Sunday, March 4, 2012

Shirdi Sai Baba's Grace-Experience Of Sai Devotees-Part 33.

ஷீர்டிஸாயிபாபாவின்அருள் - பக்தர்களின்அனுபவங்கள் - 33-ம்பகுதிஅனைவருக்கும் ஸாயிராம்.
இனிய பாபா நாள் வாழ்த்து.
கஷ்டகாலம் நமது பொறுமையையையும் ஆண்டவன் மேல் இருக்கும் நம்பிக்கையையும்சோதிக்கிறது. நமது நம்பிக்கையில் உறுதி வைத்து, இந்தக்  கஷ்டங்களை விடவும், ஆண்டவன் வலிமை வாய்ந்தவர் என நமக்குள் சொல்லிக் கொண்டால், விரைவிலேயே இவ்வுலக அபிமானத்தை நாம் வென்று விடுவோம். வெற்றியைச் சந்திப்பதோடு மட்டுமின்றி, பிரச்சினைகளுக்குஅடிபணிந்து போவதைக் காட்டிலும், நமது நம்பிக்கையை நாம் கைவிடாது  இருப்பதுவும், ஆண்டவனின் ஆணைக்குக் கட்டுப்படுவது மிகவும் சக்தி வாய்ந்தது என்பதையும் நாம் உணரத் தலைப்படுவோம். அடியவர்கள் அவ்வண்ணம் உணர்ந்த ஒருசில அனுபவங்களை இங்கே அளிக்கிறேன் .
ஜெய் ஸாயிராம்.
மனிஷா
--------------------
"ஸத்குருவின் ஆசிகளும், அருளும் -
 நான் ருசித்த பழங்களை உங்களுடன் பகிர்கிறேன் - 
பகுதி:2

ஸாயி மஹராஜின் லீலைகளைப் பகிர்வதில் மகிழ்கிறேன்.
தயவு செய்து இதைப் பிரசுரிக்கவும். ஸாயி மொழிகளை உலகெங்கும் பரப்ப, நீங்கள் செய்து வரும் இந்தப் பணிக்காக உங்களைப் பாராட்டி, எனது வந்தனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தச் சேவை தொடர வேண்டுகிறேன்.  பரவாயில்லை, எனது பெயர் இந்த மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. அனந்த கோடி ப்ரம்மாண்டநாயக  ராஜாதிராஜ யோகிராஜ பரப்ரம்ம ஸ்ரீஸச்சிதானந்த ஸத்குரு ஸாயிராஜ் மஹராஜ் கி ஜெய்.
ஜெய் ஸாயிராம்.
அன்பார்ந்த ஸாயி அடியார்களே, மனிஷாஜி,
ஸாயியின் ஆசிகளையும் லீலைகளையும் பகிர்வதற்கான வாய்ப்பினை எனக்குத் தந்தமைக்காக உங்களுக்கெல்லாம் எனது வந்தனங்கள்.
"ஸத்குருவின்ஆசிகளும், அருளும் - நான் ருசித்த பழங்களை உங்களுடன் பகிர்கிறேன்' என்ற தலைப்பில்நான் முன்னம் எழுதியமின்னஞ்சலின் இரண்டாம் பகுதி இது.எனது ஷீர்டி பயணத்தின் போது நான் அனுபவித்த லீலைகளில் இன்னமும் சொல்லாமல் விடுபட்ட மேலும் சில அனுபவங்களை இங்கே தருகிறேன்.
1. 2011-ம்ஆண்டு, ஆகஸ்ட்மாதம். தவறாமல் சென்றுஸத்குருவைக் காண வேண்டும் என நாங்கள் அனைவரும்முடிவு செய்தோம்.எப்போதுபோகலாம் எனும் விவாதம் தொடங்கியது.விநாயக சதுர்த்தி விடு முறையைஒட்டி, செப்டெம்பர் மாதம் முதல் வாரத்தில் செல்லலாம் என முடிவாகியது.அதன் பின்னர், பயணச்சீட்டுகளுக்காக ஏதேனும் 'ட்ராவெல்ஸ்' மூலமாகவோ, அல்லது, இந்திய ரயில்வே பயணச் சேவை [IRCTC] மூலமோ தேடத் தொடங்கினோம். IRCTC அந்தத் தேதிகளில் ஏதும் பயணத் திட்டம் அளிக்கவில்லை என்பதால், சென்னையில் இருக்கும் 'ட்ராவெல் ஏஜென்ஸி'யை நாடினோம்.
எனது தந்தை ஒரு சில இடங்களுக்குச் சென்று, செப். முதல் வாரத்துக்கு அவர்கள் தந்த பயணத் திட்டங்களைப் பெற்று வந்தார். திடீரென, விநாயகசதுர்த்திக் கொண்டாட்டங்களை  உள்ளூரில் கொண்டாடாமல் செல்வது சரியில்லையோ எனும் முடிவுக்கு வந்தேன்.
