First Shirdi Sai Baba Temple In Ikebukuro-Tokoyo-Japan .
அன்பானவர்களே
அனிவருக்கும் சாயிராம்
சில நாட்களுக்கு முன்னால் டோக்கியோவில் சாயிபாபாவின் ஒரு ஆலயம் பற்றிக் கேள்விப்பட்டோம். ஆகவே அந்த ஆலயம் குறித்த விவரங்களை ஆலய அதிகாரிகளிடம் பெற்று அதை கீழே தந்து உள்ளேன். சாயிபாபா மீது பக்தி கொண்டவர்கள் டோக்யோவிற்குச் சென்றால் அந்த ஆலயத்துக்கு செல்லலாம். அங்குள்ள சொந்தக்காரர்கள் மற்றும் நண்பர்களுக்கும் இது பற்றி கூறலாம். கோயாடகா அயூச்சி மற்றும் காக அயூச்சிக்கு மனமார்ந்த நன்றி. அவர்கள் கொடுத்துள்ள தகவல்களை கீழே தந்து உள்ளேன்.
சாயிராம்மனிஷா
போங்கறேன் சீரடி சாயிபாபா ஆலயம், இகேபுகுரோ -டோக்யோ, ஜப்பான் என்பதே ஜப்பானின் முதலாவது சாயிபாபாவின் ஆலயம்.
''போங்கறேன்'' என்றால் தாமரையில் அமர்ந்து உள்ள பிரும்மன் என்று அர்த்தம். 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதியன்று இந்த ஆலயத்தில் 'நெருப்பு பூஜை' எனப்படும் யாகம் செய்து பஞ்சாக்ஷரமந்திர உச்சாடனங்கள் செய்து சாயிபாபாவின் முழு உருவச் சிலை ஸ்தாபிக்கப்பட்டது .
''போங்கறேன்'' என்றால் தாமரையில் அமர்ந்து உள்ள பிரும்மன் என்று அர்த்தம். 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதியன்று இந்த ஆலயத்தில் 'நெருப்பு பூஜை' எனப்படும் யாகம் செய்து பஞ்சாக்ஷரமந்திர உச்சாடனங்கள் செய்து சாயிபாபாவின் முழு உருவச் சிலை ஸ்தாபிக்கப்பட்டது .
இந்த சிலை 'ஹ்யோகோ பிரீபெக்சர் கோபே சிட்டி மைகேஜ் டவுன்' எனும் இடத்தில் தோண்டி எடுக்கப்பட்ட G633 பிரிவின் கீழ் வரும் வெள்ளை நிற கிரனைட் கல்லில் செதுக்கப்பட்டு உள்ளது. இதன் உயரம் 190 சென்டிமீட்டர் மற்றும் எடை மூன்று டன் என்பது. இதைத் தவிர மிகப் பெரிய சிவலிங்கம், தெய்வீக அன்னை மற்றும் காலச்சக்ரா போன்றவையும் ஸ்தாபிக்கப்பட்டு உள்ளன. ஆலய மண்டபத்தின் மீது யந்திரம் ஒன்றும் ஸ்தாபிக்கப்பட்டு உள்ளது.
கணவன் மனைவியான நாங்கள் இருவருமே சிறு வயது முதலிலேயே கடவுளிடம் பேசுவது உண்டு. முற் பிறவியில் நாங்க இருவரும் எகிப்திய நாட்டில் பிறந்தவர்கள் என்றாலும் இப்போது ஒரே காலகட்டத்தில், ஒரே நேரத்தில் இரு இடங்களில் பிறந்து மனம் ஒன்றாகி மணம் செய்து கொண்டு உள்ளோம். அனைத்திலும் ஒரே கருத்து உள்ள நாங்கள் இருவருமே ஒரே குருவிடம் இந்தியாவில் ஆன்மீகப் பாடம் பயின்றோம். அது மிக அற்புதமான அனுபவம். ஆன்மீக பாடம் பயின்று ஒரு பெரிய புத்த மத சதுகுருவின் தீட்ஷை பெற்றோம். அந்த சத்குருவே எங்களுக்கு சாயிபாபாவுடன் தொடர்ப்பை ஏற்படுத்தி கொடுத்தார். சீரடி சாயிபாபா வித்தியாசமானவர். நாங்கள் சந்தேகம் கேட்டால் கூறுவார் ''மேலும் சிறிது யோசனை செய் ''. ஆனால் விநோதமாக எங்கள் கேள்விகளுக்கு எங்கள் மனதில் இருந்தே விடைகளும் கிடைத்தன என்பதின் காரணம் அவர் எங்களுக்கு கூறி இருந்த அறிவுரையே. நாங்கள் வேண்டிய அனைத்தையும் நாங்கள் நினைப்பதற்கு முன்னரே அவர் நிச்சயமாக நிறைவேற்றித் தந்துள்ளார். உணவு மற்றும் மற்ற அனைத்து வசதிகளும் குறைவில்லாமல் இருக்க சாயிபாபா எங்களுக்கு அருள் புரிந்துள்ளார். எங்களுடைய ஆசானாக இருந்தவாறு வழி காட்டி வந்துள்ளார்.
