Shirdi Sai Baba's Grace-Experience Of Sai Devotees-Part 67.
ஸாயிராம்.
அன்பான ஸாயி நல்வாழ்த்துகள். ஸாயி அன்பர்களின் ஒருசில அனுபவங்களை இங்கே பகிர்கிறேன்.ஜெய் ஸாயிராம்.
பாபாவைப் பற்றி நீங்கள் எண்ணுவதே பாபா ஆகிறது!
அன்புள்ள மனிஷா,
மீண்டும் இந்த வலைதளம் இயங்குவது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். "பாபாவின் உபதேச சாரம்" என்னும் தலைப்பில் ஆங்கிலத்திலும், தமிழிலுமாக, ஸாயி ஸத்சரித்திரத்திலிருந்து எடுக்கப்பட்ட அறிவுரைகள் பற்றி, சில ஆண்டுகளுக்கு முன் நான் இங்கு முன்னர் இட்ட பதிவினை நீங்களும், பிற வாசகர்களும் அறிவீர்கள் என எண்ணுகிறேன்.
முகநூலிலும் இவற்றை நான் பதியவேண்டும் என ஒருநாள் எனக்குத் தோன்றியது. அதற்காக பாபாவின் படம் ஒன்றை அங்கே இடவேண்டும் என நினைத்தேன். ஆனால் அது இயலவில்லை. அதை இடும்போதெல்லாம், அந்தப் படம் பதிவின் கீழேதான் வந்து சேர்ந்தது. 4,5 முறை முயன்றபின்னர், என்னால் அதை முகப்பில் இடமுடியாமலேயே போனது. எனவே அப்படியே இட்டு வந்தேன். இந்தமுறை என் மடிக்கணினியிலிருந்து பதிவை இட்டதும், கணினியை மூடிவிட்டு, என் அலைபேசியில் அந்தப் பக்கத்தைத் திறந்தேன். இரண்டுக்குமிடையே ஒரு நிமிட இடைவெளிதான் இருந்திருக்கும். அதிசயமாக, இப்போது படம் முகப்பிலேயே வந்திருந்தது! கீதா என்னும் பெண் அந்தப் பதிவை இட்டிருந்தார். இப்படியாக பாபா எனது விருப்பத்தைப் பூர்த்தி செய்தார். அந்தப் படமும் எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு படம்! கிரீடம், சால்வை போன்ற உபகரணங்கள் ஏதுமில்லாது எளிமையாக பாபா அமர்ந்திருக்கும் படம்!
எப்போதும் அவர் நம்முடனேயே நமது எண்ணங்களாகவே வாழ்கிறார். என்னை அவர் தன்னுள் கரைக்கட்டும்.
என் மீது ஸாயி பொழிந்த கருணை!
நான் ஸாயியின் ஒரு எளிய பக்தன். அவர் எப்போதும் ஒவ்வொரு கணத்திலும் எனக்காக, என்னுடனேயே இருக்கிறார் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருக்கிறேன். அவர் மூலம் நான் அடைந்த அனுபவங்களில் சிலவற்றை இங்கே பகிர விரும்புகிறேன். நாஸ்திகன் இல்லை என்றாலும்கூட, எந்த ஒரு தெய்வத்தையும் குறிப்பாக வணங்குவதில்லை. பண்டிகைக் காலங்களில் மட்டும் கோவிலுக்குச் செல்லும் வழக்கம் உடையவன். இது எல்லாம் 2007 வரைதான்.
ஸாயி ஸத்சரித்திரத்தின் மூலம், என் தோழி ஒருவரால் நான் பாபாவைப் பற்றி அறியவந்தேன். அவருக்கு நான் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன். ஏதோ ஒரு காந்த சக்தியால் கவரப்பெற்று நான் ஸாயியையே முழுதுமாக நம்பலானேன்.
1. 2008-ல் ஒருநாள் நான் மோட்டார்சைக்கிளில் வந்துகொண்டிருந்தேன். காலையிலிருந்து இன்னும் பாபாவை தரிசிக்கவில்லை. ஏதாவது ஒரு கார், லாரி இவற்றின் மூலம் அவரது தரிசனம் தினமும் கிடைக்கும். எனவே நான் 'பாபா!' என நினைத்தேன். இடது பக்கமாக என் வீட்டுக்குத் திரும்புவதற்கு முன்னால் அவர் தரிசனம் கிடைக்க வேண்டுமென நினைத்தேன்! அதேபோலவே நிகழ்ந்தது! திரும்பும் வேளையில் அங்கே நிறுத்தப்பட்டிருந்த ஒரு டாக்ஸியின் பின்புறம் பாபா சிரித்தபடி அமர்ந்திருந்தார்! முதல் முதலாக எனக்குக் கிடைத்த இந்த அனுபவம் இன்னமும் என் நினைவில் இருக்கிறது.
