Thursday, September 29, 2011

Do Not Break Promises and Vows to Sai Baba-Experience of Shirish

சாயிபாபாவிற்கு கொடுக்கும் 


அன்பானவர்களே,
நவராத்திரி நாள் வாழ்த்துக்கள்.  நான் அனுதினமும் பாபாவின் அனுபவங்களை பெற்ற பக்தர்களின் கதைகளை படிக்கின்றோம்.  தாயாரைப் போன்ற சாயிபாபாவின் அன்பு மகத்தானது.  நாம் என்னதான் செய்தாலும் அம்மாவாகிய அவருடைய   கருணை நமக்கு குறைவது இல்லை. அவர் நம்மை கைவிடுவதும் இல்லை.
கீழே சாயி  பாபாவின் பக்தர் சீரீஷின் அனுபவங்களை தந்து உள்ளேன். அவர் தனக்கு சாயி பாபாவுடன் ஏற்பட  அனுபவங்களை முன்னரும் எழுதி உள்ளார்.
சாயி சரித்திரத்தில் பாபாவிற்கு  பக்தர்கள் கொடுக்கும்  வாக்குறுதி மீறப்படக்கூடாது  என்பது பற்றி நிறையவே எழுதப்பட்டு உள்ளது. பாபாவிற்கு அவருடைய பக்தர்கள் கொடுத்த வாக்குறுதி பற்றிய அனுபவங்களை கீழே உள்ள கதைகளில் படிக்கலாம்.நாம் பாபாவுக்கு கொடுத்த வாக்குறுதியை மறந்துவிட்டாலும் அவர் அதை நினைவூட்டி அதன்படி நடக்க வழிவகுப்பார்.
சீரீஷின் அனுபவம்
நான் என்னுடைய அனுபவத்தைக் கூறுமுன் சில உண்மையைக் கூற விரும்புகின்றேன் .
  1. பாபாவிற்கு கொடுக்கும் எந்த வாக்குறுதியையும் மீறாதீர்கள்.அது நமக்கு  தீய கர்மாவை தரும்.  அவர் நம்மை அதற்காக தண்டிக்க மாட்டார். ஆனால் அந்த கர்மாவினால் நாம் நிச்சயமாக அவதிப்படுவோம் என்றாலும் அவர் தக்க சமயத்தில் வந்து நம்மை அந்த கர்மாவில் இருந்தும் காப்பாற்றுவார்.
  2. சாயி சரித்திரத்தில் கூறப்பட்டு உள்ளதை எந்த விதத்திலாவது கேட்டு அறிந்து கொண்டால் மன நிம்மதி கிடைக்கும்.
  3. நாம் எப்போதாவது மன அமைதி இன்றி தவித்தால் அதற்குக் காரணம் நான் உண்மையாக இருக்கவில்லை, நம்பிக்கையை அவரிடம் இழந்து விட்டோம் என்று அர்த்தம்.
இனி படியுங்கள். நான் ஒருமுறை பாபாவிடம் இனி நான் மது அருந்த மாட்டேன் என வாக்குறுதி தந்தேன்.

நான் வாக்குறுதியை முதல் முறையாக மீறியபோது :- எனக்கு அலுவலகத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகள் தோன்றியது. என்னை எனக்குப் பிடிக்காத இடத்துக்கு மாற்றிவிட்டார்கள். வேலையை விட வேண்டியதாயிற்று.
வாக்குறுதியை மீறிய  என்னை  பாபா கைவிடவில்லை :-  நான் அந்த தவறை செய்து விட்டு பாபாவிடமே வருந்தியதினால் பாபா என்னை கைவிடவில்லை. வேலையை விட்டுவிட்ட எனக்கு ஒரே வாரத்தில் வேறு வேலை வாங்கித் தந்துவிட்டார். நான் செய்த தவறை உணர வைத்தார்.

