Tuesday, April 5, 2011

Sharddha And Saburi Heals Sai Bhakt-Experience of a Sai Devotee

 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjnfPyvwhXX3Ztgj2ZsJDBwRr6W1oAScqbRwmdu-3TjdmysH55EcMnSjElrJIV751mBemYVux6dthDM_RrE0nU2NA78xu7nENyMO6QCjnBi79rjDe82De-WGRqPAlYO25Giu05_0YrAtjk/s1600/181628_199906570020878_100000046109019_787980_4549032_n.jpg


அன்பானவர்களே
சாயி பாபாவின் பல லீலைகளை நாம் படித்துக் கொண்டு இருக்கின்றோம். ஆனால் சாயியின் இரண்டு தாரக மந்திரங்களான பொறுமை மற்றும் நம்பிக்கை என்ற இரண்டையும் எவர் ஒருவர் கடை பிடிக்கின்றார்களோ அவர்கள் அதற்கான நல்ல பலனை நிச்சயமாக அனுபவிக்கின்றார்கள் என்பதே உண்மை. அதற்கு உதாரணமாக சாயி பக்தர் ஒருவர் எழுதி அனுப்பி உள்ள இந்த கதையை படியுங்கள்.
மனிஷா 

 ஒரு பக்தரின் அனுபவம்

ஓம் ஸ்ரீ சாயி ராம்.
இன்று நான் எனக்கு சாயிபாபாவுடன் ஏற்பட்ட ஒரு அனுபவத்தை அனைவருக்கும் கூற விரும்புகின்றேன்.
நான் சாயிபாபாவைப் பற்றி 10 வருடங்களாக அறிந்து உள்ளேன். நான் சில சமயங்கள் பூஜைகளும் செய்து உள்ளேன். ஆனால் ஒரு முறை இறக்கும் தறுவாயில் இருந்த  என்னுடைய தந்தையை சாயிபாபா காப்பாட்றவில்லையே என்ற கோபம் எனக்கு ஏற்பட்டது . என் தந்தை மடிந்து இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் ஆயின . நான் சாயிபாபாவை வணங்குவதையே விட்டு விட்டு இருந்தேன்.
2011 ஆம் ஆண்டு . என்னுடைய இளைய சகோதரிக்கு இடது பக்க மூச்சுக் குழாயில் கட்டி வந்து இருந்ததை மருத்துவர் கண்டு பிடித்தார். அவள் தனது இரண்டு குழந்தைகள் மற்றும் கணவருடன் அமெரிக்காவில் இருக்கின்றாள். அந்த கட்டி கான்சராக இருக்கலாம் என்றும் மருத்துவர்கள் சந்தேகித்தார்கள். இரண்டாவது குழந்தை ஏழு மாதமே ஆனது. ஆகவே வீட்டில் அனைவரும் கவலை அடைந்தோம்.
சாயி சரித்திரத்தில் கூறி உள்ளது ' மனிதருக்கு துயரம் ஏற்படும் போது மட்டுமே கடவுளை நினைக்க ஆரம்பிக்கின்றார்கள் ' . அதற்கு நானும் விதி விலக்கு அல்ல என்பது போல வேறு வழி தெரியாமல் என்னுடைய சகோதரியின் உடல் நலமடைய பாபாவையே வேண்டிக் கொண்டு  பெங்களூரில் இருந்த நான் BTM லே அவுட் என்ற பகுதியில் இருந்த பாபாவின் ஆலயத்துக்குச் சென்று மீண்டும் சாயி பாபாவை துதிக்க ஆரம்பித்தேன்.
நான் ஆலயத்துக்கு வருடத்தில் இரண்டு அல்லது மூன்று முறைதான் போவது உண்டு. அன்று என் சகோதரியின் உடன் நிலைக்காக பாபாவிடம் வேண்டிக் கொண்டு அந்த ஆலயத்துக்கு சென்ற நான் கடையில் இருந்து முள்ளுடன் இருந்த ரோஜாப் பூவை வாங்கிக் கொண்டு சென்று பாபாவின் பாதத்தில் வைத்து வணங்கினேன். அதன் பின் அங்கு வந்து அந்த பூவைப் பார்த்த பண்டிதர் கோபமாக கன்னடத்தில் அந்த முள்ளுடன் கூடிய பூவை யார் வைத்தார்கள் எனத் கேட்டுத் திட்டினார். எனக்கு பாஷை புரியவில்லை என்றாலும் அவர் பூவை எடுத்துக் காட்டி கூறியது அவர் கோபத்துக்கான காரணத்தை விளக்கியது.
