Baba communicated through your website-Experience by Suman.
அன்பானவர்களே
இந்து சாயி பக்தர் சுமன் என்பவறின் அனுபவத்தைப் படியுங்கள். இது சாயியின் மீதான சிரத்தை மற்றும் பக்தியை வெளிப்படுத்தும் விதத்தில் உள்ளது
மனிஷா
நான் கடந்த நான்கு வருடங்களாக அர்திரைடிஸ் என்ற நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தேன். ஒவ்வொரு நாளும் நரக வேதனைதான். அதனால் வேலையும் போய்விட திண்டாடினேன். 2005 ஆம் ஆண்டு முதல் நான் சாயியின் பக்தர். அவருடைய அருளினால் பொது ஜன தொடர்ப்பு சம்மந்தமான படிப்பு படிக்க இடம் கிடைத்தாலும் எனக்கு வந்திருந்த வியாதியினால் மிகவும் அவஸ்தைப் பட்டேன்.
நான் அந்த வியாதியை குணப்படுத்துமாறு சாயி பாபாவை வேண்டிக் கொண்டே இருந்தாலும் பூர்வ ஜென்ம கர்மாவினாலோ என்னவோ அது குணமடையவே இல்லை. அப்போதுதான் உங்களுடைய இணையதளத்தைப் பார்த்தேன். அதைப் படிக்குமாறு என்ன காரணமாகத் தோன்றியதோ தெரியாது, அதில் வெளியான பக்தர்களின் அனுபவங்களை தொடர்ந்து படிக்கப் படிக்க எனக்கு சாயி மீதான பக்தி பெருகியது. என் மன வருத்தம் குறையத் துவங்கியது.
அப்போது நான் நினைத்தேன், என்னுடைய நோய் ஒரு நாள் சாயியின் அருளினால் நிச்சயமாக குணமடையும்.
இதற்கு முன்னால் நான் உங்கள் இணையதளத்தில் என்னுடன் சாயி பேசினார் என்பதை பற்றி எழுதி இருந்தேன். நான் சாயி சரித்திரத்தை தொடர்ந்து இரண்டு வாரம் படிக்கத் துவங்கினேன். அதன் பின் நான் வேண்டிக் கொண்டபடி அவருடைய ஆலயத்துக்குச் சென்று அவர் பாதத்தில் ஒரு பிங்க் நிற சால்வையை வைத்து வணங்கினேன். அதனுடன் என்னுடைய பிராத்தனையும் முடிந்தது. அங்கு தினம் தினம் வந்து அப்படிப்பட்ட காணிக்கைகளை பலரும் செலுத்துவதினால் பண்டிதர்கள் அதை உடனே எடுத்து சில பக்தர்களுக்கு தந்து விடுவார்கள். அதற்க்கு முன் இது நடந்தது.
நான் வியாழர் கிழமை சாயி சரித்திரம் படிக்கத் துவங்கினேன். அது முடிந்ததும் அடுத்த புதன் கிழமை சூஜி ஹல்வா பிரசாதம் செய்து அதை பூஜையில் வைத்து பூஜை செய்த பின் சிறிது பிரசாதம் எடுத்துக் கொண்டேன். அன்று மதியம் சாயி ஆலயம் செல்லக் கிளம்பிய நான் மீதி இருந்த ஹல்வாவை தருமாறும் அதை கொண்டுபோய் ஆலயத்தில் பாபாவின் பாதங்களில் வைத்து வணங்குவதாக என்னுடைய தாயாரிடம் கூற அவரோ அனைத்தும் தீர்ந்து விட்டதாகக் கூற நான் வருந்தினேன்.
ஆலயத்துக்கு கிளம்பிய நான் ஒரு ஆரஞ்சுப் பழம் மற்றும் சிறிது மலரை வாங்கிக் கொண்டேன். வழியில் இருந்த என்னுடைய ஒன்று விட்ட சகோதரனின் வீடும் சென்றேன். அவர் வீட்டில் பாபாவின் அழகான பட காலண்டரைப் பார்த்தேன். அங்கு வேலையே முடித்துக் கொண்டு பாபாவின் ஆலயம் சென்றேன். அங்கும் அதே காலண்டரை துனிக்கு பக்கத்தில் பார்த்தேன். அது எனக்கு விசித்திரமாகவே இருந்தது. என்னுடன் சாயி உள்ளார் என்று மனம் கூறியது.
