Shirdi Sai Baba-Operating in All Lok.
அனைத்து உலகிலும் வாழ்ந்து கொண்டு இருப்பவர் பாபா
பாபாவின் பக்கத்தில் இருந்து அவருடைய செயல்களை பார்த்துக் கொண்டு இருந்த நார்க்கேயின் கருத்து இது.
பாபாவின் வெளி தோற்றதையோ இல்லை அவருடைய வெளி வேஷத்தையோ பார்த்து அவரை எடை போட முயன்றால் அது தவறாகிவிடும். தம்மிடம் வந்து உதவி கேட்பவர்களுக்கு உதவுவார், தேவைபட்டதை தருவார். தம்மிடம் வந்து வசதிகளை மட்டுமே கேட்டுச் சென்றவர்களுக்கு தன்னுடைய சுய ரூபத்தை காட்டியதே இல்லை. ஆனால் தன்னிடம் வந்து உண்மையான பக்தி செலுத்தியவர்களுக்கு தான் யார் என்பதை காட்டியுள்ளார். அதில் நார்க்கேயும் ஒருவர். ஆகவே பாபா தன்னைப்பற்றி அறிந்துகொள்ள நிறைய சந்தர்ப்பம் தந்து உள்ளார். பாபா நார்க்கேயை உஷார் மனிதர் என்பார். சில நேரங்களில் அவரை துப்யா ,அதாவது மந்தி எனவும் கூறுவர். பாபா எவரிடமாவது எதுவும் கேட்டால் அதில் உள் அர்த்தம் இருக்கும் என்பதை நார்க்கே நன்கு புரிந்து வைத்திருந்தார்.
பாபாவை மிகக் கூர்ந்து பார்த்தவர்களுக்கே புரியும் அவர் நாம் பார்க்கும் இந்த உலகில் மட்டுமே வாழ்ந்து கொண்டு இருக்கவில்லை , வேறு உலகங்களிலும் சஞ்சாரித்துக்கொண்டு இருந்துள்ளார். அவர் கூறும் அனைத்து வார்த்தைகளும்,மொழியும் உள் அர்த்தம் கொண்டவை. உவமைகளாக, கதைகளாக அனைவரையும் புரிந்துகொள்ள வைக்கும் முறையில் கூறுவார். ஒரு முறை ஒருவர் வந்து பாபாவின் பேச்சைக் கேட்டவுடன் அவர் குறித்து தமது கருத்தை இப்படிக் கூறினாராம்' என்ன மனிதர் இவர். எந்த ஒரு சாமியாரும் பணம் பணம் என பணத்தைப் பற்றியே பேசிக் கொண்டு இருப்பதாக நான் பார்த்ததே இல்லை'. பாவம் அந்த மனிதருக்குப் புரிந்திருக்கவில்லை , பாபா பணம் பணம் என இடையிடையே கூறியது மனிதர்களுக்கு இருக்க வேண்டிய நேர்மையையே தவிர பணம் என்ற பொருளை அல்ல. ஆகவே பாபாவின் வெளி தோற்றத்தையோ இல்லை மேலோட்டமான பேச்சையோ கேட்டு அவரை புரிந்து கொள்ள முடியாது. பாபா ஒரு புதிர். அவரை உள்ளர்த்தமாக நேசித்தால் மட்டுமே அவரை புரிந்து கொள்ள முடியும் .
© Shirdi Sai Baba Stories In Tamil.

Loading
0 comments:
Post a Comment