Tuesday, March 1, 2011

Mahashivaratri Sai Baba Wallpaper and story of Sai Bhakt Megha.



அன்பானவர்களே,
இந்த சிவராத்தரி தினத்தன்று நான் அனைவருக்கும் என்னுடைய இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன். மேலும் இன்று சகோதரர் கவுசிகன் வெளியிட்டு உள்ள சுவர் படத்தையும் வெளியிட்டு உள்ளேன். கவுசிகன் வெள்ளியிட்டு உள்ள சுவர் படங்கள் பாபாவின் செய்தியான அனைவருக்கும் ஒரே கடவுளே என்ற தத்துவத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.
இந்த சுவர்படங்களை 1024x780 என்ற ரசல்யுஷனில் படத்தின் மீது ரைட் கிளிக் செய்து நீங்கள் உங்களுடைய கம்பியூட்டரில் இறக்குமதி செய்து கொள்ளலாம்.
இன்று சாய் சரித்திரத்தின் 28 வது பகுதியில் வரும் கதையை வெளியிட்டு உள்ளேன். இந்தக் கதையில் பக்தர் மேகாவுக்கு  பாபாவுடனான தொடர்ப்பை  வெளிப்படுத்துகின்றது.
மனிஷா


விரம்கோன் என்ற பகுதியை சேர்ந்த படிப்பறிவற்ற மேகா எனும் பிராமணர் H. V. சாதே என்பவரிடம் சமையல்காரராக இருந்தார். அவர்  சிவ  பெருமானின் பக்தர். எப்போதும் ஓம் நமச்சிவாயா என்றே கூறிக் கொண்டிருப்பார். அவருக்கு சந்தியாவந்தனத்தைப் பற்றியோ காயத்ரி மந்திரம் பற்றியோ ஒன்றும் தெரியாது.
அதனால் ராவ் பகதூர் சாதே அவருக்கு சந்தியாவந்தனம் மற்றும் காயத்திரியை சொல்லித் தந்தார். மேலும் அவர் சீரடி பாபாவே சிவனின் அம்சம் என்று கூறி சீரடிக்கு செல்லுமாறு அவரை அனுப்பினார்.
பரொஹ் ரயில் நிலையத்தில் சென்றதும் பாபாவை  ஒரு முஸ்லிம் என்பதை தெரிந்து கொண்டவரால் அவரை சென்று வணங்க பிராமண மனம் இடம் தரவில்லை. ஆகவே அங்கு செல்ல மறுத்தவரை சாதே கட்டாயப்படுத்தி அனுப்பி அவரிடம் சீரடியில் இருந்த தனது மாமனாரான தாதா கேல்கருக்கு ஒரு கடிதமும் தந்து அனுப்பினார். அதில் அவரை பாபாவிடம் மேகாவை  பரிச்சயம் செய்து வைக்குமாறு கூறி இருந்தார். 
சீரடிக்கு சென்ற மேகா மசூதிக்கு சென்றதும் பாபா அவரை உள்ளேவிட மறுத்தார்.  'அந்த முட்டாளை அடித்து விரட்டுங்கள்' என்று கத்தினார்.  மேலும் அங்கு வந்த மேகாவிடம்  ' நீ மிகவும் உயர்ந்த பிராமணன், நானோ கீழான முஸ்லிம் .......ஆகவே இங்கிருந்து ஓடிப் போய்விடு'  என்று கோபமாகக் கூறினார்.
