Monday, February 18, 2013

Shirdi Sai Baba's Grace-Experience Of Sai Devotees-Part 51.
(Translated into Tamil by Dr. Sankarkumar, USA)

ஜெய் ஸாயிராம். அனைவருக்கும் இனிய பாபா நாள் வாழ்த்துகள்! ஸ்ரீ ஷீர்டி ஸாயிபாபாவுடனான பக்தர்களின் மேலும் சில அனுபவங்கள் இங்கே. ஜெய் ஸாயிராம். 
 -- மனிஷா.

--------------------------------

'ஸாயிநாத் என் மாமியாரைக் குணப்படுத்தினார்'::

ந‌ம‌து பொறுமையைச் சோதித்தாலும், இறுதியில் ந‌ம் அனைவ‌ருக்கும் பாபா த‌ம‌து ஆசிக‌ளைக் குறைவின்றித் த‌ருகிறார்.
என‌து மாமியாருக்கு க‌ட‌ந்த‌ 10 ஆண்டுக‌ளாக‌ நீரிழிவு நோய். க‌ட‌ந்த‌ 2 ஆண்டுக‌ளில் அவ‌ர் நிலை மேலும் மோச‌மான‌து. ம‌ருத்துவ‌ரிட‌ம் சென்று ப‌ரிசோதித்த‌போது, இர‌ண்டாம் நிலை எலும்புருக்கி நோயும், ச‌ர்க்க‌ரை அள‌வு அதிக‌மாக‌வும்,சிறுநீர‌க‌த்திலும், கர்ப்பப்பையிலும் கோளாறு எனவும் தெரிய வந்தது. இன்னும் சில மருத்துவர்களிடம் அந்த சோதனை முடிவுகளைக் காட்ட, அவர்களும் அதை உறுதிப்படுத்தவே மிகவும் கலக்கமடைந்தோம். அதற்கான சிகிச்சையைத் தொடங்கினோம். 6 மாதங்கள் ஆகியும் ஒரு முன்னேற்றமும் தெரியவில்லை. இணையத்தின் மூலம் "பாபாவைக் கேட்டு" அதன்படியும் செய்தோம்.
கோலாப்பூரில் எனது மைத்துனர் இருப்பதால் எனது மாமனார், மாமியார் அங்கே சென்றனர். என் கணவர் தாயின் உடல்நிலையைப் பற்றி விளக்கி, ஒரு நல்ல மருத்துவரிடம் அழைத்துச் செல்லும்படி தனது சகோதரருக்குச் சொன்னார். அதன்படியே சென்றதில், அவரைப் பரிசோதித்த மருத்துவர், மற்ற மருத்துவர்கள் கூறிய எதுவுமே இல்லை என்றும், சர்க்கரை அளவு மட்டுமே இதற்குக் காரணம் எனச் சொல்லி, அதற்கான மருந்துகளைக் கொடுக்க, ஒரே வாரத்தில் அவருக்கு பூரண குணமானது! இது அதிசயமில்லையா?
இன்னுமொன்று! இரு தினங்க‌ளுக்கு முன் ஏதோ க‌வ‌லையால் வ‌ருத்த‌முற்று, அந்த நிலையிலேயே வ‌ழ‌க்க‌மாக‌ச் செய்யும் பூஜையைச் செய்து, தேவி க‌வ‌ச‌த்தைப் ப‌டித்த‌போது, எங்கிருந்தோ ஒரு சுண்டெலி வ‌ந்து, பாபா எதிரே வைக்க‌ப்ப‌ட்டிருந்த‌ நீரைப் ப‌ருகிய‌தைப் பார்த்து அதிச‌யித்து, 'இது பாபாவெனில், மீண்டும் ஒருமுறை வ‌ர‌ணும்' என‌ வேண்ட‌, அத‌ன்ப‌டியே, அதே சுண்டெலி வ‌ந்து நீரைக் குடித்துச் சென்ற‌து! இதைக் க‌ண்ட‌ நான் ப‌ர‌மான‌ந்த‌ம் அடைந்தேன்.
எந்த நிலையிலும் வந்து உதவி செய்து, தமது ஆசிகளை வழங்கும் பாபா எப்போதும் எங்களை ஆசீர்வதிக்க வேண்டுமென வேண்டுகிறேன். எனது மகளின் உடல்நிலையும் சரியாக பாபா அருள வேண்டுகிறேன்.
'அனந்தகோடி ப்ரஹ்மாண்டநாயக ராஜாதிராஜ் யோகிராஜ் பரப்ரஹ்ம ஸ்ரீ ஸாயிநாத் மஹராஜ் கி ஜெய்!'

