Friday, June 4, 2010

Mrs Chandrabai Borkar-Ardent Devotee of Shirdi Sai Baba.

சாயிநாதர் மலைகளைக் கூட இடம் மாற்றுவார். அவர் நம்முடைய பக்திக்கும் அன்புக்கும் கட்டுப்பட்டவர். மும்பை வில்லே பார்லே என்ற இடத்தில் வசித்து வந்தவர் சந்திராபாய் போர்கர் என்பவர். அவளுடைய கணவர் போர்கர் ஒரு இஞ்சினியர் . அவருக்கு பாபா மீது நம்பிக்கை கிடையாது என்றாலும் தன்னுடைய மனைவி அவரைப் பார்க்கச் செல்வதை தடுத்தது இல்லை. அவர் பாபாவிடம் நம்பிக்கை வைக்காவிடிலும் அவருக்கு வரும் விபத்துக்களைப் பற்றி அவருடைய மனைவிக்கு பாபா முன்னதாகவே ஜாடைக் காட்டி விடுவார்.

போர்கர் அடிக்கடி வெளி இடங்களுக்கு வேலை விஷயமாக சென்று சில காலம் இருக்க வேண்டி வந்ததினால் சந்திராபாயினால் சீரடிக்கு அடிகடி செல்ல முடிந்தது. அவள் முதன் முறையாக 1892 ஆம் ஆண்டில்தான் சீரடிக்கு விஜயம் செய்தாள். அவள் பாபாவின் பல அற்புதமான லீலைகளைப் பார்த்து இருக்கின்றாள். அதனால் அவளுக்கு மேலும் மேலும் பாபாவின் மீதான நம்பிக்கை அதிகரித்துக் கொண்டே இருந்தது. அவள் பாபாவைக் காண சீரடிக்கு எப்போது சென்றாலும் அவளை எந்த பக்தர்கள் வீட்டிலாவது தங்குமாறு பாபா கூறுவார். அவளை 'பாய்' என்றே பாபா அழைப்பார். ஆரத்தி முடிந்ததும் பாபா அவளுக்கு உடியை பிரசாதமாகக் கொடுப்பார். அதை அவள் பத்திரமாக வைத்துக் கொண்டு இருப்பாள். எந்த பிரச்சனை ஏற்பட்டாலும், உடல் நலமில்லை என்றாலும் அதை உபயோகிப்பாள். அவளுக்கு ஒரு முறை பாபா தன்னுடைய பாலைத் தந்து இருந்தார். அதை அவள் பத்திரமான நினைவுச் சின்னமாக பாதுகாத்து வந்தாள்.

1918 ஆம் ஆண்டு அவள் பாபாவை சந்தித்தபோது பாபா அவளிடம் கேட்டார் ' பாய் உன் விருப்பம் என்ன?' அவள் கூறினால் ' பாபா நீங்கள் அனைத்தையும் அறிந்தவர். ஆகவே நீங்களே அதை புரிந்து கொள்ளுங்கள்'. அவளுக்கு குழந்தை இல்லையே என்ற ஏக்கம் பல வருடங்களாக இருந்தது. அதை அவள் பாபாவிடம் கூறியது இல்லை. அவளுக்கு வயது நாற்பத்தி எட்டு ஆயிற்று. அவளுக்கு குழந்தையே இனி பிறக்காது என டாக்டர்கள் கூறி இருந்தனர். ஆனால் அவள் பாபா மீது நம்பிக்கை வைத்து இருந்ததினால் தனக்கு அந்த பாக்கியம் கிடக்கும் என நம்பினாள்.

காலம் சென்றது. வீட்டு விலக்கு ஆவதும் நின்று ஐந்து மாதங்கள் ஆகிவிட்டன. ஒரு முறை அவளுடைய வயிறு பெரியதாக ஆகத் துவங்கியது. கால் வீங்க வாந்தி எடுக்கத் துவங்கினாள். அவளை பரிசோதித்த டாக்டர் ஐம்பத்தொன்று வயதில் கர்ப்பமாக முடியாது என்றும் அவளுக்கு வயிற்றில் கட்டி வந்துள்ளது என்றும் அதை சர்ஜரி செய்து எடுக்க வேண்டும் என்றும் கூற அதற்கு அவள் மறுத்து விட்டாள். தான் பத்து மாதம் பொறுமையுடன் இருந்து பார்த்த பின்னரே அது பற்றி முடிவு எடுப்பேன் என்றாள். பல மாதங்கள் அவள் பாபாவின் உடியையும் தண்ணீருமே அருந்தினாள்.

