Shirdi Sai Baba's Grace-Experience Of Sai Devotees-Part 24
அனைவருக்கும் சாயிராம்
நான் என்னுடைய சில அனுபவங்களை அனைவருடனும் பங்கு கொள்ள விரும்புகிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக, முக்கியமாக கடந்த ஆறு மாதங்களில் என்னுடைய வாழ்கையில் பல முக்கியமான நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நான் 2002 ஆம் ஆண்டு முதல் பாபாவின் பக்தர். ஏழரை நட்டு சனியின் தொல்லையினால் கடந்த 2-3 ஆண்டுகளாக எனக்கு பல பிரச்சனைகள் தோன்றிக் கொண்டே இருந்தன.
2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நான் என்னுடைய வேலையை இழந்தேன் என்றாலும் 2009 ஆம் ஆண்டு மீண்டும் வேக்ளைக் கிடைத்தது. ஆனால் சனியின் தொல்லையினால் ஒரே மாதத்தில் அந்த வேலையும் எழக்க வேண்டி இருந்தது. என் மீது சொந்த லாபத்துக்காக கம்பெனி ஆவணங்களை பயன்படுத்திக் கொண்டதாக வழக்கு பதிவு செய்ய முடிவு செய்தார்கள். நான் தவறு செய்தது உண்மைதான், ஆனால் பாபா என்னை அதில் இருந்து காப்பாற்றினார். ஒரே மணி நேரத்தில் அந்த கம்பனியின் வழக்கு ஆலோசகர் தன் முடிவை மாற்றிக் கொண்டு என் மீதான வழக்கை பதிவு செய்ய வேண்டாம் என முடிவு செய்தார். வேலை இல்லாவிடிலும் நான் சங்கடத்தில் மாட்டிக் கொள்ள இருந்த நிலையில் இருந்து என்னை பாபா காப்பற்றியதினால் மகிழ்ச்சி அடைந்தேன்.
காலம் ஓடியது . என்னுடைய ஒன்று விட்ட சகோதரன் மூலம் 2010 ஆம் ஆண்டு நான் முதன் முதலாக சாயி சரித்திரத்தைப் பற்றிக் கேள்விப் பட்டேன். அதை நான் மூன்று முறை படித்து முடித்ததும் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படாமலேயே, என் மனதுக்கு பிடித்த வேலை எனக்கு கிடைத்தது. அந்த வேலைக் கிடைத்த அடுத்த ஒரே மாதத்தில் எனக்கு வெஸ்ட் கோஸ்ட் பகுதியில் வேலைக் கிடைத்தது. இரண்டு மாத தற்காலிக வேலை கிடைத்து அதில் சென்று சேர்ந்த நான் இரண்டே மாதத்தில் அங்கேயே நிரந்தர பணியில் அமர்த்தப்பட்டேன். ஆறு மாதம் மகிழ்ச்சியுடன் அங்கு வேலை செய்தேன்.
ஐந்து மாதம் ஆனப்போது திடீர் என என்னுடைய உயர் அதிகாரி என்னை அழைத்து என் வேலை அவருக்கு திருப்பதி தரவில்லை என்றும், ஆகவே ஒரே மாதத்தில் நான் குறைகளை களைந்து கொள்ள வேண்டும் எனவும் கண்டிப்பாக கூறினாள். நான் எத்தனைதான் கடுமையாக வேலை செய்தும் அவள் திருப்தி அடையவில்லை. மீண்டும் வேலையை இழந்தேன்.