2.2013- ஒருநாளிரவு திடீரென கடுமையான வயிற்றுவலி வந்துவிட்டது. படுக்கையிலிருந்து எழுந்து ஸாயியை நினைத்தவாறே நடந்து கொண்டிருந்தேன். என் மனைவி உதியை எடுத்துவந்து வலி இருந்த இடத்தில் தடவிவிட்டாள். அவள் அப்படிச் செய்து தன் கையை எடுத்ததுமே என் வலி பறந்துவிட்டது! ஸத்சரித்திரத்தில் படித்தது எனக்கும் நடந்தது!
3. 5.29.2015- ஒரு பெரிய பெரிய நிறுவனத்தில், என் கீழ் வேலை செய்பவர்களை முறையாகக் கவனிக்க வேண்டிய பொறுப்பான பதவியில் இருக்கிறேன். என்னுடன் வேலை செய்தவர்களில் ஒருவர் உடல்நலக் குறைவால் வேலையை ராஜிநாமா செய்துவிட்டார். 3 நாட்களுக்குள் விடுப்பு வேண்டுமெனச் சொன்னதால் மாற்றுப் பணியாளரை அமர்த்தவும் நேரமில்லை. அடுத்த ஆள் வரும்வரை சில நாட்கள் பணியில் தொடருமாறு அவரிடம் பலமுறை கேட்டுக்கொண்டேன். ஆனால் அது பலனில்லாமல் போனது. இதை எப்படி பக்குவமாக எனது வாடிக்கையாளரிடம் எடுத்துச் சொல்லி, வேலைக்கும் பங்கம் வராமல் பார்த்துக் கொள்வது எனத் தவித்தேன். எப்போதும் நல்வழி காட்டும் பாபா மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. ஆனால், 4,5 நாட்கள் வேண்டியும் ஒன்றும் நிகழவில்லை. பாபா மீது நம்பிக்கை இருந்தபோதிலும், வாடிக்கையாளரிடம் நிலைமையைச் சொல்வது என நினைத்து, அவர்களுக்கு 'போன்' பண்ணப்போகும் நேரத்தில், இன்னொரு அழைப்பு மணி அடித்தது. எனது முதலாளி குறிப்பிட்ட அந்த நபருடன் பேசி, இன்னும் ஒரு 3 வாரங்கள் பணியில் நீடிக்கச் சம்மதித்ததாகவும் தெரிவித்தார். 2 நாட்களுக்கு முன் இதே முதலாளி அவருடன் பேசியும் பயனில்ல. பாபாவின் கருணை இல்லாமல் இது எப்படி நிகழ்ந்திருக்க முடியும்? எனது ஆனந்தத்துக்கு அளவே இல்லை! உடனே பாபா படத்துக்கு முன் நின்று பிரார்த்தித்தேன் அவருக்கு நான் எப்படி நன்றி சொல்வது? அவர் மீது அன்பும், நம்பிக்கையும் கொண்டிருந்தால் மட்டுமே போதுமானது.
மேலும் பல அனுபவங்கள் இருந்தபோதிலும், இவை மூன்றுமே ஒருசில முக்கியமான நிகழ்வுகள். 'யார் நம்மை விட்டு நீங்கினாலும், ஸாயி மட்டும் நீங்கவே மாட்டார்' என ஸத்சரிதத்தில் வரும் வாக்கு மெய்யானது. முழுமையாக நம்பி, அவரை அழைத்தால் அவர் உங்கள் முன்னே வந்து நிற்பார்.
ஓம் ஸாயிராம்.
பாபா செய்த அற்புதம்!
ஓம் ஸாயிராம்.
ஸமீப காலமாகத்தான் நான் பாபாவின் அடியாராக இருக்கிறேன். சிறு வயதில் பெற்றோர்களுடன் ஷீர்டி சென்றிருக்கிறேன். ஆனால் அவரது அடியவனாக ஆகவில்லை. திருமணம் ஆனபின், நானும், என் கணவருடன் துபாய் வந்து குடியிருந்த வீட்டுக்குத் தேவையானவற்றை அமைத்துக் கொண்டிருந்தேன்.
