Wednesday, May 18, 2011

Baba's Blessing -Experience by Rathina Malah.

பாபாவின் அருள்- ஒரு பக்தையின் அனுபவம்


அன்பானவர்களே,
இன்று சாயி பக்தை ரத்னமாலாவின் அனுபவத்தை வெளியிட்டு உள்ளேன். அவர் தன்னுடைய குழந்தைகளின் நலனை ஏப்படி பாது காக்கின்றார் என்பதை இந்த அனுபவம் மூலம் அறிந்து கொள்ளலாம்.
மனிஷா
----------------------------------------------
அன்பானவர்களே
எங்களுடைய வாழ்கை ரோஜா முள் படுக்கையில் படுத்து உள்ளதைப் போன்றே இருந்தாலும் சாயி பாபா எங்களுடைய வாழ்கையில் வந்தப் பின் பல மாறுதல்கள் ஏற்பட்டன.  எங்களுடைய தந்தை  (பாபாதான்) என்னுடைய பிறந்த நாளை ஆனந்தமாக்கினார் . அதை என்னால் மறக்க முடியாது.
அந்த  மாத ஆரம்பத்தில் நான் சாயி பாபாவிற்கு  தங்க நிற சால்வையைப் போட வேண்டும் என ஆசைப்பட்டேன். ஆனால் அதை போட முடியவில்லை.  என் பிறந்த நாள் அன்றுதான்  அத்தனை நாளும் என்னால் திறக்க முடியாமல் இருந்த பாபாவின் இணைய தளத்தை  திறக்க முடிந்தது.  என்ன ஆச்சர்யம். அதைத் திறந்தேன்.  பாபா அதில் தங்க நிற சால்வையுடன் காட்சி அளித்தார்.  என்னுடைய மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. என்னால் செய்ய முடியாததை அவரே செய்து கொண்டு காட்டி உள்ளார் என்பது மகிழ்ச்சியாக உள்ளது அல்லவா .இதில் இருந்து என்ன தெரிந்தது என்றால் பாபா தன்னுடைய குழந்தைகளின்  மனம் குளிரும் வகையில் அவர்கள் விரும்புவதை நிறைவேற்றுகிறார் என்பதே.
இன்னொரு சம்பவம். என்னுடைய பெயர் மாற்றம் பற்றியது. பத்து வருடங்களுக்கு முன்னால் என்னுடைய தாயார் இறந்து போய் விட்ட என் தந்தையுடன் இந்தியாவுக்குச் சென்று பண்டிட் சேதுராம் சன்ஸ் என்பவரிடம் என் பெயரின் ராசியைப் பற்றி ஜோதிட அறிவுரை கேட்டு இருந்தார்கள். . அவர் என்னுடைய பெயரான நிர்மலா தேவி என்பது எனக்கு நிறைய பதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறி அதை மாற்றுமாறும்  கூறி இருந்தார் . ஆனால் அதைப் பற்றி என்னிடம் கூற என்னுடைய தாயார் மறந்து விட்டார்.
பத்து மாதாம் ஆகிவிட்டது. 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் என் தாயார்  ஏதேற்சையாக ரேடியோவில்  வந்த விளம்பரத்தில்  அதே பண்டிதரைப் பார்க்க அப்போதுதான் அவருக்கு என் பெயரை மாற்ற வேண்டும் என  பத்து மாதம் முன்னால்  தன்னிடம் கூறியது  நினைவுக்கு வந்தது.  ஆகவே என் தாயார் உடனே அவரிடம் சென்று என் பெயர் மாற்றம் குறித்துக் கேட்குமாறுக்  கூறினார். நானும் என்னுடைய நண்பருடன் அவரிடம் சென்று அது குறித்துக் கேட்டோம்.  சிரித்தபடி எங்களை வரவேற்ற அவர்  மூன்று மாதத்துக்கு முன்னால் தன்னுடைய கனவில் இப்படி நான் அவரிடம் கேட்க வருவேன் என்ற அதே காட்சியை  பார்த்ததாகக் கூறி விட்டு   என் பெயரை ரத்ன மாலா என மாற்றிக் கொள்ளுமாறுக் கூறினார்.   இது பாபாவின் அருளால் மட்டுமே நடந்து உள்ளது.
என் இனிய சகோதர சகோதரிகளே, பாபாவுக்கு தன்னுடைய குழந்தைகளுக்கு என்ன செய்யவேண்டும், அதை எப்போது செய்ய வேண்டும் என்பது நன்கே தெரியும்.  அவர் நமக்கு அவர் அருளை தக்க சமயத்தில் தருவார்.
ரத்னா மாலா
(Translated into Tamil by Santhipriya)

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.