Shirdi Sai Baba's Grace-Experience Of Sai Devotees-Part 23.
அனைவருக்கும் சாயிராம்
நம்முடைய வாழ்கை மட்டும் அல்ல நம்முடைய எண்ணங்கள்,உணர்வுகள் என அனைத்துமே சாயிபாபாவுக்கு தெரிந்தே உள்ளன. அதை இங்கு தமது அனுபவங்களை அனுப்பி உள்ள வாசகர்களின் கடிதங்களில் இருந்து தெரிந்து கொள்ளலாம். இதில் மேலே காணப்படும் படத்தை அனுப்பி உள்ள சாயி பக்தருக்கு நான் விசேஷமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜெய்ஸ்ரீராம்
மனிஷா
இறக்கும் தருவாயில் இருந்த என் தந்தையை சாயிபாபா காப்பாற்றினார்
2011 ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28 ஆம் தேதியன்று எங்கள் வீட்டில் புயல் வீசியது. நல்ல திடகார்த்தமாக இருந்த என்னுடைய தந்தை கடுமையான மாரடைப்பினால் படுக்கையில் விழுந்து விட நாங்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அழைத்துச் சென்றோம். வழி முழுவதும் நானும் என்னுடைய குடும்பத்தினரும் அவர் உயிர் பிழைக்க வேண்டுமே என வேண்டிக் கொண்டே இருந்தோம். மருத்துவ மனைக்கு கொண்டு சென்றோம். அவரை மருத்துவர்கள் பரிசோதிக்க, என்னுடைய மாமா என்னுடைய தந்தையின் உயிர் அநேகமாக போய் விட்டது என்றும் இன்னும் 15 நிமிடத்தில் அவர் இறந்து விட்டார் என்ற செய்தி கிடைக்கலாம் எனவும் மருத்துவர்கள் அவரை உயிர் பிழைக்க வைக்க முயற்சி செய்து கொண்டு இருக்கின்றார்கள் என்றார். நான் உடனேயே பாபாவை வேண்டிக் கொள்ளத் துவங்கினேன். பாபாவை வேண்டத் துவங்கிய சரியாக பத்து நிமிடத்தில் தந்தையின் பல்ஸ் இருப்பது போலத் தெரிகின்றது எனக் கூறிவிட்டு அவசர சிகிச்சை அறைக்குள் எடுத்துச் சென்றார்கள். நான் பாபாவை வேண்டிக் கொண்டே இருந்தேன். மறுநாள் முன்பின் தெரியாத ஒரு பெண்மணி வந்து பாபாவின் உடியை என்னிடம் தந்து அதை அவர் தலையாணி அடியில் வைக்குமாறு கூறினாள். அவளை பாபாவே அனுப்பி இருக்க வேண்டும் என நாங்கள் நினைத்து உடியை அவர் தலையணி அடியில் வைத்தோம். 21 நாட்கள் கழிந்தன. என்னுடைய தந்தை பூரண குணம் அடைந்தார். அது பாபாவின் கருணை அல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்? நான் உன்னை மனதார நேசிக்கிறேன், பாபா, நீ அனைவருக்கும் தக்க நேரத்தில் உதவி செய்கிறாய்.
சாயிராம்.
சாயிபாபா மழையை எனக்காக நிறுத்தி வைத்தார்
அன்புள்ள சகோதரி மனிஷாஉங்கள் தளத்தில் உள்ள சாயி பக்தர்களின் அனுபவங்களை படிப்பதில் ஆனந்தம் ஏற்படுகின்றது. தினமும் பல அதிசய சம்பவங்கள் நடந்து கொண்டேதான் இருக்கின்றன. அனைத்திற்கும் பாபாதான் காரணமாக இருக்கின்றார். இன்று எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தை இங்கு எழுதி உள்ளேன்.
