Friday, September 23, 2011

Shirdi Sai Baba's Grace-Experience Of Sai Devotees-Part 18.

அன்பானவர்களே,
நம்முடைய வாழ்கையில் ஏற்ற தாழ்வுகள் எப்போதும் இருக்கும். அந்த நேரத்திலும் சாயிபாபாவை மறக்காமல் அவர் மீது நம்பிக்கை வைத்து அவரை வேண்டினால் அவர் நமக்கு நல்லதையே செய்கிறார் என்பதக்கு உதாரணமாக கீழே தரப்பட்டு உள்ள பக்தர்களின் அனுபவங்களை படியுங்கள்.
சாயிராம்
மனிஷா

சாயியின் ஒன்பது வார விரத மகிமை

என் பெயரை தயவு செய்து வெளியிட வேண்டாம் என கடிதம் அனுப்பி உள்ள பக்தரின் அனுபவத்தைப் படியுங்கள்.
'நான் வேலை விஷயமாக அமெரிக்காவிற்கு சென்று இருந்தேன். நான் அங்கிருந்த சமயத்தில் எங்களுக்கு மிகவும் வேண்டியவரான என்னுடைய தாய் மாமன் ஒருவர் உடல் நலமின்றி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என்றும், விரைவில் ஒரு வார விடுமுறையிலாவது வந்து அவரை பார்த்து விட்டு செல்லுமாறும் வீட்டில் இருந்து தகவல் வந்தது. என்னுடைய மாமாவுக்கு வந்து இருந்தது கான்சர் என்பதினால் அவர் உயிர் பிழைப்பது கடினம் என்றும் கூறி இருந்தார்கள். நானும் என்னுடைய மாமா குணம் அடைய வேண்டும் என்பதற்காக ஒன்பது வார சாயி விரதம் இருந்தேன். அடுத்து நான் ஒரு வார விடுமுறையில் சென்று மாமாவை மருத்துவமனையில் பார்த்தேன். ஆனால் அவர் மயக்கத்தில் நினைவு இல்லாமல் இருந்தார். சாதாரணமாக எப்போதுமே புன்முறுவலுடன் இருந்த என்னுடைய மாமாவின் முகத்தைக் பார்த்தே பழக்கப்பட்ட எனக்கு அவரை இந்த நிலையில் காணவே மனதுக்கு கஷ்டமாக இருந்தது. அப்போது சாயி விரதத்தின் எட்டாவது வாரம். அந்த பூஜை செய்தபோது அன்று நான் சாயியை மனமுருகி வேண்டினேன் "என்னுடைய மாமாவின் சிரித்த முகத்தை ஒரு முறையாவது எனக்கு காட்டக் கூடாதா". பூஜை முடிந்தது. அன்று மதியம் என்னுடைய தந்தையிடம் இருந்து என்னை உடனே மருத்துவமனைக்கு வருமாறு செய்தி வந்தது. என் மாமா என்னை பார்க்க விரும்புவதாக கூறினாராம். மயங்கிக் கிடந்த அவருக்கு எப்படி நான் வந்த விஷயம் தெரிந்தது என்பது புரியவில்லை. நானும் அவசரம் அவசரமாக சென்றதும், என்னைப் பார்த்த மாமா புன்முறுவல் செய்து என் தலையைக் கோதி விட்டார். என் மனதும் நிம்மதி அடைந்து மீண்டும் ஊருக்கு கிளம்பிச் சென்றேன். ஆனால் என்னுடைய மாமா உயிர் பிழைக்கவில்லை என்றாலும் என் ஆசையை பாபா நிறைவேற்றித் தந்துவிட்டார்.
சாயியின் ஒரு பக்தை

---------------------------------
அன்பானவர்களே
இதில் நான் சாயிமாவின் உடியின் மகிமையைக் காட்டும் ஒரு பக்தரின் அனுபவத்தை தந்துள்ளேன். சாயிபாபாவினால் துவக்கப்பட்ட துனியின் சாம்பலே உடி. அது அனைத்தையும் குணமாக்கவல்ல சஞ்சீவினி என்பதினால் நான் உடியை ''உடீமா'' என்றே அழைக்கின்றேன். இனி அதை படியுங்கள் .
சாயிராம்
மனிஷா  