'என‌து உட‌ல்ந‌ல‌த்துக்கு பாபாவின் ஆசிகள்' ::

என் வாழ்வில் நிக‌ழ்ந்த‌ மிக‌ப் பெரிய‌ அதிச‌ய‌த்தை இன்று எழுதுவ‌தில் மிகுந்த‌ ம‌கிழ்ச்சி அடைகிறேன்.
2004-ம் ஆண்டிலேயே பாபாவைப் ப‌ற்றிய‌ அறிமுக‌ம் கிடைத்திருந்தாலும், நினைவில் ம‌ட்டுமே அவ‌ர் அவ்வ‌ப்போது இருந்துவ‌ந்தார். 2011, ஜூலை மாத‌ம் 6-ம் தேதி என‌க்குத் திரும‌ண‌ம் ஆன‌து. இன்ப‌மும், துன்ப‌மும் க‌ல‌ந்த‌ ச‌ராச‌ரி வாழ்க்கையே என‌க்கும். கூட‌வே மாத‌ வில‌க்கு பிர‌ச்சினையும் இருந்த‌து. க‌ருத் த‌ரிக்க‌வில்லை. சிறந்த ம‌ருத்துவ‌ர்
ஒருவ‌ரிட‌ம் காட்டிய‌போது, நான் தாயாகும் வாய்ப்பே என‌க்கு இல்லை என‌ச் சொன்ன‌தும் நான் ம‌ய‌ங்கி வீழ்ந்தேன்.
என‌க்குக் கிடைத்த‌ ஒரு ந‌ல்ல‌ தோழி பாக்யஸ்ரீ. அவ‌ள் என்னைத் தேற்றி, பாபாவைப் ப‌ற்றி சொல்ல‌லானாள். பாபாவின் தீவிர‌ ப‌க்தையான‌ அவ‌ள் வியாழ‌க்கிழ‌மைக‌ளில் முழுப் ப‌ட்டினி இருப்பாள். என்னால் அந்த‌ அள‌வுக்கெல்லாம் முடியாது. அவ‌ளால் நான் மீண்டும் பாபாவுட‌ன் நெருக்க‌மானேன். அவ‌ளுட‌ன் சேர்ந்து 9 வார‌ பாபா விர‌த‌த்தையும் டிசம்பர் 27,2012-ல் முடித்தேன். அப்போது அவளால் அறிமுக‌மானார் அமோல் ஸ‌ப்த‌ரிஷி என்னும் ஆயுர்வேத‌ ம‌ருத்துவ‌ர்.
'ந‌ட‌ந்த‌வ‌ற்றையெல்லாம் ம‌ற‌ந்துவிடு. இன்று முத‌ல் ஒரு தாயைப் போல‌ உண‌ர‌த் தொட‌ங்கு' என‌ ந‌ம்பிக்கையூட்டி, ம‌ருந்துக‌ள் கொடுத்தார். செப்டெம்ப‌ர், 2012-ல் துவ‌ங்கிய‌ இந்த‌ சிகிச்சை இப்போது 3 மாத‌ங்க‌ள் ஆகியுள்ள‌து, இன்ன‌மும் மாத‌வில‌க்கு