Wednesday, November 30, 2011

Sai Helps Everyone And Every Time With Different Miracles-Sai Devotees Experience.


சாயிபாபா அனைவருக்கும் பல மகிமைகளைக்
காட்டி அருள் புரிகின்றார் 
அன்பானவர்களே
அனைவருக்கும் சாயி தின வாழ்த்துக்கள்
பக்தர்களிடம் இருந்து வரும் சாயிபாபாவின் அனுபவங்களைப் படிக்கையில் அவை எனக்கு மட்டும் வழிகாட்டியாக இல்லை, அனைவருக்குமே பலனுள்ளதாக இருக்கும். அவர் மீதான பக்தியை அதிகரிக்கும். நாம் எந்த அளவு பாபாவிடம் அன்பு செலுத்துகிறோமோ அவர் அதைவிட அதிகமாகவே நம்முடன் இருப்பதைக் காண முடியும்.
மனிஷா


அன்புள்ள மனிஷா சகோதரி ,
நான் பாபாவைப் பற்றி எழுதுவதாக வேண்டிக் கொண்டதினால் இதை அனுப்பி உள்ளேன். மெல்போர்ன் நகரில் உள்ள பாபாவின் ஆலயத்தின் படம் கீழே உள்ளது.
ஆதிசேஷா நாகம் கூட பாபாவைப் பற்றி புகழ முடியாத அளவில் அவர் பெருமை இருக்கும் போது என்னால் எப்படி அவரைப் புகழ முடியும்? நான் இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நாட்டின் பிரஜையாக குடி உள்ளேன். 1984 ஆம் ஆண்டு நான் மும்பை மற்றும் கல்கத்தாவில் இருந்தபோது பாபாவைப் பற்றி அறிந்து கொண்டேன். ஆனால் நான் அப்போதெல்லாம் கெட்டவனாக இருந்ததினால் அவரை முழுமையாக அறிந்து கொள்ள முடியவில்லை. நான் பிராமண சமூகத்தில் பிறந்தவன் என்றாலும் நான் செய்த தீய காரியங்களை வேறு எவரும் செய்து இருக்க முடியாது.
1997 ஆண்டில் எனக்கு திருமணம் ஆனவுடன் என்னுடைய மச்சினியே எனக்கு பாபாவைப் பற்றிக் கூறினாள். அதுதான் என்னுடைய வாழ்கையில் 1998 ஆம் ஆண்டு முதல் திருப்பு முனையாக அமைந்தது . என்னுடைய மனைவி ஒரு நர்ஸ். என்னுடைய மூன்று வயதுக் குழந்தையுடன் சிங்கபூருக்கு வேலைக்கு செல்ல வேண்டி இருந்தது. எங்களுடைய பொருளாதார நெருக்கடியே அதன் காரணம். அப்போது நான் சென்னையில் இருந்தேன். நன்கு பாடுவேன்.
நான் சாயிபாபாவுக்கு தினமும் பூஜை செய்யத் துவங்கினேன். சென்னை மயிலாப்பூரில் இருந்த சாயி ஆலயத்திற்கு தினமும் சென்றேன். விடியற்காலை அந்த ஆலயத்துக்கு செல்லும் முதல் ஆளாகவே நான் இருப்பேன். மகாபிஷேகத்துக்கு தவறாமல் செல்வேன். நான் சிங்கப்பூரில் வேலைக்கு முயற்சித்தேன். ஆனால் கிடைக்கவில்லை.
மயிலாப்பூர் ஆலயத்தில் வியாழன் கிழமைகளில் கூட்டம் நிறைந்து வழியும். நாங்கள் வரிசையில் நின்று பாபாவை தரிசிப்போம். ஆனால் சில நிமிடமே அங்கு நிற்க அனுமதிப்பார்கள். ஆகவே எனக்கு மன வருத்தமாக இருந்தது. அப்போது கௌரிவாக்கத்தில் உள்ள பாபாவின் ஆலயத்தைப் பற்றி என்னுடைய நண்பன் கூறினான். அங்கு சென்றால் பாபாவை தொட்டு வணங்கலாம் என்றான். நானும் அங்கு சென்றபோது எனக்கு வினோதமான மனநிலை ஏற்பட்டது. நான் என்னுடைய பெற்றோர் வீட்டிற்குள் செல்வது போல இருந்தது. அந்த ஆலயத்தை நிறுவியவர்-அப்பா என அவரை அழைப்பார்கள்-  என்னை மறுநாளும் அபிஷேகத்துக்கு வருமாறு கூறினார்.
அப்போது தற்காப்பை முன்னிட்டு நாங்கள் பஸ்சில்தான் பயணம் செய்வோம். விடியற்காலை ஆறரை மணிக்கு அபிஷேகம் என்பதினால் ஆறு மணிக்காவது அங்கு இருக்க வேண்டும். நான் ஆதம்பாக்கத்தில் இருந்ததினால் பஸ்ஸில் சென்றேன். அந்த ஆலயத்தை நிருவியவரை அப்பா என்றே அழைப்பார்கள். அவர் என்னை பாபாவிற்கு குளிப்பட்டுமாறு கூறினார். ஷாம்பூவினால் பாபாவை குளிப்பாட்டினேன். மனதுக்கு ஆனந்தமாக இருந்தது . பாபாவின் உடம்பையை அலம்பியது போன்ற உணர்வே இருந்தது. அது முதல் என்னை சாயிபாபாவே முழுமையாக ஆக்கிரமித்து இருந்தார். அந்த ஆலயம் எனக்கு மிகவும் பிடித்து இருந்ததினால் தினமும் செல்ல ஆரம்பித்தேன். எனக்கும் சிங்கப்பூரில் வேலைக் கிடைக்க வில்லை என்பதினால் என்னுடைய மனைவி ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரில் வேலைக்கு முயற்சி செய்து கொண்டு இருந்தாள்.
அதற்கு இடையில் 2001 ஆம் ஆண்டு துவங்கியபோது ஜாதகப்படி என் உயிருக்கு ஆபத்து என்பதினால் பத்திரமாக இருக்கும்படி என்னுடைய சகோதரியும், சகோதரரும் கூறினார்கள்.
ஆனால் அவற்றை மீறி நான் சிதம்பரத்துக்கு செல்ல வேண்டி இருந்தது. ரயிலில் ஏறியபோது என்னுடன் ஒரு சன்யாசி போல தோற்றம் தந்தவரும் ஏறினார். அவர் கழுத்தில் சாயிபாபா படம் போட்ட பென்டன்ட் இருந்தது. நான் சாயியே எனக்கு துணைக்கு வருவதைப் போல உணர்ந்தேன். நான் இரவு படுக்கப் போகும் முன் என்னை தயவு செய்து நான் இறங்க வேண்டிய ஸ்டேஷன் வந்ததும் எழுப்பி விடுமாறு அவரிடம் கேட்டுக் கொண்டேன். விடியற்காலை மூன்று மணிக்கு நான் இறங்க வேண்டிய இடம் வந்தது. எழுந்தேன். அந்த பெரியவரைக் காணவில்லை எனத் தேடியபோது மற்றவர்கள் அப்படி ஒருவர் இந்த ரயிலில் வரவே இல்லை என்றார்கள். என் மனதுக்கு தெரிந்தது, சாயிபாபாவே என்னுடன் துணைக்கு வந்து உள்ளார் என்பது. ஜாதகத்தை நம்பாமல் தன்னை சரண் அடையுமாறு சாயி சரித்திரத்தில் எழுதி இருந்தது நினைவுக்கு வந்தது.
அடுத்து என் மனைவியிடம் இருந்து தகவல் வந்தது. அவளுக்கு மெல்போர்னில் வேலை கிடைத்து விட்டதினால் எங்களுக்கும் சேர்த்து விண்ணப்பிக்க விண்ணப்பிக்க வேண்டும். 2003 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அவள் வேலைக்கு போய் சேர வேண்டும். எங்களுக்கு குடும்ப விசா கிடைக்க 6 அல்லது & மாதம் ஆகும். ஆனால் முதலிலேயே விண்ணப்பிக்க வேண்டும். என் மனைவி என்னுடைய மகனை என்னிடம் விட்டு விட்டு செல்ல சென்னைக்கு வந்தாள். நாங்கள் விசாவிற்கு விண்ணப்பிக்க செய்ய மும்பைக்கு போய் விட்டு அங்கிருந்த சீரடி சென்று வர நினைத்தோம். 

நாங்கள் மும்பை சென்று இருந்தபோது பேய் காற்று, பலத்த மழை. மும்பை முலுண்ட் ரயில் நிலையத்தில் இருந்து செல்ல முடியவில்லை. என்ன செய்வது எனக் குழம்பிக்கொண்டு இருக்கையில் ஒரு டாஸ்சி டிரைவர் எங்களிடம் தானாகவே வந்து எங்களை ஏற்றிக் கொண்டு இருபத்தி ஐந்தே நிமிடத்தில் விக்டோரியா டெர்மினஸ் ரயில் நிலையத்தில் இறக்கி விட்டான். மீட்டர் தொகைக்கு மேல் எதையும் பெற்றுக் கொள்ளவில்லை. எங்கள் வலையை முடித்துக் கொண்டு சீரடிக்கு செல்ல ரயிலில் முன்பதிவு செய்து கொண்டோம். மழைக் கொட்டிக் கொண்டு இருந்தபோதிலும் அருகில் இருந்த சாயி ஆலயத்தில் பெரும் திரளான மக்கள் பஜனை செய்து கொண்டு ஆரத்தியை அனுபவித்துக் கொண்டு இருந்ததைக் கண்டு வியந்தேன். ஒன்பதாவது நாள் சீரடிப் பயணங்களை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினோம். என்ன அதிசயம், 7 மாதம் ஆகும் என்று கூறிய தூதரகத்தில் இருந்து அழைப்பு வந்தது. ஒன்பதாம் நாளே எங்களுக்கு விசாவும் கிடைத்து விட்டது. அது சாயிபாபாவின் அருள்தான். அடுத்த 20 நாளில் நாங்கள் சென்னையில் இருந்து மெல்போர்ன் சென்றோம். நாங்கள் சிங்கப்பூர் விமானத்தில் கிளம்பினோம். அதில் இருந்த தற்காப்பு விதிமுறைகளைப் பற்றிய புத்தகத்தை எடுத்துப் பிரித்தால் முதலில் நான் திறந்த பக்கத்தில் சாயிபாபா படம் போட்ட விளம்பரம் இருந்தது. நாங்கள் மனம் நெகிழ்ந்து போனோம். சாயிபாபா எங்களுடன் துணைக்கு உள்ளார் என்பதை உணர்ந்தோம்.
நாங்கள் மெல்போர்ன்னுக்குப் போய் 7 மாதம் ஆகியது. அங்கு சாயிபாபா ஆலயமே இல்லையே என மனம் வருந்தினேன். அவர் ஆலயத்துக்கு செல்லாமல் இருந்தது ஒரு வெறுமையாக இருந்தது. என்ன அதிசயம். ஒருநாள் எங்கள் வீட்டுக்கு வந்த ப்ரோகிதர் தான் மகா கும்பிபிஷேகம் செய்வதற்கு அங்கு வந்துள்ளதாகக் கூறினார். எந்த இடம் என்று கேட்டபோது சாயிபாபாவின் ஆலய விலாசத்தைக் கூறினார். நாங்கள் சாயியின் கிருபையை எண்ணி அதிசயித்தோம்.


எனக்கு ஐந்த வருட காண்டிராக்டில் ஒரு வேலையும் அங்கு கிடைத்தது. சில காரணத்தினால் அந்த வேலையை விட வேண்டி இருந்தது, ஆனால் இரண்டே  நாளில் மீண்டும் வேறு வேலை கிடைத்து விட்டது.
நான் வேறு வேலையை தேடத் துவங்கினேன். அப்போது ஒன்பது வார சாயி விரதத்தை படிக்குமாறு கூறியதினால் உங்கள் இணைய தளத்தில் தேடினேன். கிடைக்கவில்லை. ஆனால் துபாய் இணையத் தளம் ஒன்றின் மூலம் அது கிடைத்தது. அதைப் படிக்கத் துவங்கிய இரண்டாவது வாரமே ஒரு பகுதிநேர வேலைக் கிடைத்தது. நான் சாயி விரத்தை படித்து முடித்தேன். திடீர் என என்னுடைய முதலாளி என்னைக் கூப்பிட்டு எனக்கு நிரந்தர வேலை தர சம்மதித்ததும் அல்லாமல் நான் நினைத்த சம்பளத்தை விட அதிக சம்பளத்தில் வேலை தந்தார்.
அடுத்து என்னுடைய 13 வயதான பையனுக்கு பள்ளியில் இடம் கிடக்க நல்ல பள்ளியை தேடினோம். அதில் சேர தேர்வு எழுத வேண்டி வந்தது. பாபாவையே நம்பிக் கொண்டு நாங்கள் தைரியமாக பையனை தயார் செய்தோம். அந்த பள்ளியில் தேர்வு விகிதம் 99.99 என இருந்ததினால் இடம் கிடைப்பது கடினம். அவனால் அந்த தேர்வுக்கு ஏற்ற வகையில் படிக்க முடியவில்லை. ஆனாலும் முயற்சிகள் செய்து கொண்டு இருந்தோம். ஒருநாள் அவன் என்னுடன் சாயி விரத பூஜையில் கலந்து கொண்டான். 53 மாணவர்கள் பரிட்ஷை எழுத வந்தார்கள். நான் என் பையனிடம் சாயியை நினத்தவன்னமே இருக்குமாறு கூறினோம். பரிட்ஷை எழுதினான். 8 வாரங்களுக்குப் பிறகு பரிட்ஷை முடிவை அறிவித்தார்கள். என் மகன் மிக நல்ல மார்க் எடுத்து உயர் இடத்தில் இருந்தான். அது சாயிபாபாவின் கருணைதான்.
(Into Tamil by Santhipriya)

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.