Sunday, October 7, 2012

Experiences During The Trip To Shirdi-Sai Devotee Rama Rao


அனைவருக்கும் இனிய பாபா நாள் வாழ்த்துக்கள் .
ராமா ராவ்ஜி ஷீர்டி ஸாயிபாபா குறித்த தனது அனுபவங்களை இந்தத் தளத்தில் பகிர்ந்து வருகிறார். அண்மையில் ஷீர்டி சென்றுவந்த அனுபத்தை இங்கே இன்று எழுதுகிறார். இதைத் தவிரவும், ஸாயி ஸத் சரிதத்திலிருந்து சில முக்கிய வரிகளையும் நாமெல்லாம் நினைவு கூருவதற்காக அளித்திருக்கிறார். இதற்கென ஒரு பி.டி.எஃப். கோப்பையும் தந்திருக்கிறார். ஜெய் ஸாயி ராம்.
மனிஷா 
----------------------------
மதிப்பிற்குரிய மனிஷா,
பங்களூருவைச் சேர்ந்த ராமா ராவ் எழுதுகிறேன். எனது ஷீர்டி அனுபவத்தைப் பற்றியும், அதன் மூலம் பாபாவின் எங்கும் நிறை தன்மையை நான் உணர்ந்த உணர்வுகளையும் எழுத விரும்புகிறேன். இந்த நிகழ்வுகள் எல்லாம் ஏதோ தற்செயலாக நடந்ததுபோல, சாதாரணமாக இங்கு வந்துபோகும் ஒரு சில பாபா அடியவர்களுக்குத் தோன்றலாம். ஆனால், பாபாவைப் பற்றியே எப்போதும் நினைத்துக்கொண்டிருக்கும் அடியார்களுக்கு இது அப்படி இல்லாமல், உண்மைநிலை புரியவரும்.
ஆழ்ந்த நம்பிக்கையும், பக்தியும் நிரம்பியிருந்தால் மட்டுமே இதை உணர முடியும். இந்த பூத உடலைத் தாண்டியும் அவரோடு கரைந்துவிட வேண்டும். நான் இப்படி சொல்வது இதைப் படிப்பவர்கள் பாபா கூறிய அருளுரையை நினைவில் கொள்ளவே..." உனக்கும், எனக்கும் நடுவே இருக்கும் சுவரை உடைத்து விடுங்கள். அப்போதுதான் நாம் ஒன்றாக இருக்க முடியும். நீ, நான் என்னும் வேறுபாடு சீடனுக்கும், குருவுக்கும் இடையே இருக்கும் தூரத்தை அதிகப்படுத்துகிறது. இந்த எண்ணங்களை அழித்தால் மட்டுமே நாம் அருகே வர இயலும்."
இதன் மூலம் நீங்கள் எதிர்பார்க்கும் ஒரு சில காட்சிகளோ, நிகழ்வுகளோ அல்லது சாதகமான சூழ்நிலைகளோ உங்களுக்குத் தெரியவரும். இது பாபாவின் மீதான உங்களது நம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும். நான் இணைத்துள்ள கோப்பில் இருக்கும் பாபாவின் அருளுரைகளைப் பின்பற்றும் பழக்கத்திற்கு இது அடிகோலும். நாம் எப்படி வாழ வேண்டும் என பாபா விரும்புவதைக் கடைபிடிக்கவும் முடியும்.