அதைக் கேட்ட மேகா நடுங்கினார். பாபாவுக்கு தான் அதுவரை மனதில் நினைத்துக் கொண்டு இருந்த எண்ணம் எப்படித் தெரிந்தது?  ஆகவே பயந்து போன அவர் அங்கிருந்துப் போய் விடாமல் அங்கேயே தங்கி வெளியில்  இருந்தவாறு பாபாவுக்கு பல விதத்திலும் பணிவிடை செய்து கொண்டே இருந்தார். ஆனாலும் பாபா அதை மனதார ஏற்கவில்லை. அதன்பின் மேகா அங்கிருந்துக் கிளம்பி  நாசிக்கில் உள்ள  திரயம்பக் எனும் இடத்துக்குச் சென்று அங்கு ஒன்றரை வருடம் தங்கி இருந்தார்.
அதன்பின் அவர் மீண்டும் சீரடிக்கு திரும்பினார். தாதா கேல்கரின் முயற்சியினால்  மசூதியில் நுழைந்து பாபாவுக்கு பணிவிடை செய்யத் துவங்கினார். மெல்ல மெல்ல மேகாவின்  மனதில் பாபா சிவனின் அம்சமே என்ற எண்ணம் ஏற்படலாயிற்று.
சிவனுக்கு உகந்தது வில்வ இலைகள். அது அங்கு கிடைக்கவில்லை என்பதினால் பல மைல் தூரம் நடந்து சென்று வில்வ இலைகளை பறித்து வந்து பாபாவை பூஜித்தார்.  ஒரு நாள் மேகாவுக்கு வில்வ இலைகள் கிடைக்கவில்லை. ஆகவே அவர் இன்னமும் சில இடங்களுக்குச் சென்று அதை தேடினார்.  அன்று சீரடியிலோ   மதியம் ஒன்றரை மணி ஆகியும்  தினமும் மற்றவர்கள் செய்யும் பாபாவுக்கான மத்தியான  பூஜை  ஏதோ காரணத்தினால் மேகா வரும் வரை நடந்து முடியவில்லை. அதுவே மேகாவின் மீது பாபா வைத்து இருந்த அன்பைக் காட்டியதாக அமைந்து  இருந்தது.
மேகா தினமும் சீரடியில் இருந்த அனைத்து கடவுட்களையும் வணங்கிவிட்டு மசூதிக்கு வந்து பாபாவின் ஆசனத்தை வணங்கியப் பாபாவின் இரண்டு   கால்களையும் அலம்பி விட்டப் பின்  அந்த நீரை பிரசாதமாக குடிப்பார்.
ஒரு நாள் மேகாவினால் கண்டோபாவை வணங்க முடியாமல் திரும்ப வேண்டியதாயிற்று. காரணம் அவர் சென்றபோது அந்த ஆலயத்தின் கதவுகள் மூடிக் கிடந்தன. ஆனால் தன்னிடம் வந்த மேகாவை தனது கால்களை அலம்ப விடாமல் தடுத்த பாபா அவரிடம் மீண்டும் ஆலயத்துக்குச் சென்று கண்டோபாவாவை தரிசித்துவிட்டு வருமாறு கூறி அனுப்பி விட்டார்.
ஒரு முறை மகர சங்கராந்தி வந்தது. அன்று பாபாவின் உடல் முழுவதும்  சந்தனத்தைத் தடவி அவரை கங்கை நீரால் குளிப்பாட்ட எண்ணினார் மேகா. முதலில் அதை ஏற்க மறுத்த பாபாவினால் மீண்டும் மீண்டும் கெஞ்சிய  மேகாவின் வேண்டுகோளை தட்ட முடியாமல் போக அதை செய்ய அனுமதித்தார். ஆகவே மேகா எட்டு கிலோ  மீடர் தொலைவு நடந்து சென்று கோமதி நதியில் இருந்து தண்ணீரை எடுத்து வந்தார். மதியம் அந்த சடங்கை செய்ய ஏற்பாடு செய்தார். ஒரு பகீரான தான் கங்கை நீரில் எப்படி குளிப்பது  என பாபா கேட்டபோது சிவனின் அவதாரமான அவர் கங்கை தண்ணீரால் குளிப்பது சரியானதுதான்,  சிவபெருமானுக்கும் அப்படி குளிப்பது  பிடிக்கும் என்று மேகா கூறிவிட்டார்.
 
