Friday, January 20, 2012

Shirdi Sai Baba's Grace-Experience Of Sai Devotees-Part 27

ஷிர்டி சாயிபாபாவுடன் அனுபவங்கள்- 27


அன்பானவர்களே
அனைவருக்கும் சாய் தின நல்வாழ்த்துக்கள்.
பாபாவின் அன்பானது கடல் போன்றது. அதில் ஆழமாக பயணிப்பவர்கள் பாபாவின் முத்து எனும் ஆசிர்வாதங்களை பெறுகிறார்கள்.நம்பிக்கையும், பொறுமையுமே பாபாவின் ஆசிர்வாதங்களை பெற்று தரும்.ஒவ்வொரு வாரமும் இந்த உலகத்தில் உள்ள சாய் பக்தர்களின் அனுபவத்தை இந்த தளத்தின் மூலம் நாம் அறிந்து வருகிறோம். அனைத்து அனுபவங்களும், பாபா தன் குழந்தைகளின் மீது வைத்துள்ள அன்பின் வெளிப்பாட்டிற்கான அடையாளம். பலதரப்பட்ட மக்களுக்கு வெவ்வேறு ரூபங்களில் தேவையான தருணங்களில் அவர் அன்பை வெளிபடுத்துவது தான் நம் அனுபவத்தின் தனித்தன்மை.
உறுதியான நம்பிக்கையை பாபாவின் மேல் வைப்பதுடன், அவர் தக்க சமயத்தில் துணை நின்று அருள் புரிவார் என்ற பொறுமையும் இருக்க வேண்டும் என்பதை இந்த தளத்தில் பகிர்ந்து கொள்ளபடுகிற சாய் அனுபவங்கள், அனைத்து பக்தர்களுக்கும் பாபா மீதான அசைக்க முடியாத நம்பிக்கையை வழியுறுத்துகிறது.
பாபாவின் நான்கு சாய் அனுபவங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.சாய் அனுபவங்களையும், அவரின் அழகான படங்களையும் பகிர்ந்துக் கொள்ளும் பக்தர்களுக்கு நன்றி. ஜெய் சாய் ராம்.
மனிஷா
--------------------------------------------
அன்புள்ள மனிஷா சகோதரி,
அனைவருக்கும் சாயி தின வாழ்த்துக்கள். பாபாவுடனான அனுபவங்களைப் படிக்கும் போது நமக்கு ஆத்மா சக்தி பெருகுகின்றது.  நம்முடைய கவலைகளை மறப்பதற்கு அவருடனான அனுபவங்கள் உதவுகின்றன.   உங்கள் இணைய தளத்தில் பாபாவுடனான அனுபவங்களைப் படிக்கும்போதெல்லாம்  பாபா எப்படி தன்னுடைய பக்தர்களுக்கு ஆறுதல் தந்து அவர்களுடைய பிரச்சனைகளுக்கான பதில்களையும் தருகிறார் என்பதை புரிந்து கொள்ள முடிகின்றது.  நானும் என்னுடைய ஒரு அனுபவத்தை அனைவருடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.  ஜெர்மனியின் பிராங்க்பர்ட் எனும் இடத்தில் உள்ள பாபாவின் படத்தை அனுப்பி உள்ளேன். அதை பிரசுரிக்கவும்.  

