Sai gave a vision about my future-Experience of Sai devotee Kalyani
அன்பானவர்களே
சாயி சரித்திரத்தில் கூறியுள்ளது போல எவர் கண்களுக்கும் புலப்படாமல், எங்கெல்லாமோ உள்ளவர்களை அவர்களை அறியாமலேயே பாபா தன் பக்கத்தில் இழுத்து அவர்களை தன்னுடைய பக்தனாக்கி கருணை புரிகின்றார் . தனது தோழிகளில் இன்னொருவரான கல்யாணியின் அனுபவங்களைப் பற்றி அஷாலதா எழுதி உள்ளார் .அதை இனி படியுங்கள்
மனிஷாசகோதரி கல்யாணியின் அனுபவம்
1997 ஆம் ஆண்டு. என்னுடைய குடும்பத்தில் பல பிரச்சனைகள். என் தந்தை ஹார்ட் அட்டாக் என்ற இதய நோயினால் பாதிக்கப்பட்டு படுகையில் விழுந்தார். நாங்கள் மூன்று சகோதரிகள். அனைவருக்கும் திருமணம் ஆக வேண்டும். முதலில் எனக்கு திருமணத்துக்கு மாப்பிள்ளை பார்க்கத் துவங்கினர். என் தாயாருக்கு எனக்கு திருமணம் நிச்சயம் ஆகவேண்டுமே என்று ஒரே கவலை. சாயி பக்தரான என்னுடைய மாமா என்னை சாயி சரித்திரத்தைப் படிக்குமாறு கூறினார்.
நான் விடியற்காலை நான்கு மணிக்கே எழுந்து குளித்து விட்டு அதை பாராயணம் செய்யத் துவங்கினேன். அந்த ஏழு நாட்களும் மனம் அமைதியாக இருந்தது. ஏழாம் நாள் பராயணம் முடிந்ததும் பூஜைகளை செய்துவிட்டு, புளியோதரை மற்றும் சக்கரைப் பொங்கலை பாபாவின் படத்துக்கு முன்னால் வைத்து நைவித்தியம் செய்தேன். உள்ளே போய் விட்டு திரும்பியவள் ஆச்சர்யம் அடைந்தேன். சக்கரை பொங்கலில் யாரோ கை வைத்து உள்ளது போல இருந்தது. கை விரல்களின் அடையாளம் நன்கு தெரிந்தது. வீட்டில் யாருமே இல்லை. நான் புரிந்து கொண்டேன், பாபாதான் நான் வைத்த பிரசாதங்களை எடுத்துக் கொண்டு உள்ளார்.
1988 ஆம் ஆண்டு. நாங்கள் சென்னையில் இருந்து விஜயவாடாவுக்கு திருமண விஷயமாகச் சென்றோம். எனக்கு பார்த்த மாப்பிள்ளை அமெரிக்காவில் இருந்ததினால் அவர் வர முடியவில்லை என்றனர். ஆனால் திடீரென மீண்டும் போன் செய்தது அவரும் வர இருப்பதாகக் கூறினார்கள் . அதன் பின் அவர்கள் அனைவரும் வந்து என்னை பெண் பார்த்தனர்.
அதற்கு முதல் நாள்தான் எனக்கு ஒரு கனவு. அதில் எனக்கு பார்த்த மாப்பிள்ளை தனது பெற்றோர்களுடன் வந்து என்னை பெண் பார்த்தார். உன்னுடைய உயரம் என்ன எனக் கேட்டார். அதன் பின் அவர்களுக்கு என்னை பிடித்து விட்டது. திருமணம் ஆயிற்று. காலையில் விழித்து எழுந்தேன். ஆனால் நான் எனக்கு வந்த கனவைப் பற்றி எவரிடமும் கூறவில்லை.

மறுநாள் அவர்கள் அனைவரும் என்னை பெண் பார்க்க வந்தனர். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. முதல் நாள் என் கனவில் வந்தவரும் அவரும் ஒருவரே. எந்த மாற்றமும் இல்லை. அதே உயரம், உடல் வாகு, தோரணை, கலர் என அனைத்தும் ஒன்றே.அவர்கள் வந்து பெண் பார்த்ததும் என்னுடைய உயரம் என்ன என்றும் கேட்டார். எனக்கு மெய் சிலிர்த்தது. பாபாவின் கருணைதான் என்னே. என் கனவில் காட்டியபடியே அனைத்தும் நடந்தன. நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். எனக்கு பாபார் இன்றும் துணையாக இருந்து வழி காட்டிச் செல்கின்றார்.
(Translated into Tamil by Santhipriya)Loading
0 comments:
Post a Comment