ஆகவே அதற்கு ஒப்புக் கொண்ட பாபா  மரப் பலகையில் வந்து அமர்ந்தார்.  தன தலையை மட்டும் நீட்டிக் காட்டியவாறு  கங்கை நீரை தனது தலையில் மட்டும் விடுமாறும், தலை மீது விழும் தண்ணீர் தான்  குளித்ததற்கு சமமாகிவிடும் எனவும், தனது உடல் பகுதியில் நீரை விட வேண்டாம் எனவும் கூறினார்.  அதை ஏற்றுக் கொண்ட மேகா தண்ணீரை பாபாவின் தலை மீது கொட்டத் துவங்கியதும் தன்னை மறந்து ஹரஹர கங்கா  என கத்தியவாறு அந்த குடத்து நீரை பாபாவின் உடல் முழுவதும் கொட்டினார். அதன் பின் நிமிர்ந்து உட்கார்ந்த பாபாவைப் பார்த்த மேகா திடுக்கிட்டார். பாபாவின் தலை  மட்டுமே தண்ணீரால் நனைந்து இருந்தது. உடல் துடைத்து விட்டது போல உலர்ந்தே இருந்தது. 
அடுத்த பன்னிரண்டு மாதங்கள் மேகா பாபாவை இரண்டு இடங்களில் வணங்கி வந்தார். ஒன்று மசூதியில், மற்றது வாடாவில். அதன் பின்னரே அவர் பக்தியை முழுமையாக  ஏற்றுக் கொண்ட பாபா அவருக்கு தன்னுடைய ரூபத்தைக் காட்ட முடிவு செய்தார்.
ஒரு நாள் விடியற்காலை. மேகா என்னும் எழுந்திருக்கவில்லை. அவர் மனமோ உறங்கவும் இல்லை. அப்போது அவர் முன் பாபா வந்து நின்றதைப் போல இருந்தது. அவர் மீது குங்குமம் பூசிய அஷதையை போட்ட பாபா 'மேகா எழுந்திரு, ஒரு திரிசூலத்தை வரைந்துவிடு' என்று கூறினார். திடுக்கிட்டு விழித்து எழுந்த மேகா தனது படுக்கைக்குப் பக்கத்தில் குங்குமம் பூசப்பட்ட அஷதை சிதறிக் கிடந்ததைக் கண்டார்.  ஆனால்  பாபா அங்கு இல்லை. அப்படியென்றால் அது கனவா?  எழுந்தவர் குளித்துவிட்டு பாபாவிடம் சென்று திரிசூலம் வரைய அனுமதி கேட்டார். பாபா கூறினார் 'நான் கூறியதை நீ கேட்கவில்லையா? நான்தான் உன்னை ஏற்கனவே திரிசூலம் வரையுமாறு கூறினேனே.  என் வார்த்தைகள் போலியானது அல்ல' என்றார்.
மேகா கூறினார் ' பாபா எவரும் உள்ளே நுழைய முடியாமல் நான் கதவுகளை மூடி வைத்து இருந்தேன்.  ஆகவே அதை நான்  கனவு என்று நினைத்து விட்டேன்'. பாபா பதில் கூறினார் ' இதோ பார். நான் கதவு மூலம் மட்டுமே நுழைய வேண்டும் என்ற அவசியம் இல்லை.  நான் எங்கும் இருப்பவன்.  என்னை நம்புபவர்களை எங்கு இருந்தபடியும் என்னால்  ஆட்டி  வைக்க முடியும்  '  என்று கூற அங்கிருந்து சென்ற மேகா வாடாவுக்குப் போய் அங்கு இருந்த பாபாவின் படம் மாட்டி வைக்கப்பட்டு இருந்த சுவற்றில் பெரிய திரிசூலத்தை வரையத் துவங்கினார் .  மறுநாள் பூனாவில் இருந்து அங்கு வந்த ராமதாசி பக்தா என்பவர் பாபாவுக்கு திரிசூலத்தை ஏந்திக் கொண்டு இருந்த சிவனின் பொம்மையை பரிசாகக் கொடுத்தார். அப்போது மேகாவும் அங்கு இருந்தார். பாபா மேகாவைப் பார்த்துக் கூறினார் ' இதோ சங்கர் வந்துவிட்டார். அவரை பத்திரமாகப் பார்த்துக் கொள்'. அதைக் கண்ட மேகா பிரமித்து நின்றார். அதே சமயம் வாடாவில் குளித்துக் கொண்டு பாபாவை நினைத்துக் கொண்டே இருந்த   காகா சாஹேப்  திக்ஷித்திற்கும் அதே மாதிரியான பொம்மையின் படம்  மீண்டும் மீண்டும் மனதில் தோன்றிக் கொண்டே இருக்க குளித்துவிட்டு வந்தவர் தன்னுடைய மனதில் தோன்றிய அதே மாதிரியான  பொம்மையை பாபாவின் கையில் பார்த்து  வியந்தார்.
சில நாட்களில் வாடாவில் மேகா வரைந்து கொண்டு இருந்த திரிசூலப் படம் முடிவடைந்ததும் பாபா அந்த சிவனின் சிலையை அங்கேயே பிரதிஷ்டை செய்தார்.  மேகா சிவ பக்தர் என்பதினால் சிவனுடன் திரிசூலம் உள்ள படத்தையும் சேர்த்து வணங்குவது மேகாவின் மனதுக்கு இனிமையாக இருக்கும் என்பதை உணர்ந்த பாபா அப்படி செய்தது மேகா மீது அவர் காட்டி வந்த அன்பின்  அளவைக் காட்டியது. அதன் பின் பல வருடங்கள் மேகா  அதே இடத்தில் பூஜைகள் செய்து வந்தார். மதியம் ஒற்றைக் காலில் நின்று இருந்தபடி பூஜையும் செய்து வந்தார்.   அதன் பின் 1912 ஆம் ஆண்டு மேகா மறைந்தார். அதற்க்கு மூன்று நாட்களுக்கு முன்னால் மேகா ஆரத்தியை எடுத்து முடித்ததும் பாபா அங்கிருந்தவர்களிடம் கூறினாராம் ' மேகா  செய்யும் கடைசி ஆரத்தி இதுவே'.
இறந்துபோன மேகாவின் உடலை  தனது கையால் வருடிய பாபா கூறினாராம் 'இவரே என்னுடைய  உண்மையான பக்தர்' . அதன் பின்னர் அவருடைய இறுதி சடங்கின் பிராமணர்களின் செலவை தன்னிடம் இருந்து பெற்றுக் கொள்ளுமாறு பாபா கூறினார். ஜெய் ஸ்ரீ  ராம்

