Wednesday, December 28, 2016

Jayaseelan's experience


 முன்னுரை 
அனைவருக்கும் சாய் ராம் 
அமெரிக்காவில் வசித்து வரும் டாக்டர் திரு சங்கர் குமார் இந்த வலைதளத்துக்கான கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். அவருக்கு திரு ஜெயசீலன் எனும் சாயிபக்தர் எழுதி உள்ள அனுபவத்தை பிரசுரிப்பதில் பெருமை அடைகிறேன். திரு ஜெயசீலன் ஆங்கிலத்தில் எழுதி அவருக்கு அனுப்பி இருந்த அனுபவத்தையும் திரு சங்கர் குமார் அவர்களே மொழிபெயர்த்து அனுப்பி உள்ளார். அவருக்கு நன்றி. அனைவருக்கும் சாயிபாபா அருள் புரியட்டும்.  
அவருக்கு திரு ஜெயசீலன் ஆங்கிலத்தில் எழுதி அனுப்பி இருந்த மூல கட்டுரையை இந்த வலைதளத்தின் உரிமையாளரான திருமதி மனிஷா பிஸ்த் அவர்களுக்கும் ஆங்கில வலை தளத்தில் பிரசுரிக்குமாறு வேண்டுகோள் விடுத்து அனுப்பி உள்ளேன். 
சாய்ராம் 
சாந்திப்பிரியா
-------------------------------------------------------------
திரு ஜெயசீலனின் அனுபவம் 
தமிழில் மொழிபெயர்ப்பு : Dr. திரு சங்கர் குமார், MD - USA
என் பெயர் ஜெயசீலன். 2013-14-ல் என் வாழ்க்கையில் பல சோதனைகளை அனுபவித்தேன். 5 ஆண்டுகளாக நான் முழுநேர ஊழியனாக பார்த்துவந்த வேலையும் என்னைவிட்டு நீங்கியது. அதன் பிறகு நான் ஒரு நேர்முகத் தேர்வுக்குச் செல்லும்போது, என் நண்பர் ஒருவர் என்னை அங்கிருக்குஜ் ஸாயி கோவிலுக்குச் செல்லச் சொன்னார். முதன் முறையாக நான் பாபா ஆலயத்திற்குச் சென்றேன். அதன் பிறகு, என் வாழ்வில் மாற்றங்கள் வேகமாக நடக்கத் தொடங்கின. ஓம் ஸாயிராம். ஒரு முறை அங்கே சென்றபின்னர், அதன் மஹிமையால் நான் தினந்தோறும் அங்கே செல்ல ஈர்க்கப்பட்டேன். ஸாயி ஸத்சரிதம் நூலை வாங்கி ஒரே வாரத்தில் அதைப் படித்து முடித்தேன். ஸாயியின் 9 வார வியாழக்கிழமை விரதத்தையும் பூர்த்தி செய்தேன். அதிலிருந்து என் வாழ்க்கை முற்றிலுமாக மாறி. எனக்குப் பல வேலை வாய்ப்புகள் வரத் தொடங்கின. நான் முன்னம் பார்த்துவந்த அந்த வேலையின் உரிமையாளரே எனக்கு மீண்டும் வேலை வாய்ப்பு தந்தார். அடுத்த 6 மாதங்களில், அதை விடவும் ஒரு நல்ல வேலையிஉல் பாபா என்னை அமர்த்தினார். ஸ்ரீ ஸாயிபாபாவுக்கு நான் மிகுந்த நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். அதைக் காட்டும் விதமாக ஒவ்வொரு புதன்கிழமையன்றும் நான் பாபா ஆலயத்தில் சேவை செய்கிறேன். ஸத்குரு ஸ்ரீ ஸாயியின் இந்தக் கருணையை இங்கே சொல்ல வாய்ப்பளித்த உங்களுக்கு என் நன்றியைச் சொல்லிக்கொள்கிறேன். அடுத்த ஆண்டு அவரருளால் என் குடும்பத்துடன் ஷீர்டி சென்று தரிசிக்க எண்ணியுள்ளேன். 
ஓம் ஸாயிராம். 
அன்புடன் ஜெயசீலன் 
 

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.