Shri Sai Satcharitra Mahima.
சாயிபாபாவும் சாயி சரித்திர மகிமையும்

நான் சாயி சரித்திரத்தை பாராயணம் செய்து பெரும் பலன்கள் அடைந்தவள். அவருடைய லீலைகள் அதில் நிறையவே உள்ளன. அதைப் பாராயணம் செய்த பலரும் அவர்களுக்கு வாழ்கையில் ஏற்பட்டு வரும் ஆச்சர்யமான அனுபவத்தை எழுதுகிறார்கள். சாயி சரித்திரம் அமிருதம் போன்றது. இதோ சுதீர் என்பவற்றின் அனுபவத்தைப் படியுங்கள்
மனிஷா
மனிஷா
சுதீரின் அனுபவம்
நான் சீரடிக்கு சமீபத்தில்தான் சென்றேன். அது முதல் பாபாவின் தீவீரமான பக்தன் ஆகிவிட்டேன். உங்களுடைய இணையதளத்தில் சாயி சரித்திரத்தின் மகிமைகளை படித்து உள்ளேன். அது தரும் பலன்களையும் உணர்ந்து கொண்டேன்.
தீபாவளி பண்டிகைக்கு முதல் நாளன்று எனக்கு ஒரு கனவு வந்தது. நான் சாயி பாபாவின் ஆலயத்தில் என்னை மறந்து கண்களை மூடிக்கொண்டு பஜனைப் பாடல்களை பாடியபடி இருந்தேன். அப்போதோ ஒரு பூசாரி வந்து என் உடல் முழுவதும் குங்குமம் நிறைந்து இருந்தது என்று என்னிடம் கூறினார் . நான் திடுக்கிட்டு எழுந்தேன். மறு நாள் முதல் சாயி சரித்திரத்தைப் பாராயணம் செய்ய முடிவு செய்தேன். அதை ஏழு நாளில் படித்து முடித்தேன். என் மனதில் அமைதி நிறைந்து இருந்ததை உணர்ந்தேன். அது முதல் நான் அவர் நினைவினால் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டேன்.
என்னுடைய ஒரு சகோதரி MSC படித்து வந்தாள். அவளுக்கு இன்னும் ஒரு வருட படிப்பே பாக்கி. அவளுக்கு ஹாஸ்டலில் இருக்கப் பிடிக்கவில்லை. அங்குள்ள சாப்பாடும் சரிவரவில்லை. மேலும் பல பிரச்சனைகள். அவளுக்கு வீடு நினைப்பும் வந்து விட்டது. நான் அவளிடம் பொறுமையாக இருந்து ஒரு வருடத்தை எப்படியாவது கழித்து விடு என அறிவுறுத்தினேன் . அவள் அதை ஏற்க மறுத்தாள்.
தனது அனைத்து சாமான்களையும் எடுத்துக் கொண்டு வீட்டுக்கும் வந்து விட்டாள். பரீட்சைக்கு இரண்டே நாள் பாக்கி இருந்தது. பரீட்சை எழுதப் போவது இல்லை என்றாள். அவளுக்கு எதைக் கூறி புரிய வைப்பது என குழம்பினேன்.

அவளுக்கு என்ன ஆயிற்றோ தெரியவில்லை, அன்றே திடீரென என்னுடைய சகோதரி என்னிடம் வந்து தான் பரீட்சை எழுதப் போவதாகவும், அது முடிந்ததும் வாரா வாரம் வீட்டிற்கு வந்து தங்க வார்டன் அனுமதித்தால் ஹாஸ்டலில் தங்குவதாகக் கூறினாள்.
அதை நாங்கள் ஏற்றுக் கொண்டோம். பரிட்சையை நல்லபடியாக செய்து முடித்தாள். அவளுக்கு ஆத்ம பலமும் பெருகியது. தன்னால் ஹாஸ்டலில் தங்க முடியாது, பரீட்சை எழுதப் போகவில்லை என்றவள் எப்படி ஒரே நாளில் மனம் மாறினாள்? அது பாபாவின் கருணையே தவிர வேறு ஒன்றும் இல்லை. பாபாவிடம் முழுமையாக சரண் அடைந்து விட்டவர்களை அவர் எப்போதும் கை விடுவது இல்லை.
(Translated into Tamil by Santhipriya)அதை நாங்கள் ஏற்றுக் கொண்டோம். பரிட்சையை நல்லபடியாக செய்து முடித்தாள். அவளுக்கு ஆத்ம பலமும் பெருகியது. தன்னால் ஹாஸ்டலில் தங்க முடியாது, பரீட்சை எழுதப் போகவில்லை என்றவள் எப்படி ஒரே நாளில் மனம் மாறினாள்? அது பாபாவின் கருணையே தவிர வேறு ஒன்றும் இல்லை. பாபாவிடம் முழுமையாக சரண் அடைந்து விட்டவர்களை அவர் எப்போதும் கை விடுவது இல்லை.

Loading
0 comments:
Post a Comment