Sai Baba's Blessing For My 9 Thursday Vrat-Experience By Lakshmi
நாம் எப்படித்தான் பாபாவை பூஜித்தாலும் அவர் நமக்குத் தேவையானதை நிறைவேற்றித் தருகிறார். நாம் எந்த முறையில் அவரை ஆராதிக்கின்றோம் என அவர் பார்ப்பது இல்லை. அவரை நம்புபவர்களை அவர் கைவிடுவது இல்லை என்பதை விளக்கும் திருமதி லக்ஷ்மியின் அனுபவத்தைப் படியுங்கள்.
ஜெய் சாயி ராம்
மனிஷா
லக்ஷ்மியின் அனுபவம்
அன்புள்ள மனிஷா
நான் உங்களுடைய இணையதளத்தை 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்துதான் படிக்கத் துவங்கினேன். அப்போது எதேற்சையாக அதில் இருந்த ஒன்பது வார வியாழர் கிழமை விரதம் பற்றிப் பார்த்தேன். அதை முழுவதும் படித்துப் முடித்தபோது என்னுடைய கணவரிடம் இருந்து தொலைபேசி வந்தது.
எங்களுடைய GC எனும் உரிமை உயர் நிலைக்கு சென்று உள்ளதாக அவர் தெரிவித்தார். அதைக் கேட்ட அளவில்லா மகிழ்ச்சி அடைந்தேன். விரதத்தின் மகிமையைப் படித்த உடனேயே எனக்கு அருள் புரிந்துள்ள பாபாவின் கருணைதான் என்னே என எண்ணினேன். ஆகவே உடனடியாக நானும் ஒன்பது வார விரதம் அனுஷ்டிக்க முடிவு செய்தேன். 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நாங்கள் இந்தியாவுக்குச் சென்றோம். அங்கு சீரடிக்கும் சென்றோம். அற்புதமான தரிசனம் கிடைத்தது.
நான் சாயி விரதத்தி மார்ச் மாதம் துவக்கினேன். நான் தெலுங்கு மொழி பேசுபவள் என்பதினால் எனக்கு தெலுங்கில் விரத புத்தகம் கிடைக்கவில்லை. ஆகவே ஆங்கில புத்தகத்தைப் படித்து விரதத்தைக் துவக்கினேன். விரதம் முடிந்து பூஜையையும் செய்தேன்.
அடுத்த வாரம் எனக்கு தெலுங்கில் அது கிடைத்தால் நலமாக இருக்குமே என யோசனை செய்தவாறு இணையதளத்தில் தேடிக்கொண்டு இருந்தேன். அப்போது நீங்கள் அதில் அதில் வெளியிட்டு இருந்த சாயி சாலிசா எனும் தெலுங்கு புத்தகம் கிடைத்ததுஎன் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பாபா அதை எனக்கு விரதத்தின் பிரசாதமாகக் கொடுத்து உள்ளார் என நினைத்தேன்.
விரதம் முடிவுறும் கடைசி நாள் அன்று ஏதாவது ஐந்து பேர்களுக்கு சாயி விரத புத்தகம் பிரசாதமாகத் தர வேண்டும். என்னிடம் தெலுங்கில் அந்தப் புத்தகம் இல்லை. என்ன செய்வது என யோசனை செய்தேன். ஹைதராபாத்தில் இருந்த என்னுடைய பெற்றோர்களை அந்தப் புத்தகத்தை வாங்கி அனுப்புமாறு கேட்டுக் கொண்டேன். ஆனால் அவர்கள் எங்கு தேடியும் அது கிடைக்கவில்லை.