ஆகஸ்ட் மாதக் கடைசி வாரத்தில் சென்று திரும்பினால், விநாயக சதுர்த்திக்கு வீடு திரும்பிவிடலாமே என நினைத்தேன்.ஆனால், நிகழ்வுகள் என் நினைவுகளுக்கு இசைவாக இல்லை.எதிர்பாராத விதமாக, IRCTC தனது பயணத்திட்டத்தை வெளியிட்டது. அதுஅப்படியேநான்மனதில் நினைத்திருந்த நாட்களைஒத்திருந்தது.ஸாயிக்குப் பலமுறை வந்தனங்களைச் சொல்லிக் கொண்டு, பயணச் சீட்டுகளைப் பதிவு செய்தோம்.ஜெய் ஸாயிராம்.
2. வயதானகாரணத்தால், எனதுதாய், தந்தையரால் மேல் இருக்கைகளில் ஏறஇயலாது. கூடவே, எனது தந்தைக்கு இடுப்பு, முழங்கால் மூட்டு வலியும்.கீழ் இருக்கைகள் அவர்களுக்குக் கிடைத்தால் மட்டுமே இந்தப் பயணம் மேற்கொள்வது என நிச்சயித்தோம்.நாங்கள் கிளம்புவதற்கு 2 அல்லது 3 தினங்களுக்கு முன்தான், IRCTC   இருக்கைகள் பற்றிய அறிவிப்பை வெளியிட்டது.கீழ்  இருக்கைகள் கிடைக்கா விட்டால், பயணத்தை நிறுத்த வேண்டி வருமே என என் தந்தை வருந்தினார்.ஸாயி அவரது மண்ணில் நாங்கள் காலடி வைக்க வேண்டும் எனமுடிவு செய்தால், அவரது பேச்சுக்கு எதிராக எதுவுமே நிகழாது என நாங்கள் அவருக்கு தைரியம் சொன்னோம்.ஸாயி மஹராஜின் கருணையினால், நாங்கள் விரும்பிய இருக்கைகளே எங்களுக்கு கிடைத்தன. மீண்டும் ஸாயிக்கு வந்தனங்களைச் சொன்னேன்.ஜெய்ஸாயிராம்.
3. ஷீர்டி சென்றடைந்த போது  இரவு நேரமாகி விட்டது. நாங்கள் தங்கிய விடுதி அறையில், சுடு தண்ணீருக்கான ஏற்பாடுகள் எதுவும் இல்லை. குழாயிலிருந்து வந்த தண்ணீரோ மிகவும் ஜில்லென்று இருந்தது.எப்படிசமாளிக்கப் போகிறோம் என நினைத்தேன்.ஸாயியின் கருணையைவேண்டிக் கொண்டு அந்தத் தண்ணீரிலேயே குளித்தோம். ஆச்சரியப்படும் வகையில், அந்தத் தண்ணீர் சற்று வெதுவெதுப்பாகவே இருந்தது.ஸாயியின் கருணையை எண்ணி மெய் சிலிர்த்தேன்.மீண்டும் வந்தனங்கள்.ஜெய்ஸாயிராம்.
4. ‘குருஸ்தானத்தில்அவரது லீலை’: குருஸ்தானத்தைச் சுற்றி வரும் போது, எனக்கு ஒரு வேப்பிலை கிடைக்க வேண்டுமென விரும்பினேன். பாபாவின் ஆசியைக் காட்டும் விதமாக ஒவ்வொரு முறை சுற்றி வரும் போதும், தனக்கு ஒரு வேப்பிலை கிடைப்பதுபற்றி, ஒருஸாயிஅன்பர்எழுதிய அனுபவத்தைப் படித்திருந்ததால் வந்த விருப்பம் இது. முதல் சுற்றில் ஒன்றும்கிடைக்கவில்லை.ஸாயியின்அருள்எனக்குக் கிடைக்காத துரதிர்ஷ்டம் எனக்கு என நான் நினைத்தேன்.அப்படி நினைத்த அந்தக் கணமே மரத்திலிருந்து ஒரு இலை என்னருகில் வந்து விழுந்தது.மகிழ்ச்சியும், ஆச்சரியமும் அடைந்த நான் ஸாயிக்கு என் வந்தனங்களைச் சொன்னேன்.இந்தச் செய்தியை என்சகோதரியிடம்சொல்ல, இரண்டாம்சுற்றில், தனக்கும்ஒரு இலை கிடைக்கவேண்டுமென அவளும் என்னோடு சேர்ந்து கொள்ள, மீண்டும் பாபா அருளால் அவளுக்கும் ஒரு வேப்பிலை கிடைத்தது. எனதுசகோதரனிடம்இதைப்பகிர்ந்துகொண்டபோது, அவனும் எங்களுடன் சேர்ந்து கொள்ள, மூன்றாம் சுற்றில்அவனுக்கும் ஒரு இலை கிடைத்தது.
