Wednesday, July 24, 2013

Swaal Aapke Jawaab Shri Sai Ke -Download Question And Answer Book.

உங்கள் கேள்விகள்-
சாயிபாபாவின் பதில்கள்
-புத்தகத்தை பதிவு இறக்கம்
செய்து கொள்ளுங்கள்-

 सवाल आपकी  ..........जवाब साई की
 ( Translated into Tamil by Dr. Sankarkumar, USA)
 
அன்பான வாசகர்களே,
உங்கள் அனைவருக்கும் இனிய, மகிழ்வான ஸாயி குரு பூர்ணிமா வாழ்த்துகள்.
வாழ்வின் ஒவ்வொரு சோதனையான கால கட்டங்களிலும் ஸாயிபாபாவின் வழிநடத்துதல் இருப்பதை நம்மில் பலரும் அனுபவித்திருக்கிறோம். அவர் மீது பூரண நம்பிக்கை கொள்வதே ஒரே வழி. அவரது வழிகாட்டலை ஒரு சில நேரங்களில் நாம் நிச்சயமாக எதிர்பார்க்கிறோம்.
ஸாயி ஸத் சரிதத்தில் சொல்லியவாறு, அவர்து வழிகாட்டல் பல விதங்களிலும் வரும். சில சமயம் நேரடி ஆணையாகவும், பிற நேரங்களில் குறிப்பாலும் இவை உணர்த்தப்படும்.
இது தொடர்பாக, ஸாயியின் வழிகாட்டலைக் கூறும் நூல் [சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது] ஒன்றைப் பற்றி நமது அடியார் ஒருவர் குறிப்பிட்டிருந்தார். 'ஸவால் ஆப்கே, ஜவாப் ஸ்ரீ ஸாயி கே' [கேள்வி உங்களது, பதில் ஸ்ரீ ஸாயியினது] என்னும் இந்த நூலை நமது அடியார்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு அன்பர் முன்னம் தெரிவித்திருந்தார். அந்த வாக்கிற்கிணங்க, இதோ இங்கே நமக்கெனத் தந்திருக்கிறார்.
குரு பூர்ணிமா ந‌ன்னாளான‌ இன்று இந்த‌ப் புத்த‌க‌த்தை வ‌லையேற்றுகிறேன். ம‌ராத்தி மொழியில் எழுத‌ப்ப‌ட்ட‌ மூல‌ நூல், அன்ப‌ர்க‌ளின் வ‌ச‌திக்காக‌ ஹிந்தியில் மொழிபெய‌ர்க்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து. ப‌ல்வேறு ச‌ந்த‌ர்ப்ப‌ங்க‌ளுக்கான‌ பாபாவின் வ‌ழிகாட்ட‌ல் இதில் சொல்ல‌ப்ப‌ட்டிருக்கிற‌து. பாபாவின் மீது முழு ந‌ம்பிக்கை வைத்து, 1 முதல் 720 எனும் எண்க‌ளுக்குள் ஏதேனும் ஒரு எண்ணை ம‌ன‌தில் நினைத்துக்கொண்டு, அந்த‌ எண்ணுக்குரிய‌ உபதேச‌த்தைப் ப‌டித்தால், பிர‌ச்சினைக்கான‌ விடை கிடைக்கும். ஹிந்தியில் எழுத‌ப்ப‌ட்ட‌ இந்நூலைத் த‌ர‌விற‌க்க‌ம் செய்து, மேலே சொல்ல‌ப்ப‌ட்ட‌ முறையைப் பின்ப‌ற்றி, உங்க‌ள் குறைக‌ளுக்கான‌ விடையைத் தெரிந்து கொள்ளுங்க‌ள்.
ஸ்ரீ ஸாயி ஸ‌த்ச‌ரித‌ப் பாராய‌ண‌ம், ஸாயி விர‌த‌ம், ஸாயி நாம‌ ஜ‌ப‌ம், தியான‌ம், ஸாயி அல‌ய‌ த‌ரிச‌ன‌ம், அல்ல‌து இது போன்ற‌ நூல்க‌ளின் மூல‌ம் அமைதி பெறுத‌ல் என‌ எல்லா வ‌ழிக‌ளுமே அவ‌ர‌வ‌ர் விருப்ப‌த்துக்குரிய‌வையே. ஸாயிபாபாவின் மீதான‌ முழு ந‌ம்பிக்கையே இவ‌ற்றுக்கெல்லாம் ஆதார‌ம். எந்த‌வொரு வ‌ழியும் ச‌ரியோ, த‌வ‌றோ, அல்ல‌து குறைவான‌தோ என‌ச் சொல்ல‌ இய‌லாது. ந‌ம்பிக்கையும், ப‌க்தியும் இருப்பின், அனைத்துமே ப‌ல‌ன‌ளிக்கும்.‌
அந்த‌ அன்ப‌ர் எழுதிய‌ க‌டித‌த்தையும் இத்துட‌ன் இணைத்திருக்கிறேன். ஜெய் ஸாயிராம். 
--- ம‌னிஷா.