அப்போது அந்த வார வியாழர்கிழமை என்னுடைய தாயார் என்னிடம் டெலிபோனில் பேசியபோது மிகுந்த உற்சாகத்துடன் ஒரு சேதியைக் கூறினாள். அவள் என்னுடைய ஒரு உறவினருடன் சாயி ஆலயத்திற்குச் சென்று இருந்தாள். அங்கிருந்த பூசாரி அனைவருக்கும் பிரசாதம் வழங்கிக் கொண்டு இருந்தார். என் தாயாருக்கும் பிரசாதம் தந்தார். அப்போது அந்த பிரசாத தட்டில் ஒரு தெலுங்குப் புத்தகம் இருந்துள்ளது. அதை என்ன என என்னுடைய தாயார் அதை எடுத்துப் பார்த்தபோது அது சாயி விரதத்தின் தெலுங்குப் பதிப்பாக இருக்கவே பூசாரியிடம் அந்தப் புத்தகம் எங்கு கிடைக்கும் எனக் கேட்டு உள்ளார். அவரோ அது எங்கு கிடைக்கும் எனத் தெரியாது எனவும், வேண்டுமானால் அதை எடுத்துக் கொள்ளுமாறும் கூற அவள் அதை மகிழ்ச்சியோடு எடுத்து வந்து விட்டாள். பாபாவின் கருணைதான் என்னே. அதை உடனேயே என்னுடைய தந்தை ஸ்கேன் செய்து எனக்கு இ மெயிலில் அனுப்பி வைத்தார். பாபாவின் கருணையை என்ன என்று சொலவது. விரத முடிவில் பிரசாதமாக சாயி விரத தெலுங்கு புத்தகத்தை காப்பி எடுத்து ஐவருக்கு தர ஏற்பாடு செய்து கொண்டேன்.
எட்டு வாரம் ஆயிற்று. நான் தினமும் சாயி தர்ஷனை நேரடியாக இணைய தளத்தில் பார்ப்பது உண்டு. அன்று வியாழர் கிழமை. இணையத்தளத்தை திறக்க முடியவில்லை. வியாழர் கிழமைகளில் பாபா ஏதாவது ஒரு வேளை மஞ்சள் நிற கலரில் உடை உடுத்தி இருப்பார் . ஆனால் அவர் அன்றைக்கு என்னென்ன கலரில் உடை உடுத்தி இருந்தார் என்பதை என்னால் அன்று பார்க்க முடியவில்லையே என வருந்தினேன். இரவு தினமும் பாபாவுக்கு ஷேஜ் ஆரத்தி எடுத்தப் பின் உறங்கப் போவேன். அன்றும் ஆரத்தி எடுத்து விட்டு உறங்கினேன். உறங்கும் முன் ''பாபா அன்று காலை நீ என்ன கலர் உடை உடுத்தி இருந்தாய் என்பதை காண முடியாமல் போய் விட்டதே. அதை நீ ஏன் எனக்குக் காட்ட மறுத்தாய் '' என வருந்திக் கொண்டே மறு நாள் இணையதளத்தை திறந்தபோது ஒரு வாசகர் எழுதி இருந்தக் கடிதத்தை முதலில் படிக்க நேரிட்டது. அதில் அவர் முதல் நாளன்று பாபா மஞ்சள் நிறக் கலரில் உடை உடுத்திக் கொண்டு தனக்கு தரிசனம் செய்ததற்கு நன்றிக் கூறி எழுதி இருந்தார். பாபாவின் படத்தையும் வெளியிட்டு இருந்தார். அதைப் பார்த்ததும் நான் நிலை குலைந்தேன். பாபா என் உணர்வுகளுக்கு எப்படியெல்லாம் மதிப்புத் தருகிறார் என வியந்தேன். அவர் கருணையை எண்ணி மகிழ்ந்தேன். அவருக்கு நன்றி கூறினேன். மேலும் மேலும் பாபாவின் கருணையை பெற, அவர் மகிமையைக் காண என்னை அவர் தன் பக்கத்தில் இரவும் பகலுமாக நெருக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றே அவரை பிரார்த்தனை செய்கிறேன்.
நன்றி மனிஷா, நன்றி
லஷ்மி.

சாயி சரித்திரத்தின் தெலுங்குப் பதிப்பைப் படிக்க இதன் மீது கிளிக் செய்யவும்.
(Translated into Tamil by Santhipriya )
Loading
0 comments:
Post a Comment