Friday, January 4, 2013

Shirdi Sai Baba's Grace-Experience Of Sai Devotees-Part 50( Translated into Tamil by Sankarkumar, USA)
 
அனைவருக்கும் இனிய பாபா நாள் வாழ்த்து. மேலும் சில அடியார்களின் அனுபவங்கள் இங்கே பிரசுரிக்கப்படுகின்றன. ஜெய் ஸாயிராம்.
- மனிஷா.

பாபா என கனவில் வந்து என்னை ஆசீர்வதித்தார்!
'பாலி'யில் பிறந்த நான் தற்போது அரபு நாடுகளில் வசிக்கிறேன். எனது இனிய அனுபவத்தை இங்கே உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஷீர்டி பற்றியோ, பாபாவைப் பற்றியோ எனக்கு எதுவும் தெரியாது. ஆனால், அடிக்கடி என் கனவில் ஒரு கிழவர் என் அறைக்கு வருவதுபோலக் கனவு கண்டிருக்கிறேன். எனக்குப் புரியாத வ‌ட‌மொழியில் பேசி என‌க்கு அவ‌ர் ஆசிக‌ள் அளிப்பார்.[ஆனால் க‌ன‌வில் அவ‌ர் பேசுவ‌தெல்லாம் புரியும்!].
ப‌சுமையான‌ வ‌ய‌ல்வெளிக‌ள், பூக்க‌ள் நிறைந்த‌ தோட்ட‌ங்க‌ள் முத‌லிய‌வைக‌ளை அவ‌ர் என‌க்குக் காட்டுவார். தான் வ‌சிக்கும் ஒரு ப‌ழைய‌ வீட்டை என‌க்கு அவ‌ர் காண்பித்தார். மிக‌வும் எளிமையான‌ அந்த‌ வீட்டின் ந‌டுவே ஒரு பெரிய‌ ம‌ர‌ம் இருந்த‌து. தான் உண‌வு உண்ணும் அறைக்கு என்னைக் கூட்டிச் சென்றார். என் நெற்றியில் விபூதி பூசி, எப்ப‌டி வ‌ழிப‌டுவ‌து என‌க் க‌ற்றுத் த‌ந்தார்.
என்னைப் பார்த்து, 'என் இட‌த்துக்கு வா ம‌க‌ளே! அத‌ன் க‌த‌வுக‌ள் திற‌ந்தே இருக்கின்ற‌ன‌. நான் உன்னுட‌ன் இருக்கும்போது எத‌ற்காக‌ வீண்க‌வ‌லைப் ப‌டுகிறாய்? வ‌ருத்த‌த்தை விட்டு முக‌த்தை ச‌ந்தோஷ‌மாக‌ வைத்துக்கொள். எப்போதும் சிரித்துக் கொண்டிரு. ஏழைக‌ளுக்கு உண‌வ‌ளி' என‌ச் சொன்னார்.
சென்ற‌ ஜூலை மாத‌ம் இந்தியா வ‌ரும் வாய்ப்பு கிடைத்த‌து. அப்போது ஷீர்டிக்கும் சென்றேன். என் க‌ன‌வில் க‌ண்ட‌ அதே ந‌ப‌ரைப் பார்த்து நான் ம‌கிழ்ச்சிப் பெருக்கில் க‌த‌றினேன். அந்த‌ ஆச‌ன‌த்தில் அவர் அம‌ர்ந்திருக்கும் அழ‌கை எப்ப‌டிச் சொல்வேன்! அவ‌ர் என‌க்குக் கிடைத்த‌து என்னுடைய‌ அதிர்ஷ்ட‌மே. அவ‌ர‌து பாத‌ங்க‌ளைத் தொட‌ அனும‌தித்தார். ப‌ன்னாட்டு ம‌க்க‌ளுட‌னும் ஒன்றாக‌ அம‌ர்ந்து உண‌வு உண்ண‌வும் வ‌கை செய்தார்.
நான் க‌வ‌லையுறும் போதெல்லாம் அவ‌ர் என்னுட‌னேயே இருப்ப‌தை நினைத்து ம‌கிழ்ச்சி அடைகிறேன். ந‌ட‌ப்ப‌தும், ந‌ட‌க்க‌ப் போவ‌தும் அவ‌ருக்கு ந‌ன்றாக‌வே தெரியும். அவ‌ர‌து அபூர்வ‌ ச‌க்தியின் மீது நான் ந‌ம்பிக்கை கொண்டிருக்கிறேன். நான் க‌ல‌க்க‌முறும் போது அவ‌ர் என‌க்கு ந‌ல்ல‌ வ‌ழி காட்டி, என்னை நேர்வ‌ழியில் ந‌ட‌த்திச் செல்வார் என‌ ந‌ம்புகிறேன். என்னுட‌ன் இருந்து என்னைக் க‌வ‌னித்துக் கொள்வ‌த‌ற்காக‌ உங்க‌ளுக்கு என் வ‌ந்த‌ன‌க்க‌ள் பாபா!
ஷுக்ரியா. ஓம் ஸாயிராம்.
அரி.

