Sai Desires To Bless Me On Saturday-Experience of Sai bhakt Ireni.
சாயிபாபா தனது பக்தர்களை என்று வேண்டுமானாலும் ஆசிர்வதிகின்றார். எனக்கு அவர் ஒரு வெள்ளிக் கிழமையில் ஆசிர்வாதம் தந்தார், அது போல இரெஞ்சி என்ற பெண்மணிக்கு அவர் சனிகிழமை ஆசிர்வாதம் தந்து உள்ளார். அந்த கதையைப் படியுங்கள்
மனிஷா
இரெஞ்சி என்ற பெண்மணியின் அனுபவம்.
அவரே கூறுகின்றார் படியுங்கள்-
'' நான் சாயினாதரிடம் இப்போது எந்த அளவு ஈடுபாடு கொண்டு உள்ளேன் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அவர் எனக்கு புரிந்த கருணைக்கு நன்றி கூறி உங்களுடைய இணையதளத்தில் அதை வெளியிட்டேன். அது போல சீரடிக்குச் செல்ல அவருடைய கருணை எனக்கு கிடைத்ததும் அதையும் எழுதுவதாக கூறினேன். அந்த பாக்கியம் கிடைத்து விட்டதினால் எப்படி அது கிடைத்தது என்பதை இப்போது கூறுகின்றேன்.
என்னை நம்புங்கள். எனக்கு பாபாவைப் பற்றி அதிகம் தெரியாது. ஆனால் இந்த இணையதளத்தில் உள்ள அவருடைய செய்திகளை தொடர்ந்து படித்து வந்தேன். ஆனால் நான் அவரைப் பற்றி படித்தது போதாது என பாபா நினைத்தாரோ என்னவோ நான் ஒரு வருடமாக சீரடிக்கு செல்ல வேண்டும் என நினைத்திருந்த என்னுடைய ஆசை நிறைவேறாமலே இருந்தது. தினமும் உங்களுடைய இணையதளத்தில் உள்ள அவருடைய படத்தைப் பார்த்துக் கொண்டே இருப்பது உண்டு.
ஒரு நாள் நான் சாயி சரித்திரம் பற்றி படித்தேன். உடனேயே அதை டவுன்லோட் செய்து கொண்டு அதை படிக்கத் துவங்கினேன். ஆனால் அதை எப்படி படிக்க வேண்டும் என்ற விதி முறைகளை பார்கவில்லை. ஆனால் நான் அதை படிக்க ஆரம்பித்தது ஒரு சனிக் கிழமை. ஆனாலும் நான் அதை தொடர்ந்து படித்து முடித்தேன்.
நான் எதற்காக சீரடிக்குச் செல்ல விரும்பெனேன் என்பதை கூறுகின்றேன். நான் கருத்தரித்து இருந்தேன். எங்களுக்கு முன்னமே ஒரு பெண் குழந்தை இருந்ததினால் என்னுடைய கணவரும் மாமியாரும் எனக்கு ஆண் குழந்தையே பிறக்க வேண்டும் என விரும்பினார்கள். என்னால் அப்போது சீரடிக்குச் செல்ல முடியவில்லை. ஆனால் எனக்கு அழகிய ஆண் குழந்தை ஒன்று பாபா அருளினால் சனிகிழமை பிறந்தது.
அந்த நேரத்தில்தான் நான் இரண்டு வரி வேண்டுகோளை இணையத்தளம் மூலம் சாயிபாபாவுக்கு அனுப்பினேன். அது ' என்னை விரைவாக சீரடிக்கு அழைபாயா' என்பதே. என்னுடைய சூழ்நிலை, குழந்தை என அனைத்தையும் பார்த்தபோது சீரடிக்கு என்னால் விரைவாக செல்ல முடியும் என்று தோன்றவில்லை. ஆனால் என் தோழி ஒருவள் பாபா எப்போது உனக்கு அந்த பாக்கியத்தை கொடுக்க நினைகின்றாரோ அப்போது அது நடக்கும் என்றாள்.
2009 ஆம் ஆண்டு மார்ச் எட்டாம் தேதி என்னுடைய வேண்டுகோள் சீரடிக்கு சென்றுவிட்டது எனத் தெரிந்தது. என்ன அதிசயம் மறுநாள் ஒன்பதாம் தேதி என்னுடைய கணவர் சீரடிக்கு நாம் செல்லலாம் என்றார். நாங்கள் பத்தம்போதாம் தேதியன்று சீரடிக்கு கிளம்பிச் சென்றோம். இருபத்தி ஒன்றாம் தேத்கி சனிக் கிழமை சீரடிக்குச் சென்று பாபாவை தரிசித்தோம். அதை என்னவென்று கூறுவது. அங்கிருந்து திரும்பியபோது சாயி சரித்திரத்தை வாங்கி வந்தேன். என் தாயாரின் பிறந்தநாள் பரிசாக அதை அவளுக்குத் தந்தேன்.''
(Translated into Tamil by Santhipriya )
Loading
0 comments:
Post a Comment