பாபாவின் இனிய லீலை 
 

ஒரு வியாழர்  கிழமை என் வீட்டின் அருகிலுள்ள ஷீரடி பாபா கோவிலுக்கு சென்றிருந்தேன்.அறிமுகமில்லாத ஒரு சாய் பக்தர் என்னை, மிகவும் விசேஷமான துணி பூஜையை செய்யுமாறு கூறினார்.மேலும் அவர் துணி பூஜை யாக குண்டத்தில் நவதானியங்களை சேர்த்து எரிக்குமாறும், அவ்வாறு செய்தால் அனைத்துவித தோஷங்கள், பித்ரு தோஷங்கள்,தடைகள் மற்றும் பிணிகள் நீங்குமென கூறினார். அன்று பிரசாதமாக வெல்லம் சேர்த்த பொங்கல் வாங்கி வீட்டிற்கு வந்தேன்.பொதுவாக இனிப்பு வகைகளுக்கு முக்கியமான பொருளான முந்தரி பருப்பை எந்த பிரசாதத்திலும் போடுவதில்லை என பேசிக் கொண்டிருந்தோம்.பின் அதன் காரணம் விலைவாசியாக இருக்குமென நான் கூறினேன்.
அந்த சாய் பக்தர் கூறியதை பாபாவின் அறிவுரையாக எடுத்துக் கொண்ட நான் துனி (Dhuni)  எனும்  பூஜையை அடுத்த நாளே செய்ய ஏற்பாட்டை செய்தேன். இதை நல்லவிதமாக முடிக்க பாபாவின் ஆசிகளை வேண்டினேன்.  துனி  பூஜை யாகத்திற்கு காணிக்கை அளிக்க, முன் தினம் தேவையான அனைத்து பொருட்களான தானியங்கள், குங்குமம்,மஞ்சள்,கற்கண்டு,பழங்கள், அகர்பத்தி, சாம்பிராணி,தேங்காய் மற்றும் நெய் போன்றவற்றை குருக்கள் அறிவுரைப்படி வாங்கி வைத்தேன்.
இரவு 9 மணியளவில், அனைத்து பொருட்களுடன் நான் ஆட்டோவிற்காக காத்துக் கொண்டிருந்தேன். ஆட்டோ ஒன்று சாய் படத்தோடு வந்து நின்றது. அதில் ஓம் சாய் ராம் என்ற வரியும் எழுதியிருந்தது. பாபா எனது பூஜைக்கான ஆசிகளை இன்றே கொடுத்து இருக்கிறார் என மகிழ்ந்து வீட்டிற்கு வந்தேன் . அப்போது என் வீட்டில் எதோ  காரசாரமான விவாதம் நடந்து  கொண்டிருந்தது.  இப்படிப்பட்ட விவாதங்கள்  எங்கள் வீட்டில் அவ்வப்போது நடப்பது உண்டு . எங்களின் நேரம் சரியில்லை எனில் சிறிய விஷயத்திற்குக் கூட பெரியளவு வாதம் ஏற்படும். எனது தாயார் மிகவும் வருத்தமடைந்தார்.அவர் ஒரு முன்கோபி கூட. கடந்த சில வருடங்களாக எங்கள் குடும்ப சூழ்நிலை  நல்ல நிலையில்  இல்லை. அந்த நேரத்தில் என்னை பூஜை பொருட்களுடன் பார்த்ததும் அவர் கோபம் மேலும் அதிகமாகி என்னை தொடர்ந்து திட்ட ஆரம்பித்தார். பூஜை அறையில் இருந்த பாபா மற்றும் பாபா சம்மந்தப்பட்ட அனைத்து பொருட்களையும் ஒரு பையில் போட்டு எனது அறையில் வைத்து விட்டார்.மேலும் எனக்கு பாபா ஒரு போதும் தேவையில்லை, குடும்பத்தில் உள்ள பிரச்சனையை அவர் பார்ப்பதில்லை என கோபத்தில் கூறி விட்டார். ஏற்கனவே பாபாவின் கோபத்தை அனுபவித்த எனக்கு மேலும் கலக்கம் ஏற்பட்டது.