இருமுறை பாபாவால் ஆசீர்வ‌திக்க‌ப்ப‌ட்ட‌ அதிர்ஷ்ட‌ம்!
2002-ல் ஒருநாள் ஒரு ந‌ப‌ர் என் இல்ல‌த்துக்கு வ‌ந்து, தான் ஷீர்டியிலிருந்து வ‌ந்திருப்ப‌தாக‌ச் சொல்லி, என‌க்கு ஒரு ருத்ராக்ஷ‌த்தைக் கொடுத்துச் சென்றார். அவ‌ர் வ‌ந்த‌தையோ, சென்ற‌தையோ யாருமே பார்க்க‌வில்லை. மிகுந்த‌ ம‌கிழ்ச்சியுட‌ன் ஸாயியே வ‌ந்து இதைக் கொடுத்த‌தாக‌ எண்ணினேன். ஆனால், க‌வ‌ன‌க்குறைவால், நாங்க‌ள் வெளிநாட்டு வேலைக்காக‌ச் சென்ற‌போது, அதை எடுத்துச் செல்லாம‌ல் தொலைத்து விட்டேன். அது ப‌ற்றிய‌ நினைவும் இல்லை. சில‌ ஆண்டுக‌ள் க‌ழித்து, திடீரென‌ அத‌ன் நினைவு வ‌ந்து, பாபாவிட‌ம் என் க‌வ‌ன‌க்குறைவுக்காக‌ ம‌ன்னிப்பைக் கேட்டு, அதை என‌க்கு மீண்டும் திருப்பித் த‌ர‌ வேண்டுமென‌ வேண்டினேன்.
2007-ல் மீண்டும் இந்தியா திரும்பினோம். 2008-ல் ப‌ரோடாவில் இருக்கும் பாவ்க‌த் மாதா கோவிலுக்குச் சென்ற‌போது, வெள்ளை அங்கியும், த‌லையில் க‌ஃப்னியும் அணிந்த‌ ஒருவ‌ர் நேராக‌ என்னிட‌ம் வ‌ந்து என் கையில் ஒரு ருத்ராக்ஷ‌த்தை அளித்துச் சென்றார். நாங்க‌ள் மொத்த‌‌ம் 6 பேர் அங்கிருந்தோம். ஆனால் அவ‌ர் நேராக‌ என்னிட‌மே அதைக் கொடுத்துச் சென்ற‌து, என் பிரார்த்த‌னைக்கு பாபா செவிம‌டுத்து என்னை ஆசீர்வ‌தித்த‌தாக‌வே என‌க்குப் ப‌ட்ட‌து. அவ‌ர‌து இந்த‌க் க‌ருணைக்கு நான் எந்த‌ வித‌த்தில் சேவை செய்ய‌ப் போகிறேனோ தெரியாது. அவ‌ர‌து வ‌ழி ந‌ட‌த்துத‌லை நான் எப்போதும் வேண்டுகிறேன். என‌க்காக‌ எப்போதும் இருப்ப‌த‌ற்காக‌ பாபாவுக்கு என் வ‌ந்த‌ன‌ங்க‌ள்.
ஜ‌யா, மும்பை. 


