Wednesday, June 6, 2012

Shirdi Sai Baba's Grace-Experience Of Sai Devotees-Part 42

சாயிபாபாவின் அருள் 

 (Translated into Tamil by Santhipriya)


அன்பானவர்களே
பாபா ஒரு பகீரைப் போல வாழ்ந்திருந்தாலும், அவர் கடவுளின் அவதாரமாக உள்ளவர். விண்ணையும், மண்ணையும் மீறிய உலகில் வாழ்ந்துள்ளார். பக்தர்களின் மனதில் நீங்காமல் இருக்கும் அவர் அனைத்து இடங்களிலும் வியாபித்து இருப்பவர். எவர் ஒருவர் அவரை இதயபூர்வமாக அழைக்கின்றார்களோ, அங்கெல்லாம் சென்று அருள் மழையைப் பொழிந்தவர். இன்று அவருடைய சில பக்தர்களில் அனுபவங்களைப் பார்க்கலாம்.
ஜெய் சாயிராம்
மனிஷா
--------------------------------------------------

பாபா என் கையைப் பிடித்துக் கொண்டு இருக்கின்றார்

அன்புள்ள மனிஷா அவர்களே, என் பெயரை வெளியிட வேண்டாம்.
ராம விஜயம் தொடருக்கும், உங்கள் இணைய தளத்துக்கும் மனமார்ந்த நன்றி. உங்கள் குடும்பத்தினரை பாபா காப்பாற்றட்டும் . முழு நிலவில் எனக்கு பாபா காட்சி அளித்த என்னுடைய முந்தையக் கட்டுரையைத் தொடர்ந்து இன்று இரண்டாவது முறையாக எழுதுகிறேன்.
என்னுடைய அனுபவத்தைக் கொண்ட (கட்டுரை எண் 41 ) கட்டுரையில் கூறியதைப் போலவே போன மாத பௌர்ணமியிலும் அதே போன்ற நிகழ்ச்சி நடைபெற்றதை நான் கண்டேன். பாபா என்றும் நம்முடனேயே இருக்கின்றார் . நாம் நிச்சயமாக அவரால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். போன வாரம் எனக்கு நடந்த இன்னொரு நிகழ்ச்சியை அனைவருடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
பாபாவின் விசேஷ நாளான ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதியன்று நான் கீழே விழுந்து அடிபட்டுக் கொண்டேன். எலும்பு முறிவிற்கு கட்டு போடப்பட்டு இருந்ததினால் அடுத்த மூன்று மாதத்திற்கு என்னால் நடக்க முடியாது. அதை எண்ணி வருந்தினேன், மனம் உடைந்து போனேன்.
என்னால் பூஜை அறைக்குக் கூடச் சென்று பூஜைகளை செய்ய முடியாது. அடிக்கடி நான் பாபாவின் ஆலயத்திற்கு செல்வது உண்டு. ஆனால் இந்த நிலையில் அங்கும் செல்ல முடியாது. என்வீடு இரண்டு அடுக்கு மாடிகளைக் கொன்றது. 'வீட்டில் இருந்த அனைவரும் வேலைக்குச் சென்று விடுவதினால் நான் நாள் முழுவதும் தன்னந் தனியே இருக்க வேண்டி உள்ளதே, நீதான் ஏதாவது செய்ய வேண்டும் பாபா' என மனதில் அழுது கொண்டு இருந்தபடி என்னுடைய கம்பியூட்டரில் சீரடியில் நடைபெறும் பூஜையின் நேரடி காட்சியை பார்த்துக் கொண்டு இருந்தேன்.