ஆக‌வில்லை. ஆனால், உடலில் புதுத் தெம்பு உருவானது தெரிகிறது. பாபாவிடம் என‌து எல்லாப் பாவ‌ங்க‌ளையும் ம‌ன்னித்து ஏற்றுக்கொள்ளும்ப‌டியும், என‌க்கு மாத‌வில‌க்கு முறையாக‌ நிக‌ழ‌வேண்டும் என‌வும், ஒரே பிர‌ச‌வ‌த்தில் 3 குழ‌ந்தைக‌ள் பிற‌க்க‌ வேண்டுமென‌வும் வேண்டிக்கொண்டேன். அப்போது, ஒரு காரின் பின்புற‌த்தில் 'தே ஸாயி' என‌ ம‌ராத்தியில் எழுத‌ப்ப‌ட்ட‌ வாச‌க‌த்தைக் க‌ண்டு, அதை ஒரு ந‌ல்ல‌ ச‌குன‌மாக‌ உண‌ர்ந்து அதையே ஜ‌பிக்கலானேன்.
டிச‌ம்ப‌ர் மாத‌ம் 22-ம் தேதி அந்த‌ அதிச‌ய‌ம் நிக‌ழ்ந்த‌து! அலுவ‌ல‌க‌ம் சென்ற‌தும் என‌க்கு மாத‌வில‌க்கு ஆர‌ம்பித்த‌து. நான் எவ்வ‌ள‌வு ம‌கிழ்ச்சி அடைந்தேன் என‌ அந்த‌ ஸாயிக்கு ம‌ட்டுமே தெரியும். நானும் பாக்யஸ்ரீயும் ஷீர்டி செல்ல‌ முடிவெடுத்திருக்கிறோம். பாபாவின் அருளால் அது கூடிவ‌ர‌ வேண்டும். அப்போது பாபா மஞ்சள் வண்ண ஆடை உடுத்தியிருக்க வேண்டும். நானும் மஞ்சள் சேலை அணிவேன். எனது உடல்நிலை குணமாக வேண்டும். என‌து சுர‌ப்பிக‌ள் அனைத்தும் தேற‌வேண்டும். என‌து உட‌ல் எடை குறைய‌ வேண்டும். என‌து மாத‌ வில‌க்குக‌ள் முறையாக‌ நிக‌ழ்ந்து, என‌க்கு ஒரே பிர‌ச‌வ‌த்தில் 3 குழ‌ந்தைக‌ள் பிற‌க்க‌ வேண்டும். இவ‌ற்றையெல்லாம் பாபா அருளுவார் என‌ ந‌ம்புகிறேன்.
என்னை ம‌ன்னித்து, என்னையும் ஏற்றுக்கொண்டு ஆசீர்வ‌தித்த‌ பாபாவுக்கு என‌து வ‌ந்த‌ன‌ங்க‌ள். என்னை எப்போதும் அவ‌ருட‌னேயே வைத்திருக்க‌ வேண்டுகிறேன்