பாபாவின் அற்புத‌ம்!
நான் த‌ற்ச‌ம‌ய‌ம் அமைதி இல்லாம‌ல் த‌விக்கிறேன். இன்று இந்த‌ வ‌லைத‌ள‌த்தில் ஒரு அடியார் தான் பாபாவை ஆட்டோவில் பார்த்த‌ நிக‌ழ்வைப் ப‌டித்தேன், என‌க்கும் அதேபோல‌ த‌ரிச‌ன‌ம் த‌ர‌ அருளுமாறு வேண்டினேன். ம‌திய‌ நேர‌த்தில் அருகிலிருக்கும் பாபா ஆல‌ய‌த்துக்குச் செல்ல‌ எண்ணினேன். ஸாயி 9-வார விரதம் செய்துகொண்டிருப்பதால் பாபா ஆலயம் செல்ல வேண்டும் என எண்ணினேன். ஆனால், வேலைப் ப‌ளுவினால் செல்ல‌ முடிய‌வில்லை.
அப்போது 3 நாட்க‌ளுக்கு முன்ன‌ர் என‌து தோழி அனுப்பிய‌ ஒரு மின்ம‌ட‌லைத் திற‌ந்தேன். நான் எங்கு செல்ல‌ வேண்டுமென‌ நினைத்தேனோ அந்த‌ ஆல‌ய‌த்தில் வீற்றிருக்கும் பாபா ப‌ட‌ம் அதில் இருந்த‌து! [இணைப்பைப் பார்க்க‌வும்.]
என்னால் செல்ல‌ இய‌ல‌வில்லையென‌ பாபாவே என்னைத் தேடி வ‌ந்து காட்சி அளித்துவிட்டார்! என‌து க‌ஷ்ட‌ங்க‌ள் யாவும் தீருமெனும் ந‌ம்பிக்கையை இது என‌க்குக் கொடுத்த‌து.
இப்ப‌டிக்கு
அன்புச் ச‌கோத‌ரி.


குழ‌ந்தை வேண்டிப் ப‌ல‌நாள் த‌வ‌மிருந்தேன்!
க‌ட‌ந்த‌ இரு ஆண்டுக‌ளாக‌ எங்க‌ளுக்கு ஒரு குழ‌ந்தை பிற‌க்க‌ப் ப‌ல‌ முய‌ற்சிக‌ள் செய்தோம். செய‌ற்கை முறைக் க‌ருத்த‌ரிப்பும் ப‌ல‌ன‌ளிக்க‌வில்லை. ம‌ருத்துவ‌ர்க‌ளும் எப்ப‌டி இது என‌க் குழ‌ம்பின‌ர்.
இந்த‌ நேர‌த்தில் நான் பாபாவின் ப‌க்தையாகி, அவ‌ர‌து லீலைக‌ளைப் ப‌டிக்க‌த் தொட‌ங்கினேன். அவை என‌க்கு உற்சாக‌த்தைத் த‌ந்த‌ன‌. பாபாவிட‌மே என‌து எல்லாக் க‌வலைக‌ளையும் விட்டுவிட்டேன்.
அதிச‌ய‌த்திலும் அதிச‌ய‌மாக‌, எந்த‌வித‌ ம‌ருத்துவ‌ உத‌வியும் இல்லாம‌ல், நான் க‌ர்ப்ப‌மானேன். முத‌ல் குழ‌ந்தை ந‌ல்ல‌ப‌டியாக‌ப் பிற‌ந்த‌ 6 மாத‌ங்க‌ளிலேயே நான் மீண்டும் க‌ருத் தரித்திருக்கிறேன். இது நிக‌ழ்ந்த‌து பாபாவின் அருளாலேதான்! ப‌ல‌நாள் சோத‌னைக்குப் பின்ன‌ர் இப்போது நான் மிக‌வும் ம‌கிழ்ச்சியாக‌ இருக்கிறேன்.
ஸாயிராம்.
தேஜ‌ல்.