ஸாயி அருளால் இப்படி நிகழும்போது, இந்த மூன்று சுற்றுகளின்போதும், எங்களைத்தவிரஅங்கிருந்தவேறுஎவருக்கும்ஒருஇலைகூடக்கிடைக்கவில்லைஎன்பதுஇன்னுமொருஅதிசயம்.எங்களுக்கும்வேண்டுமெனக்கேட்டஅனைவருக்கும்ஒருசிறியபகுதியைக்கிள்ளிக்கொடுத்துமகிழ்ந்தோம்.இந்தவினாடிவரை, ஸாயிமஹராஜ்எங்கள்மீதுபொழிந்தகருணையைஎண்ணிஆனந்தப்படுகிறேன்.ஜெய்ஸாயிராம்.
5. எனதுசகோதரிக்கு சிறு நீர்  கோளாறுஇருந்தது. ஒருமாதம் சிகிச்சைஎடுத்த பின்னரும் [இன்னமும்எடுத்துக்கொள்கிறாள்] இன்னும் குணமாகவில்லை.அதனால் ஒரு 'ஸ்கேன்' எடுத்துப்பார்க்குமாறுமருத்துவர்கூறினார்.மேலும்பலகோளாறுகளைஅதுகாட்டியது.சிறுநீர்ப்பையில்கல், ஒருசிறுதழும்பு, மற்றும்ஒருகட்டிஇவைகளுடன்அதுஅளவில்பெரியதாகவும் [5.5 செ.மீ.] இருந்தது.மிகவும்கவலையடைந்துஸாயியைவேண்டினோம்.இன்னொருஇடத்திற்குச்சென்று, 'ஸ்கேன்' எடுக்குமாறுமருத்துவர்ஆலோசனைசொன்னார்.இப்போதுஸாயியின்அருள்தெரிந்தது.இந்தமுறைஎடுத்தஸ்கேனில், சிறுநீரகத்தில்கல்எதுவும்இருக்கவில்லை.மேலும்சிறுநீரகத்தின்அளவு 5.5 மி.மீ.... செ.மீ.அல்லஎனத்தெரிந்தது.இருவேறுஸ்கேன்அறிக்கையும்இருவிதமாகஇருந்ததால்மேலும்ஒருஸ்கேன்எடுக்க, இரண்டாவதாகஎடுத்தஸ்கேனுடன்அதுஒத்திருந்தது.
இதுபோன்ற 5.5 மி.மீ.அளவுக்கட்டிகள்இருப்பது சாதாரணமேஎனமருத்துவர் சொல்லி எங்களைகவலைப்பட வேண்டாமெனச் சொன்னார்.மீண்டும் ஸாயிக்கு வந்தனங்களைச் சொன்னோம்.இப்போதுஒருசில மருந்துகள்மட்டுமேஅவள் எடுத்துக்கொள்கிறாள்.அவளைக் குணமாக்கஸாயியைவேண்டிக்கொண்டிருக்கிறம்.
6. எனதுசகோதரியின்மகள்யூ.கே.ஜி.யில்படிக்கிறாள். அவளது பள்ளியில் விளையாட்டு தினம் வந்தது. ஒருசிலசிறிய அளவிலானவிளையாட்டுப் போட்டிகள் வைப்பார்கள்.நானும், அந்தக் குழந்தையும் அந்தப்போட்டிகளில் அவள் வெல்ல வேண்டுமென ஸாயியிடம்வேண்டிக் கொண்டோம். ஆனால்நாங்கள் வேண்டியபடி நடக்கவில்லை.காலிறுதிப் போட்டியில்அவள்தோற்றுப் போனாள்.அதனால் வருத்தமடைந்தாள்.ஸாயி ஏதோஒரு காரணத்துக்காகத்தான் ஸாயி இப்படிச் செய்தார் என எண்ணிக் கொண்டேன்.எதிர்பாராத விதமாக, மறுநாள் பள்ளியில் இன்னொரு போட்டி நடத்தினார்கள்.[இதுபோல இது வரையிலும் நிகழ்ந்ததில்லை] அதில் அவள் வெற்றி பெற்று அரையிறுதி வரைக்கும் சென்றாள் .எங்களுக்கெல்லாம் ஒரே மகிழ்ச்சி.ஸாயியின்கருணைக்கு நன்றி சொன்னோம். இறுதிப் போட்டியிலும் அவளை வெற்றி பெறச்செய்வார் எனமுழுமையாக நம்பினோம். மீண்டும் அது நிகழ்ந்தது. ஸாயிமஹராஜ் அவளைஇறுதிப் போட்டியில் முதலாவதாக வரச்செய்து வெற்றியளித்தார்.அவளுக்குக் கிடைத்த அனைத்துக் கை தட்டல்களும் ஸாயியையே சாரும்.ஜெய்ஸாயிராம்.
