Saturday, May 21, 2011

Chanting At Lords Feet-Experience By A Sai Devotee




அன்பானவர்களே
இன்று நான் பெங்களூரில்  வஸன்தபுரா எனும் இடத்தில் உள்ள சாயி ஆலயத்தில் ஒருவருக்கு கிடைத்த அனுபவத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.  அந்த ஆலயம் பற்றிய  விவரங்களையும்  புகைப்படங்களையும் அதன் இணையதளத்தில் பார்த்து மகிழவும்.
மனிஷா
----------------
ஒரு பக்தரின் அனுபவம்
போன வாரம் இங்குள்ள சாயி ஆலயத்தில் 72 மணி நேர சாயி ஜெபம் நடந்தது.  அது பற்றி எனக்கு முன்னரே தெரியாது. திடீரென அந்த சனிக்கிழமை அன்றுதான் அது பற்றி எனக்கு தெரிய வந்தது. ஆகவே எனக்கும் அங்கு செல்ல மனதில் ஆசை  தோன்றியது. அங்கு செல்லும் முன் பாபாவிற்கு குலோப் ஜாமூன் வாங்கிச் செல்ல வேண்டும் என்ற எண்ணமும்  எழுந்தது.  நான் அங்கு கிளம்பிச் சென்றேன்.  நான் தங்கி இருந்த வீடு  நகரை விட்டு தள்ளி  இருந்தது. வேறு இடத்திற்குச் சென்று அதை வாங்கிக் கொண்டு செல்ல நேரமும் இல்லை.  அந்த ஆலயத்துக்கு பக்கத்தில் எந்த கடைகளும் கிடையாது என்பதும் எனக்குத் தெரியும். என்னடா இது என் கையில் ஒரு சாகலேட் கூட இல்லையே, அப்படியே போகிறோமே என எண்ணியவாறு அந்த ஆலயத்தை அடைந்தபோது அங்கு சாலையில் இருந்த ஒரு சிறிய கடைப் பார்த்தேன். சரி என  அங்கு  சென்றேன். என்ன ஆச்சர்யம் !  மனித நடமாட்டம் அதிகம் இல்லாத ஒரு ஓரத்தில் இருந்த அந்த சிறிய  கடையில் MTR ரசகுல்லா டின் இருந்தது. அதை வாங்கிக் கொண்டு மனம் மகிழ்ச்சியோடு ஆலயம் சென்றேன்.
மதியம் மணி ஒன்று ஆகியது. நான் அங்கிருந்து இரண்டு மணிக்கு கிளம்பிச் செல்ல முடிவு செய்து இருந்தேன். திடீரென மழைக் கொட்டத் துவங்கியது. பெரும் மழை. கிளம்ப முடியவில்லை. என் நண்பர் வீட்டில் தங்கி இருந்த எனக்கு இன்னும் ஏன் வரவில்லை என அவரிடம் இருந்து தொடர்ந்து SMS செய்தி  வந்து கொண்டே இருந்தது. அங்கோ ஒரு வண்டியும் கிடைக்கவில்லை. ஆகவே  வேறு வழி இன்றி அந்த ஆலயத்திலேயே அமர்ந்து கொண்டுவிட்டேன். அப்போது எதேர்சையாக திரும்பிப் பார்த்தேன். அங்கு ஜெபத்திற்கு வந்திருந்த ஒரு வயதானவர் ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு இருந்தார். அவர் கையை தூக்கி வைத்தவாறு என்னைப் பார்த்து  ஆசிர்வாதம் தருவது போல வைத்துக் கொண்டார்.  நான் அவரைப்  பார்த்ததும் அவர் தன் கையை மெல்ல கீழே இறக்கிக் கொண்டார். 
சற்று நேரம் ஆன பின் பிரசாதத்தை பெற்றுக் கொண்டு அங்கிருந்த ஆலய அலுவலகத்தில் நுழைந்து சாயிபாபாவின் புத்தகங்களைப் பார்க்கத் துவங்கினேன். அவற்றில் இரண்டு புத்தகங்கள் பிடித்து இருந்தன. அதை பிரித்துப் பார்த்தேன். வாங்கலாமா வேண்டாமா என்ற எண்ணம் எழுந்தது. என் அருகில் வந்த ஆலய காரியதரிசி என்ன மாடிக்குச் சென்று உணவு அருந்துமாறு கூறினார். ஆனால் எனக்கு பசி இல்லை என்பதினால் வேண்டாம் எனக் கூறிவிட்டு  அந்த இரண்டில் ஒரு புத்தகத்தை பிரித்துப் படிக்க துவங்கினேன். அப்போது பலரும் உணவு அருந்தி விட்டு கீழே வந்து கொண்டு இருந்தார்கள். என்  அருகில் வந்த காரியதரிசி  என்னை அந்த புத்தகத்தை வாங்கிக் கொள்ளுமாறுக் கூறினார். நான் யோசனை செய்து கொண்டே இருக்கையில் யாரோ ஒருவர் என் அருகில் வந்து