பாபா எனக்கு ஒரு வேலை தேடித் த‌ந்தார்!'

பாபாவின் பெருமையைச் சொல்லி மாளாது. எந்தக் கடவுளின் மீது நம்பிக்கை இல்லாவிடினும், பாபாவின் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். என் வாழ்வில் நிகழ்ந்த காரணங்களால் நானும் இதே போல நம்பிக்கை இழந்தவளாக இருந்தேன் என்பதால் இதைச் சொல்கிறேன்.
2009-ல் எனது மேலாளருடன் நிகழ்ந்த மோதலால் எனது மிகச் சிறந்த வேலையை இழந்தேன். அதன்பின், 1 1/2 ஆண்டுகள் வேலை இல்லாமல் இருந்தேன். பல விதத்தில் முயற்சித்தும், ஒரு முறை ஷீர்டி சென்றும் [நீ நினைத்தாலும், கடவுள் வேறு விதமாக நினைப்பார் என்பதுபோல்] ஒவ்வொரு முறையும் ஏமாற்றம் அடைந்தேன்.
விரதம் இருப்பதில் நம்பிக்கை எனக்குக் கிடையாது. இருந்தும் [என் கணவருக்கும் வேலை போனதால்] 'நானிருக்க பயமேன்?' எனும் பாபாவின் வாக்கை நம்பி, ஸாயி 9 வார விரதத்தை தொடங்கினேன். 7-ம் வார முடிவிலேயே எனக்கு ஒரு பெரிய நிறுவனத்திடமிருந்து அழைப்பு வந்தது. 8-ம் வாரமே என் வேலை உறுதியானது. என் கணவருக்கும் வேலை கிடைத்தது.
நாம் விரும்பும் வழியில் வராவிடினும், பாபா நிச்சயமாக நமக்கு வந்து உதவுகிறார் என இது உறுதி செய்தது. எது சரியானது என அவருக்கு மட்டுமே தெரியும். இதை நான் என் சொந்த அனுபவத்திலிருந்தே கூறுகிறேன்.
மே மாதம் 25-ம் தேதி நான் வேலையில் சேர்ந்தேன். ஷீர்டி பயணத்துக்கான எனது பயணச் சீட்டு, ஜூலை மாதம் முதல் வாரத்தில் [பல இடையூறுக்குலிடையேயும்] உறுதி செய்யப்பட்டது. ஷீர்டியில் நல்ல தரிசனம். கடந்த 6-7 ஆண்டுகளாக நான் ஷீர்டி சென்றிருந்தபோதும், இதுவரை கிடைக்காத விதமாக, ஒரு துறவியின் தரிசனமும் கிடைத்தது.
பாபாவிடம் சொன்னாலே போதும்.... வேறெந்த விரதமும் வேண்டாம்...... எனும் உண்மையை நான் உணர்ந்தேன். பொறுமை ஒன்றே நமக்குத் தேவை. ஜெய் ஸாயிராம். 


'என் வாழ்வில் ஸாயிபாபாவின் ஆசீர்வாதம்'::

படித்து முடித்ததும் ஒரு நல்ல வேலை தேடிய சமயம், மும்பையில் ஒரு நிறுவனத்தின் தேர்வுக்குச் சென்றேன். ஆனால் அங்கிருந்து ஒரு பதிலும் வரவில்லை. இதற்கிடையில் என் அண்ணனின் சிபாரிசால், அவரது நிறுவனத்திலேயே எனக்கு ஒரு வேலை கிடைத்தது. ஆனால், 15 நாட்களிலேயே, வேலையில் நிகழ்ந்த கொடுமை காரணமாக என் அண்ணன் வேலையை விட்டுவிட்டார். இதைக் கேட்டு நான் மிகவும் வருந்தினேன். எங்கள் பொருளாதார நிலையும் அப்போது சரியாக இல்லை. வீடு திரும்பும்போது, எனது தோழி ஒருவர் சொன்னதுபோல, பாபாவிடம் மனதுக்குள் வேண்டிக் கொண்டேன். குழம்பிய நிலையில் வீடு சேர்ந்ததும், என் தாய் மும்பை நிறுவனம் என்னை இரண்டாம் நிலைத் தேர்வுக்கு அழைத்திருக்கும் நல்ல சேதியைச் சொன்னார். பாபாவுக்கு என் மனமார்ந்த வந்தனங்களைத் தெரிவித்தேன். அவர் எது செய்தாலும் நம் நன்மைக்கே செய்கிறார்.
எனது தோழி ஸாயி 9 வார விரத நூலைக் கொடுத்து, அதைத் துவங்கும்படி சொன்னாள். எனது காதலருக்கு ஒரு நல்ல வேலை கிடக்கவென 2009-ல் அதைத் தொடங்கினேன். 8-ம் வார முடிவிலேயே அஹமதாபாத்தில் இருக்கும் ஸ்வாமி நாராயண் மந்திரில் 3ட் அனிமேஷன் நிபுணராக அவருக்கு வேலை கிடைத்த செய்தி அறிந்து பாபா எப்போதும் என்னுடன் இருப்பதை உணர்ந்து உருகினேன்.
2011-ல் என் சகோதரனின் திருமணத்திற்காக மீண்டும் விரதம் இருந்தேன். 9 வார முடிவில் அவர் எனது வருங்கால அண்ணியைச் சந்தித்து, விரைவிலேயே திருமணமும் நிகழ்ந்தது. அவரும் பாபா மீது பக்தி உள்ளவர். ஷீர்டி செல்ல விரும்பியும் எனக்கு இன்னும் நேரம் கூடிவரவில்லை. பாபா அருள் வேண்டிப் பிரார்த்திக்கிறேன்.
ஜெய் ஸாயிராம்.