ஸாயியின் ஆசிகள், கருணைக்கான பட்டியல் முடிவில்லாதது.அவர் எங்கள் மீது காட்டும் இந்தக் கருணைக்கு எப்போதும் நன்றியுடையவராக நாங்கள் இருந்து அவரிடம் மேலும்ஈடுபாடு கொள்ளச் செய்யுமாறுஅவரை வேண்டுகிறோம்.எங்களது குடும்பநலனுக்கானஇன்னும்பல வேண்டுதல்கள் இருக்கின்றன.சில பிரச்சினைகள் எங்கள்குடும்பத்தில் இருக்கின்றன.ஸாயியின் திருநாமத்தின்மீதுஎனக்குநம்பிக்கை இருக்கிறது.அவையெல்லாம் சரியாகும். மீண்டும் அவற்றை இங்கே நான் பகிர்ந்து கொள்வேன்.
நம்எல்லாருக்கும் மேலும், மேலும் ஸாயியின் அருளாசிகள் கிடைத்து, நாமனைவரும் அவரிடம் ஆழ்ந்த ஈடுபாடு கொள்ள வேண்டுமென வேண்டிக் கொள்கிறேன்.
ஜெய்ஸாயிராம்.
மிகுந்தமரியாதையுடன்,
ரேவதி.
************


"பாபாவின் அற்புதம்"

பாபாவின் அற்புதங்களைப் பற்றிய எனது அனுபவத்தை இங்கே சொல்ல விரும்புகிறேன். எனது சகோதரியின் கணவர் அவரது நண்பரின் தாயின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளச் சென்றார். வாகனத்தை அதற்கான இடத்தில் நிறுத்தி விட்டு, அவர் உள்ளே சென்றார்.அவர் உள்ளே சென்ற 20 நிமிடங்களில் அவரது கடனட்டையை [credit card] யாரோ உபயோகிப்பதாக அவரது அலைபேசியில் ஒரு எச்சரிக்கை வந்தது. அவரது கார்கண்ணாடியை உடைத்து யாரோ அவரது மடிக்கணினியையும்[Laptop] மற்ற ஆவணங்களையும் திருடிச் சென்றிருப்பதைக் கண்டார். மிகவும்மனமுடைந்துபோய்அவர் இல்லம் திரும்பினார்.எனது சகோதரி இந்த விஷயத்தை என்னிடம்சொன்னதும் நான் பாபாவிடம்அவருக்காக வேண்டினேன்.எனதுபிரார்த்தனையை முடித்ததுமே, அவரது ஆவணங்கள் அனைத்துமே கிடைத்து விட்டதாகவும், ஆனால், அவரது பணம் முழுதும் களவுபோனதாகவும் [அவரது கடனட்டையைஉபயோகித்து] எனக்கு செய்தி வந்தது. இதுவே பாபாவின் சரியான தருணத்தில் செய்யும் பேருதவி. வந்தனங்கள்  ஸாயிபாபா.எப்போதும்எங்களை உங்களுடனேயே வைத்துக் கொள்ளுங்கள்."ஸாயி என்னைப் பல விதங்களில்ஆசீர்வதித்தார்":

மனிஷா,
1. 2004-ல்எனக்கு ஒரு ஸாயிபாபா சிலை கிடைத்தது. எனது கணவரின் நண்பர் ஒருவர் அதைத் தந்தார். ஆனால், அந்தச் சமயத்தில் எனக்கு பாபாவைப் பற்றி அதிகம் தெரிந்திருக்கவில்லை. அதை எனது பூஜையறையில் வைத்தேன். 2008-ல் ECR சாலையில்இருக்கும்பாபா ஆலயத்துக்கு ஒரு வியாழக் கிழமையன்று நாங்கள் சென்றோம். அந்த வழிபாடுகளில் கலந்து கொண்டபோது, நான்பாபாவின்மேல்ஈடுபாடுகொண்டேன். எனக்கும், என் கணவருக்கும் ஒரு நல்ல வேலை கிடைக்க வேண்டுமென நான் 9 வார ஸாயி விரதம் மேற்கொண்டேன். அந்த 9 வாரங்களுக்குள்நான் வேண்டியதையெல்லாம் பாபா தந்தார். ஒரு குழந்தை வரம் மட்டும் கிடைக்கவில்லை. ஆனால், ஒரு நாள் ஸாயி எனக்கு ஒரு குழந்தையை அளிப்பார் எனும் நம்பிக்கை உள்ளது. இதுஎன்முன்வினையின்காரணமேஎனஅறிவேன்.அதனால்தான்எனக்குஇன்னும்அந்தபாக்கியம்கிடைக்கவில்லை.ஸாயிமீதுநம்பிக்கையும், உறுதியும்கொண்டால், ஒருநாள்ஸாயிஎனதுகனவைப்பூர்த்திசெய்வார்எனஅறிவேன். நான்ஷ்ரத்தையும், ஸபுரியும்கொள்ளவேண்டும்.
