செய்ய‌றீங்க‌, பாபா!' என‌ பாபாவிட‌ம் முறையிட்டு, ஆல‌ய‌த்தை விட்டு அக‌ன்றேன்.
இல்ல‌ம் சென்ற‌தும், ஸ‌த் ச‌ரித‌த்தில் சொல்லியபடி 'தேவ் வீட்டு உத்யாப‌ன் விழா'வுக்கு ஸாது வ‌டிவிலும், ஹேம‌ந்த்ப‌ந்த் வீட்டுக்கு ப‌ட‌ம் மூல‌மாக‌வும் பாபா உண‌வ‌ருந்த‌ச் சென்ற‌துபோல‌, ஒருவேளை பாபாவும் இந்த‌ விருந்தின‌ர் மூல‌மாக‌ என் வீட்டுக்கு வ‌ருகிறாரோ என‌ ஒரு எண்ண‌ம் வ‌ந்த‌து. உட‌னே பாபா ப‌ட‌த்த‌ருகே சென்று, 'நான் உங்க‌ளைக் காண‌ வ‌ரும் அதே நேர‌த்தில் என் வீட்டுக்கு விருந்தின‌ர் வ‌ருகின்ற‌ன‌ர் என்ப‌தால், நீங்க‌ள்தான் அவ‌ர்க‌ள் வ‌டிவில் வ‌ருகிறீர்க‌ள் என‌ உண‌ர்கிறேன். 'என‌ச் சொல்லிவிடு, ம‌கிழ்வுட‌ன் அவ‌ர்க‌ள‌து வ‌ருகையை எதிர்பார்த்திருந்தேன்.
ச‌னிக்கிழ‌மைய‌ன்று, 3 ம‌ணிக்கு வ‌ருவ‌தாக‌ச் சொன்ன‌ விருந்தின‌ர் இன்னும் வ‌ர‌வில்லை. ச‌ரியாக‌ 3.30 ம‌ணிக்கு என‌து தோழி ஒருவ‌ர் த‌ன‌து க‌ண‌வ‌ருட‌ன் வ‌ந்து என் வீட்டுக் க‌த‌வைத் த‌ட்டினார். அவ‌ர்க‌ளுட‌ன் கூட‌ வ‌ந்த‌து ஸாயி மாதா! ஆம், அவ‌ர்க‌ள் ஷீர்டி சென்ற‌போது என‌க்காக‌ வாங்கிய‌ உதி பிர‌சாத‌ம், பாபா ப‌ட‌ம் ஆகிய‌வ‌ற்றைக் கொண்டு வ‌ந்திருந்த‌ன‌ர். அந்த‌ப் ப‌ட‌த்தை என் க‌ண‌வ‌ரிட‌ம் காட்டிய‌தும், 3 மாத‌ங்க‌ளுக்கு முன் அவ‌ர‌து க‌ன‌வில் க‌ண்ட‌ அதே உருவில் பாபா வ‌ந்திருப்ப‌தைக் க‌ண்டு விய‌ந்தார். நான் கோவிலுக்குச் சென்றிருப்பேன் என‌ என் தோழி சொல்லிய‌போதும், விடாப்பிடியாக‌ அவ‌ர‌து க‌ண‌வ‌ர் சென்றே ஆக‌ணும்னு பிடிவாத‌மாக‌ வ‌ந்த‌தால் இது நிக‌ழ்ந்த‌து என‌ அறிந்தேன்.
விருந்தின‌ர் வ‌ருவ‌தால் அவ‌ர்க‌ள் கிள‌ம்ப‌ நினைத்த‌போதும் வ‌ற்புறுத்தி எங்க‌ளுட‌ன் தேநீர் அருந்திய‌ பின்ன‌ரே சென்ற‌ன‌ர். அத‌ற்குள் எதிர்பார்த்த‌ விருந்தின‌ரும் வ‌ந்துவிட்ட‌ன‌ர். ப‌ட‌த்தையும், உதியையும் பாபா அருகே வைத்த‌போது, ஹேம‌ந்த்ப‌ந்துக்கு நிக‌ழ்ந்த‌து போல‌வே என‌க்கும் நிக‌ழ்ந்த‌து புரிந்த‌து. விருந்தின‌ர் சென்ற‌தும் 6.30க்கு மேல் பாபா ஆல‌ய‌த்துக்குச் சென்று, 'என்னைப் பார்க்க‌வென‌ ஷீர்டியிலிருந்து வ‌ந்த‌மைக்கு மிக்க‌ ந‌ன்றி, பாபா' என‌ சொல்லிக்கொண்டேன்.