நான் ஒன்பது வார சாயி விரத்தை அனுஷ்டிக்க ஆரம்பித்து இரண்டாவது வாரம் ஆயிற்று . வீட்டில் பூஜையை முடித்துக் கொண்டு சாயியின் மதிய ஆரத்திக்கு செல்ல முடிவு செய்தேன். ஆனால் பாபா வேறு விதமாக நினைத்து இருந்தார் போலும். பூஜை முடிய அதிக நேரமாகி விட்டது. ஆலயம் மூடப்பட்டு விடும் என்பதினால், சரி ஆலயத்தின் மாலை ஆரத்திக்கு செல்லலாம் என முடிவு செய்தேன். மாலையில் திடீர் என பெரும் மழை பெய்யத் துவங்கியது . குடையை எடுத்துக் கொண்டு காரில் சென்று ஏறிய போதும் நனைந்து விட்டேன், அத்தனை மழை பெய்தது. நான் காரில் ஏறியவுடன் 'பாபா நான் ஆலயத்துக்குள் நுழையும் வரை மழை பெய்யக் கூடாது. எனக்காக அந்த உதவியை செய்' என வேண்டினேன் (ஷ்ரத்தா) .
ஆலயம் 15 அல்லது 16 கிலோ மீடேர் தூரம் இருக்கும். நான் ஒரு சாலை அடி வழியே 8 கிலோ மீட்டர் போக வேண்டும். அதைக் கடந்ததும் மழை நின்று இருந்தது தெரிய வந்தது. நான் பாபாவிற்கு நன்றி கூறினேன். ஆனால் ஆலயத்துக்கு இன்னும் செல்ல வேண்டும். மீண்டும் பெரிய மழை. 'பாபா நீதான் உன் தரிசனத்தை நான் காண அருள் புரிய வேண்டும்' என வேண்டினேன். (சபூரி ) .
நான் காரில் ஆலயத்தை அடைந்தேன். இன்னும் மழை பெய்து கொண்டு இருந்தது . அப்போது என் நண்பரிடம் இருந்து தான் சீரடிக்கு போய்விட்டு திரும்பி வந்துவிட்டதாக செய்தி வந்தது. பத்து நிமிடம் கழிந்து இருக்கும் மழை நின்றுவிட்டது. காரை அங்கேயே ஒதுங்கி நிற்க வைத்து விட்டு ஆலயத்துக்குள் சென்று அங்கு நடந்து கொண்டு இருந்த விஷ்ணு சகஸ்ரநாம துதியை பாடிக்கொண்டு இருந்தவர்களுடன் ஒரு மணிக்கு மேல் இருந்துவிட்டு பின் தூப் ஆரத்தியை கண்டு கழித்தப் பின் பாபாவை மீண்டும் வேண்டினேன் 'பாபா நீதான் என்னை மன்னிக்க வேண்டும். காரை நிற்கக்கூடாத இடத்தில் நிற்க வைத்து விட்டேன். காவல் துறையினரால் பிரச்சனை வரக் கூடாது. மேலும் நான் வீடு திரும்பும் வரை மழை இருக்கக் கூடாது.
வெளியில் வந்தேன் மழை இல்லை. காருக்கும் எந்த அபராதமும் விதிக்கப்படவில்லை. காரில் ஏறினேன். அடுத்த சில நிமிடத்தில் மீண்டும் நல்ல மழை. இது பாபாவிடம் நாம் ஷ்ரத்தா மற்றும் சபூரியைக் காட்டினால் அவர் நமக்கு உதவுவார் என்பதைக் காட்டுகிறது. பாபா நாமெல்லாம் அமைதியாக, ஆனந்தமாக, வளமாக இருக்க அருள் புரியட்டும்.
ஜெய் சாயி ராம்
ஸ்ரீ சச்ச்தானந்த சத்குரு சாய்நாத் மகராசுக்கு ஜெய்
சுப்பு

பாபா நம்முடன் மற்றும் நம் நினைவுகளுடன் எப்போதும் இருக்கின்றார்
அன்புள்ள சகோதரி மனிஷா
எனக்கு சமீபத்தில் ஏற்பட்ட பாபாவின் லீலையைக் கண்டு வாய் அடைத்துப் போய் வியக்கின்றேன். நான் கடந்த 20 நாட்களாக சில பிரச்சனைகளினால் அவதிப்படுகிறேன். என்னுடைய தாயும் தந்தையும் கூட மனம் ஒடித்து போய் உள்ளார்கள். அவர்கள் எங்களுடைய குடும்பத்தினருக்கு நிறைய செய்து உள்ளார்கள். அதன் பிரச்சனையின் உச்ச கட்டத்தில் நான் தற்கொலை செய்து கொள்ளும் மன நிலைக்குக் கூட சென்றேன். எனக்கு மன நிம்மதி கிடைக்காததினால் பாபாவை திட்டித் தீர்த்தேன். பாபா துயறுற்றவர்களுக்கு உடனே வந்து உதவுவார் என்பது தெரியும் ஆனால் என் விஷயத்தில் என் துயர் குறையவேயில்லை என அவரைக் குறை கூறினேன்.