என்ன அதிசயம் . பாபா மகாநிர்வாண் அடைந்தது மூன்று வருடம் இரண்டு நாட்களில் தனத்ரயோதஷி அன்று அவளுக்கு அழகான குழந்தை பிறந்தது. இன்னொரு அதிசயம். அவள் குழந்தை பிறப்பதற்கு முன் வரை வேலை செய்து கொண்டு இருந்தாள். டாக்டர்களோ நர்சோ தேவை இல்லாமல் சுலபமான பிரசவம் ஆயிற்று. அதை பாபாவின் கிருபை என்று கூறுவதைத் தவிர வேறு என்னவென்பது? பாபாவின் பதினோரு பொன் மொழிகளில் இதுவும் ஒன்றல்லவா.

ஜைஸா பாவ் ரஹே ஜிஸ் மன்கா வைசா ரூப் ஹுவா மேரா மன்கா
( ஒருவருடைய மனதும் என்னிடம் எப்படி வைக்கப்படுமோ அப்படித்தான் என்னுடைய மனமும் இருக்கும் - அதாவது நம்பிக்கை விதியை வெல்லும் )

1908 ஆம் ஆண்டு சதுர்மாஸ்யா எனப்படும் மழை காலம். அப்போது வெங்காயம் சாப்பிட மாட்டார்கள். திருமதி போர்கர் வீட்டில் அமர்ந்து கொண்டு இருந்தபோது ஒரு பகீர் வந்து வெங்காய சட்டினியயும் ரொட்டியும் கேட்டபோது அவள் அவரை விரட்டி விட்டாள். அவன் போன பிறகு ஒருவேளை வந்தது சாயிபாபாவாக இருக்குமோ என பயந்தாள். ஆகவே அடுத்த சில நாட்களில் அவள் சீரடிக்கு பயணம் செய்தாள். அவளைப் பார்த்த பாபா 'எனக்கு வெங்காய சட்டினியும் ரொட்டியும் தர மறுத்தவள் இங்கு எதற்காக வந்தாய்' என்று கேட்க அவள் கூறினாள் ' அதைத் தரத்தான் எப்போது வந்தேன்'. அதை கேட்ட பாபா பக்கத்தில் அமர்ந்து இருந்த காகாவிடம் கூறினார் ' அவள் எனக்கு ஏழு ஜென்மங்களாக சகோதரியாக உள்ளாள்'

1918 ஆம் ஆண்டு சந்திரா பாய் மீண்டும் சீரடிக்கு சென்றபோது பாபா கூறினார் ' இனி நீ என்னைத் தேடி இங்கு வர வேண்டாம். நானே நீ எங்கிருந்தாலும் அங்கு வந்து உன்னை பார்ப்பேன். 'அவள் அதைக் கேட்டு அழுது விட்டாள். அவள் பாபாவிடம் இருந்து உடியை பிரசாதமாகப் பெற்றுக்கொண்டு சென்று விட்டாள். அடுத்த சில மாதங்கள் பின் ஒரு முறை அவளுக்குஇனம் தெரியாத சோகம் ஏற்பட்டது. அப்போது அவளுக்கு காகா தீட்சித்திடம் இருந்து பாபா அவளையே அடிக்கடி நினைத்துக் கொள்வதாகவும், அவர் உடல் நலமின்றே படுத்துக் கிடப்பதாகவும் செய்தி வந்தது. உடனே அவள் சீரடிக்கு கிளம்பிச் சென்றாள். பாபா மகா நிர்வாணம் அடையப் போகும் நேரம். அவளுடைய கைகளினால் சிறிது தண்ணீர் குடித்தார். அவளுடைய தோள்களிலே சாய்ந்து கொண்டு இருந்தவாறு சமாதி அடைந்தார். அவளுடைய பக்தியை என்னவென்று சொல்வது ?
இன்னொரு சம்பவம் அந்த பெண்மணிக்கு. ஒருமுறை குரு பூர்ணிமா தினத்தன்று அவள் சீரடிக்கு சென்று இருந்தாள். முதலில் அவளுடைய பூஜையை உபாசினி மகராஜுக்கு செய்த பின்னர் தன்னிடம் வருமாறு கூறிவிட்டு பாபா அவளை திருப்பி அனுப்பினார். அவளும் உபாசினி மகராஜிடம் சென்று அவருடைய கால்களை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு வணங்கினாள். அதை ஏற்க மறுத்தவர் கோபத்துடன் அவளை அவர் தள்ளி விட முயற்சித்தார் . அவளோ என்னை சாயினாதரே உங்களிடம் அனுப்பி உள்ளார் ஆகவே பூஜை செய்யாமல் போக மாட்டேன் என பிடிவாதமாக அவருடைய கோபத்தையும் பொருட்படுத்தாமல் பூஜையை முடித்துக் கொண்ட பின்னரே அங்கிருந்து சென்றாள். அவளுக்கு ஒருமுறை பாபா கூறி இருந்தார் ' நமக்கு மற்றவர் மீது கோபம் , பொறாமை மற்றும் காழ்ப்பு உணர்ச்சி வரக்கூடாது. உன்னை எவராவது வெறுத்தால் அவரை மறந்து விட்டு கடவுளை நினைத்துக் கொள்.'