காலை வேளைகளில் எனக்கு உதவி செய்ய யாரும் கிடையாது. அன்று மாலை நான் எனக்கு வந்திருந்தக் கடிதங்களை கம்பியூட்டரில் படித்துக் கொண்டு இருந்தபோது, கீழே உள்ள படத்துடன் கூடிய வாசகங்களே முதலில் வந்தது. அது முதல் என்னுடைய கஷ்டமான நேரத்தில் எல்லாம் பாபா என்னுடைய கையை பிடித்துக் கொண்டு நிற்பது போல உணருகிறேன். எனக்கு அறுவை சிகிச்சை இல்லாமல் காயம் குணமடைய வேண்டும் என அவரை பிரார்திக்கின்றேன்.
அது மட்டும் அல்ல, இந்த விபத்து மூலம் நான் கற்றுக் கொண்டப் பாடம் என்ன என்றால், நம்மை சுற்றி உள்ள சூழ்நிலைகளை ஏற்றுக் கொண்டு நாம் பொறுமையாக இருக்க வேண்டும். சாயி சரித்திரத்தில் கூறப்பட்டு உள்ளது ''அவருடைய அருளைப் பெற்றிட நாம் சிரத்தையுடனும், பொறுமையுடனும் இருக்க வேண்டும்''. அது போல கர்மாவைப் பற்றிக் கூறி உள்ளதையும் நான் புரிந்து கொண்டேன். பூர்வ ஜென்ம கர்மாவை நாம் அனுபவித்தே ஆக வேண்டும். அல்லா எனும் கடவுளே நம்மைக் காத்து அருள்பவர், அவரை என்றென்றும் நினைத்தவாறு இருந்து வந்தால் அவர் நம்மைக் காப்பாற்றுவார் .
ஆத்மார்த்தமாக நாம் அவரிடம் சரணடைந்து விட்டு, நமக்கு அவர் கொடுப்பதை ஏற்றுக் கொண்டு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இந்த விபத்தினால் பாபாவின் புத்தகங்களைப் படிக்கவும், அவருடைய இசைகளை கேட்கவும் எனக்கு நேரம் கிடைத்துள்ளது. என்னை சுற்றி நிலவும் மௌனமான சூழ்நிலையில் என்னால் அவரை தியானிக்க முடிகின்றது. என் அறையில் இருந்து பார்த்தால் அற்புதமான இயற்கைக் காட்சிகள் தெரியும். அவற்றைப் பார்த்து ரசித்துக் கொண்டே இருப்பேன். எனக்கு இப்போதெல்லாம் அவற்றை பார்த்து மகிழ்ந்திட நிறைய நேரம் கிடைக்கின்றது. தற்போது சின்ன, சின்ன விஷயங்களைக் கூட ரசிப்பதற்கு நான் பழகிக் கொண்டு விட்டேன்.
நான் எப்போதுமே மற்றவர்களைப் பற்றி அதிகம் சிந்தித்த வண்ணம் இருந்து கொண்டு என்னைப் பற்றி கடைசியில் மட்டுமே சிந்திப்பது உண்டு. ஆனால் பாபாவின் அறிவுரையோ புனிதமான நம்முடைய ஆத்மாவை முதலில் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது. இந்த விபத்திற்குப் பின்னர் நான் கற்றுக் கொண்டப் பாடம் என்ன சோதனைகள் வந்தாலும், எத்தனை இடையூறுகள் வந்தாலும் பாபா என் கையை பிடித்துக் கொண்டு என்னைக் காப்பாற்றி வருகிறார். நான் எத்தனை அதிருஷ்டசாலி!
நன்றி பாபா, உன்னை நான் நேசிக்கின்றேன்
நன்றி சகோதரி மனிஷா, உன்னையும் நான் நேசிக்கின்றேன்.
ஜெய் சாயிராம்
--------------------------------------------

