Power Of Udi -Experience By Balaji Radakrishnan
உடியின் மகிமை
பக்தரின் அனுபவம்
பக்தரின் அனுபவம்
(Article Translated into Tamil by : Santhipriya)
மனித
செயல்கள் தோற்றுப் போகும்போது கடவுள் வந்து காப்பாற்றுவார். இந்த உண்மை
சாயி பக்தரும் அமேரிக்காவில் இருப்பவருமான பாலாஜி என்பவற்றின் அனுபவம்
மூலம் நமக்கு தெரிய வருகிறது.
மனிஷா-------------------
ஒம்சாயிராம்
அன்புள்ள சகோதரி மனிஷா
உங்கள்
சாயி சேவைக்கு நன்றி. 2012 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஆறாம் தேதி இரவு
என்னுடைய மகன் சாயி கிருஷ்ணா சாப்பிட்ட அனைத்தையும் வாந்தி எடுத்து
விட்டான். அதன் பிறகு பயந்துபோன அவன் வேறு எதையுமே சாப்பிட மறுத்தான்.
இரவு அவனுக்கு 103 முதல் 104 டிகிரி வரை ஜுரமும் வந்து விட்டது. அவனுக்கு
நாங்கள் ஆறு மணிக்கு ஒருமுறை டைலினால் என்ற மருந்தைக் கொடுத்தோம். ஆனாலும்
அவன் ஜுரம் குறையவில்லை. மறுநாள் மதியம் வரை ஜுரமும் குறையவில்லை. அவன்
எதையுமே சாப்பிட மறுத்ததினால் மிகவும் சோர்வாகவும் இருந்தான். ஆகவே
நாங்கள் மார்டின் என்ற மருந்தைக் கொடுத்தோம்.
அவன் ஜுரம் தற்காலிகமாக நின்றாலும், சிறிது நேரம் பொறுத்து மீண்டும் ஜுரம் வந்துவிட்டது. மீண்டும் நாங்கள் மார்டின் மருந்தைக் கொடுத்ததும் அதையும் அவன் வாந்தி எடுத்து விட்டான். ஆகவே எந்த மருந்துமே உள்ளே செல்லவில்லை. அவன் உடம்பு கொதித்தது. அந்த நிலைமையைக் கவனித்த என் மனைவி பயந்து போய் விட்டாள். ஆகவே அவனை அவசர சிகிச்சைக்கு கொண்டு செல்லலாம் என்று நான் கூறியதுமே அவசர சிகிச்சை என்றப பெயரைக் கேட்டதுமே அவள் பயம் இன்னும் அதிகரித்தது. அதற்குக் காரணம் நாங்கள் பிறந்த குழந்தையை ஒருமுறை அவசர சிகிச்சையில் சேர்த்தபோது அவனை அங்கு 55 நாட்கள் வைத்து இருந்தார்கள் என்பது மட்டும் அல்ல அவன் பல தொல்லைகளுக்கும் அங்கு ஆளாக வேண்டி இருந்தது.
நாங்கள் மிகவும் மனம் ஒடிந்த நிலையில் இருந்துவாறு பலமுறை அவனுக்கு உடியை தடவினாலும், வாந்தி ஆகிவிடுமோ என்று பயந்து கொண்டு அதை அவன் வாயில் போட்டுக் கொள்ள மறுத்தான். இரண்டே வயதான அந்தக் குழந்தை இரண்டு நாட்கள் எதையுமே சாப்பிடவில்லை என்பதினால் உடலில் இருந்த நீர் வற்றிப் போய் அனைத்து சக்திகளையும் இழந்து இருந்தான். சற்று நேரம் பொறுத்து அவன் சிறிது நீர் ஆகாரம் குடிக்க சம்மதித்தான். மீண்டும் மார்டின் மருந்தை வாந்தி எடுத்ததும் என் மனைவி கொதித்துப் போய் 'எதற்காக எங்களை இப்படி சோதனை செய்கிறாய் பாபா' என எங்கள் நண்பரான பாபாவைப் பார்த்துக் கத்தி விட்டு 'இனி நான் செய்வதை யாரும் தடுக்காதீர்கள்' என்று எங்களையும் பார்த்துக் கத்திவிட்டு உடியை எடுத்து பாபாவின் படத்துக்கு முன்னால் வைத்து இருந்த நெய்வேத்திய நீரில் கலந்தாள்.
அப்போது எனக்கு ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது. சர்மா என்பவருக்கு பாம்புக் கடி ஏற்பட்டபோது பாபாவிடம் அவர் செல்ல, அவர் மருந்து கொடுக்கும் குடுவையில் அதை ஊற்றிக் வைக்குமாறு கூறினார்.
அது நினைவுக்கு வர அதன் பிறகு நாங்கள் மருந்து கொடுப்பதை நிறுத்தினோம். இனிமேல் குழந்தைக்கு நாங்கள் மருந்து கொடுக்கப் போவது இல்லை என்றோம். இரவு முழுவதும் என் மீது படுத்துக் கொண்டிருந்த குழந்தையின் ஜுரம் குறையவில்லை. நாங்கள் சாயி, சாயி எனக் கூறிக் கொண்டே இருந்த நாங்களும் உறங்கி விட்டோம்.
