Monday, July 15, 2013

Shirdi Sai Baba's Grace-Experience Of Sai Devotees-Part 55.
( Translated into Tamil by Dr. Sankarkumar, USA )

ஜெய் ஸாயிராம்.
அனைவருக்கும் இனிய பாபா நாள் வாழ்த்துகள்.
பாபாவின் அருளாசியால், பல அன்பர்களின் அனுபவங்கள் நமக்குக் கிடைத்து வருகின்றன. அனுபவங்களைப் பெற்றவர்களுக்கு அமைதியை அளித்து, அவர்களது நம்பிக்கை மேலும் உறுதிப்படுகிறது. ஸாயி ஸத்சரிதத்தை திரு. ஹேமந்த்பந்த் எழுதத் துவங்கும்முன், பாபாவிடம் ஆசி பெறச் சென்றபோது, ஸாயிபாபா அவரை ஆசீர்வதித்து, எழுத அனுமதி தந்தார்.
'என்னைப் பற்றியும், எனது உபதேசங்களையும் படிக்கும் மக்களுக்கு நம்பிக்கை அதிகமாகி, அவர்கள் மகிழ்ச்சியை அடைவர்' என அப்போது அவர் கூறினார். அதேபோல, இவற்றைப் படிப்பதாலும் நிகழும். உண்மையான அன்புடனும், நேசத்துடனும், பக்தியுடனும், நம்பிக்கையுடனும் எழுதப்படும் இவ்வனுபவங்களைப் படிக்கும் வாசகர்கள், அவ்வாறு எழுதுவோரின் மெய்யுணர்வைப் புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் எழுதும் ஒவ்வொரு சொல்லும் நம்மை பாபாவின் அருகில் இட்டுச் செல்லும். ஜெய் ஸாயிராம். -- மனிஷா.

ஸாயிபாபாவின் பிரசாதம் ஆசியாகவும், 
நம்பிக்கையூட்டுவதாகவும் வந்தது!

[இந்த அடியாரின் அனுபவம் நமது குருவான ஸாயிபாபா எவ்விதம் பக்தர்களின் வேண்டுதல்களைச் செவிமடுத்து, நாம் விரும்பும் வண்ணமெல்லாம் வந்து அருள் புரிகிறார் என்பதைக் காட்டுகிறது. ஸாயி மீதான நம்பிக்கையுடன் நாம் பொறுமையாகக் காத்திருக்கவும் ஸாயி நமக்கு உணர்த்துகிறார்.- மனிஷா.]

கடந்த 3 ஆண்டுகளாக நான் ஒரு பாபா பக்தை. ஆனால், பாபாவுடனான என் உறவு எத்தகையது என எனக்குத் தெரியாது. சமீபத்தில் எனக்குக் கண் அறுவை சிகிச்சை நடந்து, அது சரியாகாமல், மீண்டும் மார்ச் மாதம் மறு அறுவை சிகிச்சையும் நடந்தது. கடந்த ஓராண்டு காலமாக நான் பாபாவை வணங்கி, வேண்டி வந்தாலும், நான் ஒரு உண்மையான பக்தைதானா? எனது பிரார்த்தனைகளால் பாபா மகிழ்வு கொள்ளுகிறாரா? அல்லது, நான் இன்னும் தீவிரமாக வேண்ட வேண்டுமா? என்றெல்லாம் என மனதில் எண்ணம் தோன்றியது. 'ஆஸ்க் ஸாயி.காம் எனும் தளத்திற்குச் சென்று கேள்விகள் கேட்டிருக்கிறேன்.
சில நாட்கள் அமைதியாக இருந்தாலும், மீண்டும், மீண்டும் இந்த எண்ணம் வந்துகொண்டே இருந்தது. எனது கண் பார்வை குணமாகவும், இந்தப் பிரச்சினை தீரவும்,பாபாவிடமிருந்து நேரடியாக ஒரு பதிலைப் பெற நான் விரும்பினேன். எனவே, கடந்த ஜூன் மாதம் 22-ம் தேதியன்று, எனது பிரார்த்தனையில் உங்களுக்கு மகிழ்ச்சி என்றால், எவரிடமிருந்தாவது, எந்தக் கோவில் பிரசாதமாவது இன்று எனக்குக் கிடைக்க வேண்டுமென பாபாவிடம் வேண்டிக் கொண்டேன்.
நானே ஆச்சரியப்படும் விதத்தில், அருகிலிருந்த பாபா கோவிலில் நிவேதனமாக அளித்த எலுமிச்சம்பழ சாதத்தை பிரசாதமாக எனது பக்க்த்து வீட்டு நண்பர் வந்து வழங்கினார். காகிநாடா சென்றிருந்த இன்னும் நண்பர் என் வீட்டுக்கு வந்து ஆஞ்சநேயர் பிரசாதமாக லட்டு ஒன்றை அளித்தார். நான் செய்யும் எளிமையான பூஜை, பிரார்த்தனைகளை பாபா ஏற்றுக் கொள்கிறார் எனும் நம்பிக்கை இப்போது என் மனதில் நன்றாகப் பதிந்து விட்டது.
என்னைப்போலவே நினைத்துக் கொண்டிருக்கும் பிற அன்பர்களுக்கு உதவும் பொருட்டு, இந்த அனுபவத்தை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
இப்படிக்கு,
பெயர் சொல்ல விரும்பாத ஒரு அடியவர்.