வியக்க வைத்த சீரடிப் பயணம்

அன்புள்ள சகோதரி மனிஷா
நான் ஐந்து ஆண்டுகளுக்கு முன்புதான் சாயி பாபாவின் பக்தையாக மாறி இருந்தேன். அதன் பின் பாபா என்னுடன் எப்போதும் இருப்பதை பல அனுபவங்களின் மூலம் உணர்ந்து வருகிறேன். உங்களுக்கும் இத்தனை அற்புதமான இணையதளத்தை கையாள பாபா அருள் புரிவதற்கு அவருக்கு நன்றி கூறுகிறேன். என்னுடைய பெயரையும் முகவரியையும் வெளியிட வேண்டாம்.
போன மாதம் அதாவது ஏப்ரல் மாதம் நான் சீரடிக்கு சென்று விட்டு வீடு வந்து சேரும்வரை நான் நினைத்தும் பார்த்திராத வகையில் பாபா அனைத்து ஏற்பாடுகளையும் எனக்கு செய்து கொடுத்திருந்தார் .
2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலே நான் சீரடிக்குச் சென்று பாபாவை தரிசனம் செய்ய எண்ணி இருந்தேன். ஆனால் பல காரணங்களினால் என் எண்ணம் நிறைவேறவே இல்லை. நான் சீரடியைப் பற்றி எண்ணும் பொழுதே என் மனதில் மகிழ்ச்சி ஏற்படுகிறது எனும்போது சீரடியிலேயே உள்ளவர்களுக்கு எப்படி இருக்கும் என நினைக்கின்றேன். முடிவாக நான் சீரடிக்கு செல்லும் நேரம் வந்தது.
மார்ச் மாதம் நான் சீரடிக்கு செல்ல முடிவு செய்தேன். அதற்கு முன்னர் எனக்கு இருந்தப் பொருளாதார நெருக்கடியும் பாபாவின் அருளினால் அகன்று இருந்தது. அதுவே பாபா எனக்குக் காட்டிய முதல் அற்புதம். அவருடைய அனுமதி கிடைத்தப் பின்னரே சீரடிக்கு செல்ல முன் பதிவு செய்ய வேண்டும் என்பதினால் மார்ச் மாதம் 2 அல்லது மூன்று நாட்கள் சீரடிக்கு செல்ல உள்ளதாகவும் அதற்கு விடுமுறை தேவை எனவும் என் முதலாளியிடம் கூறினேன். அவரோ நான் கேட்காமலேயே, தான் ஹோட்டல் தொழிலில் உள்ளதினால் அங்கு சென்றால் தங்கிக் கொள்ள இலவச ஏற்பாடுகளை செய்வதாகக் கூறினார். அது சாயி எனக்குக் காட்டிய இரண்டாவது அற்புதம். நல்ல பொருளாதார நிலைமை இல்லாத எனக்கு வசதியாக மூன்று நட்சத்திர ஹோட்டலில், அதுவும் சாயி ஆலயத்தில் இருந்து இரண்டே நிமிடத்தில் செல்ல முடிந்த தூரத்தில் இருந்த ஹோட்டலில் இலவசமாக தங்குவதற்க்கு ஏற்பாடு செய்து கொடுத்த சாயியின் ஏற்பாடு எனக்கு அற்புதமான அனுபவம் ஆகும்.
அடுத்து பயணத்திற்கு முன்பதிவு செய்த என்னுடைய ஒன்று விட்ட சகோதரன் திரும்பி வருவதற்கு டிக்கெட் பதிவு செய்யவில்லை. எங்கள் வீட்டில் இருந்து சாயியின் ஒரு ஆலயம் சற்றுத் தள்ளி இருந்தது. ஒவ்வொரு வியாழர் கிழமையும் நானும் என்னுடைய நண்பரும் அங்கு செல்வது உண்டு. நாங்கள் சாதாரணமாக காலை அபிஷேக பூஜைக்கே செல்வோம். ஆனால் அன்று மாலை ஆரத்திக்குச் செல்ல முடிவு செய்தோம். அங்கு சென்று சாயி சரித்திரத்தின் ஒரு புத்தகத்தை வாங்கி வரலாம் என நினைத்தேன். ஆனால் அதை வீட்டில் தினமும் படிக்கலாமா, கூடாதா என்ற சந்தேகம் இருந்தது. யாரைக் கேட்பது எனக் குழம்பிக் கொண்டு இருந்தபோது, அப்போது தற்செயலாக என்னுடைய நண்பரின் தூரத்து சொந்தக்காரரை அங்கு சந்திக்க அவர் சாயி சரித்திரத்தை என் வீட்டிற்கே எடுத்துச் சென்று படிக்கலாம் என்றும் ஆனால் அன்றைக்கு மாமிச வகைகளை உண்ணலாகாது என்று கூற நான் உடனேயே அந்தப் புத்தகத்தை வாங்க முடிவு செய்தேன். அடுத்து அவர் என்னுடைய