2. எனதுதாய்வீட்டிலிருந்துசுமார் 107 கி.மீ. தொலைவிலிருக்கும்எனதுமாமியார்வீட்டுக்குபேருந்தில்கிளம்பினேன்.'நான்செல்லும்வழியில்எங்காவதுஉங்களதுபடத்தைநான்பார்க்கஅருளவேண்டும்' எனக் கிளம்பும் முன், பாபாவிடம் நான் வேண்டினேன்.எதுவும் அப்படித் தென்படாததால், சுமார் 50 கி.மீ.தூரம் சென்றதும், 'எந்தப் படத்தையும் நான் பார்க்கவில்லை என்றாலும், குறைந்த பட்சம், உமது பெயரைத் தாங்கிய ஒரு வண்டி, அல்லது கடையையாவது காட்ட மாட்டாயா ஸாயி' என மீண்டும் வேண்டினேன். வழக்கமாக அப்படி எல்லாம் கண்பேன்.ஆனால், அன்றுஅப்படி எதுவும் நிகழவில்லை.எனவே, நான் மிகவும் கவலை அடைந்தேன்.'ஏன் இப்படிச் செய்கிறீர்கள் ஸாயி?' எனப் பிரார்த்தித்தேன்.இன்னும் 5 அல்லது 10  நிமிடங்களில் என பேருந்து நான் செல்லுமிடத்தை அடைந்து விடும்.இறுதியில், பாபா எனது பிரார்த்தனைக்குச் செவிமடுத்தார்.ஸாயி பாபாவின் படம் தாங்கிய ஒரு பேருந்தை [சென்னையில்] நான்கண்டேன்.அதைப்பார்த்துமகிழ்ந்து, ஸாயிக்குஎன்வந்தனங்களைச்சொன்னேன்.
4. கடைத் தெருவுக்குப் போனேன். நான் ஒரு நண்டு வாங்கச் சென்றதால், 'நீர் இங்கு இருப்பது உண்மையானால், ஒரு நண்டைக்கண்பியுங்கள்' என பாபாவிடம் வேண்டிக் கொண்டேன்.கடைத் தெருவுக்குள் சென்றதுமே நான் ஒரு நண்டைப் பார்த்தேன். நான் அந்தக் கடைக்குச் செல்வதற்குள், இன்னொருவர் வந்து அந்த நண்டை வாங்கிச் சென்றார். இப்படி ஆகிவிட்டதே, நான் ஸாயியிடம் விளையாடினேன்; ஒரு நண்டைக் காட்டச் சொன்னேன்; அவரும் காண்பித்தார்; ஆனால்,எனக்கு நண்டு கிடைக்காமல் போய் விட்டதே, எல்லாம் விரைவாகத் தீர்ந்து விட்டதே என நினைத்தேன். இதன் மூலம், ஸாயியுடன் விளையாடக் கூடாது என அறிந்தேன். ஸாயி எப்போதுமே நம்மோடுதான் இருக்கிறார். இதுபோல அவரைச் சோதிக்கக் கூடாது.
விரைவிலேயே, ஸாயி எப்படி ஒரு குழந்தையை எனக்கு அருளினார் என எழுதுவேன்.
ஸாயிராம்.


"ஸாயியுடனான எனது அனுபவம்":

என்பெயர்மானஸா.இருமுறை '9 வாரவியாழக்கிழமைவிரதத்தை' முடித்துவிட்டு, இப்போது மூன்றாம்முறையாக அனுஷ்டிக்கிறேன்.நான் ஸாயியை நேசிக்கிறேன்.அவரை நம்புகிறேன்.அவர் எனக்கு நான் வேண்டியதெல்லாம் தந்திருக்கிறர்.
கணினித் துறையில் நான்எ ஞ்சினீயர்பட்டம்பெற்றவள். ஒருசிறிய 'கம்பெனி'யில் 6,500 ரூபாய் சம்பளத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். மென்பொருள்துறையில்[Software] இப்போது 25,000 ரூபாய் ஊதியத்தில் பாபா எனக்கு ஒரு புதுப் பாதை தந்திருக்கிறார்.
