In the Care of Shirdi Sai Deva-Experience by Kamal Kumar.
அன்பானவர்களே,
இன்று மனதை நெகிழ வைக்கும் கமல்ஜி என்பவரின் ஒரு அனுபவத்தை வெளியிட்டு உள்ளேன். அதைப் படிக்கையில் சாயஈ பாபா நம் மீது கருணைக் காட்டி எப்படியெல்லாம் நம்மைக் காத்து அருளுகின்றார் என்பது விளங்கும்.
மனிஷா அன்பான மனிஷாஜி
நான் இன்று சாயி பாபாவுடன் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை எழுதி உள்ளேன். அவரால்தான் நான் இன்றும் உயிருடன் இருக்கின்றேன்.
2005 ஆம் ஆண்டு. எனக்கு குடலில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அறுவை சிகிச்சை நடந்தது. அதன் பின் பல பிரச்சனைகள் தோன்றின . மருத்துவ மனையில் இருந்த நான் உயிர் பிழைக்க மாட்டேன் எனவே என்னையும் சேர்த்து அனைவரும் நினைத்தார்கள். ஆகவே நான் என்னுடைய மகனை அழைத்து சீரடி சாயிபாபாவின் படம் ஒன்றைக் கொண்டு வருமாறும், உயிர் பிரிவதற்கு முன் அவரைக் காண ஆவலாக இருப்பதாகவும் தெரிவித்தேன். அவனும் ஓடிப்போய் ஒரு கடையில் இருந்து சீரடி சாயி பாபாவின் சிலையை வாங்கிக் கொண்டு வந்தான். அதைக் கண்ட நான் கைகூப்பி வணங்கினேன். அடுத்தகணம் நான் மயக்கம் அடைந்து விட்டேன்.
அதன் பின் மருத்துவர் என்னுடைய சகோதரி மற்றும் மனைவியை அழைத்து அங்கு வெண்டிலேடர் என்ற மூச்சு விட உதவும் கருவி இல்லை என்பதினால் என்னை வீட்டிற்கு கொண்டு சென்று விடுமாறு கூறினார். ஆனால் அவர்கள் அதற்கு மறுத்துவிட்டு என்னை டெல்லியில் கரோல்பாக்கில் உள்ள ஜெயிசாராம் மருத்துவ மனையில் அட்மிட் செய்ய உதவுமாறு கேட்டுக் கொள்ள அவரும் அதற்கு உதவினார்.
என்னை எடுத்துச் செல்ல உதவிக்காக வேறு ஒருவரை துணைக்கு அழைத்துக் கொண்டு வண்டியில் செல்லும்போது அவர் நான் நிச்சயம் பிழைத்து விடுவேன் என மருத்துவரிடம் கூறி உள்ளார் .
இரவு பதினோரு ஆயிற்று. மயங்கிக் கிடந்த என் நிலைமையோ மிகவும் மோசமாகிக் கொண்டே இருந்தது. மருத்துவ மனையில் முதலில் ஒரு மருத்துவர் என்னை அட்மிட் செய்துகொள்ள மறுத்தார். ஆனால் இன்னொரு மருத்துவரோ என்னை அட்மிட் செய்துகொள்ள முடிவு செய்தார்.
என்னை ICCU எனும் அவசர சிகிச்சை அறையில் அனுமதித்தார்கள். 7 அல்லது 8 நாட்கள் ஆயிற்று. சிகிச்சை நடந்தது. நான் மீண்டும் நல்ல நிலைக்கு திரும்ப ஆரம்பித்தவுடன் என்னும் சிறிது சிகிச்சைக்காக சாதாரண அறையில் 2 அல்லது 3 நாட்கள் இருக்குமாறு கூறினார்கள். ஆனால் எங்கள் பொருளாதார வசதி குறைவாக இருந்ததினால் மருத்துவர் கூறியும் வீட்டிற்கே வந்துவிட்டோம்.
அடுத்த 15 அல்லது 20 நாட்களில் பல மருத்துவ சோதனைகள் நடந்தன. எனக்கு TB நோய்க்கு மருத்துவம் செய்ய வேண்டும் என மருத்துவர் கூறினார். ஆனால் பாபாவின் அருளினால் நாங்கள் அதை செய்யவில்லை. அதனால் எனக்கு ஒன்றும் ஆகவில்லை. நான் குணம் அடைந்தேன். அதன் பின் 85,000 ரூபாய் செலவு செய்து எனக்கு ஹிரண்யா எனும் ஆபிரேஷனும் செய்ய வேண்டும் என்றார். ஆனால் பாபாவின் அருளினால் நாங்கள் அதை செய்யவில்லை. நான் மேலும் பிரச்சனை இல்லாமல் உள்ளேன்.
அதன் பின் சியனஸ், ருமாடிசம் போன்றவை என்னைத் தாக்கின. ஆனாலும் நான் தானாகவே குணம் அடையத் துவங்கி உள்ளேன். அவ்வப்போது எனக்கு உடலில் தானாகவே சில அதிர்ச்சிகள் ஏற்பட்டன. அதை பாபா நான் உடல் நலம் அடைய வேண்டும் என்பதற்காக என் உடலில் எதையோ செய்ததாகவே உணர்ந்தேன். என்னுடைய மகன் ஜெய் சாயி ராம் என்று ஜெபம் செய்து கொண்டே இருந்தான். நான் தற்போது நல்லபடியாக குணம் ஆகிக் கொண்டே வருகிறேன்.
கமல் குமார்
(Translated into Tamil by Santhipiriya)

Loading
0 comments:
Post a Comment