Monday, May 4, 2015

Shirdi Sai Baba's Grace-Experience Of Sai Devotees- Part: 60

ஸாயிராம்.
அனைவருக்கும் இந்த‌ வியாழக்கிழமை இனிமையாகவும், பாபாவின் நாளாகவும் அமைய வாழ்த்துகள்.
ஸாயிபாபாவின் ஆசிகள் எப்போதும் நம்முடனேயே இருக்கின்றன. அவரது பெருங்கருணையைக் காண, சாதாரண மனிதர்களாகிய நாம்தான் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
‌ஸாயி அடியார்களின் ஒருசில அனுபவங்களை இங்கே பகிர்கிறேன். ஜெய் ஸாயி ராம்.
மனிஷா 

1. என் மகனின் உபநயனத்திற்கு பாபா வருகை தந்து அவனை ஆசீர்வதித்தார் :

ஸாயிராம் மனிஷா தீதீ.பாபாவின் கருணையால் நீங்களும், உங்கள் குடும்பமும் நலம் வாழப் பிரார்த்திக்கிறேன்.

நெடுங்காலமாக உங்களுக்கு ஒரு கடிதம் எழுத நான் நினைத்திருக்கிறேன். பாபாவின் கருணையில்லாமல் இவ்வுலகில் எதுவும் நிகழ்வதில்லை. ஏதோ ஒரு உந்துதலால் இன்று எழுதத் தொடங்கிவிட்டேன்.சென்ற ஆண்டு நிகழ்ந்த ஒரு சம்பவத்தை இங்கே பகிர்கிறேன். பாபாவை வணங்கி, அவரது ஆசியுடன் இதனை எழுதுகிறேன். ஒரு வியாழக்கிழமையில் இதைப் பிரசுரிக்க வேண்டுகிறேன். ஸாயிராம்.

எனது குடும்பத்தாரும், நண்பர்களும் பெங்களூருவில் வசிக்கின்றனர். எனது கணவரின் உறவும், சுற்றமும் ஹைதராபாத, சென்னை, வட இந்தியா எனப் பல இடங்களில் வசிக்கின்றனர். எங்கள் திருமணத்திற்கு அவர்களில் பலர் வரமுடியாம‌ல் போனதாலும், திருமணத்திற்குப் பின் உடனே அமெரிக்கா வந்துவிட்டதாலும் அவர்களில் பலரை நான் சந்தித்ததில்லை.

சென்ற ஆண்டு மே மாதம் என் மகனுக்கு உபநயனம் செய்யத் தீர்மானித்து, இந்தியா கிளம்பும் முன்னரே, பத்திரிகைகளை அச்சடித்து, ஒஹையோவிலிருந்து கிளம்பும் முன்னர் இங்கிருக்கும் பாபா கோவிலுக்குச் சென்று, 'கண்டிப்பாக இந்த விழாவில் கலந்துகொள்ளவேண்டும், பாபா!' என அவரை வேண்டிக்கொண்டு இந்தியாவுக்குச் சென்றேன்.

குறிப்பிட்ட தினத்தன்று காயத்ரி மாதாவும், பாபாவும் தங்களது வருகையைக் காட்ட வேண்டும் என மனமுருகி வேண்டியிருந்தேன். நான் சந்திக்காத உறவினர்களெல்லாம் எங்கள் அழைப்பை ஏற்று நிகழ்ச்சியில் கலந்துகொண்டு என் மகனை ஆசீர்வதித்தனர்.

ஒரு அற்புதம் நிகழக் காத்திருந்தது அப்போது எங்களுக்குத் தெரியவில்லை.
பகலுணவின் போது பெரும்பாலானோர் கீழே சாப்பிடச் சென்றுவிட்டனர். ஹோமத்தின் போது ஒரு சிலரே மாடியில் இருந்தனர்.
அதிக வயது இல்லாத, ஆறடி உயரமுள்ள ஒரு முதியவர், வழுக்கைத் தலையும், நெற்றியில் பெரிய நாமமும், நீண்ட பைஜாமா, கஃப்னி அணிந்து, தோளில் ஒரு பையை மாட்டிக்கொண்டு அங்கே நுழைந்தார். இதே சாயலில் உள்ள என் உறவினரில் ஒருவரோ என நினைத்தேன். ஆனால் அவரும் அப்போது மாடியில்தான் இருந்தார். எனவே, யாரிவர் எனக் குழம்பினேன்.

