B.V Narsimha Swamiji-Lectures and Discourses.
நரசிம்மஸ்வாமி அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்தார், 'பத்திரிகைகளை பல மொழிகளிலும் வெளியிட வேண்டும் . புத்தகங்களும் வெளியிடப்பட வேண்டும். கூட்டங்கள், சொற்பொழிவுகள், கீர்த்தனைகளை நாடெங்கும் நடத்த வேண்டும். அனுதினமும் பூஜைகள் மற்றும் பஜனைகளை நடத்த வேண்டும். நாட்டின் ஒரு இடத்தில் இருந்து மறு இடம் வரை அனைத்திலும் சாயிநாதர் என்ற பெயர் பரவவேண்டும். அப்படி சொன்னது மட்டும் அல்ல, அதை அவர் முழு மூச்சுடன் நடத்தி வெற்றியும் கண்டார்.
ஒரு பக்கத்தில் நரசிம்மசுவாமி புத்தகங்களை வெளியிட்டுக் கொண்டு இருந்தார். அதே சமயம் அவர் அகில இந்தியாவிலும் சுற்றுப் பயணம் மேற்கொண்டும் வந்து கொண்டு இருந்தார். மூலை, முடுக்குகள் என அனைத்து இடங்களுக்கும் சென்று தனியார் வீடுகளில் பூஜைகள், சாயி சமாஜத்தை நிறுவுதல், சொற்பொழிவுகள், சாயி வந்தனைகள், பஜனைகள், தனியார்களுக்கும், கூட்டத்தினருக்கும் அறிவுரைகள் செய்வது போன்றவற்றை செய்தபடி சாயி பிரசாரத்தை மேற்கொண்டிருந்தார். அவருடன் சில சமயங்களில் எவராவது சென்றனர். பல சமயங்களில் அவர் தனியாகவே பயணம் செய்தார். ரயில் மூன்றாம் வகுப்பிலேயே பயணம் செய்தார். அது மட்டும் அல்ல போக வேண்டிய இடங்களுக்கு ஜட்கா, பஸ், டோங்கா, மோட்டார் கார் என எது கிடைத்ததோ அதில் பயணம் செய்தார். தான் தங்கும் இடம் எப்படிப்பட்டது என்பதைக் குறித்து அவர் கவலைப்படவில்லை. தனக்கு வந்த கூட்டத்தை பற்றியும் கவலைபடவில்லை. சிறியதோ, பெரியதோ எப்படிப்பட்ட கூட்டமானாலும் அவற்றில் பேசினார். பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், தொழிலாளிகள், வீடுகள், சங்கங்கள், பள்ளிகள், பொதுஜனம் கூடும் இடங்கள் என எந்த இடமானாலும் அங்கெல்லாம் சென்று சாயி பிரசாரம் மேற்கொண்டார். தான் சென்றபொழுது சாயி அஷ்டோத்ரம் புத்தகத்தையும் , சாயினாதருடைய சிறிய படத்தையும் ,உடியையும் கொண்டு சென்று அவற்றை விநியோகித்தார். அவர் ஆற்றிய சிறப்புரைகள் மற்றும் செய்திகள் அவரிடம் வந்தவர்களுக்கு புத்துணர்ச்சி கொடுப்பதாக இருந்தது.
1940 தாம் ஆண்டு முதல் 1950 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்த அனைத்து இடங்களுக்கும் சென்றுவிட்டார். அதன் பின் டெல்லி , பனாரஸ், அல்லாஹாபாத், கல்கத்தா போன்ற இடங்களுக்கும் சென்று பிரசாரம் மேற்கொண்டார். 1943 ஆம் ஆண்டில் மும்பை, புசாவல் போன்ற இடங்களுக்கு பயணம் மேற்கொண்டார். பனாரசில் தியசாபிகல் சொசைட்டி, சென்ட்ரல் இந்து காலேஜ் ,மற்றும் கல்கத்தாவில் ராமகிருஷ்ண இன்ஸ்டிட்யூட் போன்ற இடங்களுக்கும் விஜயம் செய்தார். அலஹாபாத்தில் அகில இந்திய சாயி சமாஜத்தை நிறுவினார். 1940 முதல் 1943 வரை கல்கத்தாவுக்கு மூன்றுமுறை சென்று சாயி சமாஜங்களை நிறுவினார். கரக்பூர், அஸ்ஸாமில் பல இடங்கள், பதன, ஜம்ஷட்புர் போன்ற இடங்களும் சென்றார்.