கீழுள்ள சுவர் படங்களை  டவுன்லோடு செய்து கொள்ளவும்







மேலே உள்ள பாடங்களை டவுன்லோடு செய்து கொள்ள கீழே உள்ள கட்டத்தில்  கிளிக் செய்யவும்


 அன்பான வேண்டுகோள்

அன்பான பக்தர்களே  ஒரு சிறிய வேண்டுகோள். இங்கு வெளியாகும் சுவர் படங்கள் அனைத்தும் அவரவர் தனிப்பட்ட உபயோகத்துக்கு மட்டுமே வெளியிடப்படுகின்றது.  பதிப்புரிமை பெற்ற அவற்றை சிலர் மாற்றி அமைத்து வேறு வகைகளில் பயன்படுத்துவதாக  சகோதரர் கவுசிகன் வருத்தத்துடன் தெரிவிக்கின்றார்.
ஆகவே  அனைவரிடமும் நான் வேண்டிக் கொள்வதெல்லாம், தயவு செய்து  இலவசமாகக சாயி சேவை புரிய  எண்ணி பாபாவின் படங்களை வெளியிட்டு வரும்  கவுசிகனின் படைப்புக்களான  பாபாவின் படத்தை மாற்றி அமைத்து வேறு எந்த தளத்திலும் வெளியிடாதீர்கள் என்பதே. பாபாவின் பக்தர்கள் இதை உணருவார்கள் என நம்புகிறேன். 
மனிஷா
(Translated into Tamil by Santhipiriya )

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.