-----------------------

மலர்களாகவும், இனிப்பாகவும் பாபாவின் அருளாசி!
 
பாபாவிடமிருந்து எனக்குக் கிடைத்த இனிப்பான இந்த அனுபவத்தின் மூலம், மற்ற அடியார்கள் மனதிலும் நம்பிக்கை பிறக்கும் என நம்பி, இதை இங்கே இடுகிறேன்.
கடந்த ஜூலை மாதம் 4-ம் தேதியன்று நான் ஷீர்டி சென்றிருந்தேன். சென்ற முறை போனபோது, நான் கேட்டது போலவே ஆறு மலர்களைக் கொடுத்து என்னை மகிழ்த்தியது போல, இம்முறையும் ஏதாவது நிகழ வேண்டுமென எண்ணினேன். என்ன தரப் போகிறீர்கள் பாபா எனவும் மனதுக்குள் கேட்டுக் கொண்டேன்.
தரிசனம் முடிந்த சில நிமிடங்களுக்குள்ளாகவே, நான் பாபாவுக்கு எதிரிலிருக்கும் பாதையில் செல்லும்போது, அங்கே நின்றுகொண்டு வேண்டிக்கொண்டிருந்த ஒரு பெண்மணி, என்னக்கு இனிப்புகளை வழங்கினார். அது மட்டுமின்றி, இம்முறையும் 6 மலர்கள் கொண்ட ரோஜாக் கொத்து ஒன்றும் எனக்குக் கிடைக்கவே எனது மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.
ஸாயிபாபாவுக்கு வந்தனம்.
இப்படிக்கு,
ரேவதி.  
-------------------------
 
 
ஸாயிபாபா என் குழந்தைக்கு பால் கொடுத்தார்!

கடந்த வருடம் எங்களுக்கு பாபா அருளால் ஒரு அழகிய குழந்தை பிறந்தது. பிரசவம் நல்லபடியாக நடந்தது. ஸத்சரித்ரம் என் கூடவே இருந்தது! பாபாவின் திருநாமமே குழந்தை கேட்ட முதல் ஒலி!
தாய்ப்பால் கொடுப்பதில் சில பிரச்சினைகள் ஏற்பட்டன. முதல் சில தினக்களுக்கு, காம்பைப் பிடித்துக்கொள்ள முடியாமல் குழந்தை திணறியதால், அது ஒன்றுமே சாப்பிடவில்லை. செவிலியரிடம் வாதாடி பவுடர் பாலையாவது கொடுக்கும்படி செய்தேன். எனக்கு உதவுமாறு பாபாவை வேண்டிக் கொண்டேன்.
பாபாவின் அருளால், சில நாட்களிலேயே குழந்தைக்குப் பால் கொடுக்க முடிந்தது. ஆறு மாதங்கள் ஆகும்வரை தாய்ப்பால் கொடுத்தேன். இப்படி நிகழ்ந்தால், இதை இணைய தளத்தில் பகிர்ந்து கொள்வதாக பாபாவுக்கு வாக்களித்தாற்போல், இப்போது, இதை இங்கே பகிர்கிறேன்.
இப்படிக்கு,
பெயர் சொல்ல விரும்பாத ஒரு தாய்.