என் வாழ்வில் ஸாயிபாபா நிகழ்த்திய அற்புதம்' -ஆஷிஷின் அனுபவம்-1

'தேர்வில் வெற்றிபெற பாபா உதவியது':
இந்த வலைதளத்தை நல்ல முறையில் நிர்வகித்து, அடியார்களின் அனுபவங்களை அனைவரும் அறியத் தருவதற்காக மனிஷா தீதிக்கு என் வந்தனங்கள்.
2010-ல் பொறியியல் படிப்பை முடித்த நான் மேல்படிப்புக்காக அமெரிக்கா செல்ல விரும்பி அதற்கான தேர்வுகளில் கலந்து கொண்டேன். ஸாயி ஸத் சரித்ரத்தின் சுருக்கமான பதிவை நான் படித்திருக்கிறேன். பாபாவுக்கு நடக்கும் அன்றாட ஆரத்தியில் கலந்துகொண்டு மெல்ல மெல்ல நான் ஸாயியின் குழந்தையானேன்.
அடிக்கடி பாபா என் கனவில் வந்து என்னைப் பார்த்து சிரித்தும், தமக்கு உணவளிக்கவும் கேட்பதுபோல் கண்டேன். காலையும், மாலையும் அவருக்கு ஏதாவது நிவேதனம் செய்வதை வழக்கமாகக் கொண்டேன்.
மேல்படிப்புக்கான தேர்வுகளில் ஒன்றை நான் சரியாகச் செய்யமல் கலக்கமுற்றேன். அப்போது த்வாரகாமாயி.ஆர்க் என்னும் தளத்துக்குச் சென்று முதன் முறையாக ஸாயி ஸத் சரித்ரத்தின் முழுப் பதிப்பைக் கண்டேன். 50 அத்தியாயங்கள் கொண்டது அது என அப்போதுதான் எனக்குத் தெரிய வந்தது.முதல் அத்தியாயத்தைப் படித்தேன்.
அன்றே மீண்டும் அந்தத் தேர்வை எழுத பாபா என்னை அனுமதித்தார். அதற்காக முழு மூச்சுடன் நான் தயார் செய்துகொண்டிருந்தபோது, ஒருநாள் கடற்கரைக்குச் சென்றேன். அங்கே ஒரு பிச்சைக்காரர் என்னிடம் யாசகம் கேட்க நானும் என்னிடமிருந்த பணத்தை அவருக்குக் கொடுத்தேன். எவ்வளவு என நினைவில்லை. பணத்தைப் பெற்றுக்கொண்ட அவர் 'நீ தேர்வில் வெற்றி பெறுவாய்' எனச் சொல்லிவிட்டுச் சென்றார். எனக்கு அது ஆச்சரியமளித்த போதிலும் அதைப் பற்றி நான் அதிகம் அக்கறை கொள்ளவில்லை. அதற்குப் பிறகு அவரை நான் கடற்கரையில் காணவுமில்லை.
தேர்வில் நான் வெற்றி பெற்றேன். அப்போதுதான் அந்தக் கடற்கரைச் சம்பவம் என் நினைவில் மீண்டும் வந்து என்னை சிந்திக்கச் செய்தது. பிச்சைக்காரராக வந்து த‌க்ஷிணை பெற்றுக்கொண்டு என்னை ஆசீர்வதித்தது பாபாவே என்றுணர்ந்தேன்.
மேலும் சில அனுபவங்களை விரைவில் பதிகிறேன்.
நன்றியுடன்,
ஆஷிஷ்.