'ஷீர்டி ஸாயிபாபா நிகழ்த்திய அற்புதம்'::

பாபாவின் தெய்வீக அருளால் என் வாழ்வில் எனக்கு நிகழ்ந்த அற்புதத்தால் என் வாழ்வே சீராகி, அவர் மீதான என் நம்பிக்கை எல்லை கடந்து சென்றுவிட்டது.
படுக்கச் செல்லும்போதெல்லாம், ஒருவிதமான படபடப்பு என்னை ஆட்கொண்டு என்னை அலைக்கழித்து, என் உறக்கத்தைக் கெடுத்து, இரவில் தூங்க முடியாமலும், அதனால் பகலில் என் வேலையும் கெட்டு என்னை மிகவும் வருத்தியது. நாளாக நாளாக, இது மோசமாகி, பகலிலும் வரத் தொடங்கிவிட்டது. தாங்க முடியாமல், ஒரு நாள் பாபா ஆலயத்துக்குச் சென்று என் குறையைச் சொல்லிக் கதறி அழுதேன். அர்ச்சகரிடமும் என் நிலையை விவரித்தேன். அவர் என்னிடம், 'பாபா மீது நம்பிக்கை இருந்தால், அவருக்கு உன் நிலையைத் தெரிவித்து ஒரு கடிதம் எழுது. அதை அவர் அன்புடன் ஏற்று உன் கவலையைப் போக்குவார். அவரை நாடிச் சென்றாலவர் நிச்சயம் உதவி புரிவார். எல்லாம் சரியாகும். கவலைப் படதே' என ஆறுதல் சொன்னார்.
அவர் சொன்னபடியே செய்தேன். சிறிது காலத்திலேயே எனது படபடப்பு குறையத்தொடங்கி, இப்போது முற்றிலும் என்னை விட்டுச் சென்று விட்டது. பாபா மீதான என் நம்பிக்கை இதன் மூலம் பன்மடங்கு பெருகிவிட்டது.

'ஸாயி என்னைத் தம்மிடம் இழுத்தார்'::

சாதாரண மனிதர்களுள் ஒருவனாக இருந்து, தீய வழிகளில் சென்றிருந்த என்னை ஸாயி தம்மிடம் அழைத்துக் கொண்டார். எனது உறவினர் கொடுத்த ஸாயி விரத நூலின் மூலம் அவர் என்னிடம் வந்தார். அதை முறையாகச் செய்து அவரைச் சரணடைந்தேன். எனது ஷீர்டி பயணத்துக்கும் வழி செய்தார். அங்கே கஃப்னி அணிந்த ஒரு முதியவர், ரொட்டி ஒன்றைக் கடித்தபடி என்னைப் பார்த்தார். அப்போது எனக்குத் தெரியவில்லை. ஆனால் சற்று நேரம் சென்றபின்னர், ஸாயியே என்னை அப்படிப் பார்த்தார் எனப் புரிய வந்தது. ஏதோ ஒரு மானுட வடிவில் ஸாயி தம் அடியவர்க்குக் காட்சி தருகிறார். ஸாயி ஸத் சரித நூலை எனது உறவினர் எனக்கு வாங்கிக் கொடுத்தார். அதைப் படிக்கத் தொடங்கியதும், என் மனம் அமைதியடைந்து, பயம், ஆச்சரியம், கவலை, பற்றுகளில் இருந்து விடுபட்டிருக்கிறது. ஸத் சரிதத்தில் சொல்லியபடி ராம விஜயத்தைப் படித்தேன். இப்போது தன்னிலை அறிதல் என்பதைப் புரிந்திருக்கிறேன். ஸாயியை இப்போது என்னுள்ளேயே கண்டு எனது வழிகாட்டியாகக் கொள்கிறேன். ஸாயிக்கு என் வணக்கம்.