ஒரு நாள் சாயிபாபா எங்களிடம் கூறினார். '' ஆன்மீக தாக்கத்தை அதிகரிக்க உங்களுடைய நாட்டில் ஏதாவது ஒரு இடத்தில் ஒரு ஆலயத்தைக் கட்டி அங்கு மனிதர்கள் சென்று வணங்க ஏற்பாடு செய்யுங்கள்''.
நாங்கள் கேட்டோம் ''உங்களைத் தவிர வேறு கடவுட்களின் சிலையும் வைக்கலாமா''.
அவர் கூறினார் '' மேலான எந்தக் கடவுளுக்கும் அந்த பெருமையை தரலாம்''.
''எனக்கு மட்டும் ஒரு ஆலயம் அமைக்கவும்'' என அவர் கூறி இருந்தால் நாங்கள் நிச்சயமாக அதை ஏற்று இருக்க மாட்டோம்'' என நினைக்கின்றோம்.
இந்த ஆலயத்தில் :-
1. இரண்டு மீட்டர் உயர சாயி பாபாவின் சிலை ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. இதை ஜப்பானை சேர்ந்த சிறந்த சிற்பி ஒருவர் செய்து உள்ளார்.
2. ஒரு மீட்டர் உயர ஆண்-பெண் தத்துவத்தைக் காட்டும் விசேஷமான சிவலிங்கம் வடிவமைக்கப்பட்டு வைக்கப்பட்டு உள்ளது.
3. ஒரு மீட்டர் உயர இந்திய கண்டத்தில் வாழ்ந்த புத்தரின் கடைசி அவதார சிலை மற்றும் பிற கடவுட்களின் சிலைகளும் வைக்கப்பட்டு உள்ளன.
4. அவற்றை தவிர வேறு பல சக்தி தேவதைகள் மற்றும் தெய்வ சிலைகளையும் வைக்குமாறு பாபாவே எங்களிடம் கூறினார்.
5. கிருஸ்துவ, முஸ்லிம் மற்றும் புத்தமத பிரிவினர்களும் மத நல்லிணக்கத்துடன் இங்கு வந்து வணங்கும் வகைக்கான வகையில் அவர்களின் கடவுட்களையும் வைக்க ஏற்பாடு செய்தோம்.
6.ஜப்பானில் உள்ளவர்களுக்காக புத்தரின் புனித எலும்பை கொண்ட புத்த விஹாராவையும் அமைத்தோம்.
சீரடி சாயிபாபா கூறியதைப் போல ஆன்மீக மேன்மை அடைய ஒரு மார்கமாக இந்த ஆலயத்தை அமைத்தோம். போங்கறேன் என்பது தாமரை மலர் போன்ற ஆன்மீக பிரும்ம நிலையை அடைய வைக்கும் பள்ளிக்கூடமே. எந்த பிரிவையும் சார்ந்து இல்லாமல் அனைத்து பிரிவு மக்களுக்கும் ஆன்மீக மேம்பாடு கிடைக்க அமைத்துள்ளதினால் இதற்கு எங்களை பண்டிதர்களாக அங்கீகரித்து உள்ளார்கள். ஆகா இந்த இடத்தில் இருந்தவாறு இந்த தேசம் முழுவதிலும் சீரடி சாயிபாபாவின் பெருமை மற்றும் மகிமையை பரப்ப எங்களுக்கு அரசாங்க அனுமதி கிடைத்து உள்ளது. இதற்கும் பாபாவே ஏற்பாடு செய்து தந்து உள்ளார் என்று நினைக்கின்றோம்.
ஆகவே, எங்களுடைய இந்த ஆலயத்தை வெளிநாட்டு ஆலயம் எனக் கருதாமல் இதை இந்திய சமூகத்தினர் ஏற்கும் வகையில் சீரடி சாயிபாபாவின் அங்கீகரிக்கப்பட்ட ஆலயமாக அங்கீகரிக்க சீரடி சமஸ்தானம் ஏற்பாடு செய்ய வேண்டும். இதுவும் பாபாவின் விருப்பமே.
சாயிராம்ஆலய விவரம்
Bongaren, Religious Organization Guru and
President & CEO, DivineSoul Inc.
Kiyotaka Aiuchi. And Kaco Aiuchi (TwinSoul Couple)
Temple Timings: 13:00-16:00 JST & 18:00-21:00 JST
ஆலயத்து படங்கள்
சிலை வைக்கப்படும் முன் நடந்த நெருப்பு பூஜை
தொடர்பு கொள்ள:-
Contact:Kiyotaka Aiuchi & Kaco Aiuchi.
"Bongaren."
Religious Organization Guru & "DivineSoul Inc."
President & CEO.
Mail: info@bonga.jp
அலுவலக முகவரி
〒171-0014 Tokyo, Toshima-ku, Ikebukuro,
Japan 2-68-10-௩௦
"Bongaren."
Religious Organization Guru & "DivineSoul Inc."
President & CEO.
Mail: info@bonga.jp
அலுவலக முகவரி
〒171-0014 Tokyo, Toshima-ku, Ikebukuro,
Japan 2-68-10-௩௦
ஆலய விலாசம்
"BONGAREN TEMPLE"
2-60-6 1F Ikebukuro,
Toshima-ku,
Tokyo 〒171-0014.
Japan.
Website: http://divinesoul.jp/
( Contents Translated into Tamil by Santhipriya )
Loading
0 comments:
Post a Comment