ஆனாலும் எனது தாயாரை சமாதானபடுத்த முடியவில்லை. பாபா இல்லாத பூஜை அறையை பார்க்க மனதிற்கு கஷ்டமாக இருந்தது.என் மனது சோர்வடைந்ததால் எங்கள் குடும்பத்திற்காக நடத்தவிருந்த துணி பூஜை பற்றிய நம்பிக்கை போய் விட்டது. இருந்தாலும் பாபாவின் கோபத்தை பற்றிய பயமும் இருந்தது.பாபா என்ன நினைக்கிறார் என அறிந்துக் கொள்ள சாய் சரித்தரத்தின் எதோ ஒரு பக்கத்தை எடுத்து படித்தேன். அதில் நான் கண்ட வரிகள் "ஒரு புதிய முயற்சியை மேற்கொள்ளும் போது, தீயவினைகளை அழிக்க பக்தர்களை சோதனைக்கு உட்படுத்த நேரிடும்.அதுவும் ஆசிர்வதிக்கப்பட்ட பாபாவின் செயலே" என்பதாகும். இதை கண்டு மனது சிறிது சாந்தமடைந்தது.
இருந்தாலும் என் மனம் முழுமையாக அமைதி அடையவில்லை. அந்த இரவு முழுதும் உறக்கம் இல்லாமல் தவித்தேன். மறு நாள் காலை எனக்காக எனது தாயார் அனைத்து பாபா பொருட்களையும் மீண்டும் பூஜை அறையிலேயே பத்திரமாக எடுத்து வைத்து இருந்தார். மீண்டும் பாபா அதே அருள் புன்னகையுடன் பூஜை அறைக்கு வந்ததிற்கு பாபாவிற்கு நன்றி தெரிவித்தேன்.
துனி  பூஜை  நல்லபடி நடக்க  எனது தாயார் என்னை ஆசிர்வதித்து வழியனுப்பி வைத்தார். என்றும் இல்லாத மன நிம்மதியும் பூஜையில் பங்கு கொண்டேன். யாக பொருட்களை எரித்து, எனது குடும்பத்தினர் சார்பாக சங்கல்பங்கள் செய்து முடித்தேன்.பாபாவை வணங்கி விட்டு பிரசாதம் வாங்க வரிசையில் 3 வதாக நின்று இருந்தேன். ஒருவர் அவராகவே என்னிடம் வந்து,பாத்திரத்தை திறந்து அவர் பிரசாதத்தை கொடுத்தார். அதில் 30  முந்திரி பருப்புகள் இருந்தன.பாபா எனது ஆசையை இனிதாக நிறைவேற்றினார். அந்த சாய் பக்தரே இரண்டு கை பிரசாதங்களை கொடுத்தார். அதில் 5,6 முந்திரி பருப்புகள் இருந்தன. சிறிய விஷயமாக இருந்தாலும் பாபா அதையும் கவனித்திருக்கிறார்.
பாபா கோபமாக இருக்கிறாரா என்ற கவலையுடன் இருந்த எனக்கு, இது மனதுக்கு மகிழ்சியை தந்தது. பாபாவிடம் பிரசாதத்திற்கும், துனி பூஜையை நல்ல விதமாக முடித்து கொடுத்ததற்கும் நன்றி கூறினேன் !.
என் அனுபவத்தை அனைவருக்கும் பகிர்ந்ததிற்கு நன்றி
சாய் பாபா ! உங்களுக்கு தலை வணங்குகிறேன்.
எல்லாருக்கும் அமைதி கிடைக்கட்டும்.
----------------------------------------------