திருமணத்துக்குப் பின், எனதுகணவர் புனேவிலும், நான் பங்களூருவிலும் வசித்து வந்தோம். ஸாயி ஸத்சரித்ரத்தை ஒரே வாரத்தில் முடித்து, 9-வாரஸாயி விரதமும் செய்து வந்தேன்.8-வது வாரத்திலேயே, என் கணவருக்கு பங்களூருவில் வேலை கிடைத்தது.
அதன்பின்னர், குழந்தைவரம்வேண்டிமீண்டும் 9 வியாழக்கிழமைஸாயிவிரதம்துவங்கினேன்.நான்காவதுவாரத்திலேயேநான்கருத்தரித்தேன்.
எல்லாம்நல்லபடியாகநிகழ்ந்து, பாபாவின்ஆசிகளால், ஒருஆரோக்கியமானஆண்மகவைப்பெற்றெடுத்தேன்.
9-ம்வகுப்பு வரை மட்டுமே படித்து விட்டு, ஒரு வேலையும் செய்யாதிருந்த எனது மைத்துனனால் எங்களுக்குஒருபெரியபிரச்சினைஏற்பட்டது.
எங்களை வேலைக்குச் செல்ல விடாமலும், அவமதித்தும், வீட்டிலுள்ள விலையுயர்ந்த பொருட்களை நாங்கள் இல்லாத சமயத்தில் விற்று விடுவேன் எனப் பயமுறுத்தியும் எங்களை மனவளவில் துன்புறுத்தி வந்தான்.
மறுபடியும் நான் 9 வியாழக்கிழமை ஸாயி விரதத்தை மீண்டும் செய்யத் தொடங்கினேன். 5-ம் வாரத்தில் எங்களுக்கும் அவனுக்குமிடையே ஒருபெரிய சண்டை  நடந்தது. அது பற்றிக் காவல் நிலையத்தில் புகார் செய்தோம். அதைத் தொடர்ந்து, மேலும் பல விஷயங்கள் நிகழவும், அந்தவீட்டைக்காலிசெய்துவிட்டு, வேறொரு புதியவீட்டுக்குக் குடிபோக முடிவு செய்தோம்.அப்படிச் செய்தால்அவன்அங்கு வந்து தொல்லை கொடுக்க இயலாது என நினைத்தோம்
அவன் வீட்டில் இல்லாத நேரத்தில், வீட்டின் பூட்டுகளை மாற்றிவிட்டு, ஒரே வாரத்தில் ஒரு புது வீட்டுக்கு மாறினோம். இதுபோல அவனுக்காக வீடு மாறுவது இது இரண்டாம்முறை.
அதன் பிறகு, ஒருநாள் அவன் எனது கணவரை அழைத்து, தான் வேலைக்குச் செல்ல விரும்புவதாகவும், தனக்கு ஒருவேலை பார்த்துத்தரும்படியும் கேட்டுக் கொண்டான்.
எனது கணவரும் அவனுக்கு பிஜாபூரில் ஒரு வேலை பார்த்து அங்கு அனுப்பினர்.
இப்போது 7-ம் வாரத்தை முடித்து விட்டேன். இன்னும் இரண்டு வாரங்கள் மீதமிருக்கின்றன.
இதற்கு முன்னரும், எனது கணவர் பார்த்துக் கொடுத்த வேலை எதிலும் அவன் மூன்று மாதங்களுக்கு மேல் நீடித்ததில்லை.
ஆனால், இந்த முறை பாபா எங்களுக்கு உதவுவார் என நம்புகிறேன். எனது மைத்துனன் அந்த வேலையில் நீடித்து, எங்களை மேலும் தொல்லைப் படுத்தமாட்டான் எனவும் நம்புகிறேன்.
எங்களுக்குக் கொடுத்த அனைத்துக்கும் பாபாவுக்கு வந்தனங்கள்.
நான்உங்களைநேசிக்கிறேன்பாபா.