ஸ்கந்தாஸ்ரமத்தில் பாபா!
நாங்கள் சில மாதங்களுக்கு முன், திருவண்ணாமலைக்குச் சென்றபோது நடந்த ஒரு நிகழ்வை இங்கே பதிகிறேன். பாபாவின் அடியவளான என்னுடன் பாபா எப்போதுமே இருந்து வருகிறார். உதவி கேட்டு நான் அழைக்கும்போதெல்லாம் அவர் வருகிறார். எப்போதுமே என்னைக் கைவிட்டதில்லை.
ரமணாஸ்ரமம், சேஷாத்ரி ஸ்வாமிகள் ஆஸ்ரமம் தரிசித்துவிட்டு, கிரிவலமும் வந்தோம். பிறகு ஸ்கந்தாஸ்ரம மலை ஏறத் தொடங்கினோம். சற்றுக் கடினமாக இருந்தாலும் சமாளித்தேன். அற்புதமான காட்சி அது! அங்கிருந்த ஒரு குகைக்குச் சென்றபோது, அதனருகே ஒரு மேஜை மீது சில புத்தகங்கள் இருந்தன. 'பாபா- என் தலவர்' என்னும் புத்தகத்தை அங்கே கண்டபோது என் மகிழ்வுக்கு எல்லையே இல்லை. என்னை அடிக்கடி சீண்டும் என் குடும்பத்தாரிடம் அதைக் காட்டி, 'இது ஏன் இங்கே இருக்கலாயிற்று? ஸ்கந்தாஸ்ரமத்தில் அவருக்கென்ன வேலை?' எனத் திருப்பிக் கேட்டேன்!
முடிந்த‌ போதெல்லாம் மைலாப்பூர் பாபா கோவிலுக்குச் செல்வ‌து என் வ‌ழ‌க்க‌ம். க‌ட‌ந்த‌ இரு மாத‌ங்க‌ளாக‌ என்னால் செல்ல‌ இய‌ல‌வில்லை. ஆர்.கே ம‌ட‌த்து ப‌ஜ‌னைக்கு செல்வ‌த‌ற்காக‌ என் மாமியாரை ஒரு ஞாயிற்றுக்கிழ‌மைய‌ன்று கூட்டிச் சென்றேன். வ‌ழி த‌வ‌றிப்போன‌ நான் ஏதோ ஒரு சாலையில் திரும்ப‌ அது நேராக‌ பாபா ஆல‌ய‌ம் இருக்கும் தெருவுக்கு என்னை அழைத்துச் சென்ற‌து. நெரிச‌ல் மிகுந்த‌ ஞாயிற்றுக்கிழ‌மையில் எந்த‌வொரு சிர‌ம‌முமின்றி என்னைத் த‌ன் ஆல‌ய‌த்துக்கு வ‌ர‌வ‌ழைத்த‌ ஸாயிநாத‌னின் அற்புத‌ த‌ரிச‌ன‌த்தைக் க‌ண்ட‌வாறே நாங்க‌ள் செல்லுமிட‌ம் சென்ற‌டைந்தோம்.
இப்ப‌டி இன்னும் ப‌ல‌ இருக்கின்ற‌ன‌. . ப‌ல‌ த‌டைக‌ள் அவ‌ர‌ருளால் வில‌கியிருக்கின்ற‌ன‌. இன்னும் ப‌ல‌ த‌டைக‌ள் இருப்பினும், அவ‌ற்றையும் அவ‌ர‌து லீலைக‌ளின் மூல‌ம் க‌ளைந்தெறிவார் எனும் ந‌ம்பிக்கையோடு காத்திருக்கிறேன்.
ஜெய் ஸாயிராம்.
ஆர். ஹேமா.