1946 ஆம் ஆண்டுவரை அறுபத்தி ஐந்து உபசமாஜங்களை நிறுவினார். பல்வேறு இடங்களில் பதினைந்து சாய் ஆலயங்கள் தோன்றின. தான் பயணம் செய்துகொண்டு இருந்தாலும் சாயி சுதா பத்திரிகையை தவறாது வெளியிட்டார். அவர் சென்றுவிட்டு திருப்பிய இடங்களில் இருந்து அவர் செய்த பிரசாரத்தினால் ஏற்பட்டிருந்த மாற்றங்களை பற்றிய செய்திகளை பத்திரிகையில் வெளியிட அவருடைய ஆட்கள் தகவல் அனுப்பி வந்தனர்.
அந்த நேரங்களில் சாயினாதருடைய அனுபவங்களை பலர் பெற்று அவற்றை அவரவர் கூறத் துவங்க சாயி பெருமை இன்னும் பரவியது. அவை பத்திரிகையில் வெளியாயின. ஆரம்பகால கட்டத்தில் சாயினாதருடைய படங்கள், மோதிரங்கள், லகேட்டுகள் , உதி போன்றவற்றின் தேவை மேலும் மேலும் அதிகரித்தது. சாயி வழிபாட்டை கடைபிடிக்க வழி முறைகள் வகுக்கப்பட்டன. அதற்காக சாயி பூஜா விதி மற்றும் சாயி சஹாஸ்ரனாமா என்ற புத்தகங்களை நரசிம்மசுவாமி வெளியிட்டார். அவை தெலுங்கு , கன்னடம், சமஸ்க்ருதம், தமிழ் போன்ற மொழிகளில் வெளியிடப்பட்டன. சாயிநாத மனனம் என்ற சமஸ்க்ருத பாடலை இயற்றி அதை தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் வெளியிட்டார்.
1943 ஆம் ஆண்டு ஜனவரி ஏழாம் தேதியன்று கோயம்பத்தூரில் ஒரு அற்புத சம்பவம் நடந்தது. ஒரு மைதானத்தில் நடந்த பஜனை விழாவில், மக்கள் கொண்டுவந்து போட்ட பூக்களின் இடையே சாயினாதருடைய படத்திற்கு முன்பாக சங்கும் சக்கரமும் போட்ட தலையைக் கொண்ட ஒரு ராஜ நாகப் பாம்பு படம் எடுத்து ஆடியது. சுமார் இருபத்தி நான்கு மணிநேரம் அங்கு இருந்த பின் அது தானாக அருகில் இருந்த புற்றுக்குள் சென்று விட்டது. அந்த அதிசியக் காட்சியைக் கண்ட மக்கள் அது சாயினாதரே பாம்பு உருவில் வந்ததைக் காட்டியது என எண்ணினார்கள். ஏ. வரதராசு என்பவர் அந்த இடத்தை வாங்கி சயிநாதர் ஆலயம் கட்டினார். அதுவே என்று நாக சாயி ஆலயம் என அழைக்கப்படுகின்றது. அந்த நிகழ்ச்சிக்குப் பின் இன்னும் பலர் சாயி பக்தர்கள் ஆயினர். ஆயிரக்கணக்கானோர் அந்த இயக்கத்தில் சேர்ந்தனர்.
----------------
சாயிபாபாவுக்கு தனக்கு ஒரு சீடர் கிடைக்க பதினெட்டு வருட காலம் காத்து\இருக்க வேண்டி இருந்தது. ஆனால் நரசிம்மஸ்வாமிக்கோ அத்தனைக் காலம் காத்திருக்கத் தேவை இன்றி இருந்தது. அவருக்கு ஊட்டியில் ராதாகிருஷ்ணன் என்ற இளம் துடிப்பான இளைஞர் கிடைத்தார். அவரே பின் காலத்தில் சாயிபதானந்த ராதாகிருஷ்ண சுவாமிஜி என்ற பெயர் பெற்று நரசிம்மஸ்வாமியிடம் இருந்து சாயி சமாஜப் பணிகளை ஏற்று, சாயி பிரசாரத்தை மேற்கொண்டார்.