ஹனுமான் படம் ஒன்றும், இரண்டு ஸாயிபாபா படங்களும் இருந்ததைக் கவனித்தேன். வழக்க முறைகளை விடவும், மனதளவில்தான் நான் தெய்வ நம்பிக்கை கொண்டவளானதால், இவற்றைப் பொருட்படுத்தவில்லை. ஆனால் சமீபத்தில் நிகழ்ந்த சில நிகழ்ச்சிகளால், கடவுளின் லீலைகளையும், அவரது இருப்பையும் உணரவேண்டுமென்னும் ஆசை கூடியது.
எனது நாத்தனாரின் உதவியால் பாபா பற்றிய அறிமுகம் கிடைத்தது. அவரும் தனது லீலைகள் சிலவற்றை எனக்குக் காட்டினார். எனது மகனின் விஸாவுக்காக குடியேற்றப் பிரிவில் விண்ணப்பிக்கச் சென்றோம். ரமதான் காலம் என்பதால் பார்வை நேரம் மிகவுமாகக் குறைக்கப்பட்டிருந்தது. 1164 என்னும் டோக்கனை எடுத்துக் கொண்டோம். எங்களுக்கு முன்னால் சுமார் 50 பேர் இருந்தனர். அடுத்த வாரமே எனது மகனின் விஸா தீர்ந்துவிடும் என்பதால், இன்றே அது முடியவேண்டுமே எனக் கவலையாக இருந்தது. சரி, அருகிலிருந்த உணவு விடுதியில் சாப்பிட்டுவிட்டு வரலாம் எனக் கிளம்பியபோது, யாரோ ஒருவர் எங்களிடம் வந்து, 1137 என்னும் தனது டோகனைக் கொடுத்துவிட்டுக் கிளம்பினார்! அவருக்கு நன்றி கூறிவிட்டு, மகிழ்ச்சியுடன் சென்றமர்ந்தோம். எங்கள் பக்கத்தில் இருந்த பதான் ஒருவரிடம் 1118 எண் டோக்கன் இருந்ததைக் கவனித்தேன். அப்போது 1117 எண்ணை அழைத்திருந்தனர். ஆகவே இந்த எண் எனக்குக் கிடைத்தால் நன்றாக இருக்குமே என மனதுள் நினைத்தேன். அந்த நிமிடமே, அவர் எங்களைப் பார்த்து, தனது சகோதரன் நமாஸுக்குச் சென்றிருப்பதால், தனது டோக்கனை எடுத்துக் கொள்ளச் சொன்னதும் எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. மெதுவாக எனது செல்ஃபோனைத் திறந்தேன். பாபாவின் படம் அங்கே என் முன் விரிந்தது! என் கணவரிடம் அதைக் காட்டினேன். எங்களது முறை உடனே வந்து, என் கணவரும் தேவையான ஆவணங்களைச் சமர்ப்பித்தார்!
எங்கள் கவலையைத் தீர்த்த பாபாவுக்கு நன்றி சொன்னேன். உங்களது கோரிக்கைகளையும் இப்படியே பாபா நிறைவேற்றுவார். பொறுமையுடன் காத்திருங்கள். உங்களை மிகவும் நேசிக்கிறேன் பாபா . --
உண்மையுள்ள, "ஆர்'.
"அவரது திருப்பாதங்களில் சரணடையுங்கள்!"
அன்புள்ள மனிஷாஜி,
எங்கு தொடங்குவது, எப்படி எழுதுவதெனத் தெரியவில்லை; ஆனால் பாபா மீது நம்பிக்கை வைத்தால் ஊமையும் பேசுவான்; அறிவிலியும் ஞானம் பெறுவான். எனவே நானும் அவரது பாதங்களைச் சரணடைந்து இதை எழுத முற்படுகிறேன். எனது விருப்பம் பூர்த்தியானதும் இந்த வலைதளத்தில் எழுதுவேன் என நான் அவருக்கு வாக்களித்திருந்தேன். இப்போது அது நிறைவேறிவிட்டது. எனது கணவர் ஒரு நல்ல வேலைக்காரர், நல்லவரும் கூட. ஆனால் அவரது திறமை அங்கீகரிக்கப்படாமலேயே இருந்தது. உத்தியோக உயர்வும் கிடைக்கவில்லை.
