Friday, January 27, 2012

Shirdi Sai Baba's Grace-Experience Of Sai Devotees-Part 28/...... continued


நிலவில் பாபா!

ஸாயிராம்.
சகோதரி மனிஷா,
இந்த அருமையான வலைதளத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக எனது வந்தனங்கள். சமீபத்தில்தான் இந்த இடுகைகள் எனக்கு வரத் தொடங்கின. பாபா பலருடைய வாழ்வையும் தொடுகின்ற நிகழ்வுகளைக் காண அற்புதமாக இருக்கிறது. குறிப்பாக அந்த 'குறைமாதக் குழந்தை' பற்றிய நிகழ்வு என்னை மிகவும் உருக்கியது. பாபா அந்தக் குடும்பத்திற்குத் தமது ஆசிகளை அளித்துத் தமது அன்பினால் அவர்களைக் காக்கட்டும் என வேண்டுகிறேன்.
எனது இந்த சமீபத்திய நிகழ்வினைத் தங்களுடனும், தங்களது வாசகர்களுடனும் பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.
ஜனவரி மாதம், 8-ம் தேதி, 2012 அன்று இந்த ஆண்டின் முதல் பௌர்ணமி தினம். எனது வீட்டின் அருகிலுள்ள பாபா கோவில் வழிபாடுகளில் கலந்து கொள்வதற்காக நான் அதிகாலையிலேயே எழுந்து விட்டேன். பாபாவின் சிலைக்கு வாசனை திரவியங்கள் கலந்த நீரினாலும், பாலினாலும் பக்தர்கள் அனைவரும் அபிஷேகம் செய்யும் நிகழ்வுடன் சேர்ந்த ஒரு இனிய வழிபாடாக அது துவங்கியது. வழிபாடுகள் முடிந்து, ஆரத்தியும் நிறைவான பின்னர், எனது வீட்டிலிருந்து சுமார் 25 கி.மீ. தொலைவிலுள்ள ஒரு ஒரு புதிய பாபா கோவிலின் திறப்பு விழாவுக்கு எனது கணவர் மற்றும் மூன்று நண்பர்களுடன் செல்வதற்காக நான் விரைவாக வீடு திரும்பினேன். நானும் இதில் கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்திருந்தமையால், நான் அங்கு செல்வதில் உறுதியாக இருந்தேன். மிகச் சிறந்த நாளாக அது அமைந்து, மதிய உணவுக்குப் பின்னர் நாங்கள் அனைவரும் இல்லம் திரும்பினோம். மிகவுமே ஆசீர்வதிக்கப்பட்டதாக நான் உணர்ந்தேன்.
அன்றைய மதியம் அமைதியாகவே கழிந்தது. மிகவும் களைப்புற்றிருந்த போதிலும், ஒரு புத்துணர்ச்சியுடனேயே இருந்தென். பௌர்ணமி தினத்தன்று வழக்கமாகச் செய்வது போலவே, அன்று மாலையும் விசேஷ தியானத்தில் அமர்ந்தேன். இந்த முறை மிக அழகான வானத்தைப் பார்த்தபடி வெளியில் சென்று அமர்ந்தேன். எனது தியானமும் மிக மிக அமைதியாக நிகழ்ந்தது. என்னால் அதை விவரிக்க இயலவில்லை. தியானம் முடிந்ததும், நான் தொடர்ந்து வெளியிலேயே அமர்ந்து, அன்றையா நாள் இனிமையாகக் கழிந்தமைக்காக பாபாவுக்கு எனது வந்தனங்களைச் சொல்லிக் கொண்டேன்.
திடீரேன ஏதோ உள்ளுணர்வு என்னை வானத்தை நோக்குமாறு உந்தியது. அதன் பிறகு நிகழ்ந்தது என்னைப் பேச்சிழக்கச் செய்துவிட்டது. முதலில் நான் ஏதோ கற்பனை செய்துகொண்டு ஒரு கனவுலகில் இருப்பதாகத்தான் எண்ணினேன். சட்டென எழுந்து, எனது புகைப்படக் கருவியை [கேமெராவை] எடுத்துவந்தேன். அதன் விளைவுகளை நீங்கள் இதோ பார்க்கலாம்.


இப்படி ஒரு காட்சியை நான் வானத்தில் காண்பது முதல் முறையல்ல. ஆனால் முன்னரெல்லாம் நான் எனது கண்களையே நம்பவில்லை. அதனால் நான் ஏதோ கற்பனையாகக் காண்கிறேன் என மற்றவர்கள் சொல்லுவார்களோ என்றெண்ணி இதை எவரிடமும் சொன்னதில்லை.
எனது வீட்டின் அருகிலுள்ள கோவில் பண்டிட்டிடம் இந்தப் படங்களைக் காட்டினேன். அவரும் உடனேயே இந்த உருவ அமைப்புகளைப் பார்த்துவிட்டு, இது போன்ற காட்சியைக் காண நான் மிகவும் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும் எனச் சொன்னார்.
ஒரு சில நாட்களுக்குப் பிறகு, ஷீர்டியில் இருக்கும் எனது நண்பரிடம் இந்தப் படங்களைக் காண்பித்தபோது, அதே நாள் இரவில் ஷீர்டியிலும் இப்படியொரு அதிசயக் காட்சி தென்பட்டதாக அவர் சொன்னார். இணையத்தில் இந்த நிகழ்வைப் பற்றித் தேடியும் ஏதும் கிடைக்காததால் என்னால் இதனை உறுதி செய்ய இயலவில்லை. சிலர் இதைப் பார்த்ததாகவும், படம் பிடித்ததாகவும், உள்ளூர் செய்திகளில் இது வந்ததாகவும் அவர் கூறினார்.
எது எப்படியோ, நான் இந்தக் காட்சிகளைப் பார்த்தேன். இந்தப் படங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
......................மீதி பாகம் தொடரும்

(Into Tamil by Sankar Kumar)


Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.