Wednesday, February 3, 2010

B.V Narsimha Swami ji-Efficient System For Sai Prachar-Part 2.

அற்புதமான சாயி பிரசார வழிமுறைகள்

நரசிம்ம சுவாமிஜி 1945 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சாயிநாதரின் தோற்றங்கள் என்ற புத்தகத்தை வெளியிட்டார் . அதற்கு நீதிபதி சி. என் . குப்புஸ்வாமி முன்னுரை எழுதினர் . அதில் அவர் சாயிநாதர் தன்னுடைய பக்தர்களுக்கு சில அதிசயச் செயல்களை செய்து காட்டியே அவர்களை தம்மிடம் இழுத்து வைத்துள்ளார் என்று பரவி இருந்த மக்கள் கருத்தை மாற்ற முயன்றுள்ளார் . ஒவொரு பக்தரும் தம்மிடம் வந்த பொழுது சாயிபாபா ஆன்மீகக் கண்ணோட்டத்துடன் அவர்களுக்கு ஆன்மீக விழப்புணர்ச்சியை ஏற்படுத்த முயன்றுள்ளார் என்பதை எடுத்துக் காட்டியுள்ளார் . சாயிபாபாவின் போதனைகளிலும் , செய்தவைகளிலும் இருந்த உண்மையான எண்ண நிலையை விளக்கி கூறி உள்ளார் .

தான் மேற்கொண்டிருந்த பயணங்களுக்கு இடையே தம்முடைய மற்ற வேலைகளை விட்டு விடவில்லை .
கடிதங்களுக்கு பதில் எழுதுவது , மாதந்திர கூட்டம் போடுவது , வருடாந்திரக் கூட்டம் போன்றவற்றுக்கு தலைமைத் தாங்குவது , பேட்டி தருவது போன்ற எதையுமே விட்டு வைக்கவில்லை . 1945 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியான சாயி சுதா பத்திரிகையில் இது வந்துள்ளது .
'உபசமாஜங்களை நிர்மாணிப்பது , ஆலயங்களை நிறுவுவது , மற்றும் சாயி சுதா பத்திரிகையை கவனிப்பது போன்ற வேலைகளுக்கே இந்த சாயி சமாஜ நிறுவனருக்கு நேரம் போதவில்லை . வயதான ஒருவனின் இரண்டு தோள்பட்டைகள் மீது அனைத்தையும் வைத்தால் தனி மனிதன் அல்ல, அவனுக்கு பதில் ஒரு இயக்கம்தான் சீரழியும்'
சமாஜத்தின் அனைது வேலைகளையுமே நரசிமச்வாமிஜிதான் செய்து வந்தார் . அரசாங்க அலுவலகத்தில் அந்த வேலையை செய்ய ஒரு தனித்துறையே அமைந்து இருக்கும் , அத்தனை வேலைகள் . உபசமாஜங்களின் வேலைகளை அவரே கண்காணிக்க வேண்டி இருந்தது . அவற்றுக்கு அவ்வபோது செய்திகள் அனுப்ப வேண்டி வந்தது . தனக்கு வந்த அத்தனை கடிதங்களுக்கும் பதில் எழுத வேண்டி இருந்தது . ஒரு நாளைக்கு சுமார் 18 முதல் 20 மணி நேரம் வரை வேலை செய்து வந்தார் . அவருடைய உடல் தளர்ந்து போனாலும் இதயம் ஒரு துடிப்பான இளஞ்சன் போலவே வேலை செய்து வந்தது . 1946 ஆம் ஆண்டு அகில இந்திய சாயி பக்தர்களின் கூடத்தை கூட்ட வேண்டும் என்ற யோசனையை அவர் தெரிவித்தார் . அங்காங்கே இருந்த உபசமாஜங்கள் சாயி இயக்கத்தை வளர்த்து வந்தாலும் அவர்களுக்கு நரசிம்மஸ்வாமியின் அறிவுரைகளும் வழிகாட்டுதலும் அவ்வப்போது தேவையாக இருந்தது . ஆகவே அந்த சமாஜங்களுக்கு வழிகாட்டி நடத்திச் செல்ல நரசிம்மச்வாமிஜி அல்லது ஒரு குழு தேவைப்பட்டதினால் ஒவொவொரு வருடமும் அகில இந்திய பொதுக்கூட்டத்தை கூட்டி வழிகாட்ட வேண்டியது அவசியம் ஆயிற்று . அப்படிக் கூடினால்தான் சமாஜன்களுக்கு தொடர்ந்த தொல்லைகள் , பிரச்சனைகள் போன்றவற்றை ஆராய்ந்து வழி காட்ட முடியும்.