சீரடி பயணத் திட்டத்தைப் பற்றிக் கேட்டப் பின் நான் திரும்புவதற்கு டிக்கெட் எடுக்கவில்லை என்பதை அறிந்து கொண்டதும், திரும்பி வர டிக்கெட் எடுத்திருந்தால் நிம்மதியாக தர்சிசனம் செய்தப் பின் வர முடியும் என்றும், ராம நவமி என்பதினால் கூட்டம் மிக அதிகம் இருக்கும் என்பதினால் இனி திரும்பி வர ரயிலில் டிக்கட் கிடைப்பது கடினம் என்றும், ஆகவே நான் விரும்பினால் திரும்பி வருவதற்கு பஸ்ஸில் டிக்கெட்டிற்கு தான் ஏற்பாடு செய்து தருவதாகக் கூறிவிட்டு எனக்கு உதவினார். இது சீரடிப் பயணத்திற்கு முன்பாக பாபா காட்டிய மூன்றாவது மகிமை. இதைப் படித்தப் பின் தனது பக்தர்களுக்கு பாபா எப்படி எல்லாம் உதவி புரிகிறார் என்பதை நீங்களை புரிந்து கொள்வீர்கள்.
நாங்கள் மார்ச் மாதம் 27 ஆம் தேதியன்று சீரடிக்கு பயணிக்க வேண்டும். ஆனால் 25 ஆம் தேதியன்று சாயிநாத் என்று பெயரிடப்பட்டு இருந்த என்னுடைய சகோதரியின் குழந்தை உடல் நலமின்றிப் போனான். ஜுரம் மிக அதிகமாகி விட என்ன செய்வது எனப் புரியாமல் அவனை மருத்துவ மனையில் கொண்டு சேர்த்தோம். அவனுக்கு சிறுநீர் வியாதி என்று கூறி விட்டு பரிசோதனை செய்தப் பின் அதன் முடிவு வியாழர் கிழமை அன்றுதான் கிடைக்கும் என்றார். அவனுக்கு பாபாவின் உடியை தடவி விட்டப் பின் பாபாவின் ஆலயத்துக்குச் சென்று அவன் நலமடைய வேண்டிக் கொண்டேன். என்ன செய்தும் அவனுக்கு ஜுரம் குறையவே இல்லை. செய்வாய் கிழமையும் வந்து விட்டது. நாங்கள் சீரடிக்கு கிளம்ப வேண்டும். என்ன செய்வது எனத் தெரியவில்லை. ஆனால் வேறு வழி இன்றி என் வீட்டினர் என்னை சீரடிக்குச் சென்று அங்கு சென்று குழந்தைக்காக வேண்டிக் கொள்ளுமாறு கூறி என்னை சீரடிக்கு கிளம்பிப் போகுமாறு கூறி விட்டார்கள். ஆனால் 'சோதனையின் முடிவு பாபாவின் தினமான வியாழர் கிழமை அன்று வரும்' என்று மருத்துவர் கூறியதின் மூலம் பாபா எனக்கு பூடகமாக அனைத்தும் நல்லபடியே நடக்கும் என்பதை தெரிவித்தார்.
செய்வாய் கிழமை பஸ்ஸில் ஏறி சீரடிக்குச் சென்றோம். மறுநாள் மதியம் 11:30 மணிக்கு சீரடி போய் சேர்ந்தோம். ஹோட்டலில் எங்களுக்கு தங்க ஏற்பாடு செய்திருந்த இடம் மாடியில் இருந்தது. அங்கு அறைக்கு எதிர்புற மாடியில் சாயி ஆலயம் போன்றே ஒரு மாதிரி ஆலயத்தை சிறிதாகக் கட்டி இருந்தார்கள். அதை தரிசித்தப் பின் சாயி ஆலயத்துக்கு கிளம்பிச் சென்றோம். மதியம் ஒரு மணி ஆயிற்று. கூட்டமே இல்லாமல் இருந்தது. அற்புதமான தரிசனம் செய்தப் பின் அங்கிருந்து கிளம்பி துவாரகாமாயிக்கு சென்று அங்கு என்னுடைய சகோதரியின் மகனுக்காக பிரார்த்தனை செய்தேன். நாள் முழுவதும் ஓம் சாயிநாதாய நமஹா என்ற மந்திரத்தை உச்சரித்தபடியே இருந்தேன்.
ஒரு சாயி சரித்திர புத்தகத்தை வாங்கியப் பின், மறுநாள் நான் அபிஷேக பூஜை செய்ய நினைத்தேன். ஆனால் அதற்கு என்ன ஏற்பாடு செய்ய வேண்டும் எனத் தெரியாததினால் அறைக்குத் திரும்பினோம். ஹோட்டல் அறைக்குத் திரும்பியதும் எங்களுக்கு திரும்பிச் செல்ல பஸ் டிக்கெட் ஏற்பாடு செய்து கொடுத்து இருந்த என் நண்பர் தொலைபேசியில் எங்களை அழைத்து மறுநாள் காக்கட ஆரத்திக்குச் செல்ல வேண்டும் எனில் இரவு 12 மணிக்கே கியூவில் சென்று நிற்க வேண்டும் எனவும், மறுநாள் அபிஷேகத்திற்கு ஏற்பாடு செய்யவில்லை என்றால், உடனே ஆலயத்துக்குச் சென்று அங்குள்ள காவலாளியிடம் கேட்டு அதற்கான ஏற்பாடுகளை முதலிலேயே செய்து கொள்ளுமாறு கூறினார்.