ஸாயிமா பச்சை நிற ஆடை அணிய வேண்டிய என் விருப்பம்
இந்த‌ வ‌லைத‌ள‌த்தின் மூல‌ம் ஸாயி மா எங்க‌ளுக்கு அருகில் வ‌ர‌ச் செய்த‌மைக்கு உங்க‌ளுக்கு என் வ‌ந்த‌ன‌ங்க‌ள், ம‌னிஷாஜி. இத‌ன் மூல‌ம் மிக‌ப் பெரிய சேவையை நீங்க‌ள் செய்கிறீர்க‌ள். என் ம‌ன‌ அமைதிக்கு இது பெரிதும் உறுதுணையாக‌ இருக்கிற‌து.
2012-ல் நான் ஸாயி மாவின் ப‌க்தையானேன். அவ‌ர‌து இருப்பை எப்போதும் உண‌ர்கிறேன். என் எல்லாக் க‌வ‌லைக‌ளுக்கும் விடைய‌ளித்து நான் ம‌கிழ்வுட‌ன் வாழ‌ அவ‌ர் உத‌வி செய்கிறார்.
ஸ்ரீஸாயி 9-வார‌ விர‌தத்தை நான் தொட‌ங்கியிருக்கிறேன். என் வாழ்வில் எல்லா ந‌ன்மைக‌ளும் கிட்ட‌ அவ‌ர் அருள் செய்வார் என‌ ந‌ம்புகிறேன். ஒவ்வொரு நாளும் உங்க‌ள‌து இணைப்ப‌க்க‌த்தின் வாயிலாக‌ ஸாயி த‌ரிச‌ன‌மும் பெற்று ம‌கிழ்கிறேன்.
8-வ‌து குருவார‌ பூஜையின் போது ஸாயி மாதாவை ப‌ச்சை நிற‌ அங்கியில் காண‌ வேண்டுமெனும் ஆசை பிற‌ந்த‌து. கோவிலுக்குச் சென்ற‌போது அவ‌ர் வெளிர் ப‌ச்சை அங்கியில் காட்சி தந்தார்! ம‌ன‌துக்கு ஆறுத‌லாக‌ இருந்தாலும், நான் நினைத்த‌து க‌ரும் ப‌ச்சை நிற‌ம் என்ப‌தால் ச‌ற்று ஏமாற்ற‌மாக‌வும் இருந்த‌து. ஆனால், வீட்டுக்கு வ‌ந்து இணைய‌த்தைத் திற‌ந்த‌போது, அவ‌ர் நான் நினைத்த‌ க‌ரும் ப‌ச்சை நிற‌ அங்கியில் காட்சி த‌ந்தார்.[ப‌ட‌ம் இணைத்திருக்கிறேன்.] என் ஆசையைப் பூர்த்தி செய்த‌ அவ‌ருக்கு என் ம‌ன‌மார்ந்த‌ ந‌ன்றிய‌றித‌லைச் சொன்னேன்.
த‌ற்போது சில‌ உட‌ற் பிர‌ச்சினைக‌ள் இருந்தாலும் அவ‌ற்றையும் ஸாயிமா ச‌ரி செய்து குண‌மாக்குவார் என‌ ந‌ம்புகிறேன். அவ‌ரே என‌து ச‌க்தி எல்லாம். த‌ம‌து பிள்ளைக‌ள் வ‌ருந்துவ‌தை அவ‌ர் காண‌ச் ச‌கிக்க‌ மாட்டார். பொறுமையும், ந‌ம்பிக்கையும் ம‌ட்டுமே என‌து ப‌ல‌ம்.
உங்க‌ளை மிக‌வும் நேசிக்கிறேன் ஸாயி மா!
உங்க‌ள‌து
அருமை ம‌க‌ள்.