ஆகவே 1946 ஆம் ஆண்டு மே மாதம் 16 முதல் 19 ஆம் தேதிவரை சென்னையில் இருந்த பீ . எஸ் . உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் அகில இந்திய சாயி பக்தர்கள் மகாநாடு நடந்தது . சுமார் இருநூறு அங்கத்தினரும் ஏராளமான உள்ளூர் பக்தர்களும் அதில் கலந்து கொண்டனர் . தினமும் கடவுள் வணக்கப் பாடலுடன் நிகழ்ச்சிகள் துவங்கின . மதியம் அந்த பள்ளியில் இருந்த ஹாலில் நிகழ்ச்சிகள் நடந்தன . அந்த மகாநாட்டில் நரசிம்ம சுவாமிஜியை தலைவராகத் தேர்ந்து எடுத்தனர் . மகாநாடு ஆரம்பித்த பொழுது , தமிழ் , தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் இறை வணக்கப் பாடல்கள் பாடப்பட்டன . அதில் உரை ஆற்றிய நரசிம்ம சுவாமிஜி நாட்டில் நிலவிய உணவுப் பொருட்கள் பற்றாக்குறை , மின்சாரம் , பெட்ரோல் மற்றும் காகித தட்டுப்பாட்டை விவரித்துக் கூறி வந்துள்ள உறுப்பினர்களுக்கு என்ன உணவு கொடுக்கப்படுகின்றதோ அதையே உண்ணுமாறும் , உபசமாஜா சேவைகளில் நாராயண சேவை என்ற ஏழைகளுக்கான அன்னதானம் கடைபிடிக்க படவேண்டும் என்று அறிவுறுத்தினார் . அது மட்டும் அல்ல மத நல்லியக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார் . அந்த மகாநாட்டுக்கு ராவ் பகதூர் பிரதான் , நீதிபதி ரிகே , தாஸ்கனு மகராஜ் , மார்த்தாண்ட மல்சபதி மற்றும் சுவாமி கேசவையா போன்றோர் வாழ்த்துச் செய்தி அனுப்பி இருந்தனர் . மகாநாட்டில் சமாஜத்தில் தமக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளை உறுப்பினர்கள் எடுத்துக் கூறினார் .

தலைவரின் கொள்கை பிரகடனம் ஏற்கப்பட்டது . ஒவொரு உபசமாஜமும் சாயிபாபா குருகுலம் , கன்யா வித்யாலயங்கள் , கல்விக்கு நரசிம்மா ஆசரமம் மற்றும் மருத்துவ வசதி செய்து கொடுக்கும் வகைக்கான இடங்களை ஆரம்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது . 1944 அம் ஆண்டியில் அனந்தபூரில் ஆதிநாராயண ராவ் என்பவர் துவைக்கிய சாயி பாபா பள்ளிக்கு வாழ்த்து தெரிவிக்காபட்டது . சாயி சமாஜ் வளாகத்திலேயே ஏழைகளுக்கும் , எளியோர்களுக்கும் மருத்துவ வசதி செய்து தரவும் , பள்ளிக்கூடமும் ஆரம்பிக்க உள்ளதாக நரசிம்மவாமி கூறினார் . மகாநாட்டில் இசை கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன . அதே ஆண்டு மகாநாட்டின் முடிவில் , அதாவது மே மாதம் 19 ஆம் தேதியண்டு no 136, பிராடீஸ் ரோடு என்ற இடத்தில் ஒரு நாராயண சேவை மையம் துவக்கப்பட்டது .

சாயி சுதா சார்பில் எட்டு அணா விலையில் அற்புதமான மலர் வெளியிடப்பட்டது . அதற்குப் பின்னரே மகாநாடுகளில் பெரிய அளவில் மலர்கள் விற்பனை செய்வது துவங்கப்பட்டது . சாயிபாபாவின் வாழ்கையை விளக்கும் விதமாக சாயி ஹரிகதா தமிழிலும் , தெலுங்கிலும் நடத்தப்பட , தெலுங்கில் அவர் வாழ்க்கை பற்றிய நாடகம் நடை பெற்றது . அந்த மகாநாடு அதைத் தொடர்ந்து நடந்த சாயி மகாநாடுகளுக்கு வழிகாட்டியாக அமைந்து இருந்தது . அவை சென்னையை தவிர வேறு இடங்களில் நடந்தன . தன்னால் கலந்து கொள்ள முடியாத மகாநாடுகளுக்கு நரசிம்மசுவாமி வாழ்த்துச் செய்திகளை அனுப்பினார் . சாயி மகாநாடு உற்சாகத்துடன் பல்வேறு இடங்களில் நடக்கத்துவங்கின . 1946 ஆம் ஆண்டில் துவங்கிய சாயி பக்தர் மகாநாடு 1947 இல் கோயம்பத்தூர் , 1949 இல் மதுரை , 1950 இல் கல்கத்தா , 1951 இல் தார்வார் , 1952 இல் பூனா , 1953 இல் மதுரை மற்றும் 1954 இல் பரோடா போன்ற இடங்களில் மகாநாடுகள் நடைபெற்றன . அதனால் நாடு முழுவதில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் பங்கு கொண்டு சாயி பக்தர்கள் ஆயினர் . அது நரசிம்மச்வாமிக்கு மிக்க மன மகிழ்ச்சியை அளித்தது .
அதன் பின் பக்தர்கள் தந்த நன்கொடைகளினால் ,சென்னை அலமேலுமங்காபுரம் என்ற இடத்தில் ஒரு இடம் வாங்கப்பட்டு , தற்காலிகமான மேற் கூரை அமைக்கப்பட்டது . மெல்ல மெல்ல நன்கொடைகள் பெருக அங்கு சமாஜத்திற்கு பெரிய கூடம் கட்டப்பட்டது . 1952 ஆம் ஆண்டு ஜூலை ஏழாம் தேதியன்று அதாவது குரு பூர்ணிமா தினத்தன்று , அங்கு சாயிபாபாவின் பெரிய படம் ஒன்று வைக்கப்பட்டு வழிபாடு துவங்கியது . 1953 ஆம் ஆண்டில் அங்கு சீரடியில் உள்ளது போலவே கோபுரம் அமைக்கப்பட்டு ஆலயம் கட்டப்பட்டது . 1953 ஆம் ஆண்டில் மைசூர் மகாராஜாவான திரு எச் .எச் . ஜெயசாமராஜவாடியார் தந்த இயாயிரம் ரூபாய் நன்கொடையில் ஒரு அச்சகம் வாங்கப்பட்டது .