ஆலயம் சென்று பாபாவை வணங்கிவிட்டு எழுந்தேன். பண்டிதர் ஒரு மாலையையும் சிறிது பிரசாதமும் தந்தார். என்ன ஆச்சர்யம். அவர் கொடுத்த பிரசாதம் சூஜி ஹல்வா. நான் பாபாவின் கருணையை எண்ணி வியந்து மேலே நிமிர்ந்து பார்த்தேன். அவர் காலடியில் நான் போட்ட அதே பிங்க் நிற சால்வை மேலும் பல சால்வையுடன் இருந்தது. அதை அவர் என்னுடைய பக்திக்கு காட்டிய அருள் என்பதைத் தவிர வேறு என்ன கூறுவது. இத்தனைக்கும் நான் அதைப் போட்டப் பின் சாயியை அலங்கரிக்க அவரை தண்ணீரினால் அபிஷேகம் செய்து இருந்திருக்கிறார்கள். ஆனாலும் மீண்டும் அவற்றை அவர் காலடியில் அன்று வைத்து இருந்திருக்கிறார்கள்.
இவற்றை எல்லாம் கண்டப் பின்னும் நான் என்னுடைய நோயை சாயிபாபா விலக்குவார் என்று நம்பியபடி இன்றுவரை அவர் மீது கொண்டு உள்ள பக்தியை குறைத்துக் கொள்ளாமல் இருந்து வருகிறேன். எனக்கும் புரிந்தது , அவர் குழந்தைகளை எப்போது காப்பாற்றுவது என்பது அவருக்குத் தெரியும் . நானும் அவர் அருள் கிடைக்கக் காத்து இருக்கின்றேன்.
சுமன்
இந்து சாயி பக்தர் சுமன் என்பவறின் அனுபவத்தைப் படியுங்கள். இது சாயியின் மீதான சிரத்தை மற்றும் பக்தியை வெளிப்படுத்தும் விதத்தில் உள்ளது
மனிஷா
சுமனின் அனுபவம்
நான் உங்களின் இணையதளத்தை இப்போதுதான் சில வாரங்களாகப் பார்க்கின்றேன். உங்களுடைய இணையதளத்தை எப்படி படிக்கத் துவங்கினேன் என்ற கதையா கூறுகிறேன். அது சாயியின் மகிமையே. நான் கடந்த நான்கு வருடங்களாக அர்திரைடிஸ் என்ற நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தேன். ஒவ்வொரு நாளும் நரக வேதனைதான். அதனால் வேலையும் போய்விட திண்டாடினேன். 2005 ஆம் ஆண்டு முதல் நான் சாயியின் பக்தர். அவருடைய அருளினால் பொது ஜன தொடர்ப்பு சம்மந்தமான படிப்பு படிக்க இடம் கிடைத்தாலும் எனக்கு வந்திருந்த வியாதியினால் மிகவும் அவஸ்தைப் பட்டேன்.
நான் அந்த வியாதியை குணப்படுத்துமாறு சாயி பாபாவை வேண்டிக் கொண்டே இருந்தாலும் பூர்வ ஜென்ம கர்மாவினாலோ என்னவோ அது குணமடையவே இல்லை. அப்போதுதான் உங்களுடைய இணையதளத்தைப் பார்த்தேன். அதைப் படிக்குமாறு என்ன காரணமாகத் தோன்றியதோ தெரியாது, அதில் வெளியான பக்தர்களின் அனுபவங்களை தொடர்ந்து படிக்கப் படிக்க எனக்கு சாயி மீதான பக்தி பெருகியது. என் மன வருத்தம் குறையத் துவங்கியது.
அப்போது நான் நினைத்தேன், என்னுடைய நோய் ஒரு நாள் சாயியின் அருளினால் நிச்சயமாக குணமடையும்.