அதைப் பற்றி அதிகம் சிந்திக்காமல் ஹோமத்தில் ஈடுபட்டோம். அந்தப் பெரியவர் முன் வரிசையில் ஒரு நாற்காலில் அமர்ந்தபடி என் பையனையே உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தார். முதியவர் என்பதால் அதிகம் பேசாமல் இருக்கிறார் என எண்ணினேன். வேறு யாரும் அவரிடம் வந்து பேச்சு கொடுக்கவும் இல்லை. அவரும் யாருடனும் பேசவும் இல்லை.
அதன் பின்னர், பூஜை மும்முரத்தில் அவரை மறந்துபோனேன். மாலையில் என் கணவரிடம் மற்ற எல்லாரையும் அறிமுகப்படுத்தியதுபோல, ஏன் அவரையும் எனக்கு அறிமுகம் செய்துவைக்கவில்லை என என் கணவரைக் கேட்டேன்.

அதற்கு அவர், வந்த பெரியவர் என் உறவினர் என நினைத்ததாகச் சொன்னார்! மேலும் ஒரு சிலரிடம் விசாரித்தபோது, அவர்களுக்கும் இந்தப் பெரியவரைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை. என் தாய்க்கும் இவரைப் பற்றித் தெரியவில்லை. அப்போது என் கணவர், பூஜையின்போது, நான் கண்ணை மூடிக்கொண்டிருக்கையில், அந்தப் பெரியவர் மேடைக்கு வந்து, ஜாடையாகக் கேட்டு அக்ஷதையை வாங்கி, என் பையனின் மீது தூவிவிட்டு ஒன்றும் பேசாமல் சென்றுவிட்டார் என்னும் தகவலைச் சொன்னார். காலை முதலே தெய்வீக மணத்தில் திளைத்த எனக்கு, பாபாதான் இந்த வடிவத்தில் வந்து, விழாவில் கலந்துகொண்டு, எங்களை ஆசீர்வதித்திருக்கிறார் எனப் புரிந்ததும் என் கண்களிலிருந்து கண்ணீர் பெருகியது. இன்றும் என்னால் அதை மறக்க முடியவில்லை.

அதன் பிறகு, நாங்கள் எடுத்த புகைப்படங்களில் தேடியபோதும், எதிலும் அவரைக் காண இயலவில்லை. வார்த்தைகளால் விவரிக்க முடியாத இன்ப அனுபவம் இது. என் ஆழ்மனத்திலிருந்து பாபாவுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன்.

எப்போதும் அவரது திருவடியில்,
ஜெய் ஸாயிராம்.
மீனா.

2. எனது ஹெச்-1 விசாவில் ஸாயியின் லீலை!:

இந்த அற்புத சேவையைச் செய்துவரும் மனிஷா தீதியின் பாதங்களை நமஸ்கரித்து, இதனை படிக்கும் அனைவரையும் வணங்குகிறேன்.

அமெரிக்காவில் எல்-1 விசாவில் இருக்கிறோம். என் மகன் ஸ்ரீ நிகேஷ் நோய் காரணமாக மிச்சிகனில் இருக்கும் குழைந்தை நல மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதன் காரணமாக [http://www.shirdisaibabakripa.org/2012/08/sai-leelas-on-sai-blessed-kid-shri.html]எங்களது விசாவை நீட்டிக்க முடிந்திருந்தது. எனது அலுவலகத்தார் ஹெச்-1 விசா ஏற்பாடு செய்வதில்லை எனினும், ஒரு சில விசேஷ காரணங்களுக்கென இதனைச் செய்வதை சென்ற ஆண்டு முதல் துவங்கியிருந்தது.

நான் ஒன்றும் முக்கியப் பணியில் இல்லாத காரணத்தால், சற்றுத் தயக்கத்துடனேயே எனது விசாவை மாற்றித்தர இயலுமா எனக் கேட்டேன். என் மகனின் உடல்நிலையைக் காரணமாகக் காட்டவில்லை. 2013 ஜனவரியில் இப்படி விசா மாற்றம் செய்யப்படுவோரின் பெயர்களை விரைவில் அறிவிக்க இருப்பதாகச் செய்தி வந்தது. பாபாவிடம் இது குறித்து மிகவும் வேண்டினேன். அப்படியே செய்வதாக பாபாவிடமிருந்து பதில் வந்தது. ஃபிப்ரவரி மாதம் வந்த அட்டவணையில் வேறு பல காரணங்களுக்காக என் பெயர் இடம் பெறவில்லை. என் மகனின் நிலையைப் பற்றி எடுத்துக் கூறியும், எனது விசாவைப் புதுப்பிக்க இயலாது என மார்ச் மாதம் வந்த கடிதம் தெரிவித்தது.

