Thursday, January 5, 2012

Shirdi Sai Baba's Grace-Experience Of Sai Devotees-Part 26.அனைவருக்கும் சாயி தின வாழ்த்துக்கள்
'' ஒ, சத்குரு, நாங்கள் உன்னை நமஸ்கரிக்கின்றோம். நீங்களே இந்த உலகின் அனைவருக்கும் மகிழ்ச்சியை தருகிறீர்கள். உங்கள் பாதங்களை சரண் அடைந்தவர்களின் துன்பங்களை விலக்குகிறீர்கள். கருணை வாய்ந்தவர், உங்களிடம் சரண் அடைந்த பக்தர்களைக் காப்பவர் என உள்ள நீங்கள் இந்த உலகில் அவதரித்ததே மக்களுக்கு நன்மை செய்யத்தான். பிரம்மாவின் உருவில் தூய்மையான நான் என்பதை ஊற்றியதின் மூலம் பளிங்கு போன்ற துறவிகளான சாயி உருவானார்கள். சாயி என்பவர் ஆத்மராமா. அவர் பேரானந்தம் அளிப்பவர். இந்த உலகின் அனைத்தையும் பார்த்தவர் தன்னுடைய பக்தர்களின் பற்றை அழித்து மன விடுதலையை தந்தார். '' SSC பாகம் 38
இது சில பக்தர்களின் அனுபவத்தைப் படியுங்கள் .
மனிஷா
------------------------------
 பாபாவுடன் ஒரு பக்தரின் அனுபவம் 