நான் வழிபட பாபா அவர் படம் அனுப்பினார்


மனிஷா அவர்களே ! உங்களின் மகத்தான சேவைக்கு மிக்க நன்றி.
பாபா உங்களை என்றும் ஆசிர்வதிப்பார்.ஓம் சாய் ராம் !

அன்புள்ளங்களே
எனது சாய் அனுபவத்தை அனைவரிடமும் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்.இது மிக எளிமையான அனுபவமாக இருந்தாலும், பாபா நம்முடன் எப்போதும் இருக்கிறார் என்பதை உறுதிபடுத்துகிறது.
பாபா பதில் கூறும் தளமாக செயல்படும் http://www.yoursaibaba.com/ என்ற தளத்திற்கு சென்று பாபாவை மனதார நினைத்து, நம் பிரச்சனையைக் கூறினால்  அதற்கு பாபா பதில் அளிப்பார். (எண் 1 லிருந்து 720 வரை இருக்க வேண்டும்). இது எனக்கு பிடித்த ஒரு செயல். சிலர் இது குழந்தைத்தனமான செயல் என கேலி செய்வதுண்டு. ஆனால் நம்புங்கள். உண்மையான நம்பிக்கையுடன் வேண்டி செய்தால், கிடைக்கப்படும் பதில் நமது பிரச்சனைக்கு தீர்வாக இருக்கும் என்பது நான் என் அனுபவத்தில்   கண்ட உண்மை. மேலும் இதன் மூலம் நான் பாபாவிடம் பேசுவதாக நினைத்துக் கொள்வேன்.
ஒரு நாள், நான் ஒரு எண்ணை தட்டினேன்.அதற்கு பதிலாக "உனக்கு உன்னுடைய இஷ்ட தெய்வத்தின் படம் ஒன்று கிடைக்கும். அதை வீட்டில் வைத்து பூஜித்தால் உனது பிரச்சனைகள் தீரும். வெற்றி உனதே" என்ற பதில் பாபாவிடம் இருந்து கிடைத்தது.  இதை நம்புவதா என நினைத்தேன். ஏன் தெரியுமா ? நான் எப்பொழுதும் பாபாவை தான் வழிபடுவேன். மற்றவர்களுக்கு கொடுப்பதற்காக அவர் படங்களை மட்டும் தான் வாங்குவேன்.வேறு கடவுள் படத்தை வாங்கும் பழக்கம் இல்லாததால் சற்று குழப்பமாக இருந்தது.
ஒரு நாள் இரவு நான் என் பெற்றோர்களுடன் கடைத் தெருவுக்கு சென்றிருந்தேன்.அப்போது என் அண்ணன் பெருமாள் கோவிலுக்கு  சென்றிருந்தார். அது ஐயப்பன் சாமி பூஜை சமயம். அன்று என் அண்ணன் வீட்டிற்கு வந்ததும் திடிரென என் உள்ளங்கை அளவிலான ஒரு சாமி படத்தை கொடுத்தார். எனக்கு குழப்பமாக இருந்தது. பார்த்தால் அது  பாபாவின் படம்.அவர் இந்தியாவின் ஐயப்பன் சாமிக்கு நன்கொடை கொடுத்தற்கு இந்த படம் கிடைத்துள்ளது.
எனது அண்ணன் கோவிலில் ஒரு வயதான் முதியவர் நன்கொடை வசூலித்துக் கொண்டிருப்பதை பார்த்து, அவருக்கு சில இந்திய நாணயங்களை கொடுத்து இருக்கிறார். அதற்கு அவர் நன்றியாக பாபாவின் படத்தை தந்ததிருக்கிறார்.( நாங்கள் மலேஷியாவில் இருக்கிறோம்) என் அண்ணன் ஏன் டாலர்களை கொடுக்கவில்லை!. அந்த படத்தை என் அண்ணனே வைத்திருக்கலாமே! மேலும் அந்த முதியவர் என் அண்ணனிடம் வேறு ஒரு இடத்திற்கு செல்ல வழி கேட்டிருந்திருக்கிறார். கோவிலுக்கு வந்த அவருக்கு திரும்பி செல்ல வழி தெரியாதா? பயணிக்க தேவையான வசதியும் அருகில் அங்கே இல்லை. அதுவும் இல்லாமல் அது இரவு நேரம். என் அண்ணன் அந்த படத்தை என் அம்மாவிடமோ, அப்பாவிடமோ கொடுக்கவில்லை. ஒரு தங்கத்தை கொடுப்பதை போல என்னிடம் அல்லவா கொடுத்தார். யார் அந்த முதியவர் ?அவர் பாபாவாகத் தான் இருக்க வேண்டும். என்னிடம் ஏற்கனவே சொன்னபடி நான் வழிபட என் இஷ்ட தெய்வத்தை எனக்கு கொடுத்து அனுப்பினார்.
பாபாவை வழிபடத் துவங்கியப் பின்  நான் அவர் மகிமைகளைக் உணரும் உலகத்தில் வாழ்ந்து கொண்டு இருப்பதாகவே நினைக்கின்றேன் . பாபா நம்மை மிகவும் நேசித்து, நம்மை மகிழ்விக்க பல்வேறு செயல்களை செய்கிறார். அவரை காண எப்போதும் விரும்புகிறேன்.
ஓம் சாய் ராம்
- பாபாவின் குழந்தை
------------------------------------