2. எனது தாய் வீட்டிலிருந்து சுமார் 107 கி.மீ. தொலைவிலிருக்கும் எனது மாமியார் வீட்டுக்கு பேருந்தில் கிளம்பினேன். 'நான் செல்லும் வழியில் எங்காவது உங்களது படத்தை நான் பார்க்க அருள வேண்டும்' எனக் கிளம்பும் முன், பாபாவிடம் நான் வேண்டினேன். எதுவும் அப்படித் தென்படாததால், சுமார் 50 கி.மீ. தூரம் சென்றதும், 'எந்தப் படத்தையும் நான் பார்க்கவில்லை என்றாலும், குறைந்த பட்சம், உமது பெயரைத் தாங்கிய ஒரு வண்டி, அல்லது கடையையாவது காட்ட மாட்டாயா ஸாயி' என மீண்டும் வேண்டினேன். வழக்கமாக அப்படி எல்லாம் கண்பேன். ஆனால், அன்று அப்படி எதுவும் நிகழவில்லை. எனவே, நான் மிகவும் கவலை அடைந்தேன். 'ஏன் இப்படிச் செய்கிறீர்கள் ஸாயி?' எனப் பிரார்த்தித்தேன். இன்னும் 5 அல்லது 10 நிமிடங்களில் என பேருந்து நான் செல்லுமிடத்தை அடைந்துவிடும். இறுதியில், பாபா எனது பிரார்த்தனைக்குச் செவி மடுத்தார். ஸாயி பாபாவின் படம் தாங்கிய ஒரு பேருந்தை [சென்னையில்] நான் கண்டேன். அதைப் பார்த்து மகிழ்ந்து, ஸாயிக்கு என் வந்தனங்களைச் சொன்னேன்.
4. கடைத் தெருவுக்குப் போனேன். நான் ஒரு நண்டு வாங்கச் சென்றதால், 'நீர் இங்கு இருப்பது உண்மையானால், ஒரு நண்டைக் கண்பியுங்கள்' என பாபாவிடம் வேண்டிக் கொண்டேன். கடைத்தெருவுக்குள் சென்றதுமே நான் ஒரு நண்டைப் பார்த்தேன். நான் அந்தக் கடைக்குச் செல்வதற்குள், இன்னொருவர் வந்து அந்த நண்டை வாங்கிச் சென்றார். இப்படி ஆகிவிட்டதே, நான் ஸாயியிடம் விளையாடினேன்; ஒரு நண்டைக் காட்டச் சொன்னேன்; அவரும் காண்பித்தார்; ஆனால்,எனக்கு நண்டு கிடைக்காமல் போய்விட்டதே, எல்லாம் விரைவாகத் தீர்ந்து விட்டதே என நினைத்தேன். இதன் மூலம், ஸாயியுடன் விளையாடக் கூடாது என அறிந்தேன். ஸாயி எப்போதுமே நம்மோடுதான் இருக்கிறார். இதுபோல அவரைச் சோதிக்கக் கூடாது.
விரைவிலேயே, ஸாயி எப்படி ஒரு குழந்தையை எனக்கு அருளினார் என எழுதுவேன்.
ஸாயி ராம்.


"ஸாயியுடனான எனது அனுபவம்":

என் பெயர் மானஸா. இருமுறை '9 வார வியாழக்கிழமை விரதத்தை' முடித்துவிட்டு, இப்போது மூன்றாம் முறையாக அனுஷ்டிக்கிறேன். நான் ஸாயியை நேசிக்கிறேன். அவரை நம்புகிறேன். அவர் எனக்கு நான் வேண்டியதெல்லாம் தந்திருக்கிறார்.
கணினித் துறையில் நான் எஞ்சினீயர் பட்டம் பெற்றவள். ஒரு சிறிய 'கம்பெனி'யில் 6,500 ரூபாய் சம்பளத்தில் வேலை செய்துகொண்டிருந்தேன். மென்பொருள் துறையில்[Software] இப்போது 25,000 ரூபாய் ஊதியத்தில் பாபா எனக்கு ஒரு புதுப் பாதை தந்திருக்கிறார்.
திருமணத்துக்குப் பின், எனது கணவர் புனேவிலும், நான் பங்களூருவிலும் வசித்து வந்தோம். ஸாயி ஸத் சரித்ரத்தை ஒரே வாரத்தில் முடித்து, 9-வார ஸாயி விரதமும் செய்து வந்தேன். 8-வது வாரத்திலேயே, என் கணவருக்கு பங்களூருவில் வேலை கிடைத்தது.
அதன் பின்னர், குழந்தை வரம் வேண்டி மீண்டும் 9 வியாழக்கிழமை ஸாயி விரதம் துவங்கினேன். நான்காவது வாரத்திலேயேநான் கருத் தரித்தேன்.
எல்லாம் நல்லபடியாக நிகழ்ந்து, பாபாவின் ஆசிகளால், ஒரு ஆரோக்கியமான ஆண் மகவைப் பெற்றெடுத்தேன்.
9-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு, ஒரு வேலையும் செய்யாதிருந்த எனது மைத்துனனால் எங்களுக்கு ஒரு பெரிய பிரச்சினை ஏற்பட்டது.
எங்களை வேலைக்குச் செல்லவிடாமலும், அவமதித்தும், வீட்டிலுள்ள விலையுயர்ந்த பொருட்களை நாங்கள் இல்லாத சமயத்தில் விற்றுவிடுவேன் எனப் பயமுறுத்தியும் எங்களை மனவளவில் துன்புறுத்தி வந்தான்.