உடனே நாங்கள் மீண்டும் ஆலயத்துக்குச் சென்று மறுநாள் ஒன்பது மணி பூஜைக்கு ஏற்பாடு செய்து விட்டு வந்தோம். இரவு பத்து மணிக்கு அறைக்கு வந்த நாங்கள் நடு இரவு 11.30 க்கு எழுந்து கொள்ள அலகாரம் வைத்துக் கொண்டேன். ஒருவேளை நான் எழுந்திருக்காவிடில் என்ன செய்வது என்பதற்காக என் ஒன்று விட்ட சகோதரி 11.45 க்கு எழுந்து கொள்ள அலகாரம் வைத்துக் கொண்டாள். இரவு நல்ல உறக்கத்தில் இருந்தவள் அலாரம் அடித்தும் அடுத்த ஐந்து நிமிடத்தில் எழுந்து கொள்ளளலாம் என மீண்டும் சற்று கண் அயர்ந்தேன். அப்படியே உறங்கி விட்டேன். அது போலவேதான் என் ஒன்று விட்ட சகோதரியின் நிலைமையும் ஆயிற்று. திடீரென யாரோ கதவை தட்டும் சப்தம் கேட்டது. பயந்து போய் எழுந்தவர்கள் யாரும் இல்லை என்பதினால் மீண்டும் கண் அயர மீண்டும் கதவை யாரோ தட்டினார்கள். நாங்கள் பயந்து போய் எங்களை யாரோ தொந்தரவு செய்வதாக வரவேற்பு அறைக்கு போன் செய்து கூறிவிட்டு உடனே காவலாளியை அனுப்புமாறு கூறினோம். அடுத்த ஐந்து நிமிடத்தில் அவர்கள் எனக்கு போன் செய்து நாங்கள் அறையின் சாவியை கதவில் இருந்து எடுக்கவில்லை என்பதினால் ஹோட்டல் வேலைக்காரன் தட்டி உள்ளதாகக் கூற நாங்கள் காக்கட் ஆரத்திக்கு நேரமாகி விட்டதை உணர்ந்தோம். எது எப்படியோ, எங்களை அறியாமல் மீண்டும் தூங்கிவிட்ட எங்களை எழுப்புவதற்காகவே நடந்துள்ள நாடகம் அது என்பது புரிந்தது. உடனடியாக எங்களை தயார் செய்து கொண்டு ஓடினோம். வரிசையில் அமர்ந்து இருந்தபோது சாயி சரித்திரத்தைப் படித்து முடித்தேன். மனம் அமைதியாக இருந்தது.
அன்று வியாழர் கிழமை. நாங்கள் காக்கட் ஆரத்தியை பார்த்துவிட்டு அபிஷேக பூஜையும் முடித்துக் கொண்டோம். நாங்கள் அறைக்குத் திரும்பியதும் என் செல்லில் வந்திருந்த செய்தியைப் பார்த்தேன். என்னுடைய சகோதரியின் மகன் நலமடைந்து வீட்டிற்குச் செல்ல மருத்துவர் அனுமதி கொடுத்து விட்டார் என்பதே வந்திருந்த அந்த மகிழ்ச்சியான செய்தி. நம்பிக்கையுடன், பொறுமையைக் கடைக் கொண்டால் தக்க நேரத்தில் நமக்கு வேண்டியதை பாபா செய்வார். மறுநாள் வெள்ளிக் கிழமை. மீண்டும் சாயியில் ஆலயத்துக்குச் சென்றுவிட்டு ஊருக்கு கிளம்பிச் சென்றோம். அந்த சீரடி விஜயம் எனது வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாகும். சிறியதோ, பெரியதோ, கஷ்டமானதோ இல்லை எளிதானதோ, என்னுடைய எந்தப் பிரச்சனைக்கும் பாபாவிடம் இருந்து பாதகமான பதிலை நான் பெற்றதே இல்லை. எனக்கு வேண்டிய அனைத்தும் வெற்றி பெற எனக்கு அவர் எனக்கு உதவி உள்ளார். நான் பாபாவின் செல்லப் பிள்ளைகளில் ஒருவராக இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கின்றேன். அவர் அனைத்து இடத்திலும் இருந்தாலும், நம்முடனேயே எப்போதும் இருக்கின்றார்.
ஜெய் சாயிநாத்
--------------------------------------------