அன்புள்ள மனிஷா
நான் இன்று என் அனுபவத்தை வெளியிடுகிறேன். பாபா எப்படி தானே தன்  பக்தர்களை தன்னிடம் அழைத்துக் கொள்கிறார் என்பதற்கு உதாரணம் இது.
நான் மலேஷியாவை சேர்ந்தவன். 2004 ஆம் ஆண்டு முதல் சுத்த சைவமாக மாறினேன். என் வீட்டினரும் அப்படியே மாறினார்கள் . இளம் வயது முதலேயே குருமார்களைப் பற்றி நிறைய குறைகளை கேள்விப்பட்டு இருந்ததினால் நான் குரு என்ற ஒருவர் உள்ளார் என்பதை நம்பியது இல்லை. நல்ல இதயம் இருந்தால் நடப்பது அனைத்தும் நலமாகவே இருக்கும் என்பது என் கொள்கை.
இப்போது அனைத்துமே  மாறிவிட்டது. நான் எப்படி பக்தன் ஆனேன் என்பது இந்த கதை .  நான் கிருஷ்ணரை மட்டுமே நம்பியவன். பாபா யார் என்றே தெரியாது. அவரைப் பற்றி  தெரிந்து கொள்ளவும் ஆசைப் படவில்லை. 2009 ஆம் ஆண்டது ஒரு கனவு வந்தது.   என் கனவில் நான் ஒரு பழையக் கட்டிடத்தைப் பார்த்தேன் . அதில் ஆரஞ்சு நிற திரை போடப்பட்டு இருந்தது. அதை நான் திறந்தபோது அங்கு ஆரஞ்சு நிற உடை உடுத்திய ஒருவர் உட்கார்ந்து இருந்ததைக் கண்டேன். நான் அவர் முன் சென்று அமர்ந்ததும் அவர் சில சோழிகளை தரை மீது போட்டார். ஒருவருடைய வரும் காலத்தைப் பற்றிக் கூறுபவர்கள் சோழிகளைப் போட்டுப் பார்த்துக் கூறுவார்கள் என்பது புரிந்தது. அவர் எதோ கூறினார். என்ன என்று புரியவில்லை. நான் அங்கே என்னுடைய ஒரு தோழனின் பின்னால் அமர்ந்து இருந்தேன். அவன் பாபாவை தரிசனம் செய்ய அங்கே அமர்ந்து இருந்தான். அப்படியே கனவு கலைந்தது.
அதன் பின் என்ன ஆயிற்றோ தெரியாது. நான் பித்து பிடித்தவன் போல ஆகி இன்டர்நெட்டில் எனக்குப் பிடித்த பாபாவின் படத்தைத் தேடி கண்டு பிடித்து அந்தப் படத்தின் பிரதிகளை எடுத்து வைத்துக் கொண்டு என் வீட்டினருக்கும் தந்தேன். அதன் பின் அதை அனைவரும் மறந்தும் விட்டோம்.
2011 ஆம் ஆண்டில் மலேஷியா நாட்டில் பல இடங்களில் பாபாவின் ஆலயங்கள் தோன்றிக் கொண்டே இருந்தன. ஆனால் நான் எப்படி பாபாவின் பக்தன் ஆனேன் தெரியுமா?
என்னிடம் இரண்டு நாய்கள் இருந்தன. அவற்றின் மீது எனக்கு அதிக அன்பு உண்டு. ஒருமுறை அவை விஷ ஜுரத்தால் பாதிக்கப்பட்டன. உயிர் பிழைப்பது கடினம் என்பது தெரிந்தது. இறக்கும் தருவாயில் இருந்த அவற்றுக்கு நான் பாபாவின் உடியை தண்ணீரில் கலந்து கொடுத்து அவற்றை தடவிக் கொடுத்து பாபா உங்களைக் காப்பாற்றுவார் என்று கூறிக் கொண்டே இருந்தேன். அவற்றின் நெற்றியிலும் அதைத் தடவினேன். அவை உயிர் பிழைக்க வேண்டும் என பாபாவை வேண்டிக் கொண்டேன். மறுநாள் மாயம் போல அவை மீண்டும் நலமடையத் துவங்கி சில நாட்களிலேயே நன்கு பழையபடி போல ஆகி விட்டன. இறக்க இருந்தவை பிழைத்தது அதிசயம் அல்லவா.  அதன் பின் நானும் என் வீட்டாரும் பாபாவின் மீது அபார நம்பிக்கைக் கொண்டவர்களாக மாறினோம். அதன் பின் மேலும் மேலும் பாபாவின் அற்புதங்கள் பல என் வாழ்க்கையில் நடக்கத் துவங்கின. நான் கனவில் பார்த்த தோழனை நிஜமாகவே சந்தித்தேன். அவன் கணினியில் ஓம் சாய் ராம் என எழுதப்பட்ட ( - நான் கனவில் பார்த்த அதே காட்சியில்- ) ஒரு வில்லை ஓட்டப்பட்டு இருந்ததைக் கண்டேன். எனக்கு கனவு வந்தது 2009 ஆம் ஆண்டு. அதில் பார்த்தவற்றை நிஜமாகவே கண்டதோ 2011 ஆம் ஆண்டு.
சில நேரங்களில் நமக்கு சோதனை வரும்போது பாபாவை திட்டுவோம். ஆனால் பாபா நம்முடனேயே இருக்கின்றார் என்பதை நான் உணருகிறேன். நான் மலேஷியாவில் பிறக்கும் முன்னர் அவர் யார் என்பது தெரியாது. நான் இந்தியாவுக்கும் சென்றது இல்லை. ஆனால் இன்று நான் பாபாவின் பக்தன் ஆனது மகிமை அல்லவா.
அன்புடன்
பாபாவின் ஒரு குழந்தை. 
------------------------------------