நான் பாபாவிடம் மனதாரக் கேட்டேன், இதே அதிகாரிதான் என்னை தேர்வுக்கே அழைக்காமல் வேலை தந்தாள், அவளே மீண்டும் என்னை விளக்கி விட்டால். என்ன செய்வது? .ஒன்றும் புரியாமல் மீண்டும் இரண்டு முறை சாயி சரித்திரத்தைப் படித்தேன். எனக்கு நாட்களில் மீண்டும் வேறு வேலைக் கிடைக்க வேண்டும் என வேண்டினேன். அதிசயமாக அடுத்த 10 நாட்களிலேயே வேறு வேலைக் கிடைத்தது. எனக்கு கிடைத்த வேலை நான் தங்கி இருந்த இடத்தில் இருந்து ஐந்து மைல் தூரத்தில் இருந்தது. நான் அந்த அலுவலகத்தின் அருகில் இருந்த பழைய இடத்துக்கே வாடகைக்கு சென்றேன். ஆனால் சனியின் தொல்லை முடியவில்லை. அடுத்த மூன்றே மாதத்தில் விசா முடிய இருந்ததினால் மீண்டும் வேலையை இழந்தேன். நான் வெளியேற வேண்டிய நிலைமை. நான் வெஸ்ட் கோஸ்ட்டில் இருந்து இருந்தால் அந்த பிரச்சனை ஏற்பட்டு இருக்காது.
பாபா எனக்கு வேறு எதையோ செய்ய நினைத்து இருந்தார் போலும். அடுத்த ஆறு மாதத்தில் மீண்டும் வேறு வேலைக் கிடைத்தது. என்னை அமைதியுடன் இருந்து பொறுமைக் காக்குமாறு அவர் அறிவுறுத்தினார். எனக்கு அந்த காலத்தில் கிடைக்கும் அனுபவங்களை பின்னால் எழுதுகிறேன்.
நான் பாபாவையே தினமும் பிரார்த்தனை செய்து கொண்டு அவருடைய சேவகனாகவே இருக்கின்றேன். என்னோன்றைக் கூற மறந்துவிட்டேன். கடந்த ஆறு மாதமாக நான் ஒரு சாயிபாபாவின் ஆலயத்தில் முழு நேர ஊழியனாக மாறி விட்டேன். முழு சைவ உணவையே அருந்துபவனாக மாறி முட்டைகளை சாப்பிடுவதையும் நிறுத்தி விட்டேன். என்னுடைய அனைத்து கெட்ட பழக்கங்களும் முடிவுக்கு வந்துவிட்டன. என் நண்பர்களே அதைக் கண்டு ஆச்சர்யப்படும் அளவுக்கு நான் மாறி உள்ளேன். நான் என்னுடைய நண்பர்காளையும் என்னுடைய பெற்றோர்களுக்கும் கூட வாழ்கையின் தத்துவம் என்ன என்பதைக் கூறத் துவங்கி உள்ளேன்.
ஓம் சாயிராம் 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நான் என்னுடைய வேலையை இழந்தேன் என்றாலும் 2009 ஆம் ஆண்டு மீண்டும் வேக்ளைக் கிடைத்தது. ஆனால் சனியின் தொல்லையினால் ஒரே மாதத்தில் அந்த வேலையும் எழக்க வேண்டி இருந்தது. என் மீது சொந்த லாபத்துக்காக கம்பெனி ஆவணங்களை பயன்படுத்திக் கொண்டதாக வழக்கு பதிவு செய்ய முடிவு செய்தார்கள். நான் தவறு செய்தது உண்மைதான், ஆனால் பாபா என்னை அதில் இருந்து காப்பாற்றினார். ஒரே மணி நேரத்தில் அந்த கம்பனியின் வழக்கு ஆலோசகர் தன் முடிவை மாற்றிக் கொண்டு என் மீதான வழக்கை பதிவு செய்ய வேண்டாம் என முடிவு செய்தார். வேலை இல்லாவிடிலும் நான் சங்கடத்தில் மாட்டிக் கொள்ள இருந்த நிலையில் இருந்து என்னை பாபா காப்பற்றியதினால் மகிழ்ச்சி அடைந்தேன்.
