Monday, May 6, 2013

Shirdi Sai Baba's Grace-Experience Of Sai Devotees-Part 52.
( Translated into Tamil by Dr. Sankarkumar, U.S.A )

அன்பார்ந்த வாசகர்களே, அனைவருக்கும் இனிய பாபா நாள் வாழ்த்துகள்.
நீண்ட இடைவெளிக்குப் புஇன் பாபாவின் அருளால் மீண்டும் இந்தப் பகுதியைத் தொடர்கிறேன். என் நலம் குறித்து அக்கறையோடு விசாரித்த அனைவருக்கும் என் நன்றி. பாபாவின் அருளால் நான் நலமாகவே இருக்கிறேன். ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால், நாம் விரும்பும் அனைத்தையும் செய்ய இயலாமல் போகும் சூழ்நிலை வந்துவிடுகிறது. அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி வணக்கம்.
பாபாவின் ஆசியுடன் இனி, இதைத் தொடர்ந்து வெளியிடமுடியுமென நம்புகிறேன்.
வாழ்க்கையெனும் கடலில் சிக்கித் தத்தளிக்கும் பலருக்குமான கலங்கரை விளக்கமாக இன்றைய அனுபவங்கள் விளங்குமென எண்ணுகிறேன். ஸத் சரித்தத்தில் பாபா சொல்லியவண்ணம், ' எனது லீலைகள் எழுதப்படுமானால், அஞ்ஞானம் அகலும். கவனமுடன் அவற்றைக் கேட்போருக்கு இவ்வுலகச் சிந்தனைகள் தீர்ந்து போகும். ஆழ்ந்த பக்தியும், அளவிலா அன்பும் நிறையும். இதில் மூழ்குவோருக்கு விலை மதிப்பில்லா ஞானம் எனும் ரத்தினங்கள் கிடைக்கும்.'
அன்புள்ள வாசகர்களே, நாமும் இதில் குதித்து, இவற்றைக் கேட்டு, மற்றவருடன் பகிர்ந்து நமது நம்பிக்கையை உறுதி செய்து கொள்ளுவோம். ஜெய் ஸாயிராம். 
மனிஷா  

ஸாயி எனது வாழ்க்கையில்

ஸ்ரீ ஷீர்டி ஸாயியைப் பற்றிய அனைத்துத் தகவல்களையும் சேகரித்துக்கொண்டிருக்கும் மத்திய அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற ஒரு ஊழியன் நான். கட்டாக், ஒரிஸ்ஸாவில் 'ஆல் இண்டியா ரேடியோ'வில் பணி புரிந்திருந்தேன்.
31/10/2012-ல் ஓய்வு பெற இருந்தேன். அரசு விதிகளின்படி, ஓய்வு பெறுவதற்கு 3 ஆண்டுகள் இருக்கும்போது பணி மாற்றம் செய்யக்கூடாது. இருப்பினும், உடல் நல, வீட்டுத் தொல்லைகளின் நடுவே, நான் பேரம்பூருக்கு மற்றல் செய்யப்பட்டேன். நான் விடுத்த கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்ட நிலையில், மேலிடத்தில் இது பற்றி வழக்கு தொடர்ந்தேன். அரசு சார்பில் எதிர் வாதங்களும் கொடுக்கப்பட்டன. எனவே நேரில் சென்று வழக்காடும் நிலையில் அதற்கான நாளும் குறிக்கப்பட்டது. நான் கண்டிப்பாக நீதி மன்றத்தில் இருக்க வேண்டுமென எனது வழக்கறிஞர் சொல்லியிருந்தார். இருந்தாலும், நினக்கவே முடியாத அதிர்ஷ்டமாக, அதற்கு 5 நாட்களுக்கு முன்னர், நான் ஒரு கணினிப் பெட்டியின் முன்னே அமர்ந்து எனது ஷீர்டி பயணத்த்துக்கான ரயில் டிக்கெட்டை பதிவு செய்துகொண்டிருந்தேன். கணினி அறிவு குறைவான நான் எப்படி அதைப் பதிந்தேன் என நினைக்கவே ஆச்சரியமாக இருக்கிறது. காத்திருக்கும் பட்டியலில் என் பெயர் இருந்ததால், நிலையத்துக்குச் சென்றேன். எனக்கு இருக்கை கிடைத்து, மதிய ஆரத்திக்கு முன்னர் ஷீர்டியைச் சென்றடைந்தேன்!
அவசர அவசரமாக எனது உடைமைகளைப் பாதுகாப்பு அறையில் வைத்துவிட்டு கோவிலருகில் சென்றேன். இன்னும் 10 நிமிடங்களே ஆரத்தி ஆரம்பிக்க இருக்கும்போது, அங்கிருந்த ஊழியர் ஒருவர், என் கையைப் பிடித்து என்னையும் உள்ளே அனுமதித்தார்! துவாரகாமாயியில் அமர்ந்து ஆரத்தியில் கலந்துகொண்டபோது, என் கண்களில் கண்ணீர் வழிந்தது. தெய்வாதீனமாக, ஸமாதி மேடைக்கு அருகே செல்லும் சிறிய கதவைத் திறந்து எங்களை உள்ளே அனுமதித்தார்கள். நீதிமன்றத்தில் இருக்க வேண்டிய நான், இப்போது ஸாயி தர்பாரில் நின்றுகொண்டு,இருந்தேன்.
மறுநாள் கட்டாக் வந்ததும் வழக்கறிஞரிடம் இருந்து ஒரு அவசர அழைப்பு வந்தது. நேரில் ஆஜராகாததால் என்ன ஆயிற்றோ என பயத்துடன் சென்ற எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. இதுவரை தான் கொடுத்திராத சரித்திரப் பிரசித்தி பெற்ற தீர்ப்பு என நீதிபதியாலேயே குறிப்பிடப்பட்ட அளவில், என்னை மாற்றம் செய்தது தவறு எனவும், நான் ஓய்வு பெறும்வரை கட்டாகிலேயே பணி புரிய அனுமதித்தும் தீர்ப்பாகி இருந்தது!
ஸாயி எப்போதும் நம்முடனேயே இருக்கிறார். நாம் நம்பினாலும் நம்பாவிட்டாலும், அவர் நம்மைக் காப்பாற்றுகிறார். பாபாவுக்கு எனது வந்தனங்கள்.
ஜெய் ஸாயிராம்.
பி.ஸி, பாண்டா. கட்டாக்.
---------------------------