நான் வாக்குறுதியை இரண்டாம்  முறையாக மீறியபோது :-  
நான் இரண்டாம் முறையும் அதே தவறை செய்ததினால் அம்மை நோய் வந்து பெரிதும் அவஸ்தைப்பட்டேன். 
வாக்குறுதியை மீறிய  என்னை  பாபா கைவிடவில்லை :-
அந்த நோயின் தன்மை அதிகம் ஆகாமல் நான் விரைவில் நலமடையும் வகையில் பாபா என்னை காப்பாற்றினார்.

நான் வாக்குறுதியை மூன்றாம் முறையாக மீறியபோது:-
மூன்றாம் முறையும் பாபா தினத்தன்று நான் அவருக்கு தந்த வாக்குறுதியை மீறிக் குடித்து கர்மாவை வாங்கிக் கொண்டேன். ஒரு சில நிமிட சபலத்தினால் என்னை மீறி அது நடந்தது.
வாக்குறுதியை மீறிய  என்னை  பாபா கைவிடவில்லை :-
நான் முன்னரே கூறியது போல நாம் தரும் வாக்குறுதியை மீறிவிட்டு நாமே நமக்கு தீய கர்மாவை பெற்றுக் கொள்கிறோம். சாயிச்சரித்திரத்தில் கூறி உள்ளது போல நாம் பாபா நமக்கு அனைத்தையும் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கின்றோம். ஆனால் நமக்கு என வரும்போது நாம் அவருக்கு கொடுக்கும் நம்முடைய வார்த்தைகளை காப்பாற்றுவது இல்லை. நான் வாக்குறுதியை மீரியவுடன் எனக்கு பலவிதமான உடல் உபாதைகள் வந்தன. மன அமைதியை இழந்தேன். மருத்துவமனை வீடு என ஆகிவிட்ட என்னுடைய நிலைமையினால் நான் பாபாவிற்கு செய்து விட்ட துரோகத்தை எண்ணி வருந்தினேன். வியாதி தொடர்ந்தது.
ஆனால் ஒரு வியாழன் கிழமை நான் சோதனைகளை செய்துகொள்ள மருத்துவ மனைக்கு சென்றேன் . அனைத்தும் நல்லபடியாகவே இருந்தது. ஆனால் மறுநாள் என்னொரு சோதனை செய்ய வேண்டி இருந்தது. நான் உள்ளூர பயந்தேன்.  ஆகவே சோதனை செய்து கொள்ள உள்ளே செல்லும் முன் சாயி சரித்திரத்தை கையில்  வைத்துக் கொண்டு அதை படித்தேன். என்ன ஆச்சர்யம், அந்த சோதனையிலும் நான் நலமடைந்து உள்ளதாக கூறினார்கள். என் மன வேதனை மறைந்தது.  விரைவில் நல்ல குணம் அடைந்தேன். பாபாவின் ஆலயத்துக்கு சென்று அவருக்கு மனமார்ந்த நன்றியைக்    கூறினேன்.
மீண்டும் நானா பாபாவிருக்கு சத்தியம் செய்து தந்தேன். இனி மது அருந்த மாட்டேன், வேறு தீய செயல்களையும் செய்ய மாட்டேன்.

இதில் இருந்து நான் கற்ற பாடம் என்ன தெரியுமா?
  • பாபா இருக்கும்போது நமக்கு ஏன் பயம் வர வேண்டும்
  • பாபாவிற்கு கொடுக்கும் வாக்குறுதிகளை மீறாதீர்கள்
  • பாபாவிற்கு பிடிக்காத தீய செயல்களை செய்யாதீர்கள்.
  • நம்முடைய பெற்றோர்களும் நமக்கு சாயிபாபாவை  போன்றவர்களே
  • சாயி சரித்திரம் புத்தகம் அல்ல. அது சாயிபாபாவின் ரூபமே
  • நம்முடைய மனது எத்தனை அலை பாய்ந்தாலும் இதயபூர்வமாக பாபாவிடம் நம்பிக்கை வையுங்கள்
பாபாவிற்கு கோடி கோடி நமஸ்காரங்கள்
சீரீஷ்

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.