ஏமாற்றமடைந்த‌ போதிலும் நம்பிக்கையைக் கைவிடவில்லை. மார்ச் மாதம் 14-ம் தேதி வியாழக்கிழமை அன்று, அலுவலுக்கு வந்ததும், பாபாவை வேண்டிக்கொண்டு, 9 வார விரதம் துவங்க சங்கல்பம் செய்துகொண்டேன். சுமார் ஒரு மணி நேரம் கழித்து, எனது விசா மாற்றத்தை அலுவலகம் ஏற்றுக்கொள்வதாகவும், அதற்கான ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறும் மேலாளரிடமிருந்து தகவல் வந்தது. அனைத்தும் பாபாவின் அருளே!

இன்னும் ஒரு திருப்பம் காத்திருந்தது. அந்த ஆண்டு அமெரிக்க அரசு லாட்டரி முறையில் விசாக்களைத் தேர்வு செய்ய முடிவெடுத்து, தேர்வு செய்யப்பட்டோருக்கு ஏப்ரல் 7 முதல் கடிதங்கள் வரத் தொடங்கின. என்னைத் தவிர மற்ற அனைவருக்கும் அறிவிப்பு வந்தாகி விட்டது. சற்றே ஏமாற்றத்துடன் அனது அலைபேசி மூலம் பாபாவிடம் இது பற்றிக் கேட்க, 'இன்னும் 24 மணி நேரத்தில் நல்ல சேதி வரும்' எனப் பதில் கிடைத்தது. மறுநாள் பாபாவின் நாள் என்பதால், நல்ல சேதி வரும் என நம்பினேன். அதேபோல, காலை 11 மணிக்கு, எனது விசா அங்கிகரிக்கப்பட்ட சேதி கிடைத்தது.

கண்களில் நீர் வழிய பாபாவுக்கு நன்றி கூறினேன். நடந்த விவரங்களை அப்படியே எழுதி எனது மேலாளருக்கு அனுப்பினேன். அதைக் கண்டு வியந்த அவர், அந்த அப்ப்ளிகேஷனை தனக்கும் வேண்டுமெனத் தெரிவித்தார்.

இதன் பின்னரும் சில சோதனைகள் காத்திருந்தன. எனது பொறுமையையும், நம்பிக்கையையும் சோதிக்க விரும்பினார் பாபா. RFE என்னும் சாட்சியங்களுக்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அனுப்புமாறு விசா அலுவலகம் ஆணையிட்டது. எனக்கு வந்ததோ சற்று கடினமான படிவம். எப்படி பூர்த்தி செய்வதெனத் திகைத்திருந்த வேளையில், எனது நண்பர் ஒருவர் மூலம் அவருக்குத் தெரிந்த இன்னொருவரின் அறிமுகம் கிடைத்தது. சமீபத்தில் அவருக்கும் இதே போன்ற நிலை ஏற்பட்டிருந்து சரி செய்திருந்த அவரது துணையுடன் பொறுமையாக அனைத்தையும் பூர்த்தி செய்து முடிவு நாளுக்கு ஒரு நாள் முன்னதாக அக். 1-ம் தேதி அன்று அதை அனுப்பி வைத்தேன்.

அனுப்பிய பின்னர் ஸாயி ஸத்சரிதம் படிக்கத் தொடங்கினேன். அக். 19-ம் தேதி அன்று என் மனைவி விசா நிலை குறித்து இணையத்தில் தேடியபோது, அக். 17-ம் தேதியே அது ஏற்றுக்கொள்ளப்பட்டதை அறிந்து மகிழ்ந்தோம். எங்களது உறுதிக்குப் பரிசாக, நீண்ட காலத்திற்குத் தங்கிக்கொள்ளும் வசதியுடன் விசா அமைந்தது.

இதேபோலவே, பொறுமையுடனும், நம்பிக்கையுடனும் காத்திருக்குமாறு, அனைவரையும் வணங்கி வேண்டிக் கொள்கிறேன். இதனை இங்கே பகிர்ந்துகொள்ள அனுமதித்த பாபாவுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம்.