கோபமாகக் கத்தியப் பின்  அவரே அந்த மலர்களை  எடுத்து முட்களை எடுத்து விட்டு மீண்டும் அவற்றை பாபாவின் இதயத்தின் அருகில் வைத்தார். எனக்குப் புல்லரித்தது. கோபமாக அந்த மலர்களை எடுத்து தூக்கிப் போடாமல் முட்களை எடுத்துவிட்டு மீண்டும் பாதத்தில் வைக்காமல் பாபாவின் இதயத்தின் அருகில் அவர் வைத்தது எனக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. என் பிரார்த்தனையை பாபா ஏற்றுக் கொண்டு விட்டார். என் சகோதரியை பாபா நிச்சயமாக காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. அந்த பண்டிதர் கோபமாகக் கத்தியது பாபாவுக்கு என் மீது இருந்த கோபத்தை வெளிப்படுத்தியதாகவே நினைத்தேன். தேவை இல்லாத காரணத்துக்காக நான் அவரை விட்டு மூன்று ஆண்டுகளாக ஒதுங்கி இருந்து விட்டு இன்று வந்ததற்கான கோபமே அது  என எண்ணினேன்.
நான் அங்கிருந்து கிளம்பும்போது சாயி சரித்திர புத்தகத்தை வாங்கி வந்தேன். ஒரே நாளில் அதைப் படித்தும் முடித்தேன்.
அடுத்த 15 -20 நாட்களில் என்னுடைய சகோதரியை இன்னொரு மருத்துவர் சோதனை செய்தார். அவளுக்கு நுரையீரலில் கான்சர் வந்திருக்காது என முதலில் கருதியவர்கள் மீண்டும் சோதனை செய்தப் பின் அது கான்சர்தான் என்பதை உறுதி செய்தார்கள். நாங்கள் மனம் ஒடிந்து போனோம். என் மனதில் மீண்டும் சாயி பாபாவின் மீது வெறுப்பு ஏற்படலாயிற்று. அவரை நம்பி என்ன பிரயோஜனம் என நினைக்கத் துவங்கினேன். ஆனால் அடுத்த கணமே என் மனதில் சாயி மீது தோன்றிய அவநம்பிக்கையை உதறி விட்டு என் மனதை திடப்படுத்திக் கொண்டு நம்பிக்கையுடன் சாயி விரதம் இருக்க துவங்கி சாயி சரித்திரத்தையும் படிக்கத் துவங்கினேன்.
மருத்துவர்கள் அவளுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றார்கள். அவள் உடல் மோசம் அடையத் துவங்கியது. ஆனால் நான் நம்பிக்கையை இழக்க விரும்பவில்லை.
நான் சாயி சரித்திரம் படிக்கத் துவங்கி விரதத்தையும் ஆரம்பித்து மூன்று வாரங்கள் ஆயின. என் சகோதரிக்கு அறுவை சிகிச்சை முடிந்தது. அவள் எந்த விதமான பிரச்சனையும் இன்றி நலம் அடையத் துவங்கி விட்டாள். அவளுக்கு அறுவை சிகிச்சை முடிந்தது. அறுவை சிகிச்சை முடிந்து  அடுத்த ஐந்து நாளில் வீட்டிற்கும் வந்து விட்டாள். வீட்டிற்கு வந்தவள் தனக்கு அறுவை சிகிச்சை நடந்தது தெரியவே இல்லை என்பது போல உள்ளதாகக் கூறினாள். அது பாபாவின் மகிமையே.
அவள் மீண்டும் போன வாரம் மருத்துவரிடம் சென்று சோதித்துக் கொண்டாள். அவளுக்கு வேறு எந்த சிகிச்சையும் தேவை இல்லை என்று மருத்துவர் கூறி விட்டார். மீண்டும் அடுத்து ஒரு வருடத்திற்குப் பின் வருமாறு கூறி உள்ளார். இவை அனைத்துமே பாபாவின் மாயமே என்பதில் சந்தேகமே இல்லை.
ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய் ஜெய் சாய் .
நண்பர்களே, உங்களில் யாருக்கு பிரச்சனை ஏற்பட்டாலும் பாபாவின் மீதான நம்பிக்கையை விட்டு விடாதீர்கள். அப்போதுதான் பாபாவும் உங்களைக் கை விட மாட்டார். என்னுடைய இந்த பெரிய கடிதத்தை படித்து முடித்து விட்ட உங்கள் அனைவருக்கும் நன்றி.
பாபாவின் ஒரு சிறிய பக்தன்
(Translated into Tamil by Santhipriya ) 

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.