பாபா மீதான‌ ப‌க்தியை அவ‌ர் அதிக‌ரிக்க‌ச் செய்தார்!
ஒரு அற்புத‌த்தை நிக‌ழ்த்தி என‌க்கு பாபா மீதான‌ ப‌க்தியை எப்ப‌டி அதிக‌ரிக்க‌ச் செய்தார் என‌ச் சொல்ல‌ விரும்புகிறேன். பாபாவைப் ப‌ற்றி அதிக‌ம் அறிந்திராத‌ என‌க்கு ஒருநாள் அவ‌ர‌து 9-வார‌ விர‌த‌ம் புத்த‌க‌ம் கிடைத்த‌து. புவ‌னேஷ்வ‌ரில் இருக்கும் பாபா ஆல‌யத்துக்கு ஒரு குடும்ப‌ விழாவுக்காக‌ நான் சென்றிருந்த‌போது, ஒரு ஸாயி அடிய‌வ‌ர் என்னிட‌ம் வ‌ந்து, 'இது உங்க‌ளுக்கு' என‌ச் சொல்லி இந்த‌ப் புத்த‌க‌த்தைக் கொடுத்தார். விய‌ப்புட‌னும், ம‌கிழ்வுட‌னும் அதை வாங்கிக்கொண்டு, அந்த‌ப் புத்த‌க‌த்தைப் ப‌டித்தேன். ஸாயி விர‌த‌ம் தொட‌ங்க‌வும் முடிவு செய்தேன்.
9-வ‌து வார‌ம், அதே ஆல‌ய‌த்துக்குச் சென்றேன். விற்ப‌னை நிலைய‌த்தில் பாபாவுக்கான‌ பிர‌சாத‌மும், இரு ரோஜா ம‌ல‌ர்க‌ளும் வாங்கினேன். வ‌ரிசையில் நின்றிருந்த‌போது, ம‌ற்ற‌வ‌ர் கைக‌ளிலெல்லாம் பெரிய‌ ரோஜாப் பூக்க‌ள் இருப்ப‌தையும், என்னுடைய‌ ம‌ல‌ர்க‌ள் சிறிய‌தாக‌ இருப்ப‌தையும் க‌ண்டு, திரும்பிச் சென்று மாற்றிக் கொள்ள‌லாமா என‌ நினைக்கையில், கிட்டத்த‌‌ட்ட‌ பாபா அருகே வ‌ந்து விட்டேன். அப்போதுதான் க‌வ‌னித்தேன், என‌து ம‌ல‌ர்க‌ள் த‌ட்டில் இல்லாத‌தை! ப‌ளிங்குத் த‌ரையில் ந‌ன்றாக‌த் தெரியுமே என‌ எண்ணி கீழே பார்த்தேன். எங்கும் அவை இல்லை. அத‌ற்குள் பாபா அருகே செல்லும் நேர‌ம் வ‌ந்துவிட்ட‌தால், என‌து பூஜையை பாபா ஏற்றுக்கொள்ள‌ வில்லையோ என‌ எண்ணிய‌ப‌டியே வ‌ருத்த‌த்துட‌ன் சென்றேன்.
அர்ச்ச‌கரிடம் தட்டைக் கொடுத்துவிட்டு மனதுக்குள் பிரார்த்தனை செய்துகொண்டேன். அப்போது பாபா தலையிலிருந்து ஒரு மலர் கீழே விழுந்தது. கூடவே பாபா பாதத்திலிருந்து ஒரு மலர் வேண்டி அர்ச்சகரிடம் கேட்க அவர் இரு மலர்களையும் என்னிடம் தந்தார். நான் வாங்கிய அதே மலர்கள் போல அவை இருக்கக்கண்டு என் மனம் ஆனந்தத்தால் உருகியது. என‌து விர‌த‌ப் ப‌ல‌னை பாபா அளித்து விட்டார் என‌ ம‌கிழ்ந்தேன்.
பாபா எப்ப‌டியெல்லாம் த‌ம‌து அடியாரை த‌ம் ப‌க்க‌ம் ஈர்க்கிறார் என‌ப் ப‌டித்திருக்கிறேன். என் மீதும் அவ‌ர் காட்டிய‌ இந்த‌க் க‌ருணையினால், நான் என் வாழ்நாள் முழுதுக்கும் அவ‌ர‌து அடியாராக‌ ஆகிப்போனேன்.
ஜெய் ஸாயிராம்.
பிர‌திமா மிஸ்ரா.

என் வாழ்வில் ஸாயி காட்டிய அருட்கருணை!
ஸாயிராம். கடந்த 9 மாதங்களாக வேலை இல்லாமல், குடும்பத்தைக் காப்பாற்ற மிகவும் கஷ்டப்பட்டேன். ஒரு நண்பரின் தூண்டுதலின் பேரில் ஸாயி 9 வார விரதமும் 16/8/12 அன்று தொடங்கி செய்து முடித்தேன். நிறைய நேர்முக அழைப்புகள் வந்தபோதும் வேலை ஒன்றும் அமையவில்லை. பாபா மீது சற்று அவநம்பிக்கையும் கொண்டேன். ஆனாலும், முழு மூச்சாக ஸாயி ஸத் சரிதத்தை 3 முறை படித்து முடித்தேன். அற்புதம் நிகழ்ந்தது. சென்ற செப்டெம்பர் மாதம் ஒரு வியாழனன்று எனக்கு ஒரு நிறுவனத்திலிருந்து அழைப்பு வந்தது. நேர்முகத் தேர்வில் சரியாகச் செய்யாதபோதும், எனக்கு அந்த வேலை தர உத்தரவாதம் கிடைத்தது. ஆனால், ஒரு மாதமாக அவர்களிடமிருந்து முறையான நியமனப் பத்திரம் வராததால், நேரடியாக ஷீர்டி சென்று [23/10/12] பாபாவிடம் என் குறையைச் சொல்லி முறையிட்டேன். அவருடைய படம் ஒன்றையும் வாங்கினேன். தொடர்ந்து ஸாயி ஸத் சரிதம் படித்து வந்தேன். கடந்த 30/10/12 அன்று அதே நிறுவனம் எனது வேலையை உறுதி செய்து 11/1/12 அன்று நான் வேலையிலும் சேர்ந்து விட்டேன்.
பாபா மீது முழு நம்பிக்கை வைத்து பொறுமையுடன் காத்திருந்தால் அவர் உதவி செய்வது நிச்சயம்.
பாபா அடியார்,
வித்யாசங்கர்.

