Saturday, June 5, 2010

Live Experiences Of The Tarkhad Family With Sai Baba-Washing of Baba's Kafani.

பாபா காபினியை காய வைத்திருந்த கதை

என்னுடைய தந்தை சாயிபாபாவைப் பார்த்த பிறகு அவருடைய அனுபவங்களை ஒரு தொகுப்பு போல எழுதி வைத்து இருந்திருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும். ஆனால் அவருக்கு பாபாவிடம் எப்படிப்பட்ட அனுபவம் கிடைக்க உள்ளது என்பது முதலில் தெரியாது அல்லவா . அந்த விஷயத்தில் நரஸிம்ம சுவாமிஜி ஒருவர் மட்டுமே பாபாவைப் பற்றிய குறிப்புக்களை தேதி வாரியாக எழுதி வைத்து இருந்தார் . ஆகவே நான் கூறுவது எல்லாமே என்னுடைய தந்தை எங்களுக்குக் கூறியதை நினைவில் வைத்திருந்து எழுதியவை ஆகும்.

என்னுடைய தந்தைக்கு சாயிபாபா மீதான பக்தி அதிகரித்துக் கொண்டே சென்றது. பாபாவுக்கும் தன்னுடைய பக்தர்களுக்கு புதுப் புது அனுபவத்தைக் கொடுப்பது பிடிக்கும். பாபா தான் குளிக்கும் போது தன்னுடைய உடைகளை மட்டும் அல்ல, தன்னுடைய உடலுக்குள் உள்ள பல பாகங்களையும் வெளியில் எடுத்து சுத்தப் படுத்திவிட்டு, உள்ளே வைத்து விட்ட பின்னரே குளிப்பாராம். அது போன்ற செயல்களை செய்பவர்களுக்கு அஷ்டமாசித்தி இருக்கும் என்பார்கள். அப்படி அந்த சித்திகளை மனித உருவில் இருந்த போது செய்தவர்கள் ராமரும், கிருஷ்ணர் மட்டுமே.

ஒரு நாள் பாபா என்னுடைய தந்தையிடம் தான் குளிக்கப் போவதாகவும், என்னுடைய தந்தைக்கு அங்கு ஒரு விசேஷமான வேலை உள்ளதாகவும்,
ஆகவே தன்னுடன் உடன் வருமாறும் அழைத்தார். அங்கு சென்றதும் பாபா கூறினார் ' பாபு, நான் குளிக்கப் போகின்றேன், என்னுடைய காபினியை துவைத்து விட்டுத் தருகின்றேன். அதை நீ சூரிய ஒளி படுமாறு கையில் பிடித்துக் கொண்டு நிற்க வேண்டும். ஆனால் துணி பூமியில் படக்கூடாது. நான் குளிக்க அதிக நேரம் எடுத்துக் கொள்வதினால் அதற்குள் அது காய்ந்து விடும்' என்றாராம். என்னுடைய தந்தையும் அதற்கு ஒப்புக் கொண்டார்.

சதுரமான ஒரு அறைக்குள் பாபா சென்று குளிக்கத் துவங்கினார். நேரம் ஓடிக்கொண்டே இருந்தது. பாபா காபினியைத் தரவில்லை. என்னுடைய தந்தைக்கு ஆவல் அதிகம். மெல்லச் சென்று பாபா என்ன செய்கின்றார் என எட்டிப் பார்த்தார். குளியல் அறைக்குள் கண்களால் பார்க்கவே முடியாத அளவு ஒளி மட்டுமே இருந்தது. கண்கள் கூசியது. கண்கள் குருடாகி விடுமோ என பயந்துபோய் ஓடி வந்துவிட்டார். அதே சமயம் பாபா அவரை அழைத்து தான் துவைத்து வைத்திருந்த காபினியைத் தந்தார். அதை வாங்கிக்கொண்டு சூரிய ஒளியில் பிடித்தபடி என் தந்தை நின்றார். துணி காயக் காய அதன் எடை கூடிகொண்டே போக என்னுடைய தந்தையினால் அதன் பாரத்தை தாங்க முடியாமல் போயிற்று. துணி கீழே விழுந்து விட்டால் என்ன ஆவது என பயந்த என்னுடைய தந்தை, தனக்கு அந்த துணியின் எடையைத் தாங்கிக்கொண்டு நிற்க சக்தி தருமாறு ஹனுமானைத் துதிக்கலானார்.

உள்ளிருந்து பாபா கத்தினார் ' ஹாய் பாபு, ஹனுமானை என் அழைகின்றாய்?'. அவருக்கு எப்படித் தெரியும் தான் ஹனுமானை வேண்டியது என தந்தை பிரமித்து நின்றவாறு, பாபாவிடம் தான் செய்த தவறைக் கூறி மன்னிப்பு கேட்க, அடுத்த வினாடியே துணியின் பாரம் குறையத் துவங்கியது. பாபா குளித்து விட்டு வந்த பின் அவரிடம் மீண்டும் மன்னிப்பு கேட்டார் என் தந்தை. இப்படித்தான் பல அற்புதங்களை பாபா தான் பக்தர்களுக்குக் காட்டுவார்.
These experiences are already posted in Shirdisaibabakipa website and are in random order .Devotees who wish to read them in English can click Here.Posted .


Click On Link Below To Read.

1. Live Experiences Of The Tarkhad Family-Chapter 1.

2. Live Experiences Of Tarkhad Family Chapter 2.

3.Live Experiences Of Tarkhad Family Chapter 3.

4.Live Experience Of Tarkhad Family Chapter 4.

5. Live Experience Of Tarkhad Family Chapter 5.

6. Live Experience Of Tarkhad Family Chapter 6

7.Live Experience Of Tarkhad Family Chapter 7

8.Live Experience Of Tarkhad Family Chapter 8.

9.Live Experience Of Tarkhad Family Chapter 9.

10.Live Experience Of Tarkhad Family Chapter 10.

11. Live Experience Of Tarkhad Family Chapter 11.

12. Live Experience Of Tarkhad Family Chapter 12.

13. Live Experience Of Tarkhad Family. Chapter 13.

14. Live Experience of Tarkhad Family-Chapter 14.

15.Live Experience Of Tarkhad Family-Chapter 15.

16. Live Experience Of Tarkhad Family-Chapter 16.

17. Live Experience Of Tarkhad Family-Chapter 17.

18. Live Experience Of Tarkhad Family -Chapter 18.

19. Live Experience Of Tarkhad Family-Chapter 19.

20. Live Experience Of Tarkhad Family-Chapter 20.

( Translated into Tamil by Santhipriya )

Image and video hosting by TinyPic© Shirdi Sai Baba Stories In Tamil.

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.