பாபா தனது ஆசிகளை எங்கள் மீது காட்டவேண்டுமென நான் பிரார்த்தேன். அவரது அனுமதி இல்லாமல், இந்த விஷயத்தைப் பற்றி எவருடனும் பேசுவதில்லை என சங்கல்பம் செய்தோம். ஏனெனில் வேலை உயர்வைத் தீர்மானிப்பவர் பாபா அல்லவா? அவரது பாதத்தில் சரணடைந்துவிட்டு, அவர் தனது வேலைஅயைச் செய்து வந்தார். பாபாவின் அருளால் சில மாதங்களுக்குப் பிறகு பதவி உயர்வுக்கான ஆயத்தங்கள் தொடங்கின. இன்னும் முழுமையான ஆணை வரவில்லை என்றாலும், தனது அடியார் மீது பாபா காட்டிய அருளை உணர்ந்தோம்.
அவர் மீது கொண்ட நம்பிக்கையால், எல்லாம் நல்லபடியாக நடக்குமென நம்புகிறோம். ஓம் ஸாயி ஸ்ரீ ஸாயி ஜெய ஜெய ஸாயி. இந்தச் செய்தியை இங்கே அளிக்க அருளிய உங்களுக்கு வந்தனம் பாபா. பாபாவிந்திருவடிகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறேன்.
சரியாக பரிட்சை எழுதாததால், முடிவு எப்படியிருக்குமோ எனப் பதட்டமாக இருந்தேன். ஸாயி ஸத்சரிதத்தை வியாழக்கிழமை முதல் படிக்கத் தொடங்கினேன். மறுநாள் நான் தேர்வானதாக முடிவுகள் வந்தன. பாபாவின் கருணையால்தான் இது நிகழ்ந்தது என நிச்சயமாக நம்பி, அவரைத் தீவிரமாகப் பற்றிக்கொண்டேன்.அவர் பெயரைச் சொன்னாலே பிரச்சினைகள் தீர்ந்துவிடும். இன்னொரு விஷயம். ஏதோ ஒரு பிரச்சினையின் காரணமாக என் நண்பன் ஒருவன் தற்கொலை செய்ய முடிவு செய்து என்னிடம் அதைக் கூறினான். நான் எவ்வளவோ தடுத்தும் அவன் கேட்கவில்லை. என்ன செய்வதெனத் தெரியாமல், பாபாவிடமே வேண்டிக் கொண்டேன். அவனது தாய் அவனுடன் தங்க மறுநாளே வந்தார். அவனும் தனது எண்ணத்தைக் கைவிட்டான். பாபாவுக்கே வந்தனம்.
கிருபை செய்யுங்கள் பாபா! ஆசி வழங்குங்கள் பாபா! அது எங்களுக்கு மிகவும் தேவை பாபா !
ஸாயி என் மணவாழ்வைக் காத்தருளினார்!
ஓம் ஸாயிராம். நான் ஒரு இல்லத்தரசி. 2008 முதல் ஸாயி பக்தை. சமீபத்தில் நடந்த ஒரு லீலையை இங்கே சொல்கிறேன். என் பெயர் மஞ்சீத் . கடந்த 9 ஆண்டுகளாக எனக்குத் தெரிந்த ஒருவருடன் 2013-ல் எனக்கு மணமானது. கடந்த 4,5 மாதங்களாக எங்களுக்குள் உறவு சரியாக இல்லை. அற்ப விஷயங்களுக்கெல்லாம் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டோம். எனது மாமனார் எங்கள் வாழ்வில் குறுக்கிட்டபோதிலிருந்து இது தொடங்கியது என நினைக்கிறேன். அவ்ரும் எனது கணவருடன் தென்னாப்பிரிகாவில் பணி புரிகிறார். எங்களுக்கென சொந்தத் தொழில் இருக்கிறது. மதலிலிருந்தே அவரது போக்கு சரியாக இல்லை. ஆனால், என் கணவரிடம் இது பற்றி ஏதும் நான் சொல்லவில்லை. பலர் முன்னிலையிலும் என்னை அவமானப்படுத்துவார். இயல்பாகவே கூச்ச சுபாவம் என்பதால், நான் மௌனமாகவே இருந்துவிடுவேன். இதன் காரணமாகவே என் கணவர் மீது எனக்கு எரிச்சல் வந்தது.