பாபா எப்போதும் என்னுடனே இருக்கிறார்!
இந்தத் தளத்தில் எழுதுவது இது மூன்றாம் முறை. இன்று எனது குடும்பத்தாருடன், பாபா எப்படி எப்போதும் எம்முடனேயே இருந்து அருள் செய்கிறார் எனப் பேசிக்கொண்டிருந்தோம். தனது குழந்தைகளை பத்திரமாகப் பாதுகாத்து, நல்வழியில் செல்ல அவர் அருள்கிறார். எனது சொந்த வாழ்க்கையில் பல பிரச்சினைகளினால் வருந்தி, அன்றாட வாழ்க்கையே ஒரு போராட்டமாகிப் போகிறது. பாபா தக்க தருணங்களில் வந்து உதவி செய்து என்னைக் காப்பாற்றுகிறார். அவரால் தான் நான் நிம்மதியாக இருக்கிறேன். அவரை நேசித்தாலும், அவ்வப்போது அவர் மீது சந்தேகம் கொண்டு சில கேள்விகளும் கேட்டு வைப்பேன். அவரது மஹிமையை அறியாத நான் இன்னமும் பொறுமையை அதிகமாக வளர்த்துக் கொள்ள வேண்டுமென உணர்கிறேன். தக்க சமயத்தில் அவர் நிச்சயம் உதவுவார் என நம்பிக்கையுடன் இருங்கள்.
ஓம் ஸாயிராம்.
பீனா.

ஸாயிராம் எனக்கு உதவி செய்தார்!
பாபாவின் தீவிர பக்தையான நான் ஸாயி ஸத் சரிதத்தை எப்போதும் படித்து வருகிறேன். அதைப் படிக்கும்போதும், இங்குள்ள அடியார்களின் அனுபவங்களைப் படிக்கும்போதும், அவர்கள் எவ்வளவு அதிர்ஷ்டம் செய்தவர்கள் என எண்ணிக் கொள்வேன். எப்போதும் நான் ஸாயி, ஸாயி எனச் சொல்லிக்கொண்டே இருப்பேன். இருப்பினும், இந்த உலகச் சூழலில் மாட்டிக்கொண்டு, கடவுளை நினைக்க மறந்துபோய், நல்லவை, தீயவை நிகழும்போது, அனைத்துக்கும் நானே காரணம் என நினைத்துக் கொள்வேன்.
ஞாயிற்றுக் கிழமை மாலை என் குடும்பத்தாருடன் அங்காடிக்குச் சென்றோம். போகும் வழியெல்லாம் ஸாயி, ஸாயி என்றே சொல்லிக் கொண்டிருந்தேன். சாமான்கள் வாங்கியபின், அதற்கான தொகையைச் செலுத்திவிட்டு, அங்கே உட்கார்ந்து சற்று நேரம் பேசிக்கொண்டிருந்தபின், வெளியே செல்லும்போது, வாசலில் நிற்பவரிடம் வாங்கிய சாமான்களுக்கான ரசீதைக் காட்டத் தேடியபோது, அது காணாமல் போனதை உணர்ந்து திடுக்கிட்டேன். அவசர அவசரமாக நாங்கள் உட்கார்ந்து பேசிய இடத்துக்கு வந்து தேடும்போது, அங்கிருந்த ஒருவர், 'இதுவா?' எனக் கேட்டு ரசீதைக் கொடுக்க, சந்தோஷம் கூடிய அதிர்ச்சியுடன் அதை வாங்கிக்கொண்டு, அங்கிருந்து சென்றுவிட்டேன். ஆனால், மனதுக்குள் பாபாவுக்கு என் மனமார்ந்த நன்றியறிதலைச் சொல்லிக் கொண்டேன்.
ஓம் ஸாயி ஸ்ரீ ஸாயி ஜெய ஜெய ஸாயி.

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.