அனுப‌வ‌ம்-2 
ஒரு க‌ருப்பு நாய் வ‌டிவில் 
பாபா என்‌ தாயிட‌ம் சென்றார்
 
[பாபா அருளால்] நான் கூறிய‌ ஸாயி 9 வார‌ விர‌த‌த்தை சென்னையிலிருக்கும் என் தாய் செய்துவ‌ந்தார். 2 அல்ல‌து 3-வ‌து வார‌த்தின் போது, வியாழ‌க்கிழ‌மை அன்று, காலையில் மொட்டை மாடிக்குச்‌ என் தாய் சென்றபோது படிகளில் ஒரு கருப்பு நாய் அமர்ந்திருப்பதைக் கண்டு திடுக்கிட்டார். அங்கு செல்ல 2 கதவுகள் இருந்தும், அவை பூட்டியிருந்தும் அந்த நாய் எப்படி அங்கே வந்திருக்க முடியும் என வியந்துபோனார். என் தாயைப் பார்த்ததும், அந்த நாய் படிகளில் இறங்கிச் சென்று மறைந்தது. எப்படி அது சென்றது என்பதும் வியப்பே.
அன்று மாலை ஆலயத்துக்குச் சென்றபோது, பாபா இருக்கும் சன்னிதி பூட்டப்பட்டிருந்ததால், அருகே இருந்த ஒரு கல்லின் மீது அமர்ந்தார். அப்போது ஒரு வெள்ளை நாயும், கருப்பு நாயும் அவரருகே வந்து அமர்ந்தன. அர்ச்சகரும் அப்போது வந்து சேர, அவரிடம் பாபா சன்னிதியைத் திறந்து தரிசனம் காட்டச் சொன்னபோது, அவர் முதலில் அந்த நாய்களை விரட்டத் தொடங்கினார். வெள்ளை நாய் ஓடிவிட்டது. ஆனால் என்ன விரட்டியும் கருப்பு நாய் நகரவே இல்லை. முதலில் அந்த நாயை எங்காவது சென்று விட்டுவிட்டு, பிறகு வந்தால்தான் கதவைத் திறக்க முடியும் எனச் சொல்லிவிட்டார் அர்ச்சகர். வேறுவழியில்லாமல், என் தாய் எழுந்து சென்றபோது, அந்த நாயும் பின்தொடர்ந்து நடந்து திடீரென மறைந்து விட்டது. அந்தக் குறுகிய சந்தில் அது எங்கே சென்றிருக்குமெனக்கூடத் தெரியவில்லை.
விரத நாளன்று பாபா தரிசனம் செய்ய என் தாய் மீண்டும் அங்கே சென்றபோது, 'நேரமாகிவிட்டபடியால், இனிக் கதவைத் திறக்க முடியாது எல்லாம் முடிந்துவிட்டது' என அர்ச்சகர் திருப்பியனுப்ப, வருத்தத்துடன் என் தாய் வீடு திரும்பினார். ஆனால் அதுவரை அவரை வாட்டிக் கொண்டிருந்த அவரது மூட்டு வலி சற்றே குறைந்திருப்பதையும் உணர்ந்தார். தனக்கு எல்லாம் சரியாகிவிட்டது என்பதைத்தான் அர்ச்சகர் 'எல்லாம் முடிந்துவிட்டது' எனச் சொன்னாரோ என நினைத்த என் தாய், பாபா நாய் உருவில் வந்து தனக்கு இரு முறை தரிசனம் தந்ததையும் எண்ணி மகிழ்ந்து, ஆலயத்தில் பார்க்க முடியாததை எண்ணி அதிகம் வருந்தவில்லை. பாபாவின் லீலை அற்புதமே!

