Unique Sai Darshan-Experience of Sai Devotee Meena.
அன்பானவர்களே,
சாயிபாபா எங்கும் நிறைந்து இருக்கின்றார் என்பது நமக்குத் தெரியும். நம்ம அவர் பார்த்துக் கொண்டே இருக்கின்றார் என்பதும் உண்மையே. நம் மனதை புரிந்து கொண்டு அருள் புரிகின்றார் என்பதற்கு சாட்சியாக மீனா என்ற சாயி பக்தையின் அனுபவத்தை படியுங்கள்
மனிஷா
நான் உங்களுடைய இணையதளத்தினை தினமும் படித்து வருபவள். அதில் உள்ள சாயி அனுபவங்களை தொடர்ந்து படித்து வருபவள். எனக்கு நேற்று ஒரு வினோதமான அனுபவம் ஏற்பட்டது. நாங்கள் உள்ள இடத்தின் அருகில் சாயிபாபாவுக்கு எந்த ஆலயமும் கிடையாது.
ஆலயத்திற்குள் அப்போது நாங்கள் மட்டுமே இருந்தோம் . அதன் பிறகு தரிசனத்தில் கவனமாக இருந்தவர்கள் அதை பற்றி மறந்து விட்டோம். அங்கு அமர்ந்தபடிபிரார்த்தனையை செய்து கொண்டு இருந்தோம்.
அந்த ஊரில் உள்ள ஆலயத்தில் மாதத்தின் முதல் சனிக்கிழமையில் மட்டும் சாயி பக்தர்கள் சாயி பாபாவின் சிலைகளைக் கொண்டு வந்து (அதை கொலு என்பார்கள் ) வைத்து பஜனைகள் செய்து விட்டுப் போவார்கள். ஆனால் இன்று எப்படி அது நடந்தது?
நான் காரில் சென்று கொண்டு இருந்தபோது என் நினைவுக்கு வந்தது. அன்று நான் சாயிபாபாவை பார்க்க ஆவலாக இருந்துள்ளேன். அதை தெரிந்து கொண்ட பாபா எனக்கு அந்த அனுபவத்தை தந்து அவரை தரிசிக்க வைத்து உள்ளார். அன்று முதல் எனக்கு அவர் மீது இருந்த பக்தியும் நம்பிக்கையும் என்னும் பெருகியது. எனக்கு அவரே என்றும் துணை இருக்க வேண்டும்'' .
(Translated into Tamil by Santhipriya)

Loading
0 comments:
Post a Comment