உடியின் மகிமை :- அனுபவம்
திங்கள் கிழமை காலை 10 முதல் 10.30 வரை என்னுடைய மகனின் ஐந்தாம் வகுப்பு நுழைவிற்கு தேவையான அனைத்தையும் செய்து முடித்து விட்டு பூனாவிற்கு கிளம்பினேன். அங்கிருந்து நான் இருந்த ராஜகுரு நகருக்கு செல்ல வேண்டும். மாலை 4.30 மணிக்கு பஸ் வந்துவிடும் என்பதினால் அதற்குள் என் பூனாவில் அனைத்து காரியங்களையும் முடித்துக் கொண்டு கிளம்பினேன். பஸ் கிளம்பி வாக்டேவாடியை கடந்தது.
அந்த இடத்தைக் கடந்ததும் எனக்கு உடல் நிலை திடீரென மோசம் அடைந்தது. குடிக்க தண்ணீர் வேண்டும் போல இருந்தது. நான் அதே பஸ்ஸில் பலமுறை பயணம் செய்பவன் என்பதினால் பலர் எனக்கு நண்பர்களாக இருந்தார்கள். அவர்களில் ஒருவரிடம் தண்ணீர் வாங்கிக் குடித்தேன். ராஜகுருவை அடைவதற்குள் எனக்கு வாயிற்று வலி அதிகரித்தது. உட்கார முடியாமல் தவித்தேன். வயிறு பெரியதாகி முட்டியது. பான்ட் பட்டனை கயிற்றி விட்டு பாண்டை கையில் பிடித்துக் கொண்டேன்.
நல்லவேளை ராஜ்குருநகர் வரவும், பஸ்ஸில் இருந்து இறங்கி தெரிந்த சைகிள் ரிட்ஷாக்காரன் மூலம் வீடு போய் சேர்ந்தேன். என்னால் நிற்க முடியவில்லை. பக்கத்து வீட்டில் இருந்த நண்பனின் மகன் வந்து சாவியை பெற்றுக் கொண்டு வீட்டை திறந்துவிட்டான். நான் வயிற்று வலியால் தவித்தேன். பக்கத்து வீட்டுக்காரரை அழைக்க தொலைபேசியை எடுத்து பேச முயன்றேன். முடியவில்லை. அப்படியே ஹாலில் சென்று விழுந்து விட்டேன். முழிப்பு வந்தபோது நான் மருத்துவ மனையில் இருப்பதைக் கண்டேன். இனுடைய இரண்டு சிறுநீரகங்களும் பழுதாகி விட்டதினால் வாரத்தில் இரண்டு நாட்கள் டயாலிசிஸ் சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் எனவும் அதனால் பூனாவிலேயே தங்கி இருக்குமாறும் மருத்துவர்கள் கூறினார்கள். என் மனம் வருந்தியது. இப்படி ஒரு நிலையில் வாழ்வதைவிட என் உயிரையே எடுத்துக் கொள்வது நல்லது அல்லவா என பாபாவிடம் வேண்டிக் கொண்டு வருந்தினேன்.
நான் மருத்துவ மனையில் இருந்து வெளியேறியது ஜூலை 18 ஆம் தேதி. அந்த தேதியில்தான் ஒவ்வொரு வருடமும் பூனாவில் இருந்து பாபாவின் பல்லக்கு உற்சவம் துவங்கும் நாள். பல்லக்கை ஊர்வலமாக எடுத்துக் கொண்டு பல இடங்களுக்கும் சென்றுவிட்டு சீரடிக்கு கொண்டு செல்வார்கள். அதில் நான் கலந்துகொள்ளாமல் இருந்தது இல்லை. நான் என்னுடைய மாமனார் வீட்டில் தங்க