Friday, February 8, 2013

Baba's Miracle To Protect Me From A Scary Disease-Sai Devoteeஜெய் சாயிராம்

அனைவருக்கும் சாயி தின வாழ்த்துக்கள்
ஸ்ரீ சாயி சரித்திரத்தில் சாயிபாபா தன் வழியில் பலரது வியாதிகளை வினோத முறையில் குணப்படுத்தி உள்ளது கூறப்பட்டு உள்ளது. இந்த அனுபவம் அதில் ஒன்று.

மனிஷா                                  ------------------------------------
அன்புள்ள மனிஷா
நான் எனக்கு பாபாவுடன் ஏற்பட்ட அனுபவத்தை மற்ற சகோதர, சகோதரிகளுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இரண்டு அல்லது மூன்று வாரங்களாக அதை எழுத எண்ணியும் இன்றுதான் வேலை வந்துள்ளது. ஆனாலும் இப்போதாவது அதை எழுதும் வாய்ப்பு கிடைத்ததிற்கு மகிழ்ச்சியுறுகிறேன். இனி என் அனுபவத்தைப் படியுங்கள்.
எனக்கு என் தாயாரைப் போலவே மாதவிடாய் பிரச்சனை இருந்தது. ஆகவே நான் அனைத்து ஏற்பாடுகளையும் முன்னரே செய்து கொள்வேன். இந்த சம்பவம் நடந்தது செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதியாகும். நான் பொழுது போகாமல் அலுவலகத்தில் போரடித்துக் கொண்டு அமர்ந்து இருந்தேன்.  அன்று சனிக்கிழமை என்பதினால் அலுவலகம் பாதி நாட்களே இருக்கும்.
திடீர் என எனக்கு மிக அதிகமாக ரத்தபோக்கு ஏற்படத் துவங்கியது. உடனடியாக நான் என் கணவரை வண்டியில் வந்து என்னை மருத்துவரிடம் அழைத்துப் போகுமாறு தொலைபேசியில் கூறினேன். அன்று என் கணவருக்கும் விடுமுறை என்பதினால் அடுத்த பதினைந்தாவது நிமிஷத்தில் அவர் வந்து என்னை அழைத்துச் சென்றார். நான் பாபாவின் பெயரை ஜெபித்தவாறு அமர்ந்திருந்தேன். நாங்கள் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்றாலும் அங்கு சுமார் ஒன்றரை மணி நேரம் காத்திருக்க இருந்தது. எனக்கு  ஒரு குறிப்பிட்ட சோதனை  செய்ய வேண்டி இருந்தது. என்னை அந்த சோதனைக்கு உட்படுத்துவதற்காக வயிறுமுட்ட நிறைய நீர் குடிக்குமாறு கூறினார்கள்.
என்னுடைய தாயாருக்கு அதே மாதிரியான பிரச்சனையே இருந்து அதற்கு அவளுக்கு அறுவை சிகிச்சை நடந்திருந்தது என்பதினால் நான் என்னை சோதனை செய்த மருத்துவரின் முகத்தையே பயத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தேன்.
மருத்துவரும் எனக்கு செர்விகல் பிப்பிராயிட் (கருப்பையில் சிறு கட்டி போல) பிரச்சனை உள்ளது என்று கூறி அதை மருத்துவ சீட்டிலும் எழுதினர். நான் அதைக் கேட்டு அதிர்ந்து போனாலும்  என்னை சோதனை செய்தவர் மீண்டும் ஒருமுறை சோதனை செய்ய முடிவு எடுத்தார். ஆகவே இரண்டாம்  முறை அதே சோதனைக்கு உட்படுத்துவதற்காக வயிறு முட்ட இன்னும் நிறைய நீர் குடிக்குமாறு கூறினார்கள்.
அடுத்து ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக நாங்கள் காத்திருந்தோம். அந்த நேரத்தில் நான் பாபாவை வேண்டத் துவங்கினேன். எனக்கு அறுவை சிகிச்சை இல்லாமல் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என மனம் உறுகி அவரை வேண்டிக் கொண்டு அமர்ந்திருந்தேன். திடீர் என நினைவுக்கு வந்து பாபாவின் உடியை நீரில் கலந்து குடித்தேன். ஏதாவது மகிமையை பாபா காட்ட மாட்டாரா என  எண்ணிக் கொண்டு இருந்தேன். ஏன் இப்படி ஒன்றும் மகிமையைக் காட்டாமல் இருக்கிறார் என நினைத்தேன். 
 நான் 8 அல்லது 10 டம்பளர் தண்ணீர் குடித்துவிட்டு பரிதாபமாக சோதனையை எதிர்நோக்கி காத்திருந்தேன். என்ன அதிசயம். அந்த சோதனையில் என் கருப்பையில் எந்தக் கட்டியுமே இல்லை என்று தெரிந்தது. அந்த சோதனை முடிவைக் கண்ட மருத்துவரே ஆச்சர்யம் அடைந்தார். நான் அங்கேயே அழுது விட்டேன். முன்னர் தெரிந்த பிரச்சனை எப்படி இப்போது மாயமாக மறைந்து விட்டு இருந்தது? பாபா மீது முழு அளவில் நம்பிக்கை வைத்து அவரை வேண்டினால் நிச்சயமாக நமது பிரச்சனை நல்லபடியாக தீரும் என்பது புரிந்தது. பாபாவை அனாவசியமாக சந்தேகப்பட்டதற்கு வெட்கித் தலைக் குனிந்து அவரிடம் மனதார மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன்.  நன்றி பாபா. உனக்கு நன்றி. பாபா நான் உனக்கு கொடுத்த வாக்குறுதியின்படி என் அனுபவத்தை  இன்று  வெளியிட்டு  விட்டேன். பாபா....,.என்னுடன் நீதான் எப்போதும் இருக்க வேண்டும் .
ஓம் சாயி ராம் 

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.