நம்பிக்கை வைத்தால், பாபா நம்முடனேயே இருக்கிறார்!

நான், என‌து ச‌கோத‌ரி ம‌ற்றும் அவ‌ர‌து ம‌க‌ளும், அந்த‌ப் பெண் ப‌டிக்கும் க‌ல்லூரி வளா‌க‌த்துள் க‌ட்ட‌ப்ப‌ட்ட‌ பாபா ஆல‌ய‌ கும்பாபிஷேக‌ம் காண‌ச் சென்றிருந்தோம். சுமார் 10,000 பேர் கூடியிருந்து, விழா நிக‌ழ்ச்சிக‌ள் அனைத்தும் ஷீர்டியில் இருக்கும் உண‌ர்வைத் த‌ந்த‌ன‌. காலை 10.30க்கெல்லாம் நிக‌ழ்ச்சிக‌ள் முடிந்துவிட்ட‌ன. சென்னைப் புறநகரில் இருக்கும் அந்தக் க‌ல்லூரி ஏற்பாடு செய்திருந்த‌ பேருந்து 1 ம‌ணிக்குத்தான் கிள‌ம்பும் என்ப‌தால், நாங்க‌ள் வெளியே வ‌ந்தோம். ஆட்டோக்க‌ள் வ‌ந்து போய்க்கொண்டிருந்தாலும், ம‌ற்ற‌வ‌ர்க‌ள் முண்டிய‌டித்துப் பிடித்த‌தால் எங்க‌ளால் அவ‌ர்க‌ளுட‌ன் போட்டி போட‌ முடிய‌வில்லை. அப்போது நான் என் த‌ங்கையிட‌ம், 'இப்போது பார்! ஒரு கார் வ‌ந்து ந‌ம்மை ஏற்றிக்கொண்டு ர‌யில் நிலைய‌த்தில் கொண்டுவிடும்' என‌ச் சொன்ன‌தும், 'யார் ந‌ம‌க்கு அப்ப‌டி செய்ய‌ப் போகிறார்க‌ள்?' என‌ என் சகோதரி கூறினார்.
ஆனால், பாபா எங்க‌ள் உரையாட‌லைக் கேட்டுவிட்டார்! ஒரு கார் வ‌ந்து எங்க‌ள் முன்னே நின்ற‌து! அதிலிருந்த‌ த‌ம்ப‌தியின‌ர் எங்க‌ளை ஏறிக்கொள்ள‌ச் சொன்னார்க‌ள். என் ச‌கோத‌ரி பேச்சிழ‌ந்து போனார். அது ம‌ட்டும‌ல்ல‌! கார் கிள‌ம்பிய‌தும், அந்த‌க் க‌ன‌வானிட‌ம் நான், அருகிலிருக்கும் உல‌கிலேயே முத‌ன்முத‌லாய் மெக்ஷுகினால் செய்ய‌ப்ப‌ட்ட‌ பாபா ஆல‌ய‌ம் ஒன்று அருகிலிருப்ப‌தாக‌வும், எங்க‌ளை அங்கே கூட்டிச்சென்று காண்பிக்க‌ முடியுமா என‌க் கேட்டேன். அத‌ற்கு அவ‌ர், அவ‌ரும் ப‌ல‌ நாட்க‌ளாக‌ அங்கு செல்ல‌ எண்ணி இருந்த‌தாக‌வும், இன்று எங்க‌ள் மூல‌ம், பாபா அவ‌ரை அழைக்கிறார் என‌வும் சொல்லி இட்டுச் சென்றார்.
ஸாயிபாபா ந‌ம்மை எப்போதும் க‌வ‌னிக்கிறார் என்ப‌த‌ற்கு இதை விட‌வும் வேறு சான்று வேண்டுமோ!
ஓம் ஸாயிராம்.
[டி.கே. ம‌து மூர்த்தி.]