ஏற்பாடு ஆயிற்று. ஆகவே மனம் வருந்தி பாபாவிடம் மனதில் பேசினேன். ''பாபா அடுத்த வருட விழாவிற்குள் நான் பூரண குணம் அடைந்து விட்டால் உனக்கு வெள்ளிக் குதிரை ஒன்றை காணிக்கையாக தந்து விட்டு குதிரைப் போல ஊர்வலத்தின் முன்னால் செல்வேன். என்னை குணப்படுத்து '' என வேண்டிக் கொண்டேன். எனக்கு மருந்துகளை மாற்றிக் கொடுத்தார்கள். நான் மருத்துவமனையில் இருந்தபோது பல சாயி அன்பர்கள் வந்து எனக்கு பாபாவின் உடியை தருவார்கள். அதை நான் வைத்து இருந்து தினமும் உபயோகித்து வந்தேன். ஒரு சனிக்கிழமை இரவு தூக்கம் வராமல் தவித்தேன். வெகு நேரம் கழித்து தூங்கத் துவங்கியதும் அன்று இரவு எனக்கு ''என் உடி மீது நம்பிக்கை இல்லையா'' என எவரோ கேட்பது போல இருக்க சட் என்று விழித்தேன். நான் போட்ட சத்தத்தில் அனைவரும் எழுந்து விட்டார்கள். நான் நடந்ததைக் கூறிவிட்டு மீண்டும் உறங்கலானேன். நாங்கள் இருந்த பகுதிக்கு அருகில் ஒரு சாயி பாபா ஆலயம் உள்ளது. விடியற்காலை மணி 5.30 ஆயிற்று. ஆரத்தியின் ஓசை கேட்டது . பால்கனிக்கு சென்று அந்த ஆரத்தியின் ஓசையை கேட்க ஆசையாக இருந்தது. முதலில் நான் என்ன பேசுகிறேன் என்பதை உணர முடியாமல் பின்னர் அதை புரிந்து கொண்டவர்கள் என்னை பால்கனிக்கு தூக்கிச் சென்றார்கள் . ஆனால் நான் பால்கனிக்கு செல்லவும், ஆரத்தி நின்று விட்டது.
இந்த கனவின் சம்பவத்திற்கு பின்னர் அடுத்த 2-3 மணி நேரத்தில் நான் பெட்டிலேயே மூத்திரம் போய்விட்டேன். ஆகவே மறுநாள் என்னை டயாலிசிஸ் சிகிச்சை செய்து கொள்ள அழைத்துப் போனார்கள். என்னை சோதித்த மருஹ்துவர்கள் நான் நல்ல குணம் அடைந்துவிட்டதாகக் கூறினார்கள். நானும் மெல்ல மெல்ல குணம் அடையத் துவங்கினேன். நாட்கள் நகர்ந்தன. பாபாவின் பல்லக்கு சேவை துவங்க இன்னும் 15 நாட்கள் இருந்தன. ஆகவே நான் அதில் கலந்து கொண்டு நடக்க ஆசைப்பட்டேன். என்னுடைய குடும்பத்தினர் என் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு சீரடிவரை நான் நடக்கூடாது என்றார்கள். ஆனால் நான் அதை ஏற்கவில்லை. ஊர்வலத்தில் கலந்துகொண்டு சீரடிவரை நடந்து சென்றுவிட்டு திரும்பி வந்தேன். என் உடல்நிலை எந்த விதத்திலும் பாதிப்பிற்கு உள்ளாகவில்லை. நல்லபடி திரும்பி வந்தேன். இத்தனை அதிசயங்களும் நடக்கக் காரணம் பாபாவின் உடிதான் என்பதில் சந்தேகம் இல்லை.
அனில் ஷெல்கே