என் கணவரும் முன்கோபக்காரர் என்றாலும், என்னை நன்றாகப் பார்த்துக்கொண்டார். கடந்த அக்டோபர் மாதம் தனது அண்ணனையும் வியாபாரத்தில் சேர அழைப்பு விடுத்தார். நான் முதலில் தயங்கினாலும், பிறகு சம்மதித்தேன். மணமாகி ஓராண்டே ஆகியிருந்தது. ஆனால் வீடு முழுவதும் மனிதர்கள்! எனது கணவருடன் தனிமையில் இருக்க நேரமே கிடைப்பதில்லை. இந்த எரிச்சல் எனது சுபாவத்திலும் தெரிய ஆரம்பித்தது. டிசம்பர் மாதம் என் கணவர் என்னை இந்தியா சென்று, சிறிது காலம் தங்கி, மன ஆறுதல் அடைந்ததும் திரும்ப வரச் சொன்னார்.
அதேபோல இந்தியா சென்று 20 நாட்கள் கழித்து திரும்பினேன். ஆனால், வந்த ஒரு வாரத்திலேயே மீண்டும் சண்டை தொடங்கிவிட்டது. என் கணவர் என்னை உடனடியாக வெளியேறும்படி கூறினார். நான் மனமுடைந்து போனேன். அதே சமயம், அவர் என்னிடம் உண்மையாக இல்லை என்பதையும் அறிந்தேன். சத்துவிடலாமா எனக்கூட நினைத்தேன். பிப்ரவரி மாதம் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்துடன் இந்தியா வந்தேன். ஆனால், ஒரே வாரத்தில் என் கணவர் என்னை உடனே திரும்பிவரச்சொல்லி அழைத்தார்.
எல்லாம் சரியாகிவிட்டது என நினைத்து திரும்பினேன். என் மாமனாரும் என்னுடன் கூட வந்தார். அப்போதுதான் பிரச்சினைகள் மேலும் அதிகமாயின. அவர் என் கணவரிடம் என்னைப் பற்றி என்ன சொன்னாரோ தெரியவில்லை, ஆனால், என் கணவர் மிகவும் கோபமடைந்து என்னுடன் அதிகமாகச் சண்டையிடத் தொடங்கினார். பாபாவிடம் முறையிட்டு, வீட்டிலிருக்கும் பாபா மந்திரில் தினமும் 2 விளக்குகள் ஏற்றிவந்தேன். ஒருநாள் பாபாவின் காலடியில் நான் வைத்த குங்குமப் பொட்டு, மாலையில் விளக்கேற்றும்போது, பாபாவின் நெற்றியில் துலங்கக் கண்டேன். மகிழ்ச்சியுடன் என் கணவரிடம் இதைக் காட்ட, அவரும் மகிழ்ந்தார். பாபா எங்களுடனேயே இருக்கிறார் எனப் புரிந்தது.
ஆனால், ஏப்ரல் மாதம் மீண்டும் சண்டை வந்து என்னை இந்தியா செல்லச் சொன்னார். நானும் உடனே கிளம்பிவிட்டேன். தனக்குத் தனிமை வேண்டுமென அவர் சொல்ல, நானும் அப்படியே இந்தியாவிலிருக்கும் அவரது இல்லத்துக்கே திரும்பிவிட்டேன். இன்றுடன் ஒரு மாதம் ஆகிறது. நாள் தவறாமல் பாபாவை வேண்டி தினமும் விளக்கேற்றுகிறேன். நேற்ரு மதியம் உறங்கும்போது, என் கனவில் பாபா வந்து 'எல்லாம் சரியாகும்!' என எழுதிய ஒரு காகிதத்தைக் காட்டினார். கண் விழித்ததும், என் கணவரிடமிருந்து என் உடல்நிலை குறித்து அன்புடன் விசாரித்த கடிதம் வந்து சேர்ந்தது!என்னைப் பற்றி நினைக்கிறாரே என சந்தோஷப்பட்டேன். ஆனால் அதற்குப்பின் ஒரு தகவலும் இல்லை. சற்று நேரத்துக்கு முன், எனது ஸாயியை நினைத்துக்கொண்டே கண்ணயரத் தொடங்கும்போது, எனது மாமியார் நான் அங்கிருப்பதை விரும்பாததால், எப்போது வரபோகிறாய் என ஒரு அழைப்பு என் கனவரிடமிருந்து வந்தது.
