Wednesday, June 16, 2010

Glory to Lord Sai -Baba's Vision,Sai Satcharitra,Sai Vrat and Power of Udi Ma.

உடி, விரதம் மற்றும் சாயி சரித்திரத்தின் மகிமை


அன்பானவர்களே
இன்று நான் உங்களுக்கு ஒரு சாயி பக்தருக்கு ஏற்பட்ட ஆச்சர்யமான அனுபவத்தை கூற உள்ளேன். அவர் தன் பெயரை வெளியிட விரும்பவில்லை.
மனிஷா

பெயரை வெளியிட விரும்பாத பக்தரின் அனுபவம்
இந்த என் அனுபவத்தைப் படிப்பவர்கள் தன்னிடம் முழுமையாக சரண் அடைந்து விட்டவர்களை பாபா என்றுமே கைவிடமாட்டார் என்ற அனுபவ பூர்வமான உண்மையை மேலும் பலப்படுத்திக் கொள்வார்கள் .

பாபாவின் அருளினால் எனக்கு போன வருடம் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அதுவும் அவருடைய நாளான வியாழன் கிழமை பிறந்தது மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அவனுக்கு ஆறு வார காலத்திலேயே கிட்னி கோளாறு ஏற்பட்டது. அது உயிருக்கு ஆபத்து இல்லை என்றாலும் மிகவும் கொடுமையானது. பல மருத்துவர்களிடமும் சென்றோம். பல விதமான சோதனைகள் நடத்தப்பட்டன. அத்தனை சிறு வயதில் அவன் அவதிப்படுவதைக் கண்டு மனம் பதைபதைத்தது. பாபாவையே நிந்தித்தபடி வேண்டினேன். வேறு என்ன செய்வது? நான் அவருடைய பக்தன் இல்லை என்றாலும் வேறு வழியின்றி அவரை வேண்டினேன். அவர் எவராக இருந்தாலும் அவரிடம் சென்று அழுதால் அதையும் கேட்பார் என்பது எனக்குத் தெரியாது.

ஜனவரி மாதம் அவனை மருத்துவரிடம் அழைத்துச் சென்றபோது அவர் அவனை ஏப்ரல் மாத முதல் வாரத்தில் ஸ்கான் எடுத்துப் பார்த்தப் பின்னரே அவனுடைய நிலைமையைக் கூற முடியும் என்று கூறி விட்டார். இன்னும் நாலு மாதம் இருந்தது. ஒரு நாளை தள்ளுவதே கடினமாக இருக்கையில் நான்கு மாதங்களா? அமைதி இன்றி தவித்தேன்.

ஒரு நாள் எனக்கு ஒரு கனவு. பெரிய கூடம். அங்கு பாபா தரிசனம் தந்து கொண்டு இருந்தார். அங்கு ஓடிச் சென்று ஒரு இடத்தில் அமர்ந்தேன். ஆனால் எனக்கு அவர் தரிசனம் கிடைக்கவில்லை. அவர் எழுந்து சென்றபோது அவர் பின்னால் ஓடிச் சென்று என் குழந்தையுடன் அவர் கால்களில் விழுந்தேன். அவர் காபினியை போட்டுக் கொண்டு இருந்ததிதால் அவர் முகத்தை என்னால் பார்க்க முடியவில்லை. ஆனால் அவர் குனிந்து என் குழந்தை மீது கையை வைத்து ஆசி கூறினார். அதுவே என் வாழ்வில் ஒரு திருப்பு முனையாக அமையும் என்பது எனக்குத் தெரியாது.

ஒரு நாள் நான் இணையதளத்தை பார்த்துக் கொண்டு இருந்தபோது ஒரு தளத்தில் பாபாவிடம் கேள்வி கேட்டு பதில் பெறும் வகைக்கு ஒரு படிவம் இருந்தது. அதில் என் மகனைப் பற்றி நான் கேள்வி கேட்க எனக்கு வந்த பதில் இப்படியாக இருந்தது. '' உனக்கு இரண்டு விஷயங்கள் மனதுக்கு மகிழ்ச்சி அளிபாதாக இருக்கும். ராமர் பிறந்த மாத காலத்தில் ( மார்ச்-ஏப்ரல்) உன் பல துயரங்களும் தீர்ந்து வெற்றியை அடைவாய்'' . என் மனம் ஆனந்தம் அடைந்தது. ஏப்ரலில் ஸ்கான் எடுக்க வேண்டும் என்ற நினைவு வந்தது. அதுவே பாபா தந்துள்ள நல்ல செய்தி எனக் கருதினேன்.

