Shri Sai Satcharitra Ovi To Ovi In English For Download.
( Translated into Tamil by Sankarkumar )
ஸாயிராம். அனைவருக்கும் இனிய பாபாநாள் வாழ்த்துகள்.
நம் அனைவராலும் மிகவும் புனிதமான நூல் எனக் கருதப்படும் ஸ்ரீஸாயி ஸத் சரிதத்தின் மராத்தி வடிவம் ஓவி மீட்டரில் அமைந்துள்ளது. அதனை அப்படியே ஆங்கிலத்தில் அளவை கெடாமல் மொழியாக்கம் செய்யப்பட்டு, அது இங்கே தரப்படுகிறது. நாம் வழக்கமாகப் படிக்கும் ஸாயி ஸத் சரிதத்துக்கும், இந்த மூல நூலுக்கும் ஒரு பெரிய வித்தியாசம் என்னவென்றால், மூலநூல் ஓவி மீட்டரில் படிக்க இனிமையாக அமைந்திருப்பதே.
பல அன்பர்கள் இந்த மூலநூலைப் படிப்பதில் ஆர்வம் காட்டியிருக்கிறார்கள். அவர்களது ஆசை இந்தத் தளத்தின் மூலம் இன்று நிறைவேறுகிறது. பாபாவின் மஹா ஸமாதி தினமான அக்டோபர் 23-ம் தேதியில் இந்த நூலை அனைவரும் படித்து இன்புறுவாராக. அவரது ஆசிகள் கிட்டுவதாக.
இந்த அரிய செயலைச் செய்த ஸாயி அடியார் அஞ்சனா குமாரிக்கு எனது மனமார்ந்த வந்தனக்கள். ஜெய் ஸாயி ராம்.

--மனிஷா
1993-லிருந்து நான் பாபாவின் அடியவராக இருக்கிறேன். ஸாயி ஸத் சரிதம் தினம் ஒரு அத்தியாயம் எனப் படித்து வருகிறேன். ஓராண்டுக்கு முன், இந்த ஓவி - ஓவி நூல் இருப்பதை அறிந்து, வாங்க நினைத்தேன். ஆனால் எங்குமே கிடைக்கவில்லை. இணைய தளத்திலும் கிட்டவில்லை. கடைசியில், சில மாதங்களுக்கு முன், ஆலயத்தில் இந்த நூலை வாங்கினேன். இதை அப்படியே பதிவெடுத்து [இரண்டு மாதங்களுக்குள்ளாக] இணையதளத்தில் இடலாமே என ஒரு எண்ணம் தோன்றியது. மொத்தம் 900 பக்கங்கள்.
என்னால் முடியுமா என ஒரு ஐயம் தோன்றினாலும், பாபா எனக்கு பொறுமையையும், நம்பிக்கையையும் அளித்து, குறிப்பிட்ட காலத்தில் இதை முடிக்கச் செய்தார். என்னை அவர் ஒரு கருவியாகப் பயன்படுத்தி, அவரே அனைத்தையும் செய்திருக்கிறார். இதை நிறைவு செய்ததும் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன்.
வாரத்தில் 5 நாட்கள் நான் பணி புரிகிறேன். ஆலயத்தில் என்னாலான தொண்டினைச் செய்கிறேன்.
இதில் ஏதேனும் தவறுகள் இருப்பின், என்னை மன்னிக்கவும். நன்றி. ஸாயிராம்.
அஞ்சனா குமாரி.
Loading
0 comments:
Post a Comment