--------------------------------

ஸாயி த‌ன‌து வாழும் உருவைக் காட்டினார்!

என் பெய‌ர் ப‌பிதா. க‌ட்டாக், ஒரிஸ்ஸாவில் வ‌சிக்கிறேன். ஸாயியைப் ப‌ற்றி 12 ஆண்டுக‌ளாக‌ அறிவேன்.
என்து திரும‌ண‌ வ‌ர‌வேற்பு ஒரு ஸாயி கோவிலில் நிக‌ழ்ந்த‌து. என‌து அண்டை வீட்டுக்கார‌ர் ஒரு ஸாயி அடிய‌வ‌ர் என்ப‌தால், இந்த‌ ஏற்பாடைச் செய்துத‌ந்தார். அத‌ன் பிற‌கு நான் ஸாயியை ம‌ற‌ந்து போனேன். 2011-ல் என‌து குடும்ப‌த்துட‌ன் ஷீர்டி சென்றேன். அப்ப‌டி ஒன்றும் அதிர்வ‌லைக‌ள் என‌க்குள் ஏற்ப‌ட‌வில்லை. க‌ட‌ந்த‌ ஒன்ற‌ரை ஆண்டுக‌ளில் என‌க்கு ப‌ல‌ சோத‌னைக‌ள் நிக‌ழ்ந்தாலும், ஸாயி த‌ன‌து இருப்பினைக் காட்டி வ‌ந்தார்.
ஸாயி 9 வார‌ விர‌த‌ம் அனுஷ்டிக்கும் இந்த‌ வேளையில் த‌ற்போது ஸாயி ப‌ல‌ அற்புத‌ங்களை நிக‌ழ்த்தி வ‌ருகிறார். க‌ட‌வுளை ந‌ம்பும் என‌க்கு சடங்குகளில் நம்பிக்கை கிடையாது. நான் எப்போது நொந்த நிலையில் இருந்தாலும், பகவத் கீதையில் வரும் 'மதுஸூதன க்ருஷ்ணேதி வஸுதேவ ஜனார்தனா, சத்வாரி தப நாமானி மஹா பிபத்தி நாசனம்' ச்லோகத்தைச் சொல்லி வருமாறு என் தாய் போதித்திருந்தார். இது கிருஷ்ணன் மீதான ச்லோகம்.
ஸாயியை ந‌ம்ப‌த் தொட‌ங்கிய‌தும் என் ம‌ன‌தில் 'ஏன் என்னை அவ‌ர் ஆசீர்வ‌தித்தார்? திரும‌ண‌த்துக்கு முன்ன‌மா அல்ல‌து பின்ன‌ரா அவ‌ர் என் வாழ்வில் வ‌ந்தார்? ' எனும் கேள்விக‌ள் எழ‌த் தொட‌ங்கின‌. அது ம‌ட்டுமின்றி, ஸாயியை ம‌ன‌துக்குள்ளோ அல்ல‌து ஒரு ப‌ட‌த்தைப் பார்த்தோ தியானிக்க‌ முடிந்த‌ என்னால், அவ‌ர‌து ப‌ளிங்குச் சிலை உயிர‌ற்ற‌ ஒன்றாக‌வே காட்சி த‌ந்த‌து! 