விடியற்காலை மூன்று மணிக்கு எழுந்தக் குழந்தை பால் வேண்டும் என்று கேட்டான். அவன் உடம்போ சில்லிட்டு என்று இருந்தது. நான் ஆச்சர்யம் அடைந்தேன். சாதாரணமாக ஜுரம் குறைந்தால் உடல் சூடு சிறிதளவு இருக்கும். ஆனால் குழந்தையின் உடம்போ சில்லிட்டு இருந்தது. நாங்கள் உடனே எழுந்து பாலைக் கொடுக்க அதை குடித்தவன் தூங்கி விட்டான்.
மறுநாள் காலை அவன் ஜுரம் குறைந்து சாதாரண நிலைக்கு வந்து விட்டது.
நாங்கள் எங்கள் தோழரான பாபாவிற்கு நன்றி கூறினோம். அவரிடம் மன்னிப்பும் கேட்டோம். ஆனாலும் பாபா தனக்கு நன்றி கூறத் தேவை இல்லை என்று கூறுவது போல என் மனதிற்குள் இருந்தது.
ஓம் சாயி ராம்அவன் ஜுரம் தற்காலிகமாக நின்றாலும், சிறிது நேரம் பொறுத்து மீண்டும் ஜுரம் வந்துவிட்டது. மீண்டும் நாங்கள் மார்டின் மருந்தைக் கொடுத்ததும் அதையும் அவன் வாந்தி எடுத்து விட்டான். ஆகவே எந்த மருந்துமே உள்ளே செல்லவில்லை. அவன் உடம்பு கொதித்தது. அந்த நிலைமையைக் கவனித்த என் மனைவி பயந்து போய் விட்டாள். ஆகவே அவனை அவசர சிகிச்சைக்கு கொண்டு செல்லலாம் என்று நான் கூறியதுமே அவசர சிகிச்சை என்றப பெயரைக் கேட்டதுமே அவள் பயம் இன்னும் அதிகரித்தது. அதற்குக் காரணம் நாங்கள் பிறந்த குழந்தையை ஒருமுறை அவசர சிகிச்சையில் சேர்த்தபோது அவனை அங்கு 55 நாட்கள் வைத்து இருந்தார்கள் என்பது மட்டும் அல்ல அவன் பல தொல்லைகளுக்கும் அங்கு ஆளாக வேண்டி இருந்தது.
நாங்கள் மிகவும் மனம் ஒடிந்த நிலையில் இருந்துவாறு பலமுறை அவனுக்கு உடியை தடவினாலும், வாந்தி ஆகிவிடுமோ என்று பயந்து கொண்டு அதை அவன் வாயில் போட்டுக் கொள்ள மறுத்தான். இரண்டே வயதான அந்தக் குழந்தை இரண்டு நாட்கள் எதையுமே சாப்பிடவில்லை என்பதினால் உடலில் இருந்த நீர் வற்றிப் போய் அனைத்து சக்திகளையும் இழந்து இருந்தான். சற்று நேரம் பொறுத்து அவன் சிறிது நீர் ஆகாரம் குடிக்க சம்மதித்தான். மீண்டும் மார்டின் மருந்தை வாந்தி எடுத்ததும் என் மனைவி கொதித்துப் போய் 'எதற்காக எங்களை இப்படி சோதனை செய்கிறாய் பாபா' என எங்கள் நண்பரான பாபாவைப் பார்த்துக் கத்தி விட்டு 'இனி நான் செய்வதை யாரும் தடுக்காதீர்கள்' என்று எங்களையும் பார்த்துக் கத்திவிட்டு உடியை எடுத்து பாபாவின் படத்துக்கு முன்னால் வைத்து இருந்த நெய்வேத்திய நீரில் கலந்தாள்.
அப்போது எனக்கு ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது. சர்மா என்பவருக்கு பாம்புக் கடி ஏற்பட்டபோது பாபாவிடம் அவர் செல்ல, அவர் மருந்து கொடுக்கும் குடுவையில் அதை ஊற்றிக் வைக்குமாறு கூறினார்.
அது நினைவுக்கு வர அதன் பிறகு நாங்கள் மருந்து கொடுப்பதை நிறுத்தினோம். இனிமேல் குழந்தைக்கு நாங்கள் மருந்து கொடுக்கப் போவது இல்லை என்றோம். இரவு முழுவதும் என் மீது படுத்துக் கொண்டிருந்த குழந்தையின் ஜுரம் குறையவில்லை. நாங்கள் சாயி, சாயி எனக் கூறிக் கொண்டே இருந்த நாங்களும் உறங்கி விட்டோம்.
விடியற்காலை மூன்று மணிக்கு எழுந்தக் குழந்தை பால் வேண்டும் என்று கேட்டான். அவன் உடம்போ சில்லிட்டு என்று இருந்தது. நான் ஆச்சர்யம் அடைந்தேன். சாதாரணமாக ஜுரம் குறைந்தால் உடல் சூடு சிறிதளவு இருக்கும். ஆனால் குழந்தையின் உடம்போ சில்லிட்டு இருந்தது. நாங்கள் உடனே எழுந்து பாலைக் கொடுக்க அதை குடித்தவன் தூங்கி விட்டான்.
மறுநாள் காலை அவன் ஜுரம் குறைந்து சாதாரண நிலைக்கு வந்து விட்டது.
நாங்கள் எங்கள் தோழரான பாபாவிற்கு நன்றி கூறினோம். அவரிடம் மன்னிப்பும் கேட்டோம். ஆனாலும் பாபா தனக்கு நன்றி கூறத் தேவை இல்லை என்று கூறுவது போல என் மனதிற்குள் இருந்தது.
ஓம் நமோ நாராயணா
Loading
0 comments:
Post a Comment