நேற்று எனக்கு ஒரு கனவு. ''நான் ஒரு மேடையில் நின்று கொண்டு இருந்தேன். அப்போது என்னைப் பற்றி இரண்டு குறிப்புக்கள் என்னுடைய இடதுபுறத்தில் இருந்த குப்பை தொட்டியில் விழ நான் வலது புறம் திரும்பினேன். அதில் பாபாவின் இரண்டு சிலைகள் கிடந்தன. அது என் மனதிற்கு என்னவோ போல இருந்தது. பாபா என் மீது கோபமாக இருந்தது போலவும், நான் கொடுத்த வாழ்கையை நீ தொலைக்க விரும்பினால், நானும் உனக்கு வேண்டாம் என்பது போல இருந்தது. ஆகவே நானும் மனம் வருந்தி மறுநாள் முதல் என் தாயாருடன் சேர்ந்து வேலை செய்ய ஆரம்பித்தேன். மல்லிகைப் பூ தொடுத்து தரத் துவங்கியபோது அது திருப்பதி பாலாஜிக்கு போடும் மாலைப் போல கெட்டியாக பல சுற்றுப் போக்கான பூக்களில் இருந்ததைக் கண்டேன். அதை நான் பாபாவுவின் கழுத்தில் போட பெரிய காற்று அடித்து அவர் கழுத்தில் போட்ட மாலையை தூக்கி அடித்தது. நான் இன்னமும் மனம் வருந்தினேன். நான் போட்ட மாலையை வேண்டாம் என வீசி எறிந்து விட்டாரே என வருந்தினேன்''.
அப்போது நான் திடுக்கிட்டு எழுந்தேன். வீட்டில் TV ஓடிக்கொண்டு இருந்தது. அதில் பாபாவின் பாடலும் ஒழித்துக் கொண்டு இருக்க அது நல்ல சகுனம் என்றாலும் என் மனதில் பாபா நான் போட்ட மாலையை ஏன் வேண்டாம் எனப் போட்டு விட்டார் என யோசனையில் இருந்தேன் . என் வீட்டில் அன்று ஒரு சடங்கு நடந்தது. அது முடிந்ததும் மழை பெய்யத் துவங்கியது. இரவு மணி எட்டு நாற்பத்தி ஐந்து . நான பாபாவின் ஆலயத்துக்கு போக நினைத்தேன். ஆனால் அவர்கள் அதை ஒன்பது மணிக்கு மூடிவிடுவார்கள். என் தாயாரிடம் அதைக் கூற அவள் ''தைரியமாகப் போ. பாபா அனைத்தையும் பார்த்துக் கொள்வார்'' எனக் கூறி அனுப்பினாள். நானும் ஆலயத்துக்கு அவசரம் அவசரமாக காரில் சென்று உள்ளே சென்றேன் . ஆரத்தி நடை பெற்றுக் கொண்டு இருந்தது. அத்தனைக் கூட்டத்திலும் பூசாரி என்னை செய்கைக் காட்டி அழைத்தார். அருகில் இருந்த ஒரு தட்டை என்னை எடுத்துக் கொள்ளச் சொல்லியப் பின் அதில் பாபாவின் கழுத்தில் இருந்த மாலை, சிவன் மற்றும் விநாயகர் மாலைகளை கயற்றி வந்து அந்த தட்டில் போட்டார். நான் திடுக்கிட்டேன். பாபா என் கனவில் வந்தது எனக்கு மனத் துயரை தீர்க்கின்றேன் என்று கூறியதைப் போல இருந்தது. கனவில் வந்ததைப் போல காட்சிகள் இருந்தாலும், இங்கு பாபாவின் கழுத்தில் உள்ள மாலை என்னிடம் அல்லவா வந்து விழுந்து விட்டது. நாங்கள் பாபாவிடம் இன்னமும் அதிக அளவு பக்தி செலுத்த வேண்டும் என்பதை அது உணர்த்தியது போல இருந்தது., நிச்சயமாக பாபா எங்களைக் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டது.
பாபாவின் ஒரு குழந்தை.

(Contents edited, Translated into Tamil by Santhipriya)
Loading
0 comments:
Post a Comment