Interact with other Sai devotees across the globe in our SaiKripa Family of Yahoo Group Shirdisaibabakripa by clicking HERE.

Monday, January 9, 2012

Shirdi Sai Baba's Grace-Experience Of Sai Devotees-Part 26 / II

தக்க சமயத்தில் பாபா 
 

நான் என்னுடைய அனுபவத்தை வெளியிட உதவிய பாபாவிற்கு நன்றி கூறுகிறேன்.
நான்  சமீபத்தில் என்னுடைய டிப்ளமா படிப்பை பாபாவின் அருளினால் படித்து முடித்தேன். ஒருநாள் என்னுடைய  ஆசிரியர் என்னை அழைத்து ''வகுப்பிற்குத்  தேவையான நேர்முக வருகை மிகவும் குறைவாக இருப்பதினால் உனக்கு பரிட்ஷை ஹால் டிக்கெட் கிடைக்காது. கல்லூரியை விட்டு  வெளியேற்றி  விட்டாலும்  ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை'' என்று கூறினார்.
நான் அங்கிருந்து நேராக பாபாவின் ஆலயத்துக்கு சென்று அவரை வேண்டினேன். எனக்கு எப்படியாவது பரிட்ஷை எழுத ஹால் டிக்கெட் கிடைக்க நீதான் அருள் புரிய வேண்டும் என வேண்டினேன். மறுநாள் வகுப்புக்குச்  சென்றதும், ஆசிரியர் என்னை தானாகவே அழைத்து என்னுடைய பரிட்ஷைக்கான  ஹால் டிக்கெட்டைக் கொடுத்தார். எனக்கு ஒரே  ஆச்சர்யமாகி விட்டது. இதை பாபாவே செய்து உள்ளார் என்பதும் புரிந்தது. பாபா தன்னுடைய குழந்தைகளை நிச்சயம் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது.   '' நம்பிக்கையோடு பொறுமையுடன் இரு. உன்னை அவர் காப்பாற்றுவார்'' என்ற பாபாவின் அறிவுரையை நான் என்றுமே மறப்பது இல்லை.
ஓம் சாயிராம்

Loading

0 comments:

Message Here.