3 நாட்க‌ளுக்கு முன்னால், என் ம‌க‌ள் பிரார்த்த‌னா சேன‌லில் வ‌ந்த‌ ஸாயி நிக‌ழ்ச்சி ஒன்றைப் பார்க்க‌ச் சொன்னாள். அந்த‌ச் சிலை க‌ண்க‌ளைச் சிமிட்டிக்கொண்டு என்னைப் பார்த்து சிரித்த‌து! நான் ஏதோ ம‌ய‌க்க‌த்தில் இப்ப‌டிக் காண்கிறேன் என‌ நினைத்தேன். திரை அருகே சென்று 5 நிமிட‌ங்க‌ள் அதையே உற்றுப் பார்த்தேன். யாரோ வேட‌ம‌ணிந்து அங்கே உட்கார்ந்திருக்கிறாரோ என‌க்கூட‌ நினைத்தேன். ஆனால், அப்ப‌டி எதுவும் இல்லை. ப‌க்த‌ர்க‌ள் வ‌ந்து போய்க்கொண்டு இருந்த‌ன‌ர். தன் வடிவை அந்தச் சிலையிலும் காட்டி என் ஆசையை பாபா நிறைவேற்றிய‌தை நினைத்து விய‌ந்தேன். அந்த‌ நிக‌ழ்ச்சியின் முடிவில், ப‌க‌வ‌த் கீதையிலிருந்து ஒரு ச்லோக‌ம் ஒளிப‌ர‌ப்பான‌து. என் தாய் என‌க்குச் சொல்லிக் கொடுத்த‌ அதே ச்லோக‌ம்!. அத‌ன் மூல‌ம், என் திரும‌ண‌த்துக்கும் முன்பிருந்தே பாபா என்னை ஆசீர்வ‌தித்திருக்கிறார் என‌ப் புரிந்து கொண்டேன்.
இப்ப‌டிக் காட்டிய‌தோடு நிற்காம‌ல் மேலும் ஒன்று நிக‌ழ்ந்த‌து. என‌து ம‌க‌ள் ஒருநாள் என்னிட‌ம் உன‌து திரும‌ண‌ ஆல்ப‌த்தில் ஸாயி எங்காவ‌து தென்ப‌ட்டால், நானும் அவ‌ரை ந‌ம்புவேன் என‌ச் சொல்லி அதைப் புர‌ட்டித் தேடினாள். அந்த‌ வ‌ர‌வேற்பு நிக‌ழ்ச்சியில் எடுக்க‌ப்ப‌ட்ட‌ ஒரு புகைப்ப‌ட‌த்தில் பாபா இருந்தார்! பாபாவின் விருப்ப‌ப்ப‌டியே என் திரும‌ண‌ம் நிக‌ழ்ந்த‌தையும் உண‌ர்ந்தேன். எங்க‌ள் இரு குடும்ப‌ங்க‌ளும் முன்ன‌ரே அறிமுக‌மான‌வ‌ர்க‌ளோ, ஒரே க‌லாச்சார‌ம் உடைய‌வ‌ர்க‌ளோ அல்ல‌. க‌ட‌வுள் உன் திரும‌ண‌த்தை ந‌ட‌த்தி வைப்பார் என‌ என் தாய் அடிக்க‌டி அப்போதெல்லாம் சொன்ன‌தும் புரிந்த‌து.
12 ஆண்டுக‌ளுக்குப் பின், இப்போது என‌க்கு எல்லாம் புரிகிற‌து. க‌ட‌வுள் ந‌ம்பிக்கை உடைய‌ என் தாயால் அவ‌ர‌து ம‌க‌ளின் திரும‌ண‌ம் நிக‌ழ்ந்த‌து. நேர்வ‌ழியும், ந‌ன்ன‌ட‌த்தையும் கொண்டால், ஸாயி ந‌ம்மை நிச்ச‌ய‌ம் காப்பாற்றுவார். மேலும் மேலும் ப‌ல‌ அடியார்க‌ளை ஸாயி த‌ன் கீழ் கொண்டுவ‌ர‌ வேண்டுமென‌ப் பிரார்த்திக்கிறேன்.
ஜெய் ஸாயிராம்.

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.