பாபா என்  வலியை   ரேக்கி (Reiki ) மூலம்  குணப்படுத்தினார்

அன்புள்ள மனிஷாஜி,
நான் என்னுடைய பல அனுபவங்களை முன்னரே உங்கள் தளத்தில் பதிவு செய்து உள்ளேன். மற்றவர்களின் அனுபவங்களையும் படித்து மகிழ்ச்சி அடைவது உண்டு. நான் பாபாவிடம் இந்த புத்தாண்டில் எனக்கும் என் குடும்பத்துக்கும் மன அமைதி மற்றும் செல்வத்தை தந்து ஆசிர்வதித்து அருளுமாறு வேண்டிக் கொண்டேன்.
ஆனால் இந்த புத்தாண்டு எனக்கு நல்லவிதமாக பிறக்கவில்லை. நான் எதையுமே பாபாவைக் கேட்காமல் செய்ய மாட்டேன். ஏன், காரை எங்கே நிறுத்துவது என்பதைக் கூட அவரைக் கேட்டே செய்வேன். இந்த நிலையில் இந்த புத்தாண்டில் எனக்கு நடைபெற்ற வினோதமான மன வருத்தம் தந்த நிகழ்ச்சிக்கு எனக்கு காரணம் தெரியவில்லை. நான் நடந்த அனைத்தையும் இங்கு எழுத விரும்பவில்லை. ஆனால் நடந்த நிகழ்ச்சி என் மனதை வாட்டியது. அதனால் எனக்கு தாங்க முடியாத கழுத்து வலி ஏற்பட்டது.
புத்தாண்டில் மருத்துவ மனைகள் கூட மூடப்பட்டு இருந்ததினால் என்ன செய்வது என்று தெரியவில்லை. ஆகவே நான் பாபாவின் உடியை எடுத்து கழுத்தில் பூசிக் கொண்டு அவரை வேண்டிக் கொண்டேன் ' பாபா இந்தப் புத்தாண்டில் எனக்கு இப்படி ஏன் நடந்தது என்று புரியவில்லை. ஆனால் அதற்கான காரணமும் தெரியவில்லை. ஆனாலும் நீ அனைத்தையும் நல்லபடியாகவே நடத்தி முடிப்பாய் என்று எனக்குத் தெரியும். ஆகவே என் வலியை நீதான் சரி செய்ய வேண்டும்'.
திடீர் என எனக்கு ஒரு யோசனை தோன்றியது. அருகில் இருந்த மருந்துக் கடைக்கு சென்று வலி நிவாரணி வாங்கி வரலாம் எனக் கிளம்பியவன், அங்கிருந்து தள்ளி இருந்த இன்னொரு மருந்துக் கடைக்கு சென்றேன். அந்தக் கடையில் ஒரு ஜப்பானியர் இருந்தார். அவரை எங்கேயோ பார்த்தது போல எனக்கு மனதில் தோன்றியது. அவரிடம் வலிக்கு மருந்து கேட்டேன். அவர் சிரித்துக் கொண்டே நான் உன் வலியை நீக்க ரேக்கி செய்யட்டுமா என தானே கேட்டார். எனக்கு தூக்கிவாரிப் போட்டது. முன்பின் தெரியாதவர் கேட்டாலும் அதற்கு ஓப்புக் கொண்டேன். சாதாரணமாகவே ஜப்பானியர்கள் அதில் திறமையானவர்கள். நானும் ஓரளவு ரேக்கி செய்வதை கற்றுக் கொண்டு இருந்ததினால் அதற்கு ஒப்புக் கொண்டேன். நான் இங்கு கடந்த 10 வருடங்களாக இருந்தும் இப்படி எவரும் கேட்டதாக கேள்விப்பட்டது இல்லை. அவரவர் தன வேலையை செய்து கொண்டு இருப்பவர்கள்.
அந்த மனிதர் என் கழுத்தில் கையை வைத்தார். ஒரே சூடாக இருந்தது. அடுத்த 10 நிமிடத்தில் என் கழுத்து வலி 60 % குணமாகி விட்டது. அதனுடன் சேர்த்து என் மனதில் இருந்த வருத்தமும் மறைந்து விட்டதைக் கண்டேன்.
நன்றி பாபா, உனக்கு என் நன்றி.
(Into Tamil by Santhipriya)

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.