"ஓம் ஸ்ரீ ஸாயிநாதாய‌ ந‌ம‌:"
01 - 11 - 2012 [வியாழ‌க்கிழ‌மை]

அன்புள்ள‌ ம‌னிஷா'ஜி,
ந‌ம‌ஸ்கார‌ம். 'அவ‌ன் ஆணையின்றி எந்த‌வொரு இலையும் அசையாது' எனும் பாபாவின் வாச‌க்த்திற்கிண‌ங்க‌வும், த‌ங்க‌ள‌து விருப்ப‌ம் போல‌வும், 40 ப‌க்க‌ங்க‌ள் கொண்ட‌ 'ஸவால் ஆப்கே, ஜவாப் ஸ்ரீ ஸாயி கே' [கேள்வி உங்களது, பதில் ஸ்ரீ ஸாயியினது] என்னும் இந்த‌ப் புத்த‌க‌த்தின் பி.டி.எஃப். கோப்பினை இங்கே அளிக்கிறேன்.
ஷீர்டியில் வாங்கி, க‌ட‌ந்த‌ 20 ஆண்டுக‌ளாக‌ இந்த‌ப் புத்த‌க‌ம் என்னிட‌ம் இருப்ப‌தால், அவ்வ‌ப்போது நான் எழுதியிருக்கும் சில‌ வார்த்தைக‌ளையும், ஒரு சில‌ வெற்றுப் ப‌க்க‌ங்க‌ளையும் நீக்கிவிட‌லாம்.
ஹிந்தியில் இருக்கும் இந்த‌ நூல் முத‌லில் ம‌ராத்தி மொழியில் எழுத‌ப்ப‌ட்டு, பின்ன‌ர் ஹிந்தியில் மொழிபெய‌ர்க்க‌ப்ப‌ட்ட‌து. ஆங்கில‌த்திலும் மொழியாக்க‌ம் செய்ய‌ப்ப‌ட்டிருக்கிற‌தா என‌ நான் அறியேன்.ஸாயி அடியவரான ஸ்ரீ மாத‌வ் பால‌கிஷன் லேலே எனும் மும்பை அன்ப‌ரால்‌ எழுத‌ப்ப‌ட்ட‌ இந்த‌ நூலில் 720 விடைக‌ள் இருக்கின்ற‌ன‌.
புத்தகத்தைப் பக்கம் பக்கமாகக் கிழிக்காமல், அப்படியே பதிவெடுத்ததால், ஒரு சில பக்கங்களில் சில எழுத்துகள் மறைந்திருக்கக்கூடும், அல்லது, எண்கள் தெரியாமல் இருக்கலாம். இது பற்றி ஏதேனும் கேள்வியிருந்தால் உடனே எனக்குத் தெரிவிக்கவும்.
அட்டையில் இருக்கும் பாபா படம் சற்றுக் கிழிந்திருக்கிறது. வேண்டுமெனில், அதைச் சரிசெய்து, வேறு படம் போடவும். தேவையில்லையெனில், தயவு செய்து என் பெயரைத் தெரிவிக்க வேண்டாமென வேண்டுகிறேன். இந்த அரிய நூலை உங்கள் இணைய தளத்தின் மூலம் படித்துப் பயனுறும் அனைவருக்கும் அளிக்கலாம். இதைப் பதிவெடுக்க எனக்கு உதவிய எனது கணவருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த வகையில் பயனுள்ளவளாக இருக்க அருள் செய்த பாபாவுக்கும், தங்களுக்கும் என் வந்தனம்.
அனைவரையும் பாபா ஆசீர்வதிக்கட்டும். ஸாயிராம்.
Image and video hosting by TinyPic

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.