நின்றார். என் கையில் இருந்த புத்தகத்தின் மீது இரண்டு சாயி பாபா படங்களையும் ஒரு உடி பொட்டலத்தையும் வைத்து விட்டுச் விரைவாகச் சென்றார். அவர் யார் என திரும்பிப் பார்த்தேன். அவர் வேறு யாரும் அல்ல, எந்த பெரியவர் என்னைப் பார்த்து ஆசிர்வாதம் செய்தது போல அமர்ந்து இருந்தாரோ அவரேதான் !! ஆகவே பாபா அந்த புத்தகத்தை வாங்கிக் கொள்ளுமாறு கூறி உள்ளார் என நினைத்து அதை வாங்கிக் கொண்டேன். அதில் சாயி சரித்திரத்தின் பல அறிவுரைகள்  இருந்தன.
மழையும் நிற்கவில்லை. அந்தப் பெரியவரையும் காணவில்லை. மீண்டும் ஜெபம் நடந்து கொண்டு இருந்த இடத்திற்க்குச் சென்று அமர்ந்தேன். பாபா என்னைப் பார்த்து புன்முறுவல் செய்வது போல இருந்தது. சற்று நேரம் உன் சன்னதியிலேயே உட்கார்ந்தவாறு கண் மூடி தூங்குகிறேன் என அவரிடம் மானசீகமாகக் கூறிவிட்டு பத்து நிமிடம் உறங்கினேன்.  அங்கு பெருக்கிக் கொண்டு இருந்தவள் என்ன எழுப்பி சாப்பிடப் போகுமாறு கூறிய போதுதான் கண் விழித்தேன். எதிலும் முன்னணியில் சென்று நிற்க மனது இல்லாத எனக்கு அப்போது மைக்கில் சென்று பாடத் தோன்றியது. அதுவரை பாடிக் கொண்டு இருந்த ஒரு குழு எழுந்தது.
அதற்கு சில மாதங்களுக்கு முன்னர்தான் எனக்கு ஒரு கனவு. அதில் நான் ஒரு ஜெபத்திர்க்குச் சென்று இருந்தபோது மைக்கில் நின்று  பாட ஆசைப் பட்டேன். என்னை யாரோ அழைத்து மைக்கில்  பாடக் கூறினார்கள். நானும் மைக் முன் அமர்ந்து பாடத் துவங்கினேன். கனவு கலைந்தது. அந்தக் கனவு இப்போது என் நினைவுக்கு வந்தது.  என்னிடம் இருந்த மீராபாயின்  புத்தகத்தை பிரித்துப் பார்த்தேன். அதில் இருந்த வாசகங்கள் இவை ''எனக்கு எந்த நகையும்  பொருளும்  வேண்டாம், என்னுடைய  தேவரின்  காலடியின் மணம் மட்டுமே போதும்''. அதைப் படித்த என் மனம் அமைதி அடைய என்னை மறந்து  ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெயா ஜெயா சாயிராம் என அனைவருடனும் சேர்ந்து ஓங்கிப் பாடத் துவங்கினேன்.
மழை நின்றது. என்னுடைய பையை எடுத்துக் கொண்டு கிளம்பினேன். கிளம்பும் முன் சாயிபாபாவிடம் மனதில் கூறினேன், ''ஹ்ஹும், பாபா  என்னை இன்றும் மைக் முன் நின்று பாட விடாமல் அனுப்புகிறாயா?, சரி கிளம்புகிறேன்''. அனைவரும் ஒரே குரலில் பாடிக்கொண்டு இருந்தார்கள். எழுந்து நின்ற  என்னிடம் அந்த பாடல் குழுவில் இருந்தப் பெண்மணி வந்தார், ''நீங்கள் மைக்கில்  பாடுகிறார்களா எனக் கேட்டுவிட்டு என்னிடம் மைக்கை  தந்தாள். பாபாவின் கருணையை எண்ணியபடி என்னை மறந்து பாடத் துவங்கினேன். என் குரல் சகிக்கவில்லை என்றாலும்  பாடியபின் மைக்கை   அவரிடம் திரும்பக் கொடுத்தேன். இன்னும் சற்று நேரம் பாடு எனக் கூறி என்னிடம் மைக்கை மீண்டும்  தந்தாள். என் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. என்னை மறந்தேன். மனதில் தோன்றிய குரலில் பாடலை ஓங்கிப் பாடத் துவங்கினேன். பாபாவின் கருணைதான் என்னே. இருபது நிமிடங்கள் ஓடின. மைக்கி திரும்பக் கொடுத்துவிட்டுக் கிளம்பினேன். மாலை மணி 5.45 ஆயிற்று. மழை நின்று வானம் விடிந்தது. கிளம்பிச் சென்றேன்.
ஜெய் சாயி ராம்
(Translated into Tamil by Santhipriya) 

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.