1953 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பதினெட்டாம் தேதியன்று ஆலயத்திற்கான கும்பாபிஷேக நாள் குறிக்கப்பட்டது . லக்ஷார்ச்சனை மற்றும் ஹோமங்களுடன் அது துவங்கப்பட்டது . பதினேழு மற்றும் பதினெட்டாம் தேதிகளில் குரு ஆராதனா என்ற பெயரில் அன்னதானம் நடைபெற்றது . பதினெட்டாம் தேதியன்று கலச ஸ்தாபனம் நடைபெற்றது . ஆனால் அந்த வைபவத்தில் ஒரு அசம்பாவிதம் நடந்தது . 'உன்னால் கும்பாபிஷேகம் செய்ய முடியாது' என நரசிம்மச்வாமிக்கு சாயிநாதர் தோன்றி கூறியதினால் நல்ல நேரமான பதினோரு மணிக்கு நடைபெறவேண்டி இருந்த கலச பூஜை ஏழரை மணிக்கே அவசரமாகத் துவங்கியது . ஏணியில் நரசிம்மசுவாமி ஏறி கலசத்துக்கு அபிஷேகம் செய்தார் . அதன் பின் எட்டரை மணிக்கு பாத்ரூமில் வழுக்கி விழுந்த நரசிம்மச்வாமிக்கு தொடை எலும்பு முறிந்து போய் எட்டு வாரங்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டி வந்தது . சாயி பாபா அவருக்கு கூறியது போல அவரால் கும்பாபிஷேகம் செய்ய முடியாததினால் , அவருக்கு பதிலாக ராதா கிருஷ்ண சுவாமிஜி அதை செய்தார் . மருத்துவ மனையில் இருந்த போது தங்க முடியாத வலியை தமது மன உறுதியால் நரசிம்மசுவாமி தங்கிக்கொண்டார் .

எலும்பு முறிவுக்குக் காரணம் பூர்வ ஜென்ம வினை என்றார் . இவ்வாறு அவர் துவக்கிய இயக்கம் அனைத்து இடங்களையும் ஆக்ரமித்துக் கொள்ள சமாஜத்திற்கு நிறைய வருமானம் கிடைத்தது . அதற்கு இடையே சுவாமிஜி சேனைப் போன்ற தன்னலம், அற்ற சேவகர்களை சாயி சமாஜ வேலைகளுக்கு ஸ்தாபித்தார்
......தொடரும்

Posted so Far :

B. V Narsimha Swamiji-Introduction .
Chapter 1-B.V Narsimha Swami ji-Birth and Childhood.
Chapter 2.-B.V Narsimha Swami ji -Life in Salem.
Chapter 3-B.V Narsimha Swami ji-Public Life.
Chapter 4-B.V Narsimha Swami ji- Turning Point .
Chapter 5.B.V Narsimha Swami ji-In Search of God.
Chapter 6. B.V Narsimha Swami ji -Life in Ramana Maharshi Ashram.
Chapter 7. B.V Narsimha Swamiji-Towards Pandharpur.
Chapter 8. B.V Narsimha Swami ji -From 1932-1934 part 1.
Chapter 9.B.V Narsimha Swami ji-From 1932-1934 continued.
Chapter 10.B.V Narsimha Swami ji-Life in Sakori.
Chapter 11. B.V Narsimha Swami ji-Face to face with Master .
Chapter 12. B.V Narsimha Swami ji-Sai Prachar.
Chapter 13.B.V Narsimha Swamiji-Baba Himself Favors the Movement.
Chapter 14. B.V Narsimha Swami ji-Early Days of His mission .
Chapter 15. B.V Narsimha Swami Ji-Only Aim.
Chapter 16.B.V Narsimha Swami ji-Early Days of His Mission
Chapter 17.B.V Narsimha Swami ji -Lockets and Calenders.
Chapter 18. B.V Narsimha Swami ji-Lectures and Discourses.
Chapter 19.B .V Narsimha Swami ji-Meeting The Disciple.
Chapter 20. B.V Narsimha Swami ji-Efficient System For Sai Prachar-Part 1.

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.