Did I come all the way to Shirdi to eat worms?
அன்பானவர்களே, நான் இப்போது கூறப் போகும் சம்பவம் 1910 ஆம் ஆண்டு நடந்தது. நடப்பது அனைத்துமே பாபாவுக்குத் தெரியும். அவர் முக்காலத்தையும் உணர்ந்தவர். போனவைகள் மட்டும் அல்ல அவருக்கு வர இருப்பதும் தெரியும்.
மனிஷா
சீரடியில் சென்றவர்கள் ஒரு உணவகத்தில் உணவு அருந்தினர். அந்த உணவில் ஒரு புழு இருந்ததைக் கண்ட ( சாதாரணமாக அரிசி மற்றும் பருப்புகளில் கறுப்புப் பூச்ஹி- புழு வந்தால் அதை சுத்தம் செய்யும்போது ஒன்று, இரண்டு தங்கிவிடும். அது போன்றது போலும் ) கண்ட பதான்கார் நான் சீரடிக்கு புழு -பூச்சிகளைத் தின்ன வரவில்லை எனக் கோபத்துடன் உணவகத்தில் கத்தினார்.
அதன் பின் இருவரும் பாபாவைப் பார்க்கச் சென்றனர். அவர்களைக் கண்ட பாபா அவர்கள் மீது கரணம் இல்லாமல் கோபப்பட்டு வெளியே போகச் சொல்லிவிட்டார். பதான்கார் வருத்தம் அடைந்தார் . சீரடியை விட்டுக் கிளம்ப முடிவு செய்தார். ஆனால் மற்றவர்கள் அவரை தேற்றி பாபாவிடம் ஒரு முறை கூறிவிட்டுச் செல்லுமாறுஅறிவுறுத்தினர்.
மறுநாள் மீண்டும் அவர்கள் பாபாவை பார்க்கச் சென்றனர். பாபா அமைதியாக இருந்தார். பதான்கரைப் பார்த்துக் கேட்டார், ' மக்கள் இங்கு புழு-பூச்சிகளை தின்னத்தான் வருகின்றார்களா? . அதைகேட்ட பதான்காருக்கு அவமானமாகி விட்டது. அனைத்தையும் அறிந்தவர் அல்லவா பாபா. அவருடைய கால்களில் தடாலென விழுந்து மன்னிப்புக் கேட்டார் பதான்கார் . பாபா அவருக்கு அக்கல்கோட் ஸ்வாமிகள் உருவில் தரிசனம் தந்தார். அப்போதுதான் பதான்கருக்கும் புரிந்தது பாபாவும் அக்கல்கோட் ஸ்வாமிகளும் ஒருவரே என்பதும். அவர் பாபாவுக்கு ஒரு ரூபாய் தட்சணை தந்தார். பாபா அதை பெற்றுக் கொண்டார். இன்னும் ஒரு ரூபாய் கேட்டார், பதான்கார் உடனே அதைத் தந்தார். அதன் பின் வீடு திரும்பினார். திடீரென நல்ல வேலை கிடைத்தது. நிறைய சம்பளமும் வந்தது. இரண்டு ரூபாய் தந்ததற்கு பல மடங்கு அதிக சம்பளத்தில் வேலை கிடைத்து, வசதியாக வாழ்ந்தார்.
(Translated into Tamil by Santhipriya)

Loading
0 comments:
Post a Comment