-----------------------------

மெய்சிலிர்க்கும் பாபாவின் ஆரத்தி தரிசனம்

மூன்றாம் வகுப்பு படிக்கும் காலத்திலிருந்தே நான் ஒரு சாயி பக்தை. அப்போது முதன் முறையாக ஷீர்டி சென்றேன். இப்போது 12-ம் வகுப்பில் படிக்கிறேன். வயதாக ஆக, எனக்கு ஸாயி மீதான பக்தி அதிகரித்தே வருகிறது. என் அருகிலேயே அமர்ந்து எனது எல்லா நேரங்களிலும் அவர் இருப்பை உணர்கிறேன். அவர் ஒருவரே எனது உண்மையான நண்பர். அவரே எனக்கு எல்லாமும்.
இதுவரை ஸாயி சத் சரிதத்தை இரண்டு முறை படித்து விட்டேன். இப்போது மூன்றாம் முறையாகப் படிக்கத் தொடங்கியிருக்கிறேன். அவரது மஹிமைகளைப் பற்றி படிக்கும்போது மனம் ஆனந்தமடைகிறது. அவரே எனக்கு சிவ பெருமான்!
எனது கனவில் அவர் வருவதில்லையே என ஒரு குறை இருந்தது. [ஸாயி சரித்டிரத்தில பல்ருக்கு கனவில் காட்சி தந்திருக்கிறாரே!] ஒருமுறை அதுவும் நிகழ்ந்தது. தனது சிலை வழியே அவர் எனக்கு பிரசாதம் தருவதுபோல் கண்டேன். அப்போதுதான் நன் ஷீர்டியிலிருந்து திரும்பியிருந்தேன்.
ஷீர்டி சென்றபோது, ஆரத்தி வைபவத்தை ஒரு முறையாவது பார்க்க வேண்டுமென வேண்டிக் கொண்டேன். சென்ற ஆண்டு போனபோது, ஐந்து முறை தரிசனம் கிடைத்தும், ஆரத்தியப் பார்க்க முடியவில்லை. இந்த முறையும் அப்படியே ஆனது. ஆனல், நாங்கள் கிளம்பும் நாளன்று, அதிர்ஷ்டவசமாக ஆரத்தி தரிசனம் காணும் வாய்ப்பு கிடைத்தது. தனது சிலையிலிருந்தபடி அவர் என்னுடன் பேசுவதுபோல் உணர்ந்தேன். நீங்கள் எனக்காகச் செய்யும் அனைத்துக்கும் எனது வந்தனம் ஸாயி! உங்களை நான் மிகவும் நேசிக்கிறேன். என் மீது கருணை காட்டி என்னை எப்போதும் ஆசீர்வதியுங்கள். வாழ்வில் உடல் நலமும், எல்லா நலனும் பெற ஆசி தாருங்கள்.
இந்த வாய்ப்பை நல்கிய மனிஷா தீதிக்கு என் பணிவன்பான வணக்கம்.
ஜெய் ஸாயிராம்.
இப்படிக்கு.
பெயர் சொல்ல விரும்பாத பக்தை

-----------------------

ஸாயிபாபா எனது கைப்பையைத் திருப்பித் தந்தார்!


ஓம் ஸாயிராம்.
2008-ல் ஸாயிபாபபாவைப் பற்றி அறிந்தேன். இப்போதெல்லாம் அவர் நினைப்பில்லாமல் ஒரு நாள் கூடக் கழிவதில்லை. என் வாழ்வில் நடந்த எத்தனையோ நிகழ்வுகளில் ஒன்றை இப்போது இங்கே சொல்லுகிறேன்.
சென்ற ஆண்டு என் கைப்பையைத் தொலைத்துவிட்டேன். அதில் பணமும், எனது அடையாள அட்டையும், மெட்ரிக் கார்டும் [இது இல்லாமல் என்னால் கல்லூரியில் தொடர முடியாது] சில கடனட்டைகளும் இருந்தன. மிகவும் கவலையுற்ற நான் பாபாவை வேண்டினேன். இது திரும்பக் கிடைத்தால், இது பற்றி இணையத்தில் எழுதுவதாக வேண்டிக் கொண்டேன். வேண்டிய பின்னர், நான் அடிக்கடி செல்லும், அருகிலிருந்த ஒரு கடைக்குச் சென்று, அங்கே தவறவிட்டேனோ என விசாரித்தேன். ஒன்றுமே பேசாமல், அந்தக் கடைக்காரர் மேஜை டிராயரைத் திறந்து அதிலிருந்து என் பையை எடுத்துக் கொடுத்தார். என்ன சொல்லுவதென்றே எனக்குத் தெரியவில்லை.

பாபாவை நான் அந்தக் கடைக்காரர் ரூபத்தில் காண்கிறேன். இது சாதாரணமாக் எல்லாருக்கும் நடக்கும் நிகழ்வாகச் சிலருக்குத் தோன்றலாம். ஆனால், எனக்கு இது ஒரு மறக்க முடியாத சம்பவம். பாபா எனக்கு நேரிடையாக வந்து உதவி செய்து ஆசி அளித்தார் என்றே நம்புகிறேன்.பாபா அனைவரையும் ஆசீர்வதிக்கட்டும்.
இப்படிக்கு,
ஸாயி பக்தை சகுந்தலா.

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.