குரு சிஷ்யர்களுடைய சந்திப்பே சுவையானது. ஒருமுறை ஊட்டியில் இருந்தவர்கள் சாயி சமாஜத்தின் நிறுவரான நரசிமச்வாமியை ஊட்டிக்கு வந்து அங்கிருந்த செயின்ட் ஜோசப் மெட்ரிகுலேசன் பள்ளியில் வந்து சொற்பொழிவு ஆற்றுமாறு கேட்டுக் கொண்டனர். அவரும் அங்கு சென்றிருந்தார். தான் படம் பார்க்க விரும்புவதால் சொற்பொழிவுக்கு வரவில்லை எனக் கூறிவிட்ட ராதாகிருஷ்ணனுடைய நண்பர்கள் அவரை அந்த ஹாலிலேயே இருக்குமாறும் தாங்கள் சுவாமிஜியை அழைத்து வருவதாகவும் கூறிச் சென்றனர் . அப்போது திடீரென ஹாலுக்குள் வெள்ளை உடை அணிந்த நரசிம்மசுவாமி வந்து நுழைந்து தான் வர வேண்டிய பஸ் தாமதமாகிவிட்டதினால் வேறு பஸ் பிடித்து வந்துவிட்டதாகவும் , தான் சொற்பொழிவுக்கு கிளம்பத் தயாராக உள்ளதாகவும் , ராதாகிருஷ்ணன் தயாரா எனவும் அவரிடம் கேட்டார் . திடீரென வந்தவரைக் கண்டு திகைத்து நின்ற ராதாகிருஷ்ணன் வேறு வழி இன்றி இயந்திரம் போல சரி எனக் கூறவும் தன பையில் இருந்து ஒரு சாயி பாபா படத்தை எடுத்த நரசிம்மசுவாமி அதை ஒரு நாற்காலியில் வைத்துவிட்டு பூஜை செய்யுமாறுக் கூறினார் . ராதாகிருஷ்ணன் தனக்கு பூஜை செய்ய தெரியாது எனவும் மேலும் தான் சூட்டு போட்டுக் கொண்டு உள்ளதால் தயங்குவதாகவும் கூறினார். மேலும் ராதகிருஷ்ணன் தனக்கு பூஜை செய்ய தெரியாது , வேட்டி கட்டிக்கொண்டு இருந்தாலாவது பரவாயில்லை அல்லவா என்று கூற, சிரித்தபடி நரசிம்மஸ்வாமி கூறினார் ''அதனால் ஒன்றும் இல்லை, அவை வெளி வேஷங்கள்தான் , பாபா வெளி வேஷத்தைக் கவனிப்பது இல்ல, மனதுதான் முக்கியம்'' என்றார். ராதாகிருஷ்ணனுக்கு தர்ம சங்கடமாகி விட்டது. தன்னுடைய நண்பர்களிடமும் எதுவம் கூறவில்லை, அதே சமயம் வந்திருக்கும் பெரியவரையும் அவமதிக்க முடியாது. என்ன வேண்டுமானாலும் வரட்டும் எனக் கருதி, பூஜையையும் செய்துவிட்டு, மங்கள ஆரத்தியையும் முடித்தார்.
கூடம் முடிந்ததும் ராதகிருஷ்ணன் அவரை தன்னுடைய சகோதரர் திரு.வீ.எஸ். ராஜகோபால் யாரிடம் அழைத்துச் சென்றார். அந்த வீட்டில் நரசிம்மஸ்வாமி சாயி பாபாவின் மூர்திவை வைத்து பூஜைகளை செய்தார். பின்னர் ராஜகோபால இயற் ஊட்டியின் சாயி சமாஜத்தின் பொறுப்பை ஏற்றார். அனைத்தும் முடிந்ததும் ராதகிருஷ்ணன் நரசிம்மஸ்வாமியை பஸ் ஸ்டாண்டில் கொண்டு விட்டார். வழியில் செல்லும்போது நரசிம்மஸ்வாமியை ராதகிருஷ்ணன் கேட்டார்,
'' சுவாமி ஒருவருக்கு வைக்கும் பெயருக்கும் ஒருவருக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்? என்னுடைய பெயர் ராதகிருஷ்ணன் என இருந்தாலும், எதற்காக நான் அந்த பெயரை உபயோகிக்க வேண்டும் என்று புரியவில்லை.'
Chapter 1-B.V Narsimha Swami ji-Birth and Childhood.
Chapter 2.-B.V Narsimha Swami ji -Life in Salem.
Chapter 3-B.V Narsimha Swami ji-Public Life.
Chapter 4-B.V Narsimha Swami ji- Turning Point .
Chapter 5.B.V Narsimha Swami ji-In Search of God.
Chapter 6. B.V Narsimha Swami ji -Life in Ramana Maharshi Ashram.
Chapter 7. B.V Narsimha Swamiji-Towards Pandharpur.
Chapter 9.B.V Narsimha Swami ji-From 1932-1934 continued.
Chapter 10.B.V Narsimha Swami ji-Life in Sakori.
Chapter 11. B.V Narsimha Swami ji-Face to face with Master .
Chapter 12. B.V Narsimha Swami ji-Sai Prachar.
Chapter 13.B.V Narsimha Swamiji-Baba Himself Favors the Movement.
Chapter 15. B.V Narsimha Swami Ji-Only Aim.
Chapter 16.B.V Narsimha Swami ji-Early Days of His Mission
Chapter 17.B.V Narsimha Swami ji -Lockets and Calenders.
0 comments:
Post a Comment