---------------------------------
பாபா என்னிடம் இருந்து தக்ஷணை வாங்கிக் கொண்டார்

இந்த சம்பவம் சில வருடங்களுக்கு முன்னர் நடந்தது . அப்போது நான் 12 வது வகுப்பில் படித்துக் கொண்டு இருந்தேன். தினமும் பள்ளியில் இருந்து திரும்பும்போது டியூஷனுக்கும் சென்றுவிட்டு வருவேன். ஒரு விழாயற்கிழமை மாலை டியூஷன் முடிந்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டு இருந்தேன். அப்போது இரவு மணி ஏழரை இருக்கும். வரும் வழியில் ஒரு பாலாஜி ஆலயம் உள்ளது. அங்கு எதோ விசேஷம் நடந்து கொண்டு இருந்தது. அந்த ஆலயத்தின் அருகில் நாங்கள் சென்று கொண்டு இருந்தபோது ஒரு வயதான மனிதர் என்னிடம் வந்து ஐந்து ரூபாய் கேட்டார். தாம் வெகு தொலைவில் இருந்து வந்து உள்ளதாகவும் திரும்பிப் போக பஸ் செலவிற்கு கையில் பணம் இல்லை என்றும் கூறினார். எங்களிடம் எப்போதும் பணம் இருக்காது. ஆனால் அன்று ஏதேர்சையாக என்னிடம் ஐந்து ரூபாய் இருந்தது. அதைக் கொடுத்ததும் நன்றி எனக் கூறி விட்டு அவர் சென்றார். ஒரு நிமிடத்தில் எதோ உணர்வு தோன்ற நான் அந்த வயதானவர் எங்கு போகின்றார் என பார்க்க அவர் சென்ற பாதையில் தேடினேன். ஆனால் அவரை எங்குமே காணவில்லை. ஒரே நிமிடத்தில் அவர் எங்கு சென்று இருக்க முடியும் என நினைத்தவாறே வீட்டிற்கு நடந்து வந்தோம். நான் அன்று வியாழர் கிழமை விரதத்தில் இருந்தேன். வீடு திரும்பும் வழியில்தான் நினைவுக்கு வந்தது நான் அந்த வாரத்தில் இருந்துதான் சாயி சரித்திரம் படிக்கத் துவங்கி இருந்த கதை . ஆகவே பாபாவே  வந்து என்னிடம் இருந்து தக்ஷணை பெற்றுக் கொண்டு சென்று உள்ளார். என்னால் அதை நம்பவே முடியவில்லை. என் மனதில் பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. எங்கள் வீட்டின் அருகில் அந்த ஒரே ஒரு சாயிபாபா ஆலயம் மட்டுமே உள்ளது. அங்கு மாலை 7.00 முதல் 7.30 வரை ஆரத்தி நடைபெறும்.  ஆகவே ஆரத்தி நடைபெற்ற அந்த நேரத்தில் பாபா வந்து என்னிடம் இருந்து தக்ஷணை பெற்றுக் கொண்டு சென்றது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நான் சாயிபாபாவின் காலடியில் என் தலையை வைத்து வணங்குகின்றேன்.
ஒரு சாயிபாபா பக்தை 

---------------------------------

 பாபா என்னுடைய சகோதரியின் மகனைக் காப்பாற்றினார்

சமீபத்தில் என்னுடைய சகோதரியின் மகன் உடல் நலமின்றிப் இருந்தான். மூன்று வாரம் ஆகியும் ஜுரம் குறையவில்லை. பல மருத்துவர்களிடம் காட்டியும்  எந்த முன்னேற்றமும் இல்லை. மாறி மாறி ஜுரம் வந்து கொண்டே இருந்தது. ஆகவே வேறு ஒரு சிறந்த  மருத்துவரிடம் சென்றதும் அவர் ஒரு குறிப்பிட்ட வியாதிக்காக சில சோதனைகளை எடுக்கச் சொன்னார். அதில் பரிசோதனை பாஸிடிவ் என வந்து விட கவலை அடைந்தோம். ஆகவே மீண்டும் இரண்டாம் முறை அந்த சோதனையை செய்யுமாறு கூறினார். குழந்தையின் உடல் நலமாக வேண்டும் என வேண்டிக் கொண்டு ஒவ்வொரு நாளும் நான் சாயி சரித்திரத்தில் இருந்து ஒரு பக்கத்தைப் படிக்க ஆரம்பித்தேன். அடுத்த நாள் வியாழர் கிழமை, குழந்தைக்கு இரண்டாவது சோதனை செய்ய வேண்டிய நாள். அந்த சோதனைக்கு செல்லும் முன் நான் சாயி சரித்திரத்தை படிக்க புத்தகத்தை திறந்தேன். அந்த   பக்கத்தில் இருந்த வாசகங்கள் இது ''வியாதிகள் மாறியும், என் பக்தர்களை சாவின் வாயிலில் இருந்து காப்பேன்''
நாங்கள் சோதனை சாலைக்கு சென்று குழந்தையின் பரிசோதனைகளை செய்தோம். என்ன அதிசயம் அனைத்து சோதனைகளிலும்  குறிப்பிட்ட வியாதிக்கான அறிகுறி இல்லை என்றே வந்தது. அதற்குக் காரணம் பாபாவின் அருள்தான். நான் அவருக்கு மனமார்ந்த நன்றியை தினமும் தெரிவிக்கின்றேன்.
ஒரு சாயிபாபா பக்தை
(Condensed  and Translated into Tamil : Santhipriya )

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.