அதன் பின் மூன்று நாள் பிறகு மீண்டும் ஒரு கனவு. அதில் என் மகனை ஒரு மருத்துவ உதவியாளர் ஸ்கான் செய்தார். அதை செய்தப் பின் அவன் கிட்னி முற்றிலும் நல்லபடியாக உள்ளது என்றார். அப்போது பாபாவின் ஆரத்தியான “சௌக்ஹ்ய ததார் ஜீவா ”என்ற பாடல் ஒளிபரப்பாகிக் கொண்டு இருந்தது போல உணர்ந்தேன். மறுநாள் காலை மருத்துவ மனையில் இருந்து மகனை ஸ்கானுக்கு அழைத்து வருமாறு தொலைபேசி செய்தி வந்தது. ஏப்ரலில் வரச் சொன்னவர்கள் இரண்டு மாதம் முன்பாகவே அழைக்கின்றார்களே என அதிசயமாக இருந்தது. அதை நான் எதிர்பார்கவில்லை.

அதன் பின் பாபா என்னை என்னைப் போலவே அவஸ்தை பட்டுக்கொண்டு இருந்த ஒருவரிடம் என்னை அனுப்பினார். அவர் எனக்கு ஆத்மா பலம் பெற உதவியவர். பாபா என்னிடம் '' நான் அனுப்பியுள்ளவர் உனக்கு வழிகாட்டியாக இருப்பார் என்றார்''. நான் என்றைக்கும் அவரை அப்படியே நினைக்கின்றேன்.


உடியின் மகிமையைப் பற்றிக் கேள்விப்பட்ட நான் அமெரிக்காவில் உடியை எப்படி வர வழிப்பது என குழம்பிக்கொண்டு இருந்தேன். இணைய தளத்தில் அதை அனுப்புகின்றவர் முகவரியைக் கேட்டுப் பெற்று அவரிடம் இருந்து அதை வரவழைத்தேன். அது வரும் முன் நான் பாபாவின் ஆலயம் சென்று இருந்தேன். அங்கு சென்று அவரை வணங்கியப்பின் எனக்கு உடி கிடைக்க வழி செய்ய முடியுமா என அந்த ஆலய பூசாரியிடம் கேட்டேன். அவரோ அன்றுதான் சீரடியில் இருந்து உடி வந்துள்ளதாகவும் அது பாபாவின் சிலைக்கு அடியில் வைக்கப்பட்டு உள்ளது எனவும் அதில் இருந்து சிறிது எடுத்துப் போகுமாறும் கூறினார். அதைக் கேட்ட எனக்கு அளவில்லா ஆனந்தம் ஏற்பட்டது.சாயிக்கு ஆயிரம் முறை நன்றி கூறினேன். அதை தினமும் சிறிதளவு என் மகன் வாயில் போட்டேன். அவன் கிட்னி உள்ள இடத்திலும் தடவி வந்தேன்.

நான் பாபாவின் ஒன்பது வார விரதத்தை செய்து முடித்தேன். ஏழு நாளைய பாராயனாத்தையும் இரண்டு முறை படித்தேன். ஸ்கான் எடுக்கும் நாளும் வந்தது. அது வியாழன் கிழமை. வாயிலும் வயிற்றிலும் டுயூப்பை சொருகி ஸ்கான் எடுத்தது கன்றாவிக் காட்சியாக இருந்தது. குழந்தையின் தலைக்கு அடியில் பாபாவின் படத்தை வைத்து அனுப்பி இருந்தேன். அது நடந்து கொண்டு இருந்த போது சாயி பாராயணம் செய்து கொண்டு இருந்தேன். சாயி சரித்திரப் புத்தகத்தையும் கையில் வைத்து இருந்தேன்.சோதனை முடிவு வந்து அதை எனக்குப் படித்துக் கட்டினார்கள். அனைத்து டெஸ்ட்டிலும் கிட்னி நார்மலாக உள்ளதாகக் கூறினார்கள். எனக்கு புதிய வாழ்க்கை ஆரம்பம் ஆயிற்று என்றுதான் அதைக் கூற வேண்டும். சாயிக்கே நான் நன்றி கூற வேண்டும்.
அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். நமக்கு சாயி நன்மை செய்தால் அதற்காக அவருக்கு நன்றி மட்டும் கூறாமல் நம்மால் ஆன நல்லவற்றை செய்யப் பழகுவோம்.

Image and video hosting by TinyPic© Shirdi Sai Baba Stories In Tamil.

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.