ஒருமுறை சீரடிக்கு சென்று இருந்தவளை உடனடியாக பண்டார்பூருக்கு கிளம்பிச் செல்லுமாறும் தானும் ஆவலுடன் வருவேன் என்றும் ஆனால் தனக்கு டிக்கெட் எடுக்க வேண்டாம் என்றும் கூறினார். அது 1909 ஆம் ஆண்டு. அவளுடைய கணவர் சாலை பராமரிப்புத் துறையில் வேலையாக பண்டார்பூரில் அப்போது இருந்தார். அவளும் இரண்டு பேருடன் அங்கு சென்றதும் அவளுடைய கணவர் மும்பைக்கு கிளம்பிச் சென்று விட்டதாகக் கூறினார்கள். கையில் நிறைய பணமும் இல்லை. என்ன செய்வது? குழம்பினாள். அப்போது முன்பின் தெரியாத பாகீர் ஒருவர் அவளிடம் வந்து எதற்காக குழம்புகின்றாய், வருந்தாதே என்றும் அவளுடைய கணவர் தூன்த் எனும் இடத்தில் இருப்பதாகக் கூறிவிட்டு, அதற்கான மூன்று டிகெட்டுகளையும் கொடுத்துவிட்டுச் சென்று விட்டார். ஆகவே அவள் அதை பாபாவே செய்து இருக்க வேண்டும் எனக் கருதி தூன்த் எனும் இடத்துக்கு கிளம்பினாள்.

அதே நேரம் தூன்த் ரயில் நிலையத்தில் டீ குடித்துக் கொண்டு இருந்த அவளுடைய கணவரிடம் எவரோ ஒரு பகீர் சென்று என்னுடைய தாயாரை ஏன் கவனிப்பது இல்லை? என்று கேட்டு விட்டு அவள் என்ன வண்டியில், என்ன கோச்சில் வருகிறாள் எனக் கூறி விட்டு சென்று விட்டார். அவர் கூறியதை போலவே வண்டி வந்து அவர் குறிப்பிட்ட கோச்சில் இருந்து சந்திரா பாய் இறங்கினாள். அவளுடைய கணவருக்கு ஒரே அதிசயம். வந்தது யார் எனப் தெரிந்து கொள்ள விரும்பியவருடன் அவள் காட்டிய சாயிபாபாவின் போடோவைப் பார்த்தார். வந்து அவரிடம் செய்தி கூறியது சந்தேகம் இன்றே அவரேதான். அவர் பாபாவின் பக்தர் என இல்லாமல் இருந்தாலும் அவர் அவருக்கு அப்படியெல்லாம் உதவி உள்ளார். ஒருமுறை சந்திர பாயின் கனவில் பாபா வந்து அவளுடைய கணவர் திடீரென இறந்து போக உள்ள சேதியைக் கூறினார். அவளும் அவளுடைய கணவர் சதுர்மாஸ்யா மாதத்தில் இறக்கக் கூடாது என வேண்ட அந்த மாதம் முடிந்த பின்னரே ஒரு வாரத்திற்குப் பிறகு போர்கர் இறந்து போனார்.

இதுவும் அவளுடைய பக்திக்கு ஒரு உதாரணம் இல்லையா?
(Translated into Tamil : Santhipriyaa)
Image and video hosting by TinyPic© Shirdi Sai Baba Stories In Tamil.

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.