Tuesday, May 25, 2010

Your vow has been accepted.



ராமகிருஷ்ண கோதாரி என்பவர் 1908 ஆம் ஆண்டு பிறந்தவர். அவர் பதாரி பிரபு என்ற ஜாதியைச் சேர்ந்தவர். அவருடைய பெற்றோர்கள் சீரடிக்கு 1911 ஆம் ஆண்டு சென்றனர். அப்போது பாபா துவாரகாமயியின் வாயிலில் நின்று கொண்டு உடி பிரசாதத்தை விநியோகித்துக் கொண்டு இருந்தார்.அதைக் கண்டவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். அன்று முதல் அவர்கள் பாபாவின் பக்தர்கள் ஆயினர். அவர்கள் வீடு திரும்பியதும் சாயி பஜனை மண்டலி ஒன்றை துவக்கினர்.

1913 ஆம் ஆண்டு ராமகிருஷ்ண கோதாரியின் தந்தை நிமோனியா ஜுரத்தினால் பாதிக்கப் பட்டு படுத்த படுக்கையில் விழுந்தார். அவரை சோதித்த மருத்துவர்கள் அவர் உயிர் பிழைப்பது கடினம் என்று கூறி விட்டனர். ஆனால் அவருடைய மனைவியோ பாபாவிடம் வேண்டினாள்' தன்னுடைய கணவர் குணமாகிவிட்டால் தான் சீரடிக்கு பாத யாத்திரை மேற்கொள்வதாக பிரார்த்தனை செய்தாள்.

பஜனை மண்டலியினர் வந்து பஜனை செய்ய ஆரம்பித்தனர் . இரவு பத்து மணி ஆயிற்று . அவர் உடல் நிலை மோசம் அடைந்தது. மருத்துவர் வந்து ஒரு ஊசி போட்டார். இரவு மீண்டும் வந்து அவரை சோதித்த மருத்துவர்கள் அவர் எந்த நிமிடத்திலும் இரவு பன்னிரண்டு மணிக்குள் மரணத்தை தழுவ உள்ளார் என்று கூறிவிட்டனர். அதைக் கேட்ட அவருடைய உறவினர் பகவத் கீதையை படிக்கத் துவங்கினர். பஜனை தொடர்ந்தது. அவருடைய மனைவி கதறினாள். 'பாபா என் கணவரைக் காப்பாற்று' என கூறிக் கூறி அழுதாள். இரவு ஒரு மணிக்கு மீண்டும் மருத்துவர் வந்து இன்னொரு ஊசி போட்டார். விடியற்காலை நான்கு மணிக்கு அவர் பிழைப்பதற்கான அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்தன. சற்று நேரம் ஆனது, ஆபத்தைக் கடந்து அவர் பிழைத்துவிட்டார்.

ஆகவே அவளுடைய பிரார்த்தனையை நிறைவேட்ற சீரடிக்குச் செல்ல தயாராக இருக்குமாறு பஜனை மண்டலியினர் கூற அவள் அவர்களுடன் சில தினத்தில் சீரடிக்கு கிளம்பினாள். ஐந்து மாட்டு வண்டியில் அவர்கள் முன்னே செல்ல அவளோ அந்த வண்டிகளின் பின்னால் நடந்து செல்லத் துவங்கினாள். அவள் வண்டியில் ஏறவில்லை. கால்கள் வீங்கி விட்டன. சீரடிக்கு சற்று தூரத்தில் ஒரு இடத்தில் இளைப்பாற அமர்ந்தாள். அப்போது வெள்ளை தாடியுடன் அங்கு வந்த மாட்டு இடையர் ஒருவள் அவள் அருகில் வந்து ' உன்னுடைய பிராத்தனையை பாபா ஏற்றுக் கொண்டு விட்டார். போ, வண்டியில் ஏறிச் செல்' என்று கூறிவிட்டுச் சென்று விட்டார்.

ஆனால் அவள் அதற்கு மறுத்து விட்டு நடந்தே சென்றாள்.

துவாரகாமயிக்குச் சென்று பாபாவை தரிசித்தபோது பாபா நானாவிடம் கூறினார் ' நான் இந்த பெண்மணியை வண்டியில் ஏறி வருமாறு கூறியும் அவள் அதைக் கேட்டகாமல் நடந்தே வந்து உள்ளாள். அவள் கால்கள் எத்தனை வீங்கி உள்ளன எனப் பார்த்தாயா. ஆனால் அவை அனைத்தும் இன்று மாலைக்குள் சரியாகி விடும் என்றார். அவர் கூறியது போலவே அன்று மாலையே அவளுடைய காலில் இருந்த காயங்கள் மறைந்தன, கால் வீக்கம் இல்லை. அவள் சீரடியில் தங்கி பாபாவின் உடியை பெற்றுக் கொண்டு வீடு திரும்பினாள்.

(Transalted into Tamil by Santhipriya )
Image and video hosting by TinyPic© Shirdi Sai Baba Stories In Tamil.

Loading

1 comments:

Deepa said...

Jai Sai Ram

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.