நான் வரவேண்டுமென அவர் நினைத்தாலும், அவரது ஆணவத்தால் என்னை வர்ச்சொல்லிக் கேட்கவில்லை. அப்படி ஒரு அழைப்பு வந்ததும் இது பற்றி எழுதலாம் என நினைத்தாலும், நாளை வரை காத்திருக்க என்னால் முடியவில்ல. எனவே, இப்போதே எழுதுகிறேன். என் கணவர் நல்லவர்தான். ஆனால் காளியின் தூண்டுதலால் இப்படியெல்லாம் செய்கிறார். உங்கள் அனைவரையும் எனக்காக வேண்டிக்கொள்ள வேண்டுகிறேன். இன்னும் நிறைய அனுபவங்கள் இருக்கின்றன. பிறகு எழுதுகிறேன். தென்னாப்பிரிக்கா சென்றதும், அந்த பாபா படத்தையும் அனுப்புகிறேன். ஓம் ஸாயிநாதாய நம:!
பாபாவின் தாயன்பு!
பாபாவின் தாமரைப் பாதங்களில் என் பணிவன்பான வணக்கம்,. பாபா தனது பிள்ளைகளை நேசிக்கிறார். எல்லா வழிகளிலும் அவர்களுக்கு உதவுகிறார். அவரது அழைப்புக்கெல்லாம் உடனே செவி சாய்க்கிறார். இப்போது அப்படிப்பட்ட ஒரு அனுபவத்தை அவரருளால் இங்கே பகிர்கிறேன்.
ஸாயி ஸத்சரிதம் படித்து பாபாவின் அடியவராக ஆனேன். இந்த நிகழ்வு நான் 12-ம் வகுப்பு படிக்கும்போது நிகழ்ந்தது. ஏதோ காரணத்தால் என் மனம் சஞ்சலப்பட்டிருந்தது. பாபா என் மீது கோபமாக இருப்பது போல உணர்ந்தேன். ஏனென்றே தெரியவில்லை. மனதை மாற்றுவதற்காக என் தாயுடன் சேர்ந்து ஸத்சரிதத்தை இணையத்தில் படித்தேன். கீழ்க்காணும் வரிகள் அதில் தென்பட்டன....'நான் யார் மீதும் கோபிப்பதில்லை . தாய் தன் பிள்ளைகளிடம் கோபம் கொள்வாளோ? கடல் தன் நீரை நதிகளுக்குத் திருப்பிவிடுமோ?' இதைப் படித்ததும் என் மனம் உருகியது. கண்ணீர் கண்களிலிருந்து வழிந்தது.
பாபா நேராக என்னுடன் பேசியதுபோல உணர்ந்தேன். நிச்சயம் ஒரு தாய் தன் பிள்ளையிடம் கோபம் கொள்ளவே மாட்டாள். அப்படியே கொண்டாலும், அது அவர்களது நன்மைக்காகவே இருக்கும். இந்த அனுபவத்தை என்னால் மறக்கவே முடியாது. நீங்கள் என் மீது காட்டும் அன்புக்கும், பரிவுக்கும் மிக்க நன்றி பாபா! நான் இன்றிருக்கும் நிலைக்கு நீங்களே காரணம். என் வாழ்க்கை முறையை மாற்றியவர் நீங்களே பாபா.
நான் நிறைய தவறுகள் செய்திருக்கிறேன். ஆனால், உங்கள் அருளால் அனைத்தையும் கடந்துவிடுவேன் என நம்புகிறேன். இன்னும் பல அனுபவங்களை விரைவில் எழுதுகிறேன். ஸாயிராம்.
எனது அற்புதமான ஷீர்டி யாத்திரை!
அன்பு சகோதரி மனிஷா,
இந்த வலைதளத்தை நடத்திவருவதற்காக என் வனக்கம். ஸத்சரிதத்தில் படித்து அறிந்துகொள்ள முடியாத பல உன்னதக் கருத்துகளை இங்கேதான் தெரிந்துகொள்கிறே. இஞ்சினீயரிங் படிப்பை முடித்துவிட்டு, வேலை தேடிக்கொண்டிருக்கிறேன்.
ஜெய் ஸாயிராம்.