 
அனுபவம் - 3
புண்ய திதியன்று என் தாயிடம் 
பாபா கேட்ட தக்ஷிணை

பாபாவின் புண்ய திதியன்று, எனது சகோதரி மைலாப்பூர் பாபா கோவிலுக்குப் போக நினைத்து, எங்கள் தாயையும் உடன் அழைத்துச் செல்ல விரும்பினாள். இவள் ஷீர்டி சென்றபோது பாபா மூன்று முறை மனித உருவில் வந்து அருளிய நிகழ்வை ஏற்கெனவே நான் எழுதியிருக்கிறேன். என் தாய் அப்போது செல்ல முடியாமல் போனதால், மைலாப்பூருக்காவது செல்லலாமே என நினைத்து, அவள் வந்தவுடன், அவள் கேட்கும் முன்பே தனது ஆசையைச் சொல்லிக் கேட்டுக்கொண்டு, கூடவே மனதுக்குள், பாபா மனித வடிவில் தன்னிடம் வரவேண்டும் எனவும் வேண்டிக் கொண்டார். அதற்கு முன் தினம் நல்ல மழை பெய்திருந்ததால், இன்று மழை இல்லாமல் இருக்க வேண்டுமென பாபாவிடம் அவர் வேண்ட, அதே போல, அன்று மழையே பெய்யவில்லை!
கோவிலில் நல்ல தரிசனம். மதியம் சாப்பிடாமல் இருந்த அவருக்கு 3-4 மணி ஆனபோதிலும் ஆலயத்தில் போஜனம் கிடைத்தது. பாபா எவரையும் வெறும் வயிற்றோடு அனுப்பவதேயில்லை! சாப்பிட்டு முடித்து, அமர்ந்திருந்தபோது, மஞ்சள் சேலை உடுத்திய ஒரு வயதான பெண்மணி,என் தாயருகே அமர்ந்து, 'இன்னிக்கு மழையே பெய்யலை.. இல்லை?' எனப் பேச்சுக் கொடுத்தார். சம்பந்தமே இல்லாமல், இப்படி ஒரு கேள்வியைக் கேட்க வந்தவர் பாபாவாக இல்லாது வேறு எவராக இருக்க முடியும்? அப்போது ஸாயி விரத புத்தகத்தை வாங்குவதற்காக என் சகோதரியும், அவர் மகளும் புத்தகக் கடைக்குச் சென்றனர்.
'அவர்கள் இருவரும் உங்கள் பெண்களா? என அந்த பெண்மணி கேட்க, 'இல்லை, அவர்கள் என் மகளும், பேத்தியும்' என என் தாய் உரைத்தார். 'எனது இரண்டாவது மகள் அமெரிக்காவில் இருக்கிறாள்' என அவர் சொன்னதும், 'நல்லா இருக்கட்டும்' என அந்தப் பெண்மணி வாழ்த்திய விவரத்தை என் தாய் பிறகு எனக்கு சொன்னபோது, என் கண்களில் நீர் வடிந்தது. அதன் பின், அந்தப் பெண்மணி [பாபா] 2 ரூபாய் தானமாகக் கேட்டாராம்! ஷ்ரத்தா, ஸபுரி என பாபா கேட்கும் அதே 2 ரூபாய்கள்.!]
2 ரூபாய் இல்லாததால், 5 ரூபாய்த் தாளை என் தாய் கொடுக்க, அதை வாங்கிக்கொண்டு, அங்கிருந்து அந்தப் பெண்மணி அகன்றார். பாபாதான் இப்படி வந்தார் என என் தாய்க்கு புரியவில்லை. வீடு சென்றதும் அதைப் பற்றி நினைத்ததும், இது புரியவர, மனித உருவில் அவர் காட்சி தர வேண்டுமென தான் விரும்பிய வண்ணமே, பாபா வந்து, ஆசீர்வதித்து, தக்ஷைணையும் பெற்றுக்கொண்டதை உணர்ந்து, அவரது விரதத்தையும் ஆசீர்வதித்திருக்கிறார்!
ஜெய் ஸாயி ராம்.

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.