3. 'பாபா எப்போதும் மறுப்பதில்லை!' :

எனது பணிப்பெண்ணின் மகளுக்கு பேறுகாலம் என்றாலே கஷ்டம்தான். பிறந்த சில மணி நேரத்திலேயே அவளது முதல் குழந்தை இறந்து போனது. இரண்டாம் பிரசவமும் இறுதி வரை கடினமே. மருத்துவரிடம் ஒவ்வொரு முறை செல்லும்போதும், அவளும், அவளது தாயும் மேலும் மனவருத்தத்திலேயே ஆழந்தனர். அப்போதுதான் நான் அவர்களுக்கு பாபாவை பற்றிய தகவல் தந்து அவர் மீது முழு நம்பிக்கை வைக்குமாறும், 7-ம் மாதத்திற்குப் பிறகு முடிந்தால் அசைவ உணவைத் தவிர்க்குமாறும் கூறினேன்.
அவர்களது முடிவான நம்பிக்கை பலன் தந்தது, சில நாட்களுக்கு முன், அவள் என்னை அழைத்து, அவளது மகளுக்கு பாபா அருளால், அறுவை சிகிச்சை மூலமாக் அஒரு ஆண் குழந்தை இறந்து, தாயும், சேயும் நலமெனத் தெரிவித்தாள்.

பாபா எப்போதும் மறுப்பதில்லை!

மேலுமொரு அற்புத அனுபவம் இன்று காலையில்..ஒரு திருமண விழாவில். மண்ட‌பத்துக்குள் நுழைந்தவுடனேயே ஒரு சிறு மூலையில் அலங்கரிக்கப்பட்ட பாபா சிலை அமர்ந்திருந்தது. பெண் வீட்டார் பாபா பக்தர்களாம். வழக்கமாக பூ, பொம்மை அல்லது காய்கறி அலங்காரம் எனத்தான் இருக்கும். ஆனால் இங்கோ அழகிய சிறு மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்ட பாபா விளக்குகள் மின்ன அழகே உருவாக அமர்ந்திருந்தார். மிகவும் அற்புதம்!
ஓம் ஸாயிராம்.

4. "ஒரு முக்கிய‌த் தேர்வில் பாபா என‌க்கு உத‌வினார்." :

பாபாவிட‌ம் உறுதி கூறிய‌ப‌டியே இந்த‌ அனுப‌வ‌த்தை எழுதுகிறேன். பாபா எப்போதும் எங்கும் ந‌ம்முட‌ன் இருக்கிறார் என்ப‌தை இது உறுதிப்ப‌டுத்துகிற‌து.

சென்ற‌ வியாழ‌ன‌ன்று ஒரு முக்கிய‌த் தேர்வு எழுத‌வென‌ வீட்டிலிருந்து கிள‌ம்பி என‌து காரில் தேர்வு நிலைய‌ம் சென்ற‌டைந்தேன்.
செல்லும் வ‌ழியில் ஒரு பேருந்தின் பின்னால் ஒரு பெரிய‌ பாபா ப‌ட‌ம் இருந்த‌தைக் க‌ண்டு ம‌கிழ்ச்சி அடைந்தேன். நிலைய‌ம் சென்ற‌ பின்ன‌ரே, தேர்வு எழுத‌ அனும‌திக்கும் ஒரு முக்கிய‌ ஆவ‌ண‌த்தை வீட்டிலேயே விட்டுவிட்டு வ‌ந்தது தெரிந்த‌து.

வீடு சென்று திரும்பிவ‌ர‌ ஒரு ம‌ணி நேர‌ம் ஆகும் என்ப‌தால், என்ன‌ செய்வ‌தென‌த் தெரியாம‌ல் திகைத்தேன். ஆவ‌ண‌த்தின் ந‌க‌ல் இருந்தால் கூட‌ப் போதுமென‌ நிலைய‌த் தேர்வாள‌ர் சொன்னார். ஆனால் ஏதும் புரியாது திகைத்தேன்.

அப்போதுதான், இந்த‌ ஆவ‌ண‌ங்க‌ளை எல்லாம் 'ஸ்கேன்' செய்து க‌ணினியில் சேமித்து வைத்திருப்ப‌து நினைவுக்கு வ‌ந்த‌து. ஆனால், க‌ணினி ஒன்றும் அங்கே இல்லாத‌தால், என்ன‌ செய்ய‌லாமென‌க் கேட்ட‌போது, அருகிலிருக்கும் 'இன்டெர்நெட் நிலைய‌த்துக்கு' வ‌ழி காட்டினார் அவ‌ர். அத‌ன் பெய‌ர் 'ஸாயி இன்டெர்நெட் க‌ஃபே'! அவ‌ச‌ர‌ அவ‌ச‌ர‌மாக‌ அங்கே சென்று ந‌க‌ல் எடுத்துக்கொண்டு, நேர‌த்துக்கு தேர்வு எழுத‌ச் சென்றேன். எங்கும் நிறை பாபாவின் எண்ண‌ற்ற‌ க‌ருணைக்கு என்ன‌ கைம்மாறு செய்வேன்!.
ஜெய் ஸாயிராம்.

(Uploaded by : Santhipriya

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.