மறுபடியும் நான் 9 வியாழக்கிழமை ஸாயி விரதத்தை மீண்டும் செய்யத் தொடங்கினேன். 5-ம் வாரத்தில் எங்களுக்கும் அவனுக்குமிடையே ஒரு பெரிய சண்டை நடந்தது. அது பற்றிக் காவல் நிலையத்தில் புகார் செய்தோம். அதைத் தொடர்ந்து, மேலும் பல விஷயங்கள் நிகழவும், அந்த வீட்டைக் காலி செய்துவிட்டு, வேறொரு புதிய வீட்டுக்குக் குடி போக முடிவு செய்தோம். அப்படிச் செய்தால் அவன் அங்கு வந்து தொல்லை கொடுக்க இயலாது என நினைத்தோம்.
அவன் வீட்டில் இல்லாத நேரத்தில், வீட்டின் பூட்டுகளை மாற்றிவிட்டு, ஒரே வாரத்தில் ஒரு புது வீட்டுக்கு மாறினோம். இதுபோல அவனுக்காக வீடு மாறுவது இது இரண்டாம் முறை.
அதன் பிறகு, ஒரு நாள் அவன் எனது கணவரை அழைத்து, தான் வேலைக்குச் செல்ல விரும்புவதாகவும், தனக்கு ஒரு வேலை பார்த்துத் தரும்படியும் கேட்டுக் கொண்டான்.
எனது கணவரும் அவனுக்கு பிஜாபூரில் ஒரு வேலை பார்த்து அங்கு அனுப்பினார்.
இப்போது 7-ம் வாரத்தை முடித்துவிட்டேன். இன்னும் இரண்டு வாரங்கள் மீதமிருக்கின்றன.
இதற்கு முன்னரும், எனது கணவர் பார்த்துக் கொடுத்த வேலை எதிலும் அவன் மூன்று மாதங்களுக்கு மேல் நீடித்ததில்லை.
ஆனால், இந்த முறை பாபா எங்களுக்கு உதவுவார் என நம்புகிறேன். எனது மைத்துனன் அந்த வேலையில் நீடித்து, எங்களை மேலும் தொல்லைப்படுத்த மாட்டான் எனவும் நம்புகிறேன்.
எங்களுக்குக் கொடுத்த அனைத்துக்கும் பாபாவுக்கு வந்தனங்கள்.
நான் உங்களை நேசிக்கிறேன் பாபா.

"ஸாயி பாபா எங்களுக்கு வாழ்வளித்தார்"

நானொரு பாபாவின் அடியவள். மோசமான ஒரு உடல்நலக் கோளாறினால் என் கணவர் பாதிக்கப்பட, எங்களது வாழ்க்கையில் இருள் சூழ்ந்தது. இந்த நோய் வருவதற்கு முன்னர், என் வீட்டில் ஒரு பாபா சிலை வைத்திருந்தேன்.
முதல் முறையாக எங்களைக் காப்பாற்றுமாறு நான் பாபாவை வேண்டினேன். சிகிச்சைக்காக நாங்கள் இந்தியா சென்றோம். அந்த காலகட்டத்தை எப்படி எதிர்கொண்டேன் என எனக்குத் தெரியவில்லை. நான் மிகவும் அழுது புலம்பினேன்.
ஒரு கனவின் மூலம் பாபா எனக்குத் தைரியம் கொடுத்தார். மன அமைதியும் தந்தார். அந்தக் கணம் முதல், நான் பாபாவுக்கே உரியவள் என உணர்ந்தேன். இப்போது என் கணவர் குணமடைந்து வருகிறார். தினமும் பாபாவை வேண்டி வருகிறேன். இப்போது தெம்பாக உணர்கிறேன்.
எனக்கு நிகழும் அனைத்துக்கும் நான் ஸாயிபாபாவுக்கு நன்றி சொல்கிறேன். அவரே எனது சக்தியின் ஆதாரம். எனது தந்தை-- எனது பாபா என்னை வழி நடத்திச் செல்வார் என உணர்கிறேன்.
எனது கணவருக்கு அவர் வேலை செய்யுமிடத்தில் சில பிரச்சினைகள் வந்தன. ஆனால், எனது தந்தையான ஸாயி 'அப்பா' [Sai Pa]எங்களை வழி நடத்துகிறார். அதையும் இங்கே பகிர விரும்புகிறேன்......
எனது வாழ்க்கை ஸாயிபாபா எனக்களித்த பரிசு.
ஸாயி 'பா'...[SAIPA], உங்களை நேசிக்கிறேன்.
(Translated into Tamil by Sankarkumar )

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.