கடந்த 3, 4 மாதங்களாகவே நான் ஷீர்டி செல்ல நினைத்திருந்தேன். பாபாவின் அருளால் செப்டம்பர் மாதம் 23-ம் தேதியன்று கிளம்ப முடிவாகியது. அன்று காலை 5 மணி அளவில் உறக்கத்திலிருந்து விழித்தும், விழியாமல் இருக்கும் ஒரு நிலையில் இருந்தேன். பாபாவை நினைத்தபடியே அவரருகில் 3 முறை இருக்கும் ஒரு இனிய அனுபவத்தைப் பெற்றேன். பாபாவின் இடது காலின் தரிசனம் கிட்டியது. கணுக்காலுக்கு மேல் வரை பச்சை நிற அங்கி அணிந்திருந்தார். மனதுக்கு மிகவும் நிறைவாக இருந்தது. அன்று காலை ஏதோ ஒரு காரணத்தால் எனது பயணம் தடைப்படும் நிலை வந்தது. நான் மிகவும் வேதனையுற்றேன். எனது பயணச் சீட்டு உறுதியானால் என்னைப் போகுமாறு என் குடும்பத்தினர் உற்சாகப் படுத்தினர். அதேபோல, காத்திருப்போர் பட்டியலில் இருந்து எனது பயணம் உறுதியானது. ஆனாலும் நான் விரும்பியபடி கோபெர்காவிலிருந்து திரும்பி வராமல், மன்மாடில் இருந்தே பயணச் சீட்டு கிடைத்தது. அதை மாற்ற நான் மீண்டும் நிலையத்துக்குச் செல்ல வேண்டும் என்பதால், அப்படி செய்யாமல் மன்மாட் சென்று அங்கிருந்தே ஒரு வாடகை வண்டி மூலம் செல்ல முடிவெடுத்தேன்.
ரயில் நிலையத்துக்க்ச் செல்ல நான் ஏற்பாடு செய்திருந்த வண்டியோட்டியும் ஒரு பாபா பக்தர். நிலையத்துக்குச் செல்லும் ஒரு மணி நேரமும் அவர் கர்நாடகாவில் இருக்கும் பிரசித்தி பெற்ற மஞ்சுநாத், மற்றும் ஸ்ரீ சைலம், திருப்பதி, அய்யப்ப ஸ்வான்மி, ஷீர்டி இவைகளைப் பற்றியே பேசிக்கொண்டு வந்தார். ஷீர்டி ஆரத்தியில் தான் கலந்துகொண்ட நிகழ்வைப் பற்றி விவரித்தார். இந்தக் கோவில்களுக்கெல்லாம் தான் அடிக்கடி செல்வதாகவும் சொன்னார்.
நானும் ஆரத்தியில் கலந்துகொள்ள வேண்டும் என நினைத்தேன் என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். ஆனால், 25-ம் தேதிக்குத்தான் இணையதளம் மூலமாகப் பதிவு செய்ய முடியுமெனத் தெரிந்தது. ஷீர்டி சென்றே அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என முடிவெடுத்தேன்.
ரயில் நிலையத்துக்கு முன்னதாகவே சென்றுவிட்டதால், இந்த 'கண்டோன்மெண்ட்' நிலையத்தில் இருந்தே கிளம்பினால் என்ன எனத் தோன்றவே, முதல் மாடியில் இருக்கும் கவுண்டருக்குச் சென்றபோது, பயணச் சீட்டுடன் எனது புகைப்பட சான்றும் வேண்டும் என அதிகாரி கூறினார். புகைப்படம் என்னிடம் அப்போது இல்லை. அந்த இடத்திலும் அந்த வசதி இல்லை. எனது வாகன ஓட்டும் சான்று இருக்கிறதென வேண்டினேன். முதலில் மறுத்தாலும், பிறகு அதை ஏற்றுக் கொண்டார். பயணச் சீட்டிலேயே ஏதோ எழுதி, 12-ம் எண் கவுண்டருக்குச் செல்லுமாறு கூறினார். அங்கிருந்த பெண்ணும் என்னிடம் புகைப்படச் சான்று கேட்டபோது, முன்பு உதவிய அதிகாரியே அங்கு வந்து, பயண நிலையத்தை மாற்றித் தருமாறு பணிக்க அப்படியே ஆனது. நான் செல்லவும், வண்டி வரவும் சரியாக இருந்தது. பாபாவே இப்படி நிகழ்த்தியதாக உணர்ந்தேன்.