என்னுடைய சாயி விரதத்தின் கடைசி நாளன்று பாபா
என்னுடைய பிரசாதத்தைப் பெற்றுக் கொண்டார்

சகோதரி மனிஷா,
என்னுடைய பெயரை வெளியிடாமல் என்னுடைய அனுபவத்தை மட்டுமே பிரசுரிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
ஏப்ரல் 26 ஆம் தேதி நான் ஒன்பது வார சாயி விரதத்தை செய்து முடித்திருந்தேன். அதற்கு முன்னால் அந்த விரத்தை செய்தபோது கோயம்பத்தூரில் இருந்த நான், மதியம் அங்கிருந்த நாக சாயி ஆலயத்து ஆர்த்திக்குச் சென்று பாபாவின் பிரசாதத்தை அங்கிருந்த ஏழைகளுக்கு வினியோகம் செய்தேன். ஆனால் இந்த முறை என்னால் பிரசாதம் எதுவும் செய்ய முடியவில்லை என்பதினால் சென்ற தடவைப் போல இந்த முறையும் பிராசாத வினியோகம் செய்ய முடியாமல் போய் விட்டது. ஆகவே நான் என் வீட்டு வேலைக்காரியிடம் பணத்தைக் கொடுத்து அதில் இனிப்புப் பண்டத்தை வாங்கி அவள் வீட்டின் அருகில் இருந்த குழந்தைகளுக்கு வினியோகிக்குமாறுக் கூறி இருந்தேன்.
அவள் இருந்த இடத்தில் குழந்தைகள் அதிகம் உண்டு. நான் பாபாவிடம் நான் செய்த அந்த செயலுக்கு மன்னிப்பைக் கேட்டேன். மறுநாள் வேலைக்கு வந்த அவளிடம் ''அனைவருக்கும் பிரசாதம் கொடுத்தாயா? வேறு எதுவும் நடக்கவில்லையே'' என்று கேட்டேன். ஆனால் அவள் கூறியதைக் கேட்ட நான் வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்தேன். அவள் இனிப்பை வாங்கிக் கொண்டு தனது வீட்டிற்கு சென்றப் பின், முன்பின் தெரியாத ஒரு முஸ்லிம் சிறுவன் அவளிடம் வந்து எனக்கும் இனிப்பைத் தா என்று கேட்டானாம். ஒன்று போதாது என இன்னொன்றை கேட்டு வாங்கிக் கொண்ட அந்த சிறுவன் மகிழ்ச்சியோடு சென்று விட்டானாம். அந்த வேலைக்காரியும் பாபாவின் பக்தை என்பதினால் பாபாவே வந்து முதலில் அதை பெற்றுக் கொண்டு உள்ளார் என நினைத்தாளாம். அதன் பின்னரே அவள் மற்ற குழந்தைகளுக்கு அவற்றைத் தந்தாளாம். அதைக் கேட்ட நான் பாபாவின் அன்புக்கு நன்றி கூறினேன். அது மட்டும் அல்ல, அன்று காலை என் வீட்டின் அருகில் இருந்த ஆலயத்துக்குச் சென்று அங்கு என் பிரார்த்தனைகளை முடித்து விட்டு வெளியில் வந்த எனக்கே முதலில் அந்த ஆலயப் பிரதசாதம் கிடைத்தது. பாபாவின் கருணைதான் என்னே! அவருடைய அன்பையும், லீலைகளையும், அருளையும் பார்த்த நான் பிரமிப்பினால் வாயடைத்து நிற்கின்றேன்!
ஜெய் சாயிராம் 

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.