Wednesday, May 5, 2010

Shri Gopalrao Keshavraj Babasaheb-Shirdi Sai Baba's Guru.

அன்பானவர்களே
நான் ஒரு முறை பயணம் செய்து கொண்டு இருந்த போது சீரடி சாயி பாபாவின் சில புத்தகங்களை படிப்பதற்கு எடுத்துச் சென்று இருந்தேன். அதில் ஒன்று தாஸ் குண மகராஜ் என்பவர் எழுதி இருந்த பாபாவின் போதனைகள் என்பதும். அதைப் படித்த எனக்கு அமிருதத்தைப் பருகியது போல இருந்தது. அதை மற்றவர்களும் படித்து ஆனந்தம் அடைய வேண்டும் என விரும்புகின்றேன். ஆகவே முதலில் கேஷவராஜ் பாபா சாஹேப் என்பவரே சாயி பாபாவின் குரு என தாஸ் குண மகராஜ் கூறியுள்ளதை பற்றி எழுதுகிறேன். தாஸ் குண மகராஜ் அவ்வாறு கூறியதற்கு ஆதாரம் எதுவும் இல்லை என்பதினால் அதை மற்றவர்கள் ஏற்றுக் கொள்ள வில்லை. சாயிபாபாவையும் அவருடைய குருவையும் இணைக்கும் பாலாம் தாஸ் குண மகராஜ் மட்டுமே. சான்தகாமுருத் என்ற புத்தகத்தில் 1908 ஆம் ஆண்டு வெளியானதை ஆதாரமாகக் கொண்டு இதை எழுதி உள்ளேன் .
மனிஷா

சாயிபாபாவின் குரு
சாம்பா என்ற கிராமத்தில் பிறந்தவரே கேஷவராஜ் பாபா சாஹேப். அவருடைய தந்தை கேஷவாவுக்கு நெடுங்காலம் குழந்தை பிறக்கவில்லை என்பதினால் வெங்கடேச பெருமானைப் பிரார்த்தித்துப் பிறந்தவர் அவர்.
வெங்கடேச பெருமான் அவருடைய பக்தியை மெச்சி காசியை சேர்ந்த ராமானந்த சுவாமி என்பவரே அவருக்கு மகனாகப் பிறப்பார் எனக் கூறி இருந்தார். பிறந்த குழந்தையான கோபால ராவ் பெரியவராக ஆனதும் திருமணம் ஆயிற்று . ஆனால் அந்த வாழ்வை அவர் துறந்து விட்டு தவ வாழ்வை மேற்கொள்ள வெளியில் சென்று விட்டார். அங்கும் இங்கும் சுற்றித் திரிந்தவர் 1830 ஆம் ஆண்டு பாராபாரி என்னும் இடத்தில் இருந்த 'சேலு' என்ற இடத்தை வந்தடைந்தார். அந்த இடத்தில் இரண்டு அல்லது மூன்று குடுசைகளே இருந்தன. அவருக்கு அதில் தங்க போதுமான இடம் இல்லை. ஆகவே அவர் பாழடைந்து கிடந்த ஒரு கோட்டை பகுதியை சரி செய்து அதில் இருக்க முடிவு செய்தார். அந்த இடமே தனக்கு சரியான இடம் என அவருக்குத் தோன்றியது. அந்த இடத்தை சரி செய்து அங்கு வாழ்ந்தவர் 'சேலுவில்' பல நன்மைகளை செய்தார். கிட்டத்தட்ட ஒரு ஜமிந்தாராகவே மாறினார். அவருடைய குணம் மிகவும் நல்ல குணமாக இருந்ததினால் அனைவரது மதிப்பையும் பெற்று இருந்தார். ஒருநாள் ஒரு விசித்திர சம்பவம் நடந்தது. அவர் அரண்மனையின் மேல் தளத்தில் இருந்த போது அழகான இளம் மங்கை ஒருவள் பின்புற வாசல் வழியே உள்ளே ஒய்வு எடுக்க வந்தாள். அது சூரியன் மறைந்து கொண்டு இருந்த மாலை நேரம். ஏதேற்சையாக மேல் தளத்தில் இருந்த கோபால்ராவ் அவளைக் கண்டார். அவளுடைய அழகைக் கண்டவர் தன்னை மறந்தார். அவளுடைய அழகே பார்த்து ரசித்துக் கொண்டு இருந்தவருக்கு காமஇச்சை தலைக்குமேல் சென்றது. ஒரு கணம் தான். தன நிலைக்கு வந்தார். உடல் முழுதும் நனைந்து விட்டு இருந்தது. நினைத்தார் ' என்ன தவறு செய்து விட்டேன். எவளோ ஒரு முன்பின் தெரியாதவள். அவள் மீது எப்படி எத்தனை இச்சைக் கொண்டேன். இதற்கு தண்டனை பெற்றே தீரவேண்டும்' என எண்ணியவர் பூஜை அறைக்குச் சென்றார்.