ஷீர்டி சென்றடைந்ததும், குறைந்த வாடகையிலேயே நல்லதொரு விடுதியில் இடம் கிடைத்தது. தரிசனத்துக்குச் சென்றபோதுதான் மெய்யான ஆனந்தமும், அதிசயமும் நடந்தது. பாபா அணிந்திருந்த அங்கியை நான் சரியாக கவனிக்கவில்லை. 23-ம் தேதி அதிகாலையில் நான் கண்ட அதே பச்சைநிற அங்கி! தரிசனம் முடிந்து மாலை ஆரத்திக்கான சீட்டு பெற, அலுவலகம் சென்றேன். ஆனால், அப்படி எதுவும் தருவதில்லை என்றும், இணையதளம் மூலமாகவே பெறவேண்டும் எனவும் அதிகாரி சொன்னார். கூட்டம் குறைவாக இருப்பதால், வரிசையில் கலந்துகொண்டு சீட்டைப் பெறலாம் என ஆலோசனை கூறினார். அதேபோல ஆரத்திக்கான தனி வரிசையில் நின்று, உள்ளே சென்று, சற்றுத் தொலைவில் இருந்தாலும், ஓரிடத்தில் அமைதியாக அமர்ந்து பாபாவை கண்ணாரத் தரிசனம் செய்து எனது ஆவலைப் பூர்த்தி செய்தேன். அன்றிரவு, படுத்திருக்கும்போது, வேறெந்த நினைவும் இல்லாமல், பாபாவைப் பற்றியே தியானம் செய்தேன். பச்சை நிற அங்கியைப் பற்றி எண்ணியதும், மறுநாள் காலை மஞ்சள் அல்லது தங்க நிற அங்கியில் இருக்க வேண்டும் என நினைத்தேன். தூங்கி எழுந்ததும், மறுநாள் தரிசனத்துக்குச் சென்றபோது பாபா தங்க நிற மஞ்சள் அங்கி அணிந்திருந்ததைக் கண்டு ஆச்சரியம் அடைந்தேன்.
இந்த அனுபவங்களைச் சொல்வது என்னைப் பற்றிப் பெருமை பேச அல்ல. பாபாவின் எங்கும் நிறை சக்தி எப்போதும், இப்போதும் அவர் சமாதியில் இருக்கும்போதும் நம்முடன் இருக்கும் உணர்வைக் காட்டவே. நான் திரும்பி வந்ததும் வசதியாகவே அமைந்தது. விடுதியை விட்டு வெளியே வந்ததும், கோபர்கானுக்குச் செல்ல ஒரு ஆட்டோவை எதிர்பார்த்திருந்தேன். கூட்டமில்லாத ஒரு கூட்டு ஆட்டோவில் செல்ல நினைத்தேன். பெரிய வண்டிகளில் 40 ரூபாய் வாங்கிக்கொண்டு மூட்டை போல் பயணிகளை அடைத்துச் செல்லும் வண்டியில் செல்ல விருப்பமில்லை. தனி ஆட்டோ எனில், அதற்கு 250 முதல் 300 ரூபாய்கள் வரை வசூலிப்பார்கள். அதிலும் செல்ல விருப்பமில்லாமல் ஒரு சில அடிகள் நடந்தேன். அப்போது ஒரு ஆட்டோ ஓட்டுநர் எவ்வளவு தருவாய் எனக் கேட்டார். நான் ரூ. 100 எனச் சொன்னதும் அவர் 150 கேட்டார். நான் முடியாது எனச் சொன்னதும், பரவாயில்லை நானும் கோபர்காவைச் சேர்ந்த ஆள்தான். அங்குதான் சும்மா செல்கிறேன் எனச் சொல்லி 100 ரூபாய்க்கே என்னை ஏற்றிக் கொண்டார். இடத்தை அடைந்ததும் நான் மேலும் 20 ரூபாய்கள் சேர்த்துக் கொடுத்தேன். அவரும் மகிழ்ச்சி அடைந்தார். பாபா வேலை செய்பவர்க்கு கொஞ்சம் கூடுதலாகவே கொடுங்கள் எனச் சொன்னதை இங்கே நினைவு கூருகிறேன்.
இந்த நிகழ்வுகளைத் தற்செயல் என நினைப்பவர்க்கு இது தற்செயலே. ஆனால், பலருக்கும் இது பாபாவின் ஒப்புயர்வற்ற சக்தியைக் காட்டும் என நம்புகிறேன்.
நன்றி. வணக்கத்துடன்,
ராமா ராவ்.
 Download Shirdi Sai Baba's Words
 சீரடி சாயிபாபாவின் பொன்மொழிகளைக் கேட்க 
கீழ் உள்ளதை கிளிக் செய்யவும் 
 
 Image and video hosting by TinyPic

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.