ஷீரடியில் பாபாவின் தரிசனம்

அன்பான மனிஷா,
நீங்கள் மகத்தான சேவையை செய்து கொண்டிருக்கிறீர்கள். நான் மும்பையில் வசிக்கிறேன்.எனது முகவரியை வெளியிட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.எனது சாய் அனுபவத்தை பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்.
தவறாக நான் ஏதாவது எழுதி இருந்தால் மன்னித்து விடுங்கள் பாபா.நான் எனது அனுபவத்தை பகிர்ந்துக் கொள்ள ஒரு போதும் நினைத்தது இல்லை. ஆனால் திடிரென நேற்று இதை  எழுத வேண்டும் என தோன்றியது. நான் ஷீரடிக்கு முதன்முதலில் 1998 ல் சென்றேன்.அதன் பின் ஒவ்வொரு வருடமும் சென்றுக் கொண்டிருக்கிறேன்.
அப்போழுது எனக்கு பாபாவை பற்றி அதிகமாக எதுவும் தெரியாது. அங்கு செல்வதை ஒரு சுற்றுலா செல்வதைப் போல  நினைத்தே சென்றேன்.  2010 ஆம் ஆண்டு மே மாதம் முதல்  எனக்கு உலகமே பாபா என்று ஆகிவிட்டது .  அதற்குள் ஷீரடிக்கு 10 முறை சென்று வந்துவிட்டேன். சீரடிக்கு நான் கடைசியாகச் சென்றது   2011 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில்  ஆகும். அப்போது நான் பாபாவை நேரிலேயே தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது. பல நாட்களாக பாபாவை தரிசனம் கொடுக்குமாறு கேட்டு கொண்டிருந்தேன். ஆனால் அவர் நேரிலேயே வருவார் என எதிர்ப்பார்க்கவில்லை. ஒரு சனிக் கிழமை  பாபாவை தரிசனம் செய்த பின் என் மனைவி பாபாவின் பாராயணம் செய்யும் கூடத்திற்கு  செல்லலாம் என அழைத்தாள்.  அன்று தான் முதன் முதலில் நான் பாராயணம் செய்யும் கூடத்திற்குள் சென்றேன். உள்ளே நுழைந்ததும் பாபாவைப் போன்று இருந்த ஒருவர்  எங்கள் பின்னே தொடர்ந்து வந்து கதவின் அருகில் அமர்ந்தார். என்ன தோன்றியது எனத் தெரியவில்லை நான் பின்னே திரும்பி அவரை பார்த்து இரு கைகளை கூப்பி நமஸ்காரம் செய்தேன். பாபா கப்னி,பஜாமா,தலையில் துணி கட்டு மற்றும் வலது கையில் ஒரு ஜோல்னா பை போட்டிருந்தார். பின் பாராயண கூடத்தில் பாபா படத்தை வணங்கியப் பின்  திரும்பி பார்த்த போது, விரல் அசைவால் அந்த பாபா என்னை அருகில் அழைத்தார்.  நான் அவர் அருகில்  சென்றதும் தன் கப்னியில் இருந்து ஒரு வேப்பிலையை எடுத்து என்னிடம் கொடுத்து, என் வீட்டு  பூஜை அறையில் அதை வைக்குமாறு கூறினார். பின் ஒரு வேப்பிலையையும் உதியையும் என் மனைவிக்கு கொடுத்தார்.
பாபாவின் அருட்பார்வை மிகவும் சக்தி வாய்ந்தது. என் கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது. நான் அவரிடம், உங்களில் நான் பாபாவை பார்க்கிறேன் என்று கூறினேன். அதற்கு அவர் நீ மிகவும் உணர்ச்சி வசப்படுகிறாய் எனக் கூறினார். பின் அவர் சென்றேன் . அவர், தொடர்ந்து ஒரு மாலையை வைத்துக் கொண்டு  ஜெபம் செய்து கொண்டிருந்தார். பின் துவாரகாமியில் அமர்ந்துள்ளது போலவே  நேரிலேயும் அமர்ந்திருந்தார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.  பின் பாராயண கூடத்தில்  இருந்து வெளியேறும் போது என் பின்னாலேயே வந்து எங்கேயோ சென்று விட்டார். அவர் எங்கே சென்றார் எனத் தெரியவில்லை. அன்று நான் மிகவும் அசதியாக இருந்தேன். ஆனால் பாபாவை கண்டதும் என் மனமும் உடலும் புத்துணர்ச்சி பெற்றது. பாபா இவ்வாறு நேரில் வருவார் என நான் எதிர்ப்பார்க்கவில்லை. அந்த வேப்பிலையை நான் என் வீட்டு பூஜை அறையில் வைத்து விட்டேன். பாபா என்றும் நம்முடனே இருக்கிறார். அவர் மீது நம்பிக்கையை மட்டும் நாம் வைக்க வேண்டும்.
----------------------------------
பாபா எனக்கு குழந்தை வரம் கொடுத்தார்
பாபாவின் அருளால் எனக்கு ஒரு குழந்தை கிடைத்தது. நான் கடந்த ஆறு மாதங்களாக எனக்கு ஒரு குழந்தை பிறக்க  என்னை ஆசிர்வதிக்குமாறு பாபாவை வேண்டிக் கொண்டிருந்தேன். பாபாவை முழுமனதாக நம்பி வழிபட்டு வந்தேன்.ஒரு நாள் பாபாவின் முன் இரண்டு சீட்டுகளில் ஆம் இல்லை என எழுதி குழுக்கி போட்டு பாபாவை மனதார நினைத்து ஒன்றை எடுத்தேன். நான் இந்த மாதம் கர்ப்பமாவேனா என கேட்டு வேண்டியிருந்தேன். அதில் ஆம் என்ற சீட்டு வந்தது. நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.மேலும் பாபாவின் மீதான என் நம்பிக்கை பல கோணங்களில் வளர்ந்து கொண்டே இருந்தது.
அடுத்த ஒரே மாதத்தில்   எனக்கு நல்ல செய்தி கிடைத்தது.  நான் கர்ப்பமாக இருக்கிறேன் எனும் செய்தி அறியும் முன் இரண்டு கனவுகள் கண்டேன். ஒரு கனவில் தாய் யானையையும் ஒரு குட்டி யானையும் வந்தது. அடுத்த கனவில் நான் பிள்ளையாரின் பூஜையை பார்த்தேன். பாபாவின் ஆசிகள் மிகவும் உயர்ந்தது. அவருடைய வாக்கு என்றும் உண்மையானதாகவும், மிகவும் சக்தி வாய்ந்தததாகவும் இருக்கும்.
(Tamil  Translation By Ramya Karthick)
(Uploaded By Santhipriya )

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.