' அந்த தவறு செய்த கண்கள் வேண்டாம் ' என முடிவு செய்து அங்கு வைத்து இருந்த ஒரு ஊசியினால் தன்னுடைய கண்களை குத்திக் கொண்டார். அப்படி செய்ததும்தான் அவருடைய மனம் அமைதி அடைந்தது.

கோபால் ராவ் கண்களை குத்திக் கொண்டது அனைவருக்கும் தெரிய வந்தது. அவர் வீடு முன் அனைவரும் வந்தனர். சிலர் அவர் ஒரு பைத்தியம் என நினைத்தனர். ஆனால் அதுவே அவர் மீது மக்களுக்கு இன்னும் அதிக மரியாதையை வைக்கப் போதுமானதாயிற்று. அவருக்கு பலர் பக்தர்களாயினர். அவரை வணங்கலாயினர் . ஒரு முறை ஒரு குருடான பெண்மணி அவரிடம் வந்து கதறி , அவர் கால்களைப் பிடித்துக் கொண்டு தனக்குப் பார்வை தருமாறு வேண்டியபோது அவர் சிறிது மிளகாய் பொடியை எடுத்து அவள் கண்களில் போட அவளுக்கு பார்வை கிடைத்தது. அது அவருடைய பெருமையை மேலும் பெருக்கியது.
சாயி பாபா பிறந்த செய்தி
அதன் பிறகு கோபாலராவ் காசிக்குச் சென்றார். அவருடன் வேறு பலரும் சென்று இருந்தனர். அங்கிருந்து அவர் பிரயாக், குருஷேத்ர, விருந்தாவன், கோகுல், மதுரா, துவாரகா, அஹமதாபாத் போன்ற பல இடங்களுக்கும் சென்றார். அஹமதாபாதத்துக்கு சென்ற போது ஒரு மசூதிக்குச் சென்றார். உள்ளே நுழைந்ததும் ' சலாம் அலேகும், முன் பிறவியில் ராமானந்தா என்றவராக இருந்தவரே, சேலுவில் இருந்து பத்து மைல் தூரத்தில் உள்ள பதாரி என்ற கிராமத்தில் கபீர் என்ற உன் சிஷ்யர் பிறந்து உள்ளார் ' என்ற சப்தம் அந்த சமாதிக்குள் இருந்து வந்தது.

அதைக்கேட்ட அனைவரும் ஆச்சரியம் அடைந்தாலும் கோபால்ராவுக்கு அது ஆச்சரியத்தைக் கொடுக்கவில்லை. உடனே அவர் அங்கிருந்து கிளம்பி சேலுவிற்குச் சென்றார். ஒரு நாள் பதாரி கிராமத்தில் இருந்து அவரிடம் ஒரு வயதான பெண்மணி தன்னுடன் ஒரு சிறுவனை அழைத்து வந்தார். கோபால் ராவ் அவர்களுக்கு அங்கேயே தங்க புகலிடம் தந்தார். அவருக்கு சமஸ்க்ருத மொழி நன்கு தெரியும். அந்த சிறுவனுக்கும் அதை கற்பதில் சிரமம் ஏற்படவில்லை.
அவனுக்கு யோகாசனங்களையும், தியானப் பயிற்சியையும் தந்தார். அந்த சிறுவனும் மற்றவரைவிட அதிக புத்தி கூர்மையாக இருந்ததினால் அவர் தந்த கல்வியை ஏற்பதில் நேரமே ஆகவில்லை. விரைவாக அவரிடம் இருந்து பலவற்றைக் கற்று அறிந்தான். கோபால்ராவ் முன் பிறவியில் பிரும்ம ஞானி என்பதினால் அவருக்கு பல சீடர்கள் இருந்தனர். அந்த சிறுவன் வந்தது முதல் அவரால் அவர்களுக்கு பயிற்சி கொடுக்க அதிக நேரம் ஒதுக்க முடியாமல் போயிற்று. அது மற்றவர்களுக்குப் பிடிக்கவில்லை. அதை அறிந்த கோபாலராவ் அந்த சிறுவனை தான் இருந்த கோட்டைக்கு அழைத்துச் சென்றுவிட்டார். பலரும் அந்த சிறுவன ஒரு முஸ்லிம் என நினைத்தனர். ஆனால் கோபால்ராவோ பிராமணர்.

அது இன்னமும் அவர்கள் மீது ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவர்கள் இருவரையும் கொல்ல முடிவு செய்து அவர்களைத் தேடி அலைந்தனர். கடைசியாக அவர்கள் இருந்த இடத்தைக் கண்டு பிடித்தனர். அப்போது இரவு நேரம். கோபால்ராவும் அந்த சிறுவரும் ஒரு அறையில் படுத்து இருந்தனர். வந்தவர்கள் அந்த சிறுவனின் தலை மீது அவரை கொல்லும் நோக்கத்துடன் ஒரு கல்லைத் தூக்கிப் போட்டனர். அது அவருடைய குருவின் தலையில் விழுந்துவிட்டது.

