Let this man go and beg for Food.
இன்று இந்த ஆள் போய் பிட்சை எடுக்கட்டும்
நார்க்கேயின் வாழ்கையில் நடந்த இன்னொரு சம்பவம் இது நீண்ட நாட்களுக்குப் பின் நார்க்கே சீரடிக்குச் சென்று இருந்தார் சென்றதும் அங்கு இப்போது பாபாவிற்கு யார் சேவை செய்கின்றார்கள் என சிலரைக் கேட்ட பொழுது அவர்களில் ஒருவர், வாமன் ராவ் படேல் என்பவரே பாபாவிற்க்காக பிட்சை எடுத்துக்கொண்டு வருவதாகக் கூறியதை கேட்டவர், 'அந்த வேலையை எனக்கு என் கொடுத்திருக்கக் கூடாது?' என மனதில் நினைத்தார்
தரிசனத்திற்கு நேரம் வந்தது. பூனாவில் இருந்து நேரடியாக தரிசனத்திற்கு வந்து இருந்ததினால் முழு சூட் ஷர்ட் மற்றும் டை போன்றவை அணிந்துகொண்டே அவர் பாபாவை பார்க்கச் சென்றார். அப்போது நேரம் ஆகி விட்டதினால் வாமன் ராவ் படேலை பிட்சை எடுக்க அனுப்புமாறு பாபாவிடம் சிலர் நினைவு படுத்த மூன்று முறை கேட்டும் பதில் சொல்லாதவர் திடீர் என ' என்று என்று இவன் பிட்சைக்கு செல்லட்டும்' என நார்க்கேயை காட்டினார்.
நார்க்கே அதே டிரஸ்சில் சென்று பிட்சை எடுத்தது மட்டும் அல்ல, அடுத்த நான்கு மாதங்களும் பாபாவிர்காக சாதரண டிரஸ்சில் சென்ற பிட்சை எடுத்துத் தந்தார். யாருக்கும் பாபா ஏன் பிட்சை எடுக்க நார்க்கேயை அனுப்பினார் எனத் தெரியவில்லை.உண்மையில் நார்க்கேயின் மனதில் தாம் அந்த வேலையை பாபாவுக்கு செய்ய வேண்டும் என இருந்ததினால்தான் அவரை பாபா அதை செய்ய அனுப்பினார். பாபாவிற்கு பிட்சை எடுத்துத் தருவது என்பது மிகப் புண்ணியம் செய்தவர்களுக்கே கிடைக்கும் பாக்கியம் ஆகும். ஆகவே நார்க்கே மிகப் பெரிய புண்ணியவான் என்பதில் சந்தேகம் இல்லை.
(Translated into Tamil by Santhipriya)

Loading
0 comments:
Post a Comment