'தமது அடியவரை பாபா தேர்ந்தெடுக்கிறார்'::

8 ஆண்டுகளுக்கு முன் பாபா என் தோழி மூலம் என்னிடம் வந்தார். அவர் என்னிடம் இருப்பது தெரியாமலே, நான் என் கர்ம வினைகளை அனுபவித்து வந்தேன். பத்து ரூபாய் கூடப் பெறுமானமில்லாத ஒரு பாபா டாலரை என் தோழி எனக்குக் கொடுத்தாள். இதை ஏன் எனக்குக் கொடுக்கிறாய் என அவளைக் கேட்டேன். பாபாவின் அடியவர்களான அவர்கள் வீட்டுக்கு ஷீர்டியிலிருந்து ஒரு துறவி வந்ததாகவும், எல்லாரும் அவர் காலில் விழுந்து வணங்கியபோது, தானும் வணங்கியதாகவும், அப்போது அவர் இந்த டாலரைத் தனக்குக் கொடுத்ததாகவும் அவள் சொன்னாள். தான் ஒரு தங்க டாலர் வாங்கப்போவதால், இதை எனக்குக் கொடுத்ததாகச் சொன்னாள். மறு பேச்சில்லாமல், அவளே ஆச்சரியப்படும் வகையில், நான் உடனே அந்த டாலரை என்னுடைய தங்கச் செயினில் சேர்த்து மாட்டிக்கொண்டேன். ஏன் அப்படிச் செய்தேன் என எனக்குத் தெரியாது.
இதில் அதிசயம் என்னவென்றால், 8 ஆண்டுகள் ஆகியும், அந்த டாலர் கொஞ்சம் கூடக் கறுக்கவோ, துருப் பிடிக்கவோ இல்லை. இத்தனைக்கும் குளிக்கும்போதுகூட அதைக் கழற்றுவதில்லை. இந்த டாலர் தங்கியதுபோல, வேறெந்த டாலரும் இதுவரை என் வீட்டில் தங்கியதே இல்லை. இத்தனை ஆண்டுகளுக்குப் பின் இப்போதுதான், நான் என் வினைகளை அனுபவித்த காலத்திலெல்லாம், என்னைத் தனியாக விடாமல், பாபா என் கூடவே இருந்து காத்திருக்கிறார் எனப் புரிகிறது.
இந்த டாலரை எனக்குத் தந்த என் தோழிக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். அவளுக்கு எத்தனையோ ஆசிகள் கிடைத்தபோதும், இதை தான் வைத்துக்கொள்ளாமல், எனக்குத் த‌ந்தது, பாபா என்னைத் தன் அடியாராகத் தேர்ந்தெடுத்ததையே காட்டுகிறது. அவரது மஹிமையை நான் அறிகிறேன். எனது அனுபவங்களைச் சொல்ல வார்த்தைகள் இல்லாமல் தவிக்கிறேன். எல்லாரையும் இதேபோல் ஆசீர்வதிக்க வேண்டுகிறேன். பாபா ஓம் ஸாயிராம். ஸ்ரீ ஸாயிராம். ஜெய்ஜெய் ஸாயிராம்.

' ஆலயத்துக்கு நாங்கள் கொண்டுசென்ற பழத்தை பாபா சாப்பிட்டார்'::