நல்ல வேளையாக அது அவருக்கு பலத்த காயத்தை மட்டுமே ஏற்படுத்தியது. ரத்தம் கொட்டத் துவங்க அந்த சிறுவன் அவருடைய காயத்துக்கு கட்டுப் போட்டார். ரத்தம் வருவது உடனே நின்றது. சிருவருக்குத் தெரிந்தது, வந்தவர்கள் யார் என்பதும் அவர்களுடைய கோபத்துக்குக் காரணமும். இனியும் தாம் தம்முடைய குருவுடன் இருந்தால் அவருக்கு ஆபத்து ஏற்படும், வந்தவர்கள் அவரைகொல்லாமல் விடமாட்டார்கள் என உணர்ந்தார். ஆகவே அவரை விட்டு தனியாகச் செல்ல முடிவு செய்தார்.

அதே நேரத்தில் கோபால்ராவுக்கும் அனைத்தும் தெரிந்தது. பொறமை கொண்டவர்கள் சிறுவனை கொல்லாமல் விட மாட்டார்கள். தனக்கு இறுதி காலம் வந்து விட்டதை உணர்ந்தவர், கிளம்பிச் சென்றவரை அழைத்தார். அவனுக்கு தனது அத்தனை சக்தியையும் கொடுத்துவிட்டுக் கூறினார் ' உன் சக்தி அனைவருக்கும் தெரிய வேண்டும் . உடனே சென்று பால் கறக்காமல் இருக்கும் மாட்டை பிடித்து பால் சுரக்க வை ' அந்த சிறுவரும் வெளியில் ஓடிச் சென்று கபில என்ற மலட்டு மாட்டைப் பிடித்து அதன் மடியில் இருந்து பால் கறக்க முயன்றார். அதன் சொந்தக்காரன் அது மலட்டு மாடு. அதை விவசாயத்துக்கே பயன்படுத்துகின்றேன் எனுன்போது அது எப்படி பாலைக் கறக்கும்?. அந்த சிறுவன் ஓடிச் சென்ற கோபால்ராவிடம் அது பற்றிக் கூறி கடந்த பத்து வருடங்களாக அது பால் கறக்காத மாடு என்ற உண்மையை தான் தெரிந்து கொண்டதாகக் கூற அவர், ஒரு பத்திரத்தைக் கொண்டு வா, நானே கறந்து காட்டுகின்றேன் எனக் கூறி பத்திரத்தை வங்கி வரச் சொல்லி அதன் மடியில் வைக்க அது மூன்று லிட்டர் பாலை சுரந்தது. அதை எடுத்து அந்த சிறுவனிடம், இந்த மூன்று லிட்டர் பாலும் கர்மா, ஞான, மற்றும் பக்தியை குறிப்பவை. அனைத்தையும் உடனே குடி எனக் கூறி அவரை குடிக்க வைத்து தனது அத்தனை சக்தியையும் அவருக்கு மாறினார். அதன் பின் அவரிடம் கூறினார் ' நீ பூர்வ ஜென்மத்தில் ஒரு கபீராக இருந்தாய். உன் மனைவியை ஒருவரிடம் அனுப்பி குழந்தைகளை பாதுகாத்துக் கொள்ளச் சொன்னேன். நீ பூர்வ ஜென்மத்தில் பஜனைகளும் செய்து உள்ளாய். ஆகவே இந்த ஜென்மத்தில் மெளனமாக இருக்க வேண்டும். மேலும் நீ இந்த ஜென்மத்தில் பிருமச்சரியத்தை அனுஷ்டித்து, பக்கத்தில் உள்ள ஊரில் ஒரே இடத்தில் தங்கி அனைவருக்கும் நல்லது செய்யவேண்டும்.

அப்படிக் கூறிய பின் தன்னுடைய தலைக் கட்டை அவிழ்த்து அதை அந்த சிறுவனுடைய தலையில் ஒரு பகீஎரைப் போல இருக்குமாறு கட்டி விட்டார். அதன் பின் கோபாலராவ் மரணம் அடைந்து விட்டார். ஆனால் அவருடைய இறந்த தேதி தெரியவில்லை. பாபாவுக்கு அப்போது இருபது வயதாயிற்று. கோபால்ராவுக்கு சேலுவில் சமாதி அமைக்கபட்டது. அதன் அருகில் ஒரு மரம் வளர்ந்துள்ளது. அவருடைய ஏழாவது வம்சாவளியினர் அங்கு உள்ளனர்.
தன்னுடைய குரு இறந்ததைக் கண்ட சிறுவர் திடுக்கிட்டார். அவரே இன்று நமக்கு கருணை புரியும் சாயி பாபா. தன்னால்தானே தன்னுடைய குருவிற்கு மரணம் வந்தது என மனதில் வருந்திய பாபா அதனால் அது முதல் அவருடைய குருவைப் பற்றி எவரிடமும் கூறாமல் இருந்து விட்டார் .


(Translated into Tamil by Santhipriya )
Image and video hosting by TinyPic© Shirdi Sai Baba Stories In Tamil.

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.