Friday, July 13, 2012

Shivamma Thayee Temple-Experience By Devotee Radha Sreedhar


சிவம்மா  தாயீ ஆலய அனுபவம் -  ராதா ஸ்ரீதர் 
(Translated into Tamil by Santhipriya)



அன்பானவர்களே
அனைவருக்கும்  சாயி தின வாழ்த்துக்கள்
சாயி பக்தையான ராதா சகோதரி அவ்வப்போது நம்முடன் அவரது அனுபவங்களை பகிர்ந்து கொண்டு வருகிறார்.   சமீபத்தில் சிவம்மா தாயீ ஆலயம் குறித்த ஒரு பக்தரின் அனுபவத்தை நான் வெளியிட்டு இருந்தேன் .
அதன் பிறகு ஆச்சர்யமாக சகோதரி ராதாவின் அனுபவக் கட்டுரை வந்துள்ளது. அவர் மேலும் சில அனுபவங்களையும் விரைவில் நம்முடன் பகிர்ந்து கொள்ள உள்ளார்.
அது போலவே ராமோஜி ராவ்  என்பவர் எழுதி உள்ள அவரது அனுபவத்தையும்  சீரடி சாயிபாபா ஆலய வலை தளம்  என்பதில் படித்து மகிழவும். இதில் ஒரு வியப்பான செய்தி என்ன என்றால் முதன் முதலாக ரூபன அக்ரஹாரம் என்பதில் உள்ள சிவம்மா  தாயியின் ஆலயம் பற்றிய செய்தியை நமக்கு அனுப்பியவர் இதே ராமோஜி ராவ்  அவர்களே.  அவர் எழுதியதை இதன் மீது கிளிக் செய்து படிக்கவும்.


அன்புள்ள சகோதரி மனிஷா
நான் நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் எனது சாயி பாபாவின் அனுபவத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இன்றுதான் சிவம்மா தாயீ ஆலயத்தில் நடைபெற்ற நாம சப்தா  வைபவத்தைப் பற்றிப் படித்தேன், அது என் இதயத்தை தொட்டு விட்டது. ஆகவே நான் எனக்கு கிடைத்த  அனுபவத்தை சிவமா தாயீ அனுபவம் -1 என்பதின் மூலம் துவக்கி வைக்கின்றேன். அதன் பிறகு இதை இன்னும் தொடர எண்ணம் கொண்டு உள்ளேன்.  இதை நான் எழுதவில்லை. பாபாவே வந்து எழுதுவதாகவே நினைக்கின்றேன்.  இதை சிவம்மா தாயியின் பிறந்த நாள் அன்று எழுதுவதற்கு நான் கொடுத்து வைத்தவள் என்று நினைக்கின்றேன்.
2009 ஆம் ஆண்டு என் கணவருக்கு சரியான வேலை இல்லை என்பதினால் நாங்கள் பல பிரச்சனைகளை சந்தித்தோம். நாங்கள் அப்போது ஜப்பான் நாட்டில் இருந்தோம். அதற்கு ஒன்றரை வருடத்துக்கு முன்னர்தான் நான் பாபாவை பற்றி அறிந்து இருந்தேன்.  ஒருநாள் எனக்கு ஒரு கனவு வந்து என்னை உலுக்கியது. அதில் என் வீட்டு பூஜை அறையில் இருந்து எதோ புகை வந்து கொண்டு இருந்தது போலவும், பாபாவின் கால்கள் கருப்பாக இருந்தது போலவும், அவர் கால்களை மஞ்சள் நிறப் போர்வையால் போர்த்தி இருப்பது போலவும் இருந்தது. ஆனால் அந்தப் புகை ஊதுபத்தியின் புகையா என்பது தெரியவில்லை. நான் பயந்து போய் அலறினேன்.  பாபாவின் பாதங்கள் கறுப்பாக இருந்ததைப் பார்த்ததினால் அது தீமையைக் குறிக்கும் என நினைத்து அதைக் குறித்து யாரிடமும் கூறவில்லை.
சில மாதங்கள் கழிந்தது. நாங்கள் இந்தியாவிற்குக் கிளம்பிச் சென்றோம். அப்போது உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி இருந்ததினால்  என் கணவருக்கு வேலை கிடைக்கவில்லை. வேறு வேலையைத் தேடிக் கொண்டு இருந்தபோது பெங்களூரில் ரூபன் அக்ரஹாரத்தில் இருந்த இருந்த சிவம்மா தாயீ ஆலயம் குறித்து எங்களுடைய ஒரு நண்பர் எங்களுக்கு  கூறினார். ஆனால் அது எங்கு உள்ளது என்பது தெரியவில்லை. ஒரு நாள் அங்கு சென்றுவிட்டு வர முடிவு செய்தோம். ஆனால் அது எங்கள் வீட்டிற்கு அருகில் இருந்தது என்பது பின்னர் தெரிய வந்தது.  ஆகவே அதை தேடிக் கொண்டு அங்கு சென்றோம்.
அந்த ஆலயம்  ஒரு பள்ளிக் கூட வளாகத்துக்குள்  இருந்தது.  எளிமையாக இருந்த அந்த ஆலயத்தைப் பார்த்து வியந்தோம். நாங்கள் உள்ளே நுழைந்ததும் என் கனவில் வந்ததைப் போன்ற  கருப்பு நிற பாபாவின் சிலையும், அதன் மீது போர்த்தப்பட்டு இருந்த மஞ்சள் நிற போர்வையையும் பார்த்து அசந்து விட்டேன். அப்போது எனக்கு  என்னுடைய தாயாரின் வீட்டிற்கு வந்து விட்டதைப் போன்ற மன நிறைவு ஏற்பட்டது.  என்னுடைய மற்ற அனுபவத்தை பிறகு  எழுதுகிறேன் . சிவம்மா தாயீக்கு பிடித்த 'சாய்சாய்சாய் ' என்ற மந்திரத்தை ஓதிக் கொண்டே இருப்போம்.
ராதா

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.