You want proof of my divinity?
அன்பானவர்களே ,
ஒரு முறை பாபா சாமாவுக்கு உபதேசிக்கையில் எவரையும் குறை கூறிக் கொண்டே இருக்கக் கூடாது என்றார் . அது போல சத்புருஷர்களை குறை கூறிக்கொண்டே இருப்பது தவறு, அவர் மீது நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். அதற்கு ஏற்ப இதோ ஒரு சம்பவம்.
மனிஷா
1917 ஆம் ஆண்டு. பெரோஸ் என்பவர் பள்ளியில் படித்துக் கொண்டு இருந்தார். ஒரு முறை அவருடைய பெற்றோர் சீரடிக்கு சென்று விட்டு வந்த போது சாயி பாபாவின் படம் ஒன்றை எடுத்து வந்திருந்தார்கள். அவரை பற்றி பெருமையாக அனைவரிடமும் கூறிக்கொண்டு இருந்தனர். அதை கேட்டுக் கொண்டு இருந்த பெரோஸ் அலுத்துக் கொண்டார்.இவர்கள் சாதுக்கள் சன்யாசிகள் என அலைகிறார்களே, பாபா இவர்களுக்கு என்ன அமைதியையும் பொருளையும் தருவாரா என்ன?
அன்று தன் மனதில் நினைத்தார், ' பாபா உண்மையான கடவுள் என்றால் அதை எனக்கு நிரூபிக்கட்டும்'. அப்படி நினைத்தவர் தூங்கி விட்டார். அன்று இரவு பாபா அவர் கனவில் தோன்றிக் கூறினார் ' என்னை கடவுளா என்று கேட்டாய் அல்லவா. காலையில் எழுந்து உன்னுடைய தந்தை சாப்பாட்டு மேஜை மீது வைத்துள்ள என் படத்தைப் போய் பார், உனக்கு அது விளங்கும்'
அவருடைய உறக்கம் கலைந்து எழுந்தார். ஓ, கண்டது கனவா என எண்ணினாலும் காலை விடிந்ததும் சாப்பாட்டு மேஜையில் சென்று பாபாவின் படத்தைப் பார்த்தார். அதில் என்ன விசேஷம் இருக்கும் என்பதைப் பார்க்க அதை எடுத்தார். ஆனால் எடுக்க முடியவில்லை. அத்தனை கனமாக இருந்தது. டேபிளே ஆடியது, ஆனால் போட்டோவை எடுக்க முடியவில்லை. பாபா உண்மையில் தெய்வமே என மனதில் தோன்றியது.
அடுத்து அவர் தன்னுடைய தந்தை வேலை செய்து கொண்டு இருந்த கம்பனியில் வேலைக்கு சேர்ந்தார். ஆனால் சம்பளம் தரப்படவில்லை. ஒரு நாள் அவருடைய கனவில் பாபா வந்தார் ' இத்தனை நாளாக இங்கு வேலை செய்கின்றாயே, உனக்கு நீ செய்யும் வேலைக்கு சம்பளம் கிடைக்க வேண்டுமே' என்றார். பெரோசிற்கு ஒன்றும் புரியவில்லை. இது என்ன கனவு என நினைத்தார்.
மறு நாள் அவருடைய மாமா வந்தார், நீ செய்யும் வேலைக்கு சம்பளம் கிடைத்ததா என்றார்? இல்லை என்றதும் அந்த மாதம் முதல் மாதம் இருநூறு ரூபாய் சம்பளம் தரத் துவங்கினார். பெரோஸ் பாபாவை பார்த்தது இல்லை. அவர் ஒரு நாள் சாந்தாக்ருச்ஸ் என்ற பகுதியில் சுற்றிக் கொண்டு இருக்கையில் ஒரு சந்தில் இருந்த மோரேச்வர் பிரதான் என்பவரை சந்தித்தார். அவர் மூலம் பாபாவை பற்றி தனக்கு இருந்த அனைத்து சந்தேகங்களுக்கும் விளக்கம் பெற்றார்.
பாபாவின் பக்தராக மாறினார். இப்படித்தான் பாபா தன்னை நம்பாதவர்களையும் தன்னை நம்ப வைத்து தன்னிடம் இழுத்துக் கொள்கின்றார்.
© Shirdi Sai Baba Stories In Tamil.
Loading
0 comments:
Post a Comment