இதற்கு முன்னால் நான் உங்கள் இணையதளத்தில் என்னுடன் சாயி பேசினார் என்பதை பற்றி எழுதி இருந்தேன். நான் சாயி சரித்திரத்தை தொடர்ந்து இரண்டு வாரம் படிக்கத் துவங்கினேன். அதன் பின் நான் வேண்டிக் கொண்டபடி அவருடைய ஆலயத்துக்குச் சென்று அவர் பாதத்தில் ஒரு பிங்க் நிற சால்வையை வைத்து வணங்கினேன். அதனுடன் என்னுடைய பிராத்தனையும் முடிந்தது. அங்கு தினம் தினம் வந்து அப்படிப்பட்ட காணிக்கைகளை பலரும் செலுத்துவதினால் பண்டிதர்கள் அதை உடனே எடுத்து சில பக்தர்களுக்கு தந்து விடுவார்கள். அதற்க்கு முன் இது நடந்தது.
நான் வியாழர் கிழமை சாயி சரித்திரம் படிக்கத் துவங்கினேன். அது முடிந்ததும் அடுத்த புதன் கிழமை சூஜி ஹல்வா பிரசாதம் செய்து அதை பூஜையில் வைத்து பூஜை செய்த பின் சிறிது பிரசாதம் எடுத்துக் கொண்டேன். அன்று மதியம் சாயி ஆலயம் செல்லக் கிளம்பிய நான் மீதி இருந்த ஹல்வாவை தருமாறும் அதை கொண்டுபோய் ஆலயத்தில் பாபாவின் பாதங்களில் வைத்து வணங்குவதாக என்னுடைய தாயாரிடம் கூற அவரோ அனைத்தும் தீர்ந்து விட்டதாகக் கூற நான் வருந்தினேன்.
ஆலயத்துக்கு கிளம்பிய நான் ஒரு ஆரஞ்சுப் பழம் மற்றும் சிறிது மலரை வாங்கிக் கொண்டேன். வழியில் இருந்த என்னுடைய ஒன்று விட்ட சகோதரனின் வீடும் சென்றேன். அவர் வீட்டில் பாபாவின் அழகான பட காலண்டரைப் பார்த்தேன். அங்கு வேலையே முடித்துக் கொண்டு பாபாவின் ஆலயம் சென்றேன். அங்கும் அதே காலண்டரை துனிக்கு பக்கத்தில் பார்த்தேன். அது எனக்கு விசித்திரமாகவே இருந்தது. என்னுடன் சாயி உள்ளார் என்று மனம் கூறியது.
ஆலயம் சென்று பாபாவை வணங்கிவிட்டு எழுந்தேன். பண்டிதர் ஒரு மாலையையும் சிறிது பிரசாதமும் தந்தார். என்ன ஆச்சர்யம். அவர் கொடுத்த பிரசாதம் சூஜி ஹல்வா. நான் பாபாவின் கருணையை எண்ணி வியந்து மேலே நிமிர்ந்து பார்த்தேன். அவர் காலடியில் நான் போட்ட அதே பிங்க் நிற சால்வை மேலும் பல சால்வையுடன் இருந்தது. அதை அவர் என்னுடைய பக்திக்கு காட்டிய அருள் என்பதைத் தவிர வேறு என்ன கூறுவது. இத்தனைக்கும் நான் அதைப் போட்டப் பின் சாயியை அலங்கரிக்க அவரை தண்ணீரினால் அபிஷேகம் செய்து இருந்திருக்கிறார்கள். ஆனாலும் மீண்டும் அவற்றை அவர் காலடியில் அன்று வைத்து இருந்திருக்கிறார்கள்.
இவற்றை எல்லாம் கண்டப் பின்னும் நான் என்னுடைய நோயை சாயிபாபா விலக்குவார் என்று நம்பியபடி இன்றுவரை அவர் மீது கொண்டு உள்ள பக்தியை குறைத்துக் கொள்ளாமல் இருந்து வருகிறேன். எனக்கும் புரிந்தது , அவர் குழந்தைகளை எப்போது காப்பாற்றுவது என்பது அவருக்குத் தெரியும் . நானும் அவர் அருள் கிடைக்கக் காத்து இருக்கின்றேன்.
சுமன்
(Translated into Tamil by Santhipriya)
Loading
0 comments:
Post a Comment