அன்பு வாசகர்களே,
சிறு வயதிலிருந்தே பாபாவை அறிந்திருந்தாலும், கடந்த 4 ஆன்டுகளாகத்தான் நான் அவரது பக்தன். ஜூன் 7-ம் தேதியன்று நானும் இன்னும் சிலருடன் ஷீர்டி சென்ற அனுபவத்தை இங்கே கூறுகிறேன். பாபா எவ்வாறு எல்லா ஏற்பாடுகலையும் செய்கிறார் என்பதை இந்த அனுபவத்தின் மூலம் உணர்ந்தேன்.
6-ம் தேதி ரயில் பயண முன்பதிவு செய்தோம். பாபாவின் காகட் ஆரத்தியைக் காண விரும்பி அதற்கான சீட்டுகளை இணையம் மூலம் பணம் செலுத்திப் பதிவு செய்தும், நாங்கள் கிளம்பும் வரை, அவை வந்து சேரவில்லை. பாபா மீது இதற்குக் குறை கூறினாலௌம், பாபா வேறொரு ஏற்பாடு செய்திருந்தார்! ரயிலில், எங்களுடன் ஷீர்டி கொவில் பூஜாரி ஒருவரும் எங்களுடன் பயணித்தார்! ஆந்திராவிலிருந்து வந்த எனக்கு ஹிந்தி, மராத்தி தெரியாததால் சிறிது சங்கடப்பட்டேன்.
எப்படியோ மெதுவாக அவரிடம் ஆரத்தி சீட்டு கிடைக்காததைப் பற்றிச் சொன்னதும், தான் அதற்கு ஏற்பாடு செய்வதாகச் சொன்னார். அப்படியே நான் விரும்பிய அபிஷேக ஜலமும் தருவதாகவும் வாக்களித்தார்.
அப்படியே அவை கிடைத்து பாபா முன்னே 20 நிமிடங்கள் நின்றோம். மத்தியான ஆரத்தி காணவும் வாய்ப்பு கிடைத்தது. நிறைய வேப்ப இலைகளும் கிடைத்தன. 9-ம் தேதியன்றும் காகட் ஆரத்தி காணக் கிடைத்தது. பாபாவுக்கு வெகு அருகில் நின்றதில் என் ஜென்மம் சாபல்யம் ஆயிற்று. ஸாயி ஸத்ய விரதம் செய்து மாலையில் விள்க்குகள் ஏற்றினோம். புஜாரி அபிஷேக தீர்த்தமும் கொடுத்தார். மூன்று நாட்களும் ஆரத்திக்குச் சென்று, மற்ற இடங்களையும் தரிசித்தோம். ஏழைகளுக்கு அன்னதானம் செய்தோம். சாவடியில் அமர்ந்து மாலை ஆரத்தியும் தரிசித்தோம். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
எனது செருப்பு அங்கே தொலைந்துபோனது. என் கர்மா கழிந்தது என எண்ணிக்கொண்டேன். இதுவரை 4 முறை ஷீர்டி சென்றிருந்தும் இந்த அனுபவம் தனித்துவமாக இருந்தது. கிளம்பியதிலிருந்து அனைத்தையும் பாபாவே பார்த்துக்கொண்டார்.இவ்வளவு வசதியாக ஆரத்தி கண்டிருப்பேனா என்பது சந்தேகமே.
கடந்த சில ஆண்டுகளாக வேண்டியபோதிலும், இன்னும் எனது கோரிக்கைகளை பாபா நிரைவேற்ரவில்லை. என் வாழ்க்கை இன்னும் குழப்பமாகவே இருந்தாலும், அவர் மீது கொண்ட நம்பிக்கையால், எல்லாம் சரியாகிவிடும், ஒரு குறைவும் நேராது என்பதில் உறுதியாக இருக்கிறேன். அவரது தீர்மானத்தின்படியே அனித்தும் நிகழும் எனப் பொறுமையுடன் காத்திருக்கிறேன்.
உங்கள் குழந்தைகளான எங்கள் மீது கோபம் கொள்ளாமல் எங்களைக் காத்தருள்க பாபா எனத் தங்களைக் கேட்டுக் கொள்கிறேன்ன். என் கடைசி மூச்சுவரை தங்களை வணங்குவேன்.
ஓம் ஸ்ரீ ஸாயிராம்.
Loading
1 comments:
Jai sairam
Post a Comment