3 வாரங்களுக்கு முன் நானும், என் மகளும் பாபா ஆலயத்துக்குச் சென்றோம். ஆப்பிளும், வாழைப்பழமும் பாபாவுக்கு அளித்தோம். அர்ச்சகர் அதை பாபாவிடம் காட்டிவிட்டு, எங்களிடமே திருப்பித் தந்துவிட்டார். அவருக்கெனக் கொடுத்த பழத்தை ஏன் நமக்கே தந்துவிட்டார் என என் மகள் கேட்க, பாபா எது தந்தாலும் அதை மனநிறைவுடன் வாங்கிக் கொள்ளவேண்டும் என நான் பதில் சொன்னேன். பிறகு நாங்கள் பஜனையில் அமர்ந்தோம். அப்போது பக்கத்திலிருந்த ஒரு 15 மாதக் குழந்தை எங்களது ஆப்பிளையும், வாழைப்பழத்தையும் தன் கையில் எடுத்துக் கொண்டது. அதன் தாய் அதைத் தடுத்தும், மீண்டும் அது அப்படியே செய்தது மட்டுமின்றி, அதைத் தன் அரிசிப் பற்களால் கடித்தும் தின்றது! உடனே நான் என் மகளிடம்,'இதோ பார்! நீ கேட்டதுபோலவே, பாபா ஒரு குழந்தை வடிவில் வந்து உன் பழத்தைக் கடித்துத் தின்கிறார் பார்' என நான் சொல்ல என் மகள் மகிழ்ந்தாள். அவரது எங்கும் நிறை தன்மைக்கு இது ஒரு எடுத்துக்காட்டு. அவர் எப்போதும் நம்முடனேயே இருக்கிறார். அவரது ஆசிகள் நம்முடன் எப்போதுமே இருக்கும். ஓம் ஸாயிராம்.

மேக வடிவில் வந்த ஸாயி'::

என்னைச் சுற்றிலும் பாபாவின் லீலைகள் நிகழ்ந்தவண்ணம் இருக்கின்றன. ராதாகிருஷ்ணர் சேவையில் தங்களை ஈடுபடுத்திக்கொண்ட ஒரு ஆன்மீகக் குடும்பத்தில் நான் பிறந்தேன். யாரோ ஒருவர் வீட்டில் நிகழ்ந்த ஒரு ஸாயி ஆராதனையின் போது என் அத்தை ஆசீர்வதித்த ஸாயி ஸத் சரிதப் புத்தகத்தின் வழியே ஸாயி என் வாழ்வில் வந்தார்.
அந்தப் புத்தகம் என் கைக்கு வர ஒரு சில ஆண்டுகள் ஆயின. கடைசியில் அது எனக்குக் கிடைத்தும், ஒரு சில ஆண்டுகள் அதைப் படிக்கவில்லை. எனக்கு ஒரு கஷ்டகாலம் வந்தபோது அதைப் படிக்கத் தொடங்கினேன். அன்று முதல் இன்றுவரை அதைக் கீழே வைக்கவே இல்லை. மிகப் பெரிய கஷ்டங்களில் இருந்து ஸாயி என்னைக் காப்பாற்றியிருக்கிறார். இப்போதெல்லாம் அவர் பெயரை உச்சரிக்காமல் என்னால் மூச்சுகூட விட இயலாது.
ஒரு நாள் அமைதி இல்லாமல், நான் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, தற்செயலாக வானத்தைப் பார்க்க, மேக வடிவில் பாபா தரிசனம் தந்தார். வேறு யாருக்காவது அப்படித் தெரிகிறதா என சுற்றுமுற்றும் பார்த்தேன். அவர்கள் எல்லாரும் இயல்பாக அவரவர் காரியங்களைப் பார்த்துக்கொண்டு சென்று கொண்டிருந்த‌னர். மீண்டும் மேலே பார்க்க அவர் அப்படியே அசையாமல் இருந்தார். என் கண் பார்வையிலிருந்து மறையும்வரை அவரைப் பார்த்துக்கொண்டே நடந்தேன். இந்தக் காட்சியை என் உயிருள்ளளவும் மறக்க முடியாது. இதேபோல, தனது சுய உருவிலேயே அவர் நம் எல்லாருக்கும் காட்சி தரவேண்டுமெனப் பிரார்த்திக்கிறேன். எனது பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்துவிட்டன எனவும் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்களது அன்புக்கும், பொறுமைக்கும், ஆசிகளுக்கும் என் வந்தனங்கள் பாபா! உங்கள் காலடித் தூசியாக நாம் எல்லாரும் அவருடனே இருப்போமாக!
-ஸிமி.

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.