காலம் ஓடியது . என்னுடைய ஒன்று விட்ட சகோதரன் மூலம் 2010 ஆம் ஆண்டு நான் முதன் முதலாக சாயி சரித்திரத்தைப் பற்றிக் கேள்விப் பட்டேன். அதை நான் மூன்று முறை படித்து முடித்ததும் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படாமலேயே, என் மனதுக்கு பிடித்த வேலை எனக்கு கிடைத்தது. அந்த வேலைக் கிடைத்த அடுத்த ஒரே மாதத்தில் எனக்கு வெஸ்ட் கோஸ்ட் பகுதியில் வேலைக் கிடைத்தது. இரண்டு மாத தற்காலிக வேலை கிடைத்து அதில் சென்று சேர்ந்த நான் இரண்டே மாதத்தில் அங்கேயே நிரந்தர பணியில் அமர்த்தப்பட்டேன். ஆறு மாதம் மகிழ்ச்சியுடன் அங்கு வேலை செய்தேன்.
ஐந்து மாதம் ஆனப்போது திடீர் என என்னுடைய உயர் அதிகாரி என்னை அழைத்து என் வேலை அவருக்கு திருப்பதி தரவில்லை என்றும், ஆகவே ஒரே மாதத்தில் நான் குறைகளை களைந்து கொள்ள வேண்டும் எனவும் கண்டிப்பாக கூறினாள். நான் எத்தனைதான் கடுமையாக வேலை செய்தும் அவள் திருப்தி அடையவில்லை. மீண்டும் வேலையை இழந்தேன்.
நான் பாபாவிடம் மனதாரக் கேட்டேன், இதே அதிகாரிதான் என்னை தேர்வுக்கே அழைக்காமல் வேலை தந்தாள், அவளே மீண்டும் என்னை விளக்கி விட்டால். என்ன செய்வது? .ஒன்றும் புரியாமல் மீண்டும் இரண்டு முறை சாயி சரித்திரத்தைப் படித்தேன். எனக்கு நாட்களில் மீண்டும் வேறு வேலைக் கிடைக்க வேண்டும் என வேண்டினேன். அதிசயமாக அடுத்த 10 நாட்களிலேயே வேறு வேலைக் கிடைத்தது. எனக்கு கிடைத்த வேலை நான் தங்கி இருந்த இடத்தில் இருந்து ஐந்து மைல் தூரத்தில் இருந்தது. நான் அந்த அலுவலகத்தின் அருகில் இருந்த பழைய இடத்துக்கே வாடகைக்கு சென்றேன். ஆனால் சனியின் தொல்லை முடியவில்லை. அடுத்த மூன்றே மாதத்தில் விசா முடிய இருந்ததினால் மீண்டும் வேலையை இழந்தேன். நான் வெளியேற வேண்டிய நிலைமை. நான் வெஸ்ட் கோஸ்ட்டில் இருந்து இருந்தால் அந்த பிரச்சனை ஏற்பட்டு இருக்காது.
பாபா எனக்கு வேறு எதையோ செய்ய நினைத்து இருந்தார் போலும். அடுத்த ஆறு மாதத்தில் மீண்டும் வேறு வேலைக் கிடைத்தது. என்னை அமைதியுடன் இருந்து பொறுமைக் காக்குமாறு அவர் அறிவுறுத்தினார். எனக்கு அந்த காலத்தில் கிடைக்கும் அனுபவங்களை பின்னால் எழுதுகிறேன்.
நான் பாபாவையே தினமும் பிரார்த்தனை செய்து கொண்டு அவருடைய சேவகனாகவே இருக்கின்றேன். என்னோன்றைக் கூற மறந்துவிட்டேன். கடந்த ஆறு மாதமாக நான் ஒரு சாயிபாபாவின் ஆலயத்தில் முழு நேர ஊழியனாக மாறி விட்டேன். முழு சைவ உணவையே அருந்துபவனாக மாறி முட்டைகளை சாப்பிடுவதையும் நிறுத்தி விட்டேன். என்னுடைய அனைத்து கெட்ட பழக்கங்களும் முடிவுக்கு வந்துவிட்டன. என் நண்பர்களே அதைக் கண்டு ஆச்சர்யப்படும் அளவுக்கு நான் மாறி உள்ளேன். நான் என்னுடைய நண்பர்காளையும் என்னுடைய பெற்றோர்களுக்கும் கூட வாழ்கையின் தத்துவம் என்ன என்பதைக் கூறத் துவங்கி உள்